இராசிபலன்கள் (11-2-2013 முதல் 17-2-2013 வரை)

மேஷம் :-

மேஷராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். முன் கோபத்தை தவிர்த்து அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. குல தெய்வ வழிபாடு செய்து வருதலால் கிரக தோசங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. புதிய கூட்டுத் தெழில் முயற்சிகளை சற்று கால தாமதமாக தொடங்குவது நல்லது. உடம்பில் தோல் மற்றும் ரத்த சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். விவசாயம் செய்பவர்களுக்கு புதியமுறை விவசாயங்களால் நல்ல லாபம் அடைவார்கள். தந்தை மகன் உறவில் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடம்பில் வாயு போன்ற உபாதைகள் வந்து போகும். ஒரு சிலருக்குப் புதிய இட மாற்றம் ஏற்படக் கூடிய காலமாகும். வெகு காலமாக எதிர்பார்த்து இருந்த வங்கிகளின் மூலமாக கடன் தொகைகள் கிடைக்கும். விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லதாகும். வராத கடன் கொடுத்துள்ள பணம் எதிர்பாராமல் திரும்பக் கிடைக்கும். ஆசிரியர்கள், வக்கீல் தொழிற் செய்வோர்கள் இரசாயனம், அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், கோதுமை போன்ற தானியங்களின் உணவுப் பொருள் வியாபாரிகள் லாபம் அடைவார்கள். உத்தியோகம் பாரப்பவர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி மன நிம்மதியை இழக்க வேண்டாம்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- சிவ வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடுகளை வாங்கப் போட்ட திட்டங்களுக்காக வங்கிகளில் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கக் கூடிய காலமாகும். சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர்பாராத தன வரவுகள் உண்டாகலாம். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் மிகுந்த அக்கறையுடன் திட்டம் போடுவீர்கள். குடும்பத்தில் தடை பட்டிருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். கண்களில் கவனமுடன் இருத்தல் நல்லது. சமுதாய முன்னேற்றங்களுக்கும் மற்றும் ஆலய திருப்பணி செய்தல் போன்ற விஷயங்களில் தலையிட்டு நற்பெயர் எடுப்பீர்கள். திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். வட்டித் தொழில், கமிசன், ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள், இரும்பு இயந்திரம் இரசாயனப் பொருட்களின் வியாபாரிகள், அடிமைத் தொழிற் செய்வோர்கள், பலசரக்கு எண்ணை போன்ற பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலன் அடைவர். உற்றார் மற்றும் உறவினர்களின் வரவால் பொருள் வரவும் மனச் சந்தோசமும் உண்டாகும். உத்தியோகத் துறையினர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவுகள் நிரம்ப உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள சுமாராகக் காணப்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும் பரிசுகள் மற்றும் பாராட்டுதல்களையும் பெறுவார்கள்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- ஐயப்பன் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். தண்ணீர் கூல்டிரிங்ஸ் மற்றும் திரவ சம்பந்தமாகிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், பூஜைப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவார்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாக பேசிப் பழகுதல் நல்லது. உற்றார் மற்றும் உறினர்களிடம் இருந்த எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். பிள்ளைகளுக்கு வெகு காலமாக எதிர்பார்த்து வந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் விஷயங்களில் தலயிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப் படாதீர்கள். நீண்ட காலமாக புதிய கட்டிடம் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தனவரவு உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. புதிதாக வீடு, வாகனம் மற்றும் நிலபுலன்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. திருமணம் போன்ற சுப காரிய நிகழ்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டுத் தொழிற் செய்வோர்கள் முன் கோபத்தைத் தவிர்ப்பது சிறந்ததாகும். தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகுவதோடு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- அம்மன் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

