இராசிபலன்கள் (13-01-2014 முதல் 19-01-2014 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், காய்கறிகள், இலை போன்றவற்றை விற்பவர்கள், மர வியாபாரம் செய்பவர்கள், வட்டித் தொழில் செய்பவர்கள், கழிவுப் பொருள் வியாபாரிகள், அறிவியல்துறை சார்ந்த பணியாளர்கள் ஆகியோர் மிகவும் லாபம் அடைவர். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன்களை வாங்குவீர்கள். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்படும். வேலை இல்லாத படித்தவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் பரிசும் பாராட்டுகளும் சலுகைகளும் பெறுவார்கள். மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் கல்வி பயின்று வருதல் நல்லது. குடும்பத்தில் காரணமற்ற குழப்பங்களும் சச்சரவுகளும் வந்து போக இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது! வாயுத் தொல்லை, வயிற்று உபாதை போன்றவை வந்து போகும். நெடு நாட்களாகத் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிற்சாலைகள் இருப்பிடங்கள் ஆகியவற்றை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளில சற்றுப் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் முயற்சியால் வெற்றி பெறுவீர்கள்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- பிதுர் வழிபாடும் கருப்பு ஆடைத் தானமும் செய்து வருக!

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். காணாமல் போன பொருட்கள் திரும்பக் கை வந்து சேரும். பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும். விவசாயம் செய்பவர்கள் சுமாரான விளைச்சல் மூலம் நற்பலன் அடைவர். கணவன் – மனைவியின் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். பொதுத் தொண்டு நிறுவனத்தினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது! பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்டங்கள் மூலமாகத் தன வரவு உண்டாகலாம். நாட்பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவி நாடிச் செல்லுவீர்கள். திரவப் பொருள் வியாபாரிகள், உப்பு, உரம் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடல் வளத்துறை சார்ந்தவர்கள், பூஜைப் பொருள் வியாரிகள், தாய் – சேய் நல விடுதிகளைச் சார்ந்தவர்கள் ஆகியோருக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டாகும். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். வெளிநாடு சென்று வரும் முயற்சிகளுக்காக மற்றவர்களை நம்பிப் பணமோ பொருளோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். உறவினர்களால் எதிர்பாராத பொருட் செலவுகள் உண்டாகக்கூடிய காலமாகும்.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- அம்மன் ஆலய வழிபாடும் வெள்ளை ஆடைத் தானமும் செய்து வருக!

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பூ, பழம், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை வியாபாரம் செய்பவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், மந்திரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நெடும் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். புதிய தொழில்கள் தொடங்கப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறக் கூடிய காலமாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதாக எண்ணிச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சிறிது முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது. தந்தை – மகன் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மிக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் துலங்க வாய்ப்பு உள்ளது. இரத்த சம்பந்தமான உபாதைகள் வந்து போக வாய்ப்புள்ள காலமாகும். அலுவலகப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்திருந்த அரசு உதவித் தொகைகள் கிடைப்பதோடு நினைத்த இடங்களுக்குப் பணியிட மாற்றமும் ஏற்படக்கூடிய காலமாகும்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடும் ஆடைத் தானமும் செய்து வருக!

கடகம்:-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குழந்தைகளுக்குப் பரிசும் பாராட்டுகளும் கிடைக்கலாம். மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மிகுந்த கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும்! மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் திருமண விஷயமாகக் காரணமில்லாத சிற்சில மனக் கசப்புகள் வந்து போகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்டங்கள் மூலமாகப் பணம் வந்து சேரும் காலமாகும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். வீடு வாகனங்களைப் பழுது பார்க்கும் பொருட்டுப் பொருட்செலவுகள் உண்டாகலாம். நாட்பட்ட வியாதிகள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவீர்கள். அரசியல்வாதிகளிடம் இருந்து ஆதாயங்களைப் பெறுவீர்கள். கட்டுமானப் பொருட்கள் விற்பவர்கள், ஒப்பனைக்கூடம் நடத்துபவர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், நறுமணப் பொருள் விற்பவர்கள், வாகனங்களை வியாபாரம் செய்பவர்கள், கலைக்கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். வேற்று மதத்தவரால் ஆதாயம் ஏதும் இல்லை. வராத கடன், கொடுத்திருந்த பணம், பொருட்கள் ஆகியவை காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடும் ஆடைத் தானமும் செய்து வருக!

