இராசிபலன்கள் (11-11-2013 முதல் 17-11-2013 வரை)

மேஷம் :-

மேஷராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகளின் மூலமாக எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத் துறையினருக்குப் பதவி உயர்வுகளும் பணியிட மாற்றங்களும் ஏற்படலாம். மனைவியின் உடல்நிலையில் பாதிப்புகள் எற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். வட்டித்தொழில், கமிசன், தரகு, ஏஜன்சி, குத்தகைத் தொழில்கள் செய்வோர், நெருப்பு, ராணுவம், காவல்துறை சார்ந்தவர்கள், ஹோட்டல் நடத்துபவர், மின்சாரத்துறை சார்ந்த பணியாளர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவார்கள். மாணவர்கள் கல்வி பயிலும் இடங்களில் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லதாகும். தீராத நோய்களுக்குப் புதிய முறை மருத்துவங்களின் மூலமாக நோய் தீர வாய்ப்புள்ளது. பிரிந்துபோன பழைய உறவுகள் மீண்டும் தொடரலாம். கண்களில் கவனம் தேவை. விசா தொடர்பான பிரச்சினைகள் தீருவதற்கான வாய்ப்புகள் உள்ள காலமாகும். பங்காளிகளுடன் சேர்ந்து நடத்தும் கூட்டுத் தொழில்களில் காரணமற்ற மனக் கசப்புகள் வர வாய்ப்பிருப்பதால் முன் கோபத்தை விலக்குதல் சிறந்தது. கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். கமிசன், தரகு, எஜன்சி போன்ற தொழில் செய்வோர், பழைய பொருட்களாகிய பேப்பர், பிளாஸ்டிக், இரும்பு போன்ற வியாபாரிகள், மருத்துவமனைகளில் பரிசோதனைப் பணி செய்பவர்கள், காட்டு இலாகா துறை சாரந்தவர்கள், இயந்திரம், கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள், எண்ணை, பலசரக்கு வியாபாரிகள், காண்டிராக்ட், கமிசன் தொழில் செய்வோர், இன்சினியரிங் துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள். அரசியல்வாதிகளால் எதிர்பார்த்து இருந்த ஆதாயம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. சூதாட்டங்களில் பணம் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. யாத்திரையில் மற்றவர்களை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். யாத்திரையில் சில புதிய சந்திப்புகளால் நன்மை அடைவீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் விட்டுக் கொடுத்து போவதின் மூலம் சில ஆதாயத்தை அடைவீர்கள். வங்கிகள் மூலமாக வெகு நாட்களாக எதிர்பார்த்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கை வந்து சேரும். வேலையாட்களால் எதிர்பாராத ஆதாயங்களும் மன மகிழ்ச்சியும் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாப்ப்புகள் கிடைக்கும். சூதாட்டமாகிய ரேஸ் லாட்டரி மூலம் பொருள் இழப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை தேவை.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பழுதுபட்ட ஆலயங்களை மற்றும் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். நண்பர்களால் வீண் பிரச்சினைகளும், மன நிம்மதிக் குறைவும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் பழகி வருதல் சிறந்தது. மற்றவர்களின் விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டு மன நிம்மதி இழக்காதிருங்கள். குடும்பத்தில் களவு போன பொருட்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியால் திரும்ப கிடைக்கும். பிள்ளைகளுக்கு உடல்நிலையில் வந்த பாதிப்புகளால் வெளியூர் பயணங்களும் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். பொதுநலத் தொண்டுகளில் பிரியமுடன் ஈடுபட்டு நற்பெயர் புகழ் அடைவீர்கள். யாத்திரையின்போது புதிய பெரிய மனிதர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். வேற்று மதத்தவரால் வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வெற்றி பெற இன்னும் சற்றுக் காலதாமதம் ஆகலாம். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்று குறைந்து காணப்படும். புதியதாக வீடு நிலங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த நாட்பட்ட மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை அடைவீர்கள்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.