கடகம் :-

கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பெண்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்று. புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவீர்கள். மஹான்களின் தரிசனங்களால் மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். உடல் நிலையில் இருந்து வந்த நாட்பட்ட நோய்கள் நீங்கி மன நிம்மதி உண்டாகும். புதிய பெரிய மனிதர்களையும் அரசியல்வாதிகளையும் சந்திக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்திருந்த ஆதாயங்கள் கிடைப்பதில் இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். சேர் மார்க்கெட் நடத்துபவர்கள், அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், போலீஸ், இராணுவம், தீயணைப்புத் துறைகளைச் சார்ந்தவர்கள், தங்க நகை வியாபாரிகள், கேஸ் வெல்டிங் போன்ற தொழிற் செய்வோர்கள், நிலக்கரி விறகு போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள் ஆகியோர் ஆதாயம் அடைவார்கள். சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். யாத்திரையின்போது புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகி அவர்களால் காரியங்களைச் சாதித்து கொள்வீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிகப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- முருகன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும். யாத்திரைகளில் வாகனங்களில் செல்லுவோர்கள் மிகுந்த கவனமுடன் சென்று வருதல் நல்லதாகும். பண விஷயங்களுக்கான நீண்ட தூரப் பயணங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. கொடுக்க வேண்டிய பழைய கடன்களைக் கொடுத்துப் பதிய கடன்களை வாங்கத் திட்டம் போடுவீர்கள். குடும்பச் சொத்துக்கள் போன்ற விஷயத்தில் நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். ஷேர் மார்க்கெட் நடத்துபவர்கள், அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், போலீஸ், இராணுவம், தீயணைப்பு துறைகள் சார்ந்தவர்கள், தங்க நகை வியாபாரிகள், காரமான உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர் ஆதாயம் அடைவார்கள் நீண்ட காலமாகத் தடை பட்டு வந்த குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்களில் தடைகள் நீங்கி வெற்றி அடைவீர்கள். ரேஸ் லாட்டரி போன்ற விஷயங்களினால் பணம் கைவிட்டுப் போகலாம். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு மனக் கவலை அடையாதீர்கள். உடம்பில் உஷ்ணம், சுரம் போன்ற உபாதைகள் வந்து போகும்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- துர்க்கை வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். விபரீதமான எண்ணங்களை விட்டொழித்து காரியத்தில் கவனமாய் இருங்கள். நீண்ட காலமாகப் பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் தீர்ந்து நல்ல சூழ்நிலை காணப்படும். நோட்டு, புத்தகம், பேப்பர், பேனா பென்சில் போன்ற எழுது பொருட்களை வியாபாரம் செய்வோர்கள், அச்சுத்துறை சார்ந்த பொருட்கள் விற்பனையாளர்கள், தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவார்கள். பொருளாதார நெருக்கடிகள் மாறித் தேவையான பொருளாதாரம் வந்து சேரும். உடம்பில் முதுகு மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் உபாதைகள் வந்து போகும். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை தர வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விஷயத்தில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள். வெகு தூரப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருவது நல்லது. உடல் நிலையில் கண் மற்றும் காதுகளில் மிக கவனம் தேவை. கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

துலாம் :-

துலாம் ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். வேற்று மதத்தவரால் ஆதாயம் இல்லை. காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கைவந்து சேரும் காலமாகும். உற்றார் உறவினர்களின் வருகையால் பொருட் செலவுகள் உண்டாகலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் காரணமற்ற பிரச்சனைகள் வந்து சேரும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். விபரீத எண்ணங்களை விட்டுக் காரியத்தில் மிகக் கவனமாய் இருங்கள். சூதாட்டம் போன்ற காரியங்களில் தலையிட்டு பொருள் இழப்பு ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தை தவிர்த்துப் பணியாற்றுதல் நல்லது. வீடுகளைப் புதுப்பித்துக் கட்டுவதற்காக பணச் செலவுகள் வந்து சேரும். பூர்வீக இடங்களை விட்டு மாறிச் செல்லத் திட்டம் போடுவீர்கள். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். அணு ஆராய்ச்சி துறை சார்ந்தவர்கள், மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள், பழைய இரும்பு பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், அலுவலக உதவியாளர்கள் மிகுந்த லாபம் உண்டாக வாய்ப்பு உள்ளது. தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும்.

இராசியான எண் :- 7
ராசியான நிறம் :- கருஞ்சிவப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- விநாயகர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். மகான்களின் நல்லாசிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்காக வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களால் அவப் பெயர்கள் வரக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் பழகுதல் நல்லது. விவசாயம் செய்வோர்கள், அரசியல்வாதிகள், கலைத்துறையினர்கள் ஆதாயம் அடைவார்கள். எதிர்பாராத நீண்டதூரப் பயணங்களின் மூலம் மன நிறைவடைய வாய்ப்பு உள்ளது மனைவியின் உடல் நிலையில் சிற்சில பாதிப்புகள் ஏற்படுவதன் மூலம் மருத்துவச் செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. இரும்பு இயந்திரம் இரசாயனம் மற்றும் அணு ஆராய்ச்சித் துறை சார்ந்தவர்கள், பெட்ரோல் டீசல் போன்ற எண்ணை வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவீர்கள். விவசாயம் செய்வோர்களுக்கு நல்ல விளைச்சலும், லாபமும் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். திடீர் அதிர்ஷ்டம் மூலம் எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்ட திட்டங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- அம்மன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் மூளை நரம்பு எலும்பு போன்ற உபாதைகள் வந்து போகலாம். பேனா பென்சில் போன்ற எழுது பொருட்களை வியாபாரம் செய்வோர்கள், அச்சுத்துறை சார்ந்த பொருட்கள் விற்பனையாளர்கள், தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், ஆகியோர் நல்ல லாபம் அடைவார்கள். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம். பல காலமாகத் தீராத நோய்களுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கும். காதல் விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது. ஆதரவற்ற ஏழைகளுக்காக உதவி செய்து அதனால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வீடு நிலம் வாங்குவது போன்ற முயற்சிகளில் அரசு சம்பந்தமாக எதிர்பார்த்து வந்த உதவித் தொகைகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. நெடு நாட்களாகப் பிரச்சனையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக் கூடிய காலமாகும். அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். ரேஸ் லாட்டரி பொன்ற சூதாட்டங்களில் மிக கவனமுடன் இருப்பது நல்லதாகும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

