இராசிபலன்கள் (1-9-2014 முதல் 7-9-2014 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். தூரத்துப் பயணம் மூலமாகச் சந்திக்க வேண்டிய நபர்களைச் சந்தித்துக் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள். மேகம், உடற்சூடு சம்பந்தமான பிணிகள் வந்து விலகும். திரும்பி வராத கடன், கொடுத்து வைத்திருந்த பணம் போன்றவை திரும்பக் கைக்கு வந்து சேரும் காலமாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காணப்படும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் இதுநாள் வரையில் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். விவசாயம் செய்பவர்கள், காய்கறி – பழ வியாபாரிகள், பூஜைப்பொருட்கள் விற்பவர்கள், உப்பு வியாபாரிகள், திரவ உணவு வியாபாரிகள், நறுமணப் பொருள் விற்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். காரணமற்ற சிறிய விஷயங்களால் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வந்து விலகும். கலைத்துறையினரும், அரசியல்வாதிகளும் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மகாவிஷ்ணு, ஆஞ்சனேயர் வழிபாடும் பாசிப்பயறு தானம் செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நீண்ட காலமாகத் திரும்பி வராத கடன், கொடுத்து வைத்திருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும். குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். கண், காது ஆகியவற்றில் கவனத்துடன் இருக்க வேண்டும்! பயணங்களால் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேற இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்யப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். பிறர் நடத்திக் கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களை வாங்குவதற்கான முயற்சிகள் நண்பர்களின் ஆதரவு மூலம் நிறைவேறும். பங்குத்தொழிலில் ஓரளவு முன்னேற்றம் காணுவீர்கள். காதல் விஷயத்தில் நல்ல தகவல்கள் வந்து சேரும். அரசு வழக்குகளில் அநுகூலமான தீர்ப்புகள் கிடைக்கும். தீயணைப்புத்துறையினர், உணவகத் தொழில் செய்பவர்கள், கேஸ் வெல்டிங் செய்பவர்கள் போன்ற நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபடுவோர், இராணுவத்தினர், காவல்துறையினர், கார உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- துர்க்கை வழிபாடும் துவரை தானமும் செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகள் கிடைப்பதுடன் நற்பெயரும் புகழும் உண்டாகும் காலமாகும். பிள்ளைகளுக்கு இதுவரையில் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நிறைவேறும். நரம்பு, உணவுக்குழல் சம்பந்தமான பிணிகள் உண்டாகும். தாய் – தந்தைக்கு உடல்நிலையில் சிற்சில பாதிப்புகள் வந்து விலகும். பூ, பழ வியாபாரிகள், ஆலயப் பணி செய்வோர், வழக்குரைஞர்கள், நீதிபதிகள், பேராசிரியர்கள், பங்குச்சந்தையில் ஈடுபடுவோர், நறுமணப் பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் ஆகியோர்க்கு நற்பலன் உண்டாகும். அலுவலகப் பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தைத் தவிர்த்து மிகவும் எச்சரிக்கையுடன் பணியாற்றுதல் நல்லது! காதல் சம்பந்தமான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். தூரப் பயணங்களில் மிகவும் கவனத்துடன் சென்று வாருங்கள்! பணப் புழக்கம் நன்றாக இருக்கும்!