கடகம் :-

கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். திருட்டுப் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் நீண்ட கால நினைவுகளாக இருந்த தாய்நாட்டிற்கு சென்று வர வாய்ப்பு உள்ளது. தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், ஷேர் மார்க்கெட் நடத்துபவர்கள், கட்டில், மெத்தை போன்ற அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், அரசுத்துறை சார்ந்த வெளிநாட்டுத் தூதுரகங்களில் பணியாற்றுவோர், மந்திரிப் பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள். நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட காலமாகத் தடைபட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நிறைவேறுவதற்காக புதிய கடன்கள் வாங்குவீர்கள். கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளுக்காக எதிர்பார்த்து இருந்த பணம் கை வந்து சேரும் காலமாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று உறவினர்களைச் சந்தித்து திரும்ப வாய்ப்பு உள்ளது. யாத்திரையில் மிகுந்த கவனமுடன் பிரயாணம் செய்து வருதல் நல்லது. அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினைகள் உருவாகலாம்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய கடன்களை வாங்கி பழைய கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள். பூமி, நிலம் தொடர்பான பிரச்சினைகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டமான ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலமாகத் தன வரவுகள் உண்டாகலாம். வங்கிகளில் இருந்து எதிர்பார்த்து இருந்த பண உதவிகள் கிடைக்கலாம். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட்செலவுகள் உண்டாகும். உடம்பில் கண் காதுகளில் கவனமுடன் இருக்கவும். காதல் தொடர்பான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்றாகும். குடும்பத்தில் இருந்து வந்துள்ள மருத்துவ செலவுகள் சற்று குறைந்து காணப்படும். நீண்ட காலமாகத் தடைபட்டு வந்த சகோதர சகோதரிகளின் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. வராத கடன் கொடுத்து இருந்த பணம் மீண்டும் கைக்கு வந்து சேரும் காலமாகும். சினிமா, நாடகம் போன்ற துறை சார்ந்தவர்கள், கட்டிட தொடர்பான ஆடம்பர அலங்கார பொருட்கள், இசைக் கலைஞர்கள், இசைக் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் இவற்றில் பணிபுரிவோர், இணைய தளங்கள் நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல பலன் அடைவார்கள்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இசராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகள் செய்து வருவது சிறந்ததாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த மனக் கசப்புகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த பண உதவிகள் மற்றும் நல்ல செய்திகள் வந்து சேரும். தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் சற்று குறையும். மறைமுக எதிரிகளால் இருந்து வந்த தொல்லைகள் குறைய வாய்ப்பு உள்ள காலமாகும். வங்கிகள் மூலமாக எதிர்பார்த்து இருந்த கடன் கேட்டு இருந்த பணங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாகத் தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறலாம். பூஜை சாதனப் பொருட்கள், ஆலயப் பணியாளர்கள், உப்பு வியாபாரிகள், கப்பல் பணியாற்றுவோர், தண்ணீர் டீல்டிரிங்ஸ் போன்ற திரவப் பொருள் வியாபாரிகள், கட்டிட தொடர்பான பொருட்களை விற்பனை செய்வோர், கலைக் கல்லூரி நடத்துபவர்கள் இவைகளில் பணி செய்வோர் ஆகியோர் நற்பலன் அடைவார்கள்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

துலாம் :-

துலாம்ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். காதல் விஷயங்களில் நற்செய்திகள் வந்து சேரும். உடல்நிலையில் மூலம் மற்றும் வயிறு தொடர்பான உபாதைகள் வந்து போகும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது. நண்பர்களின் மூலமாகப் புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடனைகள் அடைப்பீர்கள். பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிள்ளைகளுக்கு கல்வித் துறையில் பரிசுகள் மற்றும் பாராட்டுகளைப் பெறுவதன் மூலம் குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ள பிரச்சினைகளுக்குப் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் நல்லதொரு சாதகமான முடிவுகள் கிடைக்கும். சினிமா, நாடகம் மற்றும் கலைத்துறை தொடர்பான பொருட்கள், விற்பனை செய்வோர், நடிகர்கள், நடிகைகள், கலைத்தொழில் செய்வோர், பாத்திர வியாபாரிகள், கலைக் கல்லூரி சார்ந்தவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், இனிப்பு சம்பந்தமான உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர், வாசனைத் திரவியங்கள், ஊதுபத்தி போன்ற பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவார்கள்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். நீண்ட தூரப் பயணங்கள் மூலம் காரியங்கள் நிறைவேறும் காலமாகும். பொதுத்தொண்டுகளில் ஈடுபடுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் பணி செய்வது நல்லதாகும். குடும்பத்தில் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நிறைவேற இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். புதிய கடன் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லது. நண்பர்களின் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். கணவன் மனைவி உறவுகளில் வெகு நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சற்று குறைந்து மன நிம்மதி அடைவீர்கள். தபால் தந்தித் துறைகளை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், புத்தகம் மற்றும் பேப்பர் வியாபாரிகள், நாடகத் துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவார்கள். ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்டங்களின் மூலமாகப் பணம் கிடைக்கும் எனக் கருதி ஏமாற்றம் அடைய வேண்டாம். ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழில் சாலைகளை இட மாற்றம் செய்யத் திட்டம் போடுவீர்கள். உத்தியோகத் துறையினருக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றங்கள் ஏற்படலாம்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வரவும்.