மகரம் :-

மகரராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். யாத்திரையில் கவனம் தேவை. வெகு காலமாக கணவன் மனைவியின் உறவுகளில் இருந்து வந்துள்ள பிரச்சனைகள் தீர்ந்து சுமூகமான உறவுகள் ஏற்படும். சமுதாய முன்னேற்றத்திற்கான பொது நலக் காரியங்களுக்காக மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் தாய் தந்தையர்களின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவத்திற்காக வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்களால் வீண் விவாதங்களும் தொல்லைகளும் வந்து போகும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதிர்பாராமல் வட திசையில் இருந்து பொருள் வரவும், நல்ல செய்திகளும் வந்து சேரும். சேர் மார்க்கெட் மற்றும் தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது நல்லது. திருமண தகவல் மையங்கள், வாகனங்களில் பணியாற்றுவோர்கள், அரசுத் துறையை சார்ந்த வழக்கறிஞர்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், சினிமா மற்றும் நாடகத்துறைகளைச் சார்ந்தவர்கள், கட்டிட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். பணி ஆட்களிடம் சற்று பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லதாகும். தீராத நாற்பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள். மூத்த சகோதரர்களால் பொருட் செலவுகள் வந்து சேரும். ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், உப்பு மற்றும் உர வியாபாரிகள், தண்ணீர் கூல்டிரிங்ஸ் போன்ற திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் ஆதாயம் அடைவார்கள். காதல் விஷயத்தில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். குல தெய்வ வழிபாட்டிற்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். தாய்வழிச் சொத்துக்களில் இருந்த வந்த பிரச்சனைகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும். மற்றவர்களை நம்பி பணம் பொருள் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். உத்தியோகத் துறையினருக்கு இட மாற்றமும் பதவி உயர்வுகளும் வரக் கூடும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவில் விரிசல்களும் வீண் மனக் குழப்பங்களும் வந்து போகும். நீண்ட நாட்களாக வராத பணம் கை வந்து சேரக் கூடிய காலமாகும்.

இராசியான எண்_2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- அம்மன் ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

மீனம் :-

மீனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விஷயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும்.
பிள்ளைகளால் எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பண உதவிகள் உறவினர்களால் கிடைக்கும். காணாமற் போன பொருட்கள் திரும்ப கிடைக்கும். தீர்த்த யாத்திரைகளுக்காக நீண்ட தூரப் பிரயாணங்களை மேற்கொள்ளுவீர்கள். ஆதரவற்றோர்களுக்கு உதவுவதில் மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் நிலையில் வாயு மற்றும் வாதம் ஆகிய தொல்லைகள் வந்து போகும். வெளிநாடு சென்றுவருதல் போன்ற புதிய முயற்சிகளில் பிற மதத்தவர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். போட்டி லாட்டரி மூலமாகத் திடீர் தன வரவுகள் உண்டாகும். உறவினர்கள் மற்றும் சொந்த பந்தங்களால் ஆதரவு இல்லை. உத்தியோகத் துறையினர்களுக்குப் பணி இட மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும். அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்பார்த்து வந்த காரியங்கள் நிறைவேறும். திருமண விஷயங்களுக்காக முயற்சி செய்யலாம். இனிப்பு பொருள் வியாபாரிகள், கம்ப்யூட்டர் துறையை சார்ந்தவர்கள், பழ வியாபாரிகள், ஆலயப் பணிகள் செய்வோர்கள், அறநிலையத் துறையை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துவோர்கள் ஆகியோர் லாபம் அடைவார்கள். குடும்பத்தில் தடை பட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிக்கு
பரிகாரம் :- தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

*****************

Gnanayohi Dr. P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18(25B/1), Pulavar Street
Krishnapuram
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India
Phone : 04633-243029
Mobile : 98425-10578, 98425-29691
Fax : 04633-240390
Website : www.gnanayohi.com

About The Author