இராசிபலன்கள்( 12-1-2015 முதல் 18-1-2015 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகள் செய்து வருவது சிறந்ததாகும். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறலாம். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த பண உதவிகள், நல்ல செய்திகள் ஆகியவை வந்து சேரும். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளுக்காகக் கடன் கேட்டு எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த மனக் கசப்புகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். திரைப்படம், நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், இசைக் கலைஞர்கள், இசைக் கல்லூரிகளில் பணிபுரிவோர், இணையத்தளம் நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல பலன் அடைவர். மறைமுக எதிரிகளால் இருந்து வந்த தொல்லைகள் குறைய வாய்ப்பு உள்ள காலமாகும். வழக்கு விஷயங்களில் முடிவுகள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். வாராக் கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் போன்றவை சம்பந்தமாக வீண் பிரச்சினைகள் உருவாகலாம். காணாமல் போன பொருட்கள் காவல்துறையினரின் உதவியால் திரும்பக் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் நிம்மதியுடன் கூடிய செலவுகள் உண்டாகும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகள் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நிம்மதி அடைவீர்கள். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். தந்தை வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் சற்றுக் குறையும். வங்கிகள் மூலமாக எதிர்பார்த்திருந்த கடன், பிறரிடம் கேட்டிருந்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேதிப்பொருள், எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்றவற்றை விற்பவர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபரிகள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், தூதரகங்களில் பணிபுரிவோர் ஆகியோர் நற்பலன் அடைவர். தொழிலாளர்களுடன் முன் கோபத்தைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது! அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! பெரிய மனிதர்களுடனான உற்சாகச் சந்திப்பின் மூலம் காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவீர்கள். தீராத நோய்கள் தீர வேண்டி நீண்ட தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். மகான்களின் எதிர்பாராத தரிசனத்தால் மகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. பொது நலத் தொண்டுகளில் பிரியத்துடன் ஈடுபட்டு நற்பெயர், புகழ் அடைவீர்கள். பழுதுபட்ட ஆலயங்களையும் வீடுகளையும் புதுப்பிப்பதற்கான முயற்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். கடன், சொத்து போன்ற விஷயங்களில் பிறருக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்த்திடுங்கள்! அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், பழைய பொருட்கள் விற்பனை செய்பவர்கள், வேதித் தொழிற்சாலைகளில் பணி செய்பவர்கள், அணு ஆராய்ச்சிகளில் பங்கு கொள்பவர்கள், பழைய இரும்பு சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். நண்பர்களால் வீண் பிரச்சினைகளும், நிம்மதிக் குறைவும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் பழகி வருதல் சிறந்தது! வெளிநாட்டில் இருப்பவர்கள் நீண்ட காலமாக நினைத்திருந்தது போல் தாய்நாட்டிற்குச் சென்று வர வாய்ப்பு உள்ளது. திருட்டுப் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். மற்றவர்களுக்கு உதவுவதாக எண்ணி வீண் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு நிம்மதி இழக்க வேண்டாம்!