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் எதிர்பாராத சில தொல்லைகள் வந்து சேர வாய்ப்பு உள்ளதால் மிகுந்த கவனமுடன் பாரத்துக் கொள்ளுதல் நல்லது. அரசு தொடர்பான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களால் எதிர்பாராத ஆதாயங்களைத் தென் திசையில் இருந்து அடைவீர்கள். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடையாதீர்கள். வேற்று மதத்தவர்களால் வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்த சேரும். கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். பிரிந்து போன உறவுகள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. அணு ஆராய்ச்சிகளில் பங்கு கொள்வோர்கள், பழைய இரும்பு தொடர்பான பொருட்களின் வியாபாரிகள், மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருள்களின் வியாபாரிகள், பழைய பொருட்கள் விற்பனை செய்வோர், இரசாயனத் தொழில் சாலைகளில் பணிகள் செய்வோர், ஆகியோர் நல்ல பலனை அடைவார்கள். நீண்ட காலமாகத் தடைபட்டு வந்த திருமண விஷயமாக நல்ல முடிவுகள் கிடைக்கலாம். கணவன் மனைவி உறவுகளில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிட இருப்பதால் நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது சிறந்தது.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிவப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- கணபதி வழிபாடு செய்து வரவும்.

மகரம் :-

மகரராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். மன உற்சாகத்துடன் பெரிய மனிதர்களின் சந்திப்பின் மூலம் காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவீர்கள். தீராத நோய்கள் தீர வேண்டி நீண்ட தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகள் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு மன நிம்மதியை அடைவீர்கள். புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதைச் சிறிது காலம் தள்ளிப் போடுதல் உகந்ததாகும். கருத்து வேறுபாடுகளுடன் இருந்து வந்த கணவன் மனைவி உறவுகளில் உள்ள பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள் கண் காதுகளில் கவனம் தேவை. காணாமற்போன பொருட்கள் காவல்துறையினரின் உதவியால் திரும்பக் கிடைக்கும். தொழிலாளர்களுடன் முன் கோபத்தை தவிர்த்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. நாட்பட்ட விசா தொடர்பான பிரச்சினைகள் தீருவதற்கான வாய்ப்புகள் உள்ள காலமாகும். கால்களில் கவனம் தேவை. நண்பர்களிடம் நாம் விட்டுக் கொடுத்துப் போவதால் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம்.

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- பிதுர்க்கள் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மற்றவர்களுக்காக உதவுவதாக எண்ணி வீண் பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டு மன நிம்மதி இழக்க வேண்டாம். கடன் மற்றும் சொத்து போன்ற விஷயங்களில் பிறருக்காக ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களால் எதிர்பார்த்த ஆதாயம் இல்லை. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். உடல்நிலையில் வாயு மற்றும் வயிறு தொடர்பான உபாதைகள் வந்து போகும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன மகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. பெண்களின் விஷயங்களில் செய்யாத குற்றங்களுக்காக அவப்பெயர் ஏற்படலாம். புதிய ஆடை அணிகலன்களை வாங்க புதிய கடன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் மன நிம்மதியுடன் கூடிய பொருட்செலவுகள் உண்டாகும். கம்ப்யூட்டர் பணி செய்பவர்கள், பேராசிரியர்கள், பழ வியாபாரிகள், ஆலயங்களில் பணி புரிபவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், பூ, பழம் மற்றும் நறுமணப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பொதுத்தொண்டு நிறுவனங்கள், ஆதரவற்றோர் ஆசிரமங்கள் நடத்துபவர்கள், பொதுநலத் துறைகளைச் சார்ந்துள்ள பணியாளர்கள் ஆகியோர் லாபம் அடைவார்கள்.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

மீனம் :-

மீனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரமாகும். காதல் தொடர்பான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவும். யாத்திரைகள் சென்று வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுப் புதிய கடன்களை வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கலாம். வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய காலமாகும். இரசாயனம், எண்ணை, பெட்ரோல், டீசல் போன்ற வியாபாரிகள், மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருள்களின் வியாபாரிகள், விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் தூதரகங்களில் பணிபுரிவோர் ஆகியோர் நற்பலன் அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் பயின்று வருதல் நல்லதாகும். தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து மன நிம்மதி அடைவீர்கள். வீடு மற்றும் தொழில் சாலைகளில் கவனமுடன் இருந்தால் திருட்டு போவதைத் தவிர்க்கலாம். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடி நிலைகள் மாறிப் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும். ஒரு சில உத்தியோத்துறை சார்ந்தவர்களுக்குப் பணியிட மாற்றம் ஏற்படலாம்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

*****************

Gnanayohi Dr. P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18(25B/1), Pulavar Street
Krishnapuram
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India
Phone : 04633-243029
Mobile : 98425-10578, 98425-29691
Fax : 04633-240390
Website : www.gnanayohi.com

About The Author