இராசிபலன்கள் (1-4-2013 முதல் 7-4-2013 வரை)

மேஷம் :-

மேஷராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தீர்த்த யாத்திரைகளுக்காக நீண்ட தூரப் பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். போட்டி லாட்டரி மூலமாகத் திடீர்த் தன வரவுகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாவதோடு மருத்துவச் செலவுகளும் ஏற்படும். பயணங்களில் கவனமாக இருத்தல் நல்லது. எதிர்பார்த்த பண உதவிகள் உறவினர்களால் கிடைக்கும். நீண்ட காலமாகக் காணாமற் போன பொருட்களும் நபர்களும் திரும்ப வீடு வந்து சேரும் காலமாகும். கணினி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், பழ வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துபவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், தானிய வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவர். தீராத, நாட்பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள். பிள்ளைகளால் எதிர்பாராத சிற்சில ஆதாயங்கள் அடைய வாய்ப்பு உள்ளது. பண விஷயங்களுக்கான நீண்ட தூரப் பயணங்களைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- சிவ ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், இரும்பு, இயந்திரம், எண்ணெய் சம்பந்தமான வியாபாரிகள், பலசரக்குத் தொழில் செய்பவர்கள், கழிவுப் பொருள் வியாபாரிகள், அலுவலகப் பணி உதவியாளர்கள், மிசினரி சம்பந்தமான உதிரி பாகங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், எரிபொருள் வியாபாரிகள் ஆகியோர் மிகவும் ஆதாயம் அடைவர். வெளிநாடு செல்லுதல் போன்ற புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கண், காது ஆகியவற்றில் கவனமாக இருத்தல் நல்லது. விபரீதமான எண்ணங்களை விட்டொழித்து, காரியத்தில் கவனமாய் இருங்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயத்தில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். முதுகு, வயிறு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகும். உற்றார் உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தேவையற்ற நண்பர்களின் தொடர்புகளால் பிரச்சினைகள் வர இருப்பதால் கவனமாகப் பழகுதல் நல்லதாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் மாறித் தேவையான பொருளாதாரம் வந்து சேரும்.

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- ஐயப்பன் வழிபாடு.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். எழுதுபொருட்கள் விற்பனை செய்வோர், அச்சுத்துறை சார்ந்த விற்பனையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், காய்கறி, இலை, சிற்றுண்டி வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். தோல், ரத்தம் சம்பந்தமான பிணிகள் வந்து போகும். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கண்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.
பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த முயற்சியின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்படும் உடல்நிலை பாதிப்புகள் நீங்குவதற்காக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். நெடு நாட்களாகப் பிரச்சினையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக் கூடிய காலமாகும். அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். விபரீத எண்ணங்களை விட்டுக் காரியத்தைக் கவனியுங்கள். வேலை இல்லாதவர்களுக்கு, வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் காலமாகும்.

இராசியான எண் :- 5.
இராசியான நிறம் :- பச்சை.
இராசியான திசை :- வடக்கு.
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

கடகம் :-

கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில், இதுநாள் வரையில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காணப்படும். எதிர்பாராத நீண்ட தூரப் பயணங்களின் மூலம் மன நிறைவடைய வாய்ப்பு உள்ளது. திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும். புதிய, பெரிய மனிதர்களைச் சந்திக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கும். நெருப்புத் தொழில், காவல்துறை, இராணுவம் சார்ந்தவர்கள், இணையத்தளங்களை நடத்துபவர்கள், மின்சாரத்துறை சார்ந்தவர்கள், மின்சாரச் சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் காரணமற்ற பிரச்சினைகள் வர இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும். வராத கடன், கொடுத்துள்ள பணம் எதிர்பாராமல் திரும்பக் கிடைக்கும். வெகு தூரப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருவது நல்லது. பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து நல்ல சூழ்நிலை காணப்படும்.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிகப்பு
இராசியான திசை :- தெற்கு.
பரிகாரம் :- முருகன் வழிபாடு.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமூகம் ஏற்படும். நண்பர்களால் வீண் விவாதங்களும் தொல்லைகளும் வந்து போகும். கட்டட சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள். அழகுக்கூடங்களை நடத்துபவர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், ஆடு மாடு, கார், லாரி போன்ற வாகனத் தொழில் செய்பவர்கள், கலைக்கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆபரணங்கள் மற்றும் நவரத்தின வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். மூளை, நரம்பு, எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். சூதாட்டங்களைத் தவிர்த்தல் நல்லதாகும். வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவதற்கான பணச் செலவுகள் வந்து சேரும். பூர்விக இடங்களை விட்டு மாறிச் செல்லத் திட்டம் போடுவீர்கள். ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவி செய்து அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். மேலதிகாரிகளிடம் முன் கோபத்தை தவிர்த்துப் பணியாற்றுதல் நல்லது. புதிய கூட்டுத் தொழில் முயற்சிகளைச் சற்றுக் கால தாமதமாகத் தொடங்குவது நல்லது. வட திசையில் இருந்து பொருள் வரவும், நல்ல செய்திகளும் எதிர்பாராமல் வந்து சேரும்.