நீண்ட காலமாக வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சிற்சில பிரச்சினைகள் வந்து விலகும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- தட்சிணாமூர்த்தி வழிபாடும் கடலை தானமும் செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். செய்யும் தொழிலில் பங்காளிகளுடன் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள்! காதல் விஷயங்களில் வெற்றி தேடி வரக் கூடிய காலமாகும். இதுநாள் வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து கணவன் – மனைவி உறவு நன்றாக இருக்கும்! சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். மூலம் போன்ற வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். வெகு காலமாக இருந்து வந்த மறைமுக எதிரிகளின் தொல்லைகள் தீரும். திரும்பி வராத கடன், கொடுத்து வைத்திருந்த பணம் ஆகியவை திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இரும்பு, இயந்திரம், வேதியியல் சம்பந்தமான தொழில்களில் உள்ளோர், எண்ணெய் வியாபாரம் செய்பவர்கள், பெட்ரோல், டீசல் வியாபாரிகள், பலசரக்குத் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். வங்கிகள் மூலமாக எதிர்பார்த்திருந்த கடன் உதவித் தொகைகள் கிடைத்து வீட்டைத் திருத்திக் கட்டுவதற்கு முயற்சி செய்வீர்கள்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடும் எள் தானமும் செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பூர்விகச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். ஒரு சிலருக்குச் சொத்துக்களை விற்பதில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து மன அமைதி ஏற்படும். பொருளாதாரம் சீராக இருக்கும். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணத்தையோ பொருட்களையோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு மணமாகும் காலமாகும். திரவப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், தாய் – சேய் நல விடுதி நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது! புதிய வீடு, நிலம், கார் போன்றவை வாங்குவீர்கள். நண்பர்கள், பங்காளிகள் ஆகியோரால் ஆதாயம் உண்டாகும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடும் அரிசி தானமும் செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரால் நல்ல தகவல்களும் பலன்களும் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளைச் சந்தித்து நிம்மதி குறையலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருள் இழப்பும், வீண் பிரச்சினைகளும் ஏற்படும். வாகனத் தொழில் செய்பவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், நாடகக் கலைஞர்கள், திரைத்துறை சார்ந்தவர்கள், நறுமணப்பொருள் வியாபாரிகள், சிற்றுண்டி வியாபாரிகள், நவரத்தினம், வெள்ளி வியாபாரிகள் ஆகியோர்க்கு நற்பலன் உண்டாகும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களால் தூரத்திலிருந்து நற்செய்திகளைக் கேட்பீர்கள். திருட்டுப் போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும். மூலம் போன்ற வயிறு சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது. நீதிமன்றம், வழக்கு சம்பந்தமான விஷயங்களில் அநுகூலமான நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். நிலம் வாங்குதல் போன்ற நீண்டகால முயற்சிகளில் தற்போது வெற்றி அடைவீர்கள்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடும் மொச்சை தானமும் செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். செய்யும் தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகளில் மேலும் சற்றுப் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது! இதுவரை விடை காண முடியாத நோய்களுக்கு விடை காணும் காலமாகும். தந்தை – மகன் உறவில் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனத்துடன் இருங்கள்! திரவப் பொருள் வியாபாரிகள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், தாய் – சேய் நல விடுதி நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். முதுகு, கால் ஆகியவற்றில் நோய்கள் வந்து விலகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது. கவனத்துடன் இருந்தால் வீட்டில் திருட்டுப் போவதைத் தடுக்கலாம். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். பயணத்தில் குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளுங்கள்!