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வாய், வயிறு, முதுகு ஆகியவற்றில் சில உபாதைகள் வந்து போகலாம். புதிய ஆடை அணிகலன் வாங்குவதைத் தள்ளிப் போடுதல் நல்லது! பிள்ளைகளால் எதிர்பார்க்காத சில தொல்லைகளும் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். ஒரு சிலருக்குச் சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் வந்து சேரும். செய்யும் தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைச் சிறிது தள்ளிப் போடுதல் உகந்தது! மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! காவல்துறை, இராணுவம், தீயணைப்பு போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், உணவகத் தொழில் செய்பவர்கள், தங்க நகை வியாபாரிகள், எரிபொருள் வியாபாரிகள், விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். புதிய வீடு மாற்றங்களைச் செய்ய முயற்சிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த ஆதாயங்கள் கிடைப்பதில் அரசியல்வாதிகளால் இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நல்லது! பயணத்தில் சம்பந்தம் இல்லாத புதிய நபர்கள் மூலமாகச் சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. மின்சாரம், அடுப்பு ஆகியவற்றை எச்சரிக்கையுடன் கையாளுதல் நல்லது! நெடும் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது! திருட்டுப்போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- முருகன் வழிபாடும் ஆடைத் தானமும் செய்து வருக!

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசி பழகுவதால் வீண் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். மாணவர்கள் கல்வியில் பரிசும் பாராட்டுக்களும் பெறுவார்கள். விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும். பூர்விகச் சொத்துக்கள் மற்றவர்களின் உதவியால் கை வந்து சேரும். நெருப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள், அரசு உயர்பதவிகளை வகிப்பவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், கேஸ், வெல்டிங் சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், காரமான உணவுப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் மிகுந்த நற்பலன்களை அடைவர். நீண்ட காலமாகப் பிரச்சினைகள் உண்டாகிப் பிரிந்து போன கணவன் – மனைவி இருவரும் திரும்ப ஒன்று சேர வாய்ப்பு உள்ள காலமாகும். வெகு காலமாக வராத பணம், பொருட்கள் ஆகியவை நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. தந்தை – மகன் உறவுகளில் சிற்சில காரணமில்லாத பிரச்சினைகள் வந்து போகலாம்.

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- சூரிய வழிபாடும் வெள்ளை ஆடைத் தானமும் செய்து வருக!

துலாம்:-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயங்களில் எதிர்பார்த்த செய்திகள் சற்றுத் தாமதமாகவே கிடைக்கும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலம் திடீர்த் தன வரவு ஏற்படலாம். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுவதில் மன நிறைவடைவீர்கள். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. வீடு வாகனங்களை வாங்குவதற்கும் தொழிற்சாலை மேம்பாட்டுக்காகவும் நீண்ட காலமாக வங்கிகளில் எதிர்பார்த்திருந்த கடன் உதவித் தொகைகள் கைக்கு வந்து சேரும் காலமாகும். விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான நற்பலன்கள் கிடைக்கும். நண்பர்களால் ஒரு சிலர் ஆதாயம் அடைவீர்கள். பயணங்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்! கணவன் – மனைவி உறவுகளில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களை நம்பிப் பணமோ பொருளோ கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! தாய் வழிச் சொந்த பந்தங்களின் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள். அழுகுபொருள் வியாபாரிகள், பழைய பொருள் வியாபாரிகள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், சாயப் பொடி நிறுவனம் நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர்.

இராசியான எண்:- 7.
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- கணபதி வழிபாடும் செவ்வாடைத் தானமும் செய்து வருக!