இராசியான எண் :- 6.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- தென்கிழக்கு.
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பூஜைப் பொருள் வியாபாரிகள், மருந்து நிறுவனம் நடத்துபவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஜவுளி, நூல் வியாபாரிகள், கப்பல் பணி செய்பவர்கள், உப்பு, உர வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்க நண்பர்களால் இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கண், காது ஆகியவற்றில் மிகவும் கவனத்துடன் இருத்தல் நல்லதாகும். விட்டுப் போன கணவன் – மனைவி உறவு மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. தந்தை – மகன் உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். பல காலமாகத் தீராத நோய்கள் புதிய மருத்துவர்களின் உதவியால் நீங்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் எதிர்பாராத தன வரவு உண்டாகும். மகான்களின் நல்லாசிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்காக வங்கிகள் மூலம் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் சம்பந்தமான விஷயங்களில் பெண்களால் அவப் பெயர் வரக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் பழகுதல் நல்லது.

இராசியான எண் :- 2.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- மேற்கு.
பரிகாரம் :- அம்மன் வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

துலாம் :-

துலாம்ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். குல தெய்வ ஆலயங்களைத் திருத்தி கட்டப் போட்ட திட்டங்களில் சிறிய தடைகள் ஏற்பட்டுப் பின் வெற்றி அடைவீர்கள். பங்குச்சந்தை, கணிதம், எழுத்துத்துறை ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், அரசு உயர் பதவிகள் வகிப்பவர்கள், நெருப்பு சம்பந்தமான வியாபாரிகள், உணவுப் பொருள் வியாபாரிகள், எரிபொருள் வியாபாரிகள் ஆகியோர் மிகவும் ஆதாயம் அடைவர். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களால் சில ஆதாயங்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சூதாட்டங்களைத் தவிர்ப்பது நல்லதாகும். அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு மனக் கவலை அடையாதீர்கள். மற்றவர்களுக்காகப் பிணை கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லது. குல தெய்வ வழிபாடு செய்து வருதலால் கிரக தோஷங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடம் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்ள வேண்டாம். முன் கோபத்தைத் தவிர்த்து, அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.

இராசியான எண் :- 1.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- கிழக்கு.
பரிகாரம் :- சிவ ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெகு காலமாக எதிர்பார்த்திருந்த நல்ல முடிவுகள் கிடைக்கும். பொது நலக் காரியங்களில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நற்பெயர், புகழ் எடுப்பீர்கள். பங்குச்சந்தையில் இருப்போர், தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் ஆகியோர் மிகுந்த எச்சரிக்கையுடன் வணிகத்தில் ஈடுபடுவது நல்லது. தந்தை – மகன் உறவில் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சூடு, காய்ச்சல், வாயுத் தொல்லை போன்ற உபாதைகள் வந்து போகும். தடைப்பட்டு வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. குடும்பச் சொத்துக்கள் போன்ற விஷயத்தில் நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். வங்கிகளில் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கும். விவசாயிகள், அரசியல்வாதிகள், கலைத்துறையினர், அணு ஆராய்ச்சித் துறை சார்ந்தவர்கள்,
கழிவுப் பொருள் வியாபாரிகள், பணித்தொழில் செய்பவர்கள், அசைவ உணவு வியாபாரிகள், துப்புரவுப் பணி செய்பவர்கள் ஆகியோர் நல்ல ஆதாயங்களை அடைவர். கொடுக்க வேண்டிய பழைய கடன்களைக் கொடுத்துப் புதிய கடன்களை வாங்கத் திட்டம் போடுவீர்கள்.

இராசியான எண் :- 7.
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- விநாயகர் வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியனும் சந்திரனும் நன்மை தரும் கிரகங்களாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பயணங்களின்போது புதிய, பெரிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகி அவர்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத் துறையினருக்குப் பணி இடமாற்றமும் பதவி உயர்வுகளும் வரக் கூடும். குல தெய்வ ஆலயங்களைப் புதுப்பித்தலுக்கான முயற்சிகளில் நற்பெயர் பெறுவீர்கள். நாட்பட்ட பழைய கடன்கள் மீண்டும் தொல்லை தர வாய்ப்பு உள்ளது. புதிய கட்டடம் கட்ட நீண்ட காலமாகப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர்த் தனவரவுகள் உண்டாகும். திருமணத் தகவல் மையங்கள் நடத்துபவர்கள், வாகனங்களில் பணியாற்றுபவர்கள், அரசுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள், நெருப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள், உணவகம் நடத்துபவர்கள், அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், ஜவுளி மற்றும் நூல் வியாபாரிகள் ஆகியோர் மிகவும் நற்பலன் அடைவர். குல தெய்வ வழிபாட்டிற்காகத் தொலை தூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். மூத்த சகோதரர்களால் பொருட் செலவுகள், மன நிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம். காதல் விஷயத்தில் எதிர்பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும்.