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இன்னும் சில நெருக்கடிகள் உண்டாகும். பிள்ளைகளின் உடல்நிலையில் பாதிப்பகள் ஏற்படலாம்! பெண்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! பங்குத் தொழிலில் ஈடுபடுபவர்கள் நஷ்டம் அடைய வாய்ப்பு இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது! கொடுக்கல் வாங்கலில் நாணயம் காப்பாற்ற இயலாத நிலை இருப்பதால் புதிய கடன் வாங்குவதைத் தவிருங்கள்! பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத விஷயங்களால் வீண் பிரச்சினைகள் வந்து விலகும். காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கக்கூடிய காலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளைச் சிறிது காலம் தள்ளிப் போடுதல் நல்லது! வாயுத் தொல்லை போன்ற வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். ஆடம்பர அலங்காரப் பொருட்கள் விற்பவர்கள், வேதித்துறை சார்ந்தவர்கள், கமிஷன், தரகு போன்ற தொழில்களைச் செய்பவர்கள், மரம், காய்கறி வியாபாரிகள், அஞ்சல்துறையினர், பத்திரிகைத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் லாபம் அடைவர்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

தனுசு

தநுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். புனிதப்பயணம் சென்று வரப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். வண்டிகளில் செல்லுபவர்கள் பயணத்தின்போது பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் நன்மைகள் அடைவீர்கள். பிள்ளைகளால் எதிர்பாராத பண வரவு உண்டாவதோடு செலவும் உண்டாகும். வேற்று மதத்தவர்கள் உதவக்கூடிய சூழல் இல்லை. வர வேண்டிய சொத்துக்கள் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். நண்பர்களால் வீண் செலவுகளும் நிம்மதிக் குறைவும் ஏற்படலாம். திருமணம் போன்ற சுபகாரிய விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்! குடும்பச் சொத்துப் பிரிவினை போன்ற விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலம் திடீர்ப் பண வரவு உண்டு. கேஸ், சிற்றுண்டிக் கடைப் பணி போன்ற நெருப்பு சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், அரிசி, பலசரக்கு சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், அரசியல்வாதிகள், நீதிமன்றத்தில் பணிபுரிவோர், வழக்கறிஞர்கள், மருந்து வியாபாரிகள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடையலாம்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- விநாயகர் வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பக்கத்து வீடுகளில் பக்குவமாகப் பேசிப் பழகுவதால் பிரச்சினைகள் குறையும். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தொடரும். தந்தை – மகன் உறவுகள் சுமாராகக் காணப்படும். ஆலய வழிபாடுகளால் நிம்மதி அடைவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது. பிரிந்து போன பழைய உறவுகள் மீண்டும் ஒன்று சேரும் காலமாகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது! செய்யும் தொழிலில் புதிய பிரச்சினைகள் ஏற்பட்டுச் சமாளித்துக் கொள்வீர்கள். வாய், பற்கள், முகம் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பிறருக்காக ஜாமீன் போடுவதால் வீண் பிரச்சினைக்கு ஆளாக நேரிடும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். நண்பர்கள், உறவினர்களால் பண வரவு உண்டு. புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தூரப் பயணங்களால் லாபம் அடைவீர்கள். புதிய வீடு, நிலம் வாங்க எடுத்துக் கொண்ட நீண்ட கால முயற்சிகளில் நல்ல பலன் உண்டாகும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சூரிய வழிபாடு செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். அலுவலகப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் ஏற்படக்கூடும். எதிர்பாராத விருந்தினர்கள் வரவால் சில ஆதாயங்களை அடையலாம். குலதெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது! புதிய தொழில் ஆரம்பிக்க முயற்சி செய்வீர்கள். பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத நபர்களால் சில நன்மைகள் வந்து சேரும். நாட்பட்ட வழக்கு விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன! பெண்களால் தென்திசையில் இருந்து ஆதாயம் உண்டாகும். தீராத பிரச்சினைகளுக்குப் பெரிய மனிதர்கள் உதவியால் தீர்வு கிடைக்கும். சளி, ஒவ்வாமை போன்ற நோய்கள் வந்து போகும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் பண வரவு உண்டாகும். தாய் – தந்தை உறவில் வந்த பிரச்சினைகள் தீரும். வெளிநாடு செல்லுவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். திரும்பி வராத கடன், கொடுத்து வைத்திருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும். சிலருக்கு வீடு, தொழிற்சாலை ஆகியவற்றில் இடமாற்றம் ஏற்படலாம். முன் கோபம் தவிர்த்தல் உகந்ததாகும்! தரகுத் தொழில், வட்டித் தொழில் செய்பவர்கள் லாபம் அடைவர்!

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர் வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். உறவினர்கள் நண்பர்களின் திடீர் வரவுகளால் செலவுகள் ஏற்படும். பூர்விகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து வந்த தொல்லைகள் மேலும் தொடரும் என்பதால் கவனத்துடன் செயல்படுவது நல்லது. புதிய வீடு, நிலம் வாங்குவது போன்ற விஷயங்களைச் சற்றுத் தாமதமாகச் செய்வது உகந்ததாகும்! வேதியியல், அணு ஆராய்ச்சி போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், பழைய பொருள் விற்பவர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், வட்டித் தொழில் செய்பவர்கள், ஏஜன்சி, குத்தகை போன்ற தொழில்கள் செய்பவர்கள் நல்ல லாபம் பெற வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு சென்று வருவீர்கள். விவசாயம் செய்பவர்கள், கமிசன் தொழில் நடத்துபவர்கள், பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்! நண்பர்களிடம் காரணமற்ற மனக்கசப்புகள் ஏற்பட்டுப் பிரச்சினைகள் உருவாகலாம். அலுவலகப் பணியாளர்களுக்கு இடையூறுகள் வந்து போகும். விருந்தினர்களின் வரவால் செலவுகள் உண்டாகும். கண், காது ஆகியவற்றில் கவனத்துடன் இருங்கள்!

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author