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகப் புதிய கடன் வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில்களைச் செய்வதற்கான முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது! கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! வீண் மனச் சிக்கலை விலைக்கு வாங்க வேண்டாம்! கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மன நிறைவு அடைவீர்கள். தாயின் உடல்நிலை பாதிப்புகள் இன்னும் சிலகாலம் வரை நீடிக்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம், பொருள் வந்து சேரலாம். மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி வந்து சேரும். ஆடம்பர அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், கலைக்கல்லூரி மாணவர்கள், சிற்றுண்டி வியாபாரிகள், நறுமணப் பொருள் விற்பவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பொருள் வரவும் நிம்மதியும் கிடைப்பதோடு பிள்ளைகளும் பரிசும் பாராட்டுகளும் பெறுவார்கள். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும் காலமாகும்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடும் வெள்ளை ஆடைத் தானமும் செய்து வருக!

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் பல காலமாக ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையக் கூடிய காலமாகும். ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு வீண் குழப்பம் அடைய வேண்டாம். மற்றவர்களுக்காகச் சொத்து, பண விஷயங்களுக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்த்தல் நல்லது! அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல முடிவுகள் கிடைக்கும். காதல் விஷயங்களில் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! தந்தை வழியிலான அரசியல்வாதிகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிறைவேறும் காலமாகும். புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன்கள் கை வந்து சேரும். பயணத்தின்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். காது, முதுகு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகலாம். குலதெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவீர்கள். இனிப்பு வியாபாரிகள், ஆதரவற்றறோர் ஆசிரமம், முதியோர் இல்லம் போன்றவற்றை நடத்துபவர்கள், கணினித்துறை, நிலவளத்துறை சார்ந்தவர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்கள் அடைவர்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- பிதுர் வழிபாடும் ஆடைத் தானமும் செய்து வருக!

மகரம்:-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல்நிலைப் பாதிப்புகளால் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். உறவினர்களின் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். அஞ்சல்துறை சார்ந்தவர்கள், பேப்பர், அச்சுத் தொழிற்சாலை நடத்துபவர்கள், காய்கறி, இலை, கீரை, பருப்பு போன்ற உணவுப்பொருள் வியாபாரிகள், கலைத்துறை சார்ந்தவர்கள், மருந்துப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளுக்காகப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! உற்றார் உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். புதிய கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமல் போக வாய்ப்புள்ளதால் புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது! கூட்டுத் தொழில் செய்வதற்கான புதிய முயற்சிகளைச் சிறிது தள்ளிப் போடுதல் நல்லது!

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடும் பச்சை ஆடைத் தானமும் செய்து வருக!

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரால் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதைச் சற்று தள்ளிப் போடுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இது வரையில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மிகவும் எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லது! வங்கிகளின் மூலமாக எதிர்பார்த்திருந்த கடன் உதவித் தொகைகள் கிடைக்கும். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள், நணபர்கள் போன்றோரிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேர வாய்ப்பு உள்ள காலமாகும். இரும்பு, இயந்திரம், வேதியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள், பழைய பொருள் வியாபாரிகள், எண்ணெய் வியாபாரிகள், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! விவசாயம் செய்பவர்கள் கவனத்துடன் இருப்பது உகந்ததாகும்! ஆண்களுக்குக் காதல் விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். நரம்பு எலும்பு போன்றவற்றில் உபாதைகள் வந்து போகலாம். பிறருக்காகச் சொத்து, பண விஷயங்களுக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்ப்பது நல்லது!

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடும் ஆடைத் தானமும் செய்து வருக!

மீனம்:-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களால் காரணமற்ற பொருட் செலவுகள் வந்து சேரலாம். வாயுத்தொல்லை, வயிற்று உபாதை போன்றவை வந்து போகலாம். ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், பழ வியாபாரிகள், மந்திரிகள் ஆகியோர் நன்மை அடைவர். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் செய்வதற்கான நீண்ட கால முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். தெய்வத் தொண்டுகளைப் பிரியத்துடன் செய்து நற்பெயர் எடுப்பீர்கள். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். பழுதுபட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கணவன் – மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்றுத் தாமதமாகவே தீரும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் எதிர்பாராத பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஒரு சில ஆதாயங்கள் அடைவீர்கள். வராத பணம் கை வந்து சேர வாய்ப்பு உள்ளது. நண்பர்களின் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- சிவ வழிபாடும் மஞ்சள் ஆடைத் தானமும் செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author