இராசியான எண் :- 1, 2.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- கிழக்கு, மேற்கு.
பரிகாரம் :- சிவனையும் அம்மனையும் வழிபட்டு அன்னதானம் செய்து வாருங்கள்!

மகரம் :-

மகரராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மிகுந்த கவனத்துடன் பயணம் செய்து வருவது நல்லதாகும். உற்றார் உறவினர்களின் வருகையால் பொருட் செலவுகள் உண்டாகலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் செய்யாத குற்றங்களுக்காகக் காரணமற்ற வீண் பிரச்சினைகள் வந்து சேரும் என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீடு, நிலம் வாங்குவது போன்ற முயற்சிகளில் அரசு சம்பந்தமாக எதிர்பார்த்திருந்த உதவித் தொகைகள் கிடைக்கும். சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் மிகுந்த அக்கறையுடன் திட்டம் போடுவீர்கள். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். காதல் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது. சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கச் சற்றுக் கால தாமதம் ஆகலாம். பூஜைப் பொருள் வியாபாரிகள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள்,
கணினித்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துபவர்கள், மடாதிபதிகள், கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோர் மிகவும் நற்பலன்கள் அடைய வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 3.
இராசியான நிறம் :- மஞ்சள்.
இராசியான திசை :- வடகிழக்கு.
பரிகாரம் :- சிவ வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். உறவினர்களின் வரவால் பொருள் வரவும் மகிழ்ச்சியும் உண்டாகும். நாட்பட்ட நோய்கள் நீங்கி நிம்மதி உண்டாகும். நண்பர்களிடம் அதிகமாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! பெண்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்று! கடன் வாங்க முயற்சிப்பீர்கள். நீண்ட நாட்களாகத் தடைப்பட்டு வந்த சகோதர, சகோதரிகளின் திருமணக் காரியங்களில் வெற்றி அடைவீர்கள். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், பழைய இரும்பு வியாபாரிகள், சாயப்பொடித் தொழிற்சாலை நடத்துபவர்கள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், ஆசிரமவாசிகள், கழிவுப் பொருள் வியாபாரிகள், நீதிமன்றங்களில் பணிபுரிபவர்கள், தரகு மற்றும் வட்டித் தொழில் செய்பவர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், அணு ஆராய்ச்சி செய்பவர்கள் ஆகியோர் லாபம் அடைவர். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலும், லாபமும் கிடைக்கும். புதிய வீடு வாங்க வங்கிகளில் எதிர்பார்த்திருந்த கடன் தொகை கிடைக்கக் கூடிய காலமாகும். சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்துறையினருக்குப் பதவி உயர்வுகள் மேலதிகாரிகளின் ஆதரவுகள் நிரம்ப உண்டாகும்.

இராசியான எண் :- 4.
இராசியான நிறம் :- கருப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- அம்மனையும் பிதுர்களையும் வழிபட்டு அன்னதானம் செய்து வாருங்கள்!

மீனம் :-

மீனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். மற்றவர்களை நம்பிப் பணமோ பொருளோ கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். ஆதரவற்றோர்க்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். வெகு காலமாக நினைத்துக்கொண்டிருந்த கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தொடங்கினால் மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்து வந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கும். கணவன் – மனைவி உறவில் விரிசல்களும் வீண் மனக் குழப்பங்களும் வந்து போகும். நீண்ட நாட்களாக வராத பணம் திரும்பக் கை வந்து சேரக் கூடிய காலமாகும். உறவினர்களால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும். திருமண விஷயங்களுக்காக முயற்சி செய்யலாம். நெருப்புத் தொழில்கள் செய்வோர், காவல்துறை, ராணுவம் போன்றவற்றைச் சார்ந்தவர்கள், தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்கள், காரமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள், நிலக்கரி வியாபாரம் செய்பவர்கள், விறகு வியாபாரிகள், மசால் பொடிகளை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். புதிதாக வீடு, வாகனம், நில புலன்கள் வாங்க வாய்ப்பு உள்ள காலமாகும். வாயு மற்றும் வாதம் ஆகிய தொல்லைகள் வந்து போகும். பயணங்களில் மிகுந்த கவனத்துடன் சென்று வருதல் நல்லதாகும்.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிகப்பு.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- முருகன் வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

-மீண்டும் அடுத்த வாரம்…

*********************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M.
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627 759.
Tirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 98425-10578, 98425-29691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.”

About The Author