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர் வழிபாடு, அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று உறவினர்களைச் சந்தித்துத் திரும்ப வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாகத் திரும்பி வராத கடன், மற்றவர்களிடம் கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் ஆகியவை நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நிறைவேறுவதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், பழைய பொருள் விற்பனை செய்பவர்கள், வேதித் தொழிற்சாலைகளில் பணி செய்பவர்கள், அணு ஆராய்ச்சிகளில் பங்கு கொள்பவர்கள், பழைய இரும்பு சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். புதிய ஆடை அணிகலன்களை வாங்கப் புதிய கடன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உற்றார் உறவினர்கள் உதவக்கூடிய சூழலில் இல்லை. வாயுத் தொல்லை, வயிறு சம்பந்தமான உபாதைகள் ஆகியவை வந்து போகும். கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளுக்காக எதிர்பார்த்திருந்த பணம் கை வந்து சேரும் காலமாகும். பெண்களின் விஷயங்களில் செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர் ஏற்படலாம்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- கணபதி வழிபாடு செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை தேவை! வங்கிகள் மூலமாக வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம், பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கை வந்து சேரும். கணவன் – மனைவி உறவில் வெகு நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சற்றுக் குறைந்து நிம்மதி அடைவீர்கள். பணியாட்களால் எதிர்பாராத ஆதாயங்களும் மகிழ்ச்சியும் ஏற்படும். வேலை கிடைக்காதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பயணத்தில் சில புதிய சந்திப்புகளால் நன்மை அடைவீர்கள். ஒரு சிலர் வீடு, தொழிற்சாலை ஆகியவற்றை இடமாற்றம் செய்யத் திட்டம் போடுவீர்கள். பயணத்தில் மற்றவர்களை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம்! கட்டட சம்பந்தமான ஆடம்பர அலங்காரப் பொருட்கள், பூஜைப் பொருட்கள் ஆகியவற்றை விற்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பொதுத் தொண்டு நிறுவனம், ஆதரவற்றோர் ஆசிரமம் போன்றவற்றை நடத்துபவர்கள், கணினிப் பணி செய்பவர்கள், பேராசிரியர்கள், பழ வியாபாரிகள், ஆலயங்களில் பணி புரிபவர்கள், பொதுநலத்துறைகளைச் சார்ந்துள்ள பணியாளர்கள் ஆகியோர் லாபம் அடைவர்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்::- சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். நீண்ட தூரப் பயணங்கள் மூலம் காரியங்கள் நிறைவேறும் காலமாகும். அரசியல்வாதிகளால் எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. புதிய கடன் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லது! பொதுத் தொண்டுகளில் ஈடுபடுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணி செய்வது நல்லதாகும்! குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நிறைவேற இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்டங்களில் ஈடுபட்டு ஏமாற்றம் அடைய வேண்டாம். நகை வியாபாரிகள், பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள், கட்டில், மெத்தை போன்ற அலங்காரப் பொருள் வியாபாரிகள், வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றுபவர்கள், மந்திரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சூரிய வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். மாணவர்கள் கல்வி பயிலும் இடங்களில் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லதாகும்! மனைவியின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பங்காளிகளுடன் சேர்ந்து நடத்தும் கூட்டுத் தொழில்களில் காரணமற்ற மனக் கசப்புகள் வர இருப்பதால் முன் கோபத்தை விலக்குதல் சிறந்தது! கமிசன், தரகு, ஏஜன்சி, ஒப்பந்தம் போன்ற தொழில்கள் செய்பவர்கள், பழைய பொருள் வியாபாரிகள், மருத்துவமனைகளில் பரிசோதனைப் பணி செய்பவர்கள், வனத்துறை சார்ந்தவர்கள், இயந்திரம், கணினி போன்ற பொருட்களில் பணியாற்றுபவர்கள், எண்ணெய், பலசரக்கு வியாபாரிகள், பொறியியல்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். அரசியல்வாதிகளின் மூலமாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் விஷயங்களில் நற்செய்திகள் வந்து சேரும். மூலம், வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பிரிந்து போன கணவன் – மனைவி திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கட்டட சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், கலைக்கல்லூரி நடத்துபவர்கள் – அதில் பணி செய்பவர்கள், பூஜை சாதனப் பொருட்கள் விற்பவர்கள், ஆலயப் பணியாளர்கள், உப்பு வியாபாரிகள், கப்பல் பணி ஆற்றுபவர்கள், திரவப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். தீராத நோய்கள் புதிய மருத்துவ முறைகளின் மூலமாகத் தீர வாய்ப்புள்ளது. பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும் பணியிட மாற்றங்களும் ஏற்படலாம். கண்களில் கவனம் தேவை! புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது! பிள்ளைகள் கல்வித்துறையில் பரிசும் பாராட்டும் பெறுவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் மூலமாகப் புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடனை அடைப்பீர்கள். பூர்விகச் சொத்துக்களில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளுக்குப் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்லதொரு சாதகமான முடிவு கிடைக்கும். பிரிந்து போன பழைய உறவுகள் மீண்டும் தொடரலாம்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் இன்னும் சற்றுத் தாமதம் ஏற்படலாம். தந்தை – மகன் உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கலாம். கவனத்துடன் இருந்தால் வீடு, தொழிற்சாலை ஆகியவற்றில் திருட்டுப் போவதைத் தவிர்க்கலாம். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடி நிலைகள் மாறி முன்னேற்றம் காணப்படும். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறைந்து காணப்படும். மற்றவர்களின் விஷயங்களில் வீணாகத் தலையிட்டு பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு நிம்மதி இழக்காதிருங்கள்! வட்டித் தொழில், கமிசன், தரகு, ஏஜன்சி, குத்தகை போன்ற தொழில்கள் செய்பவர்கள், ராணுவம், காவல்துறை சார்ந்தவர்கள், ஹோட்டல் நடத்துதல் போன்ற நெருப்பு சம்பந்தமான பணிகளில் ஈடுபடுபவர்கள், மின்சாரத்துறை சார்ந்த பணியாளர்கள் – உற்பத்தியாளர்கள் – விற்பனை செய்பவர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். வேலை கிடைக்காத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய காலமாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- துர்க்கை ஆலய வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த நாட்பட்ட மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை அடைவீர்கள். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள் போன்றோரின் தொடர்பு ஏற்பட்டு அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். கருத்து வேறுபாடுகளுடன் இருந்து வந்த கணவன் – மனைவி உறவில் உள்ள பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள். களவு போன பொருட்கள் உறவினர்கள், நண்பர்கள் உதவியால் திரும்பக் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனத்துடன் இருந்து வருதல் நல்லதாகும்! கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! புனிதப் பயணம் சென்று வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுப் புதிய கடன்களை வாங்குவீர்கள். நண்பர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவதால் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம். புதிய தொழில் ஆரம்பம் செய்வதைச் சிறிது காலம் தள்ளிப் போடுதல் உகந்ததாகும்! பிள்ளைகளுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. புதியதாக வீடு, நிலம் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சூரிய நமஸ்காரம் செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பயணத்தில் மிகுந்த கவனத்துடன் சென்று வருதல் நல்லது! காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்றாகும்! குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைந்து காணப்படும். பிள்ளைகளால் எதிர்பாராத சில தொல்லைகள் வந்து சேர வாய்ப்பு உள்ளதால் மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ளுதல் நல்லது! திரைப்படம், நாடகம் போன்ற கலைத்துறை சம்பந்தமான பொருட்கள் விற்பனை செய்பவர்கள், நடிகர்கள், கலைத்தொழில் செய்பவர்கள், பாத்திர வியாபாரிகள், கலைக்கல்லூரி சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த சகோதர சகோதரிகளின் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. நிலம் சம்பந்தமான பிரச்சினைகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களை நம்பிப் பணமோ பொருளோ கடன் கொடுத்து ஏமாற்றம் அடையாதீர்கள்! கணவன் – மனைவி உறவு நன்றாக இருக்கும். பெண்களால் எதிர்பாராத ஆதாயங்களைத் தென் திசையில் இருந்து அடைவீர்கள். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் செலவுகள் உண்டாகும். கண், காது ஆகியவற்றில் கவனத்துடன் இருக்க வேண்டும்! பிரிந்து போன உறவுகள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. செய்யாத குற்றத்துக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிட இருப்பதால் நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது சிறந்தது! நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த திருமண விஷயமாக நல்ல முடிவுகள் கிடைக்கலாம். திடீர் அதிர்ஷ்டமான பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலமாக தன வரவுகள் உண்டாகலாம். கணவன் – மனைவி உறவில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்! வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் நல்ல தகவல்கள் வந்து சேரும். அஞ்சல்துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், அச்சுத்தொழில் செய்பவர்கள், புத்தகம், பேப்பர் வியாபாரிகள், நாடகத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். வங்கிகளில் இருந்து எதிர்பார்த்திருந்த பண உதவிகள் கிடைக்கலாம்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மகாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author