இராசிபலன்கள் (11-8-2014 முதல் 17-8-2014 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! ஒரு சிலர் உற்றார் உறவினர்களால் எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். பொதுத் தொண்டுகளைச் செய்பவர்கள், திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள், திரைப்படம், நாடகம் போன்ற கலைத்துறைகளைச் சார்ந்தவர்கள், கலைக்கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்கி விற்பனை செய்பவர்கள், கட்டுமானப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் மிகவும் நற்பலன் அடைவர். விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய விவசாய முறைகளின் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவதைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். பொதுநலச் சேவை செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்ட விஷயங்களில் ஈடுபட்டு ஏமாற வேண்டாம்! காதல் விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். முதியோர் இல்லம் நடத்துபவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், உப்பு வியாபாரிகள், கடல்துறை சார்ந்த அறிஞர்கள், தண்ணீர், குளிர்பான வியாபாரிகள்,
பூஜைப்பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவீர்கள். எடுத்த காரியத்தைத் துணிவுடன் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வாய்ப்பு உள்ள காலமாகும். காணாமல் போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் கவனத்துடன் பேசிப் பழகுதல் நல்லதாகும்! தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். பொருளாதாரத்தில் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்! கணவன் – மனைவிக்குள் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து போகும். பிரிந்துபோன உறவுகளுடன் திரும்பவும் தொடர்புகள் ஏற்படக்கூடிய காலமாகும். சகோதர சகோதரிகளின் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமல் போகுமாகையால் கடன் வாங்குவதைத் தவிர்த்தல் வேண்டும்!

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகச் செலவுகள் உண்டாகலாம். வாயுத்தொல்லை, வயிற்று உபாதை போன்றவை வந்து போகலாம். தீராத, நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஒரு சிலருக்குப் பணியில் வீண் பிரச்சினைகள் உருவாகிப் பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தீராத, நாட்பட்ட நோய்கள் தீருவதற்குப் புதிய மருத்துவர்களை நாடுவது நல்லது! காரணமற்ற மன சஞ்சலங்கள் வர இருப்பதால் புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பது உகந்ததாகும்! புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்காக முயற்சிப்பீர்கள். வேற்று மதத்தவர்களிடம் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது! காய்கறிகள், இலை, பூ, பழம் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள், சிறு தின்பண்ட வியாபாரிகள், மருத்துவத்துறையைச் சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், அச்சுத்தொழில் செய்பவர்கள், அஞ்சல்துறையினர், கவிஞர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். சகோதர சகோதரிகளின் தடைபட்ட திருமணக் காரியங்கள் மற்றவர்களின் உதவியால் நிறைவேறும் காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வெகு காலமாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய வீடு, வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவர்களிடமிருந்து எதிர்பார்த்த செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். ஒரு சிலருக்குப் பணியிடம், வீடு ஆகியவை இடமாற்றம் பெறும். கட்டுமானப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், ஒப்பனைக்கூடம் நடத்துபவர்கள், நடிப்புத்துறை சார்ந்தவர்கள், ஊதுபத்தி, சந்தனம், அத்தர், சவ்வாது, செண்ட், விபூதி, குங்குமம் போன்ற நறுமணப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். பொதுநலத் தொண்டுகளில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு நற்பெயர், புகழ் அடைய வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன்கள் கை வந்து சேரும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது! வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்பி வரக்கூடிய காலமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட காலமாகப் பிள்ளை இல்லாதவர்களுக்கு இறையருளால் புத்திர பாக்கியம் உண்டாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவதால் வர இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் சற்றுக் குறையும். ஒரு சிலருக்கு வீடு, பணியிடம் ஆகியவை மாற வாய்ப்பு உள்ளது. மனைவி திடீரென நோய்வாய்ப்பட இருப்பதால் எச்சரிக்கையுடன் இருங்கள்! பொதுத் தொண்டு செய்பவர்கள், ஆதரவற்றோர் இல்லம் நடத்துபவர்கள் ஆகியோருக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் பரிசு, பாராட்டுதல்களோடு அரசு ஆதரவையும் பெறுவார்கள். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். திரவப்பொருள் வியாபாரிகள், உப்பு, உர வியாபாரிகள், கப்பல் பணி செய்பவர்கள், சுவாமி படங்கள், பூஜைப் பொருட்கள் போன்றவற்றை விற்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்த அரசு அதிகாரிகள், மீன்பிடித் தொழில் செய்பவர்கள், தாய்-சேய் நல விடுதி நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். பயணத்தின்பொழுது மிகுந்த கவனத்துடன் சென்று வாருங்கள்! முன் கோபம் தவிர்த்தல் நல்லது! பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலமாகவோ அல்லது செய்யும் தொழிலிலோ திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் வந்து சேர வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயமும் நற்செய்திகளும் வந்து சேரும். இரும்பு, இயந்திரம், வேதியியல் சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற எரிபொருள் வியாபாரிகள், பழைய பொருட்களை விற்பனை செய்பவர்கள், பலசரக்கு வியாபாரிகள், வட்டித் தொழில் செய்பவர்கள், தரகு, ஏஜன்சி, குத்தகை போன்ற தொழில்களைச் செய்பவர்கள் ஆகியோர் லாபம் அடைவர். கண், காது, தலை போன்ற பாகங்களில் சிற்சில உபாதைகள் வரலாம். குடும்பச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் திரும்பக் கிடைக்கும். மற்றவர்களை நம்பிப் பணமோ பொருளோ கடன் கொடுத்து ஏமாற வேண்டாம்! புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் உண்டாகும்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் காளியையும் பிதுர்களையும் வழிபாடு செய்து அன்னதானமும் செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் சுமாரான பலனையே தரும். மற்றவர்களை நம்பிப் பணமாகவோ பொருளாகவோ கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவதோடு புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்படும். வாயு, வாதம் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். மின்சாரம், எரிபொருள் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள், காவல்துறையினர், இராணுவத்தினர், உணவகத் தொழில் செய்பவர்கள், சிற்றுண்டி வியாபாரிகள், தரகு, கமிஷன் போன்ற தொழில்கள் செய்பவர்கள், நிலபுலன் விற்பனை செய்பவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். ஆடம்பரச் செலவுகளைச் செய்ய எண்ணிப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத்தொழில் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். தந்தை – மகன் உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ள காலமாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லது! பழுதுபட்ட பழைய வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதற்கான செலவுகள் வந்து சேரும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் ஏற்பட்டு விலகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். பணியாட்களால் பிரச்சினைகளும் இழப்பும் வர இருப்பதால் கவனம் தேவை! பந்தயம், பரிசுச்சீட்டு, பங்குச்சந்தை போன்ற திடீர் அதிர்ஷ்ட வகைகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். பொதுத்தொண்டு நிறுவனத்தவர்கள், திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், நகை வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள், பூ, பழம், நறுமணப் பொருட்கள், இனிப்புப் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். நீண்ட நாட்களாக வராத கடன், கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் ஆகியவை திரும்பக் கை வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் பரிசும் பாராட்டுக்களும் பெறுவதோடு அரசு உதவித் தொகைகள் பெறவும் வாய்ப்பு உள்ளது. தரகு, கமிஷன் போன்ற தொழில்களைச் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது! பெண்களால் தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் – மனைவி ஒன்று சேருவர்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடு, நிலம், வாகனம் வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். விட்டுப் போன பழைய உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து நல்ல சூழ்நிலை உருவாகும். இரும்பு, இயந்திரம், எண்ணெய், பலசரக்கு, மாமிசப் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி, விற்பனை செய்பவர்கள், ஆலை அதிபர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள், பழைய பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். நண்பர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில் உறவினர்களின் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டி வரும் என்பதால் புதிய தொடர்புகளைத் தவிர்த்தல் நல்லது! அலுவலகப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளிடம் மனக் கசப்பு ஏற்பட்டுப் பணியிட மாற்றம் ஏற்பட இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்த்துப் பணி ஆற்றுதல் சிறந்ததாகும்! பெண்களால் தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். பயணங்களில் எச்சரிக்கையுடன் சென்று வருவது நல்லது. வராத கடன், கொடுத்து வைத்திருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதன் மூலம் திருப்தி அடைவீர்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் எதிர்பாராத செலவுகளும் நிம்மதிக் குறைவும் ஏற்படலாம். விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான பலன்கள் கிடைக்கும் காலமாகும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்! பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவதற்காக எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் கை வந்து சேரும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். வட திசையில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும். வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த கடன் நண்பர்களின் உதவியால் கிடைக்கும். பழைய இரும்பு, இயந்திரம், வேதியியல் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், அணு ஆராய்ச்சித்துறையில் பணியாற்றுபவர்கள், அரசியல் அறிஞர்கள், அசைவப்பொருள் வியாபாரிகள், கணினித்துறையினர், நாடகத்துறையைச் சார்ந்தவர்கள், அடிமட்டத் தொழிலாளர்கள், ஆலைப் பணியாளர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். தொழிற்சாலை, வீடு இரண்டையும் இடமாற்றம் செய்ய எண்ணுவீர்கள். பயணத்தின்போது மிகுந்த கவனத்துடன் சென்று வருவது நல்லது! விபரீதமான எண்ணங்களைக் கை விட்டுக் காரியத்தில் கவனமாய் இருப்பது நல்லது!

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஆஞ்சனேயர் வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்து வந்த பண உதவித் தொகைகள் கிடைக்கும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! திருமண சம்பந்தமான முயற்சிகளை இன்னும் சற்றுத் தாமதமாகவே நடத்துவது சிறந்ததாகும்! பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். மாணவர்களுக்குப் புதிய படிப்புகள் சம்பந்தமாக நல்ல தகவல்கள் கிடைக்கும். அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், மடாதிபதிகள், துறவிகள், கழிவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்கள் அடைவர். சுரம், உடற்சூடு போன்றவை வந்து போகும். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! சகோதர சகோதரிகளின் தடைபட்டுப் போன சுப நிகழ்ச்சிகள் சம்பந்தமாக நல்ல தகவல்கள் வந்து சேரும். வராத பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வீடு, நிலபுலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் விநாயகர் வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். வேலையாட்களால் எதிர்பார்த்த ஆதாயம் இல்லை. பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத நபர்களுடைய தொடர்புகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். பூர்விகச் சொத்து விஷயங்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணக் காரியங்கள் நிறைவேறும். விடுபட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள், ஜவுளி, நூல் போன்ற பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், மருந்துப்பொருள் வியாபாரிகள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் – ஆசிரியர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். தேவையற்ற மன சஞ்சலங்களைத் தவிர்த்தல் வேண்டும்! தாயின் உடல்நிலையில் சில பாதிப்புகள் வரக் கூடுமாகையால் கவனத்துடன் இருங்கள்! குலதெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது! உற்றார் உறவினர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! வழக்கு விஷயங்களில் சாதகமான, நல்ல தீர்ப்புகள் கிடைக்கும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author