இராசிபலன்கள் (13-10-2008 முதல் 19-10-2008 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். உறவினர் வரவால் பொருட் செலவுகளும் வீண் பிரச்சனைகளும் உண்டாகக் கூடும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். புதிய தொழில் ஆரம்பம் செய்வதைத் தள்ளிப் போடவும். நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. பிள்ளைகளின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப் படுவதோடு மருத்துவச் செலவுகள் குறையும். உடம்பில் வாயு மற்றும் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். ஆலயத் திருப்பணிகளில் கலந்து கொண்டு நற்பெயர் எடுப்பீர்கள்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் சுமாராகப் பலிக்கும். காது, மூக்கு சம்பந்தமான உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. காதல் விஷயங்களில் ஏதிர்பார்த்த நல்ல பலன்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் இல்லை. உறவினர் வரவால் எதிர்பாராத பணச் செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான நல்ல சூழ்நிலை உருவாகும். வராத கடன் கொடுத்த பணம் திரும்ப கை வந்து சேரும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவதைத் தள்ளிப் போடவும். உத்தியோகத்தில் இட மாற்றம் ஏற்படும். தந்தை மகன் உறவில் காரணமற்ற சச்சரவுகள் வந்து தீரும். ஷேர் மார்க்கெட், கமிஷன் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். அரசுத் துறை சார்ந்த நாட்பட்ட வழக்குகளில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் காணப்படும். வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பழைய வீடு, வாகனங்களை விற்றுப் புதியன வாங்க எண்ணுவீர்கள். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தொழில் செய்வோர்கள், தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் லாபம் அடைவார்கள். பிற மதத்தவர்களால் வெளிநாடு செல்லுதல் சம்பந்தமான முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரும். வீடு, தொழிற்சாலைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளுக்குத் தடைபட்டுள்ள திருமணக் காரியங்கள் நிறைவேறும். உடம்பில் உஷ்ணம், மேகம் சம்பந்தமான தொல்லைகள் வந்து தீரும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மற்றவர் விஷயத்தில் தலையிட்டு நன்மை செய்வதாக எண்ணி வீண் சிக்கல்களை விலைக்கு வாங்க வேண்டாம். பங்காளிகளால் பணப் பிரச்சினைகளும் செய்தொழிலில் சிக்கல்களையும் சந்திக்க நேரும். உறவுகளுடன் மீண்டும் புதிய தொடர்புகள் ஏற்படுவதில் கால தாமதம் ஏற்படும். பொருளாதாரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்ட போதிலும் பிரயாசையின் பேரில் சரி செய்து விடுவீர்கள். உடம்பில் நரம்பு, எலும்பு சம்பந்தமான பிணிகள் வந்து போகும். நண்பர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தள்ளிப் போடவும். தேவையற்ற பொருட் செலவுகள் உண்டாகலாம்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பொதுக்காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நற்பெயர் எடுப்பீர்கள். செய்தொழிலில் அடிமையாட்களால் எதிர்பாராமல் பிரச்சினைகள் வந்து நீங்கும். கணவன் மனைவி உறவுகள் சுமாராக இருக்கும். குடும்பத்தில் வெகு காலமாக இருந்து வந்த குடும்பச் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகள் தீர்ந்து நல்ல சூழல் உருவாகும். புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். தாயின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் மிகுந்த கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. கண், காதுகளில் எச்சரிக்கை தேவை.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வரவும்.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். செல்வம், செல்வாக்கு, புகழ் கூடும். வாங்கிய கடன்களை திருப்பி அடைப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். விவசாயம் நன்றாகப் பலிதமாகும். தூரத்து நற் செய்திகளைக் கேட்பீர்கள். சம்பந்தமில்வாத புதிய நண்பர்கள் தொடர்பால் எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். காதல் விஷயங்களில் நற்செய்திகளைக் கேட்பீர்கள். குடும்பச் சொத்துக்கள் கை வந்து சேரும். உடம்பில் நரம்பு, எலும்பு போன்ற உபாதைகள் வந்து போகும். யாத்திரையில் கவனமுடன் சென்று வருதல் நல்லது. தொழிற்சாலைகளை இடம் மாற்றப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். வேற்று மதத்தவரால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

துலாம் ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். புதிய கூட்டுத் தொழில் ஆரம்பம் செய்யத் திட்டம் போடுவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண காரியங்கள் நிறைவேறும். கோர்ட் வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் எதிர்பாராத தன வரவு உண்டாகும். உத்தியோகத் துறையினருக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வீடு வாகனம் சம்பந்தமான பழுது பார்க்கும் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உல்லாசப் பயணங்களுக்காகப் பொருட் செலவுகள் உண்டாகும். விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் லாபம் அடைவர்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல் நிலையில் இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். மூத்த சகோதரர்களால் பொருள் வரவு உண்டு. நித்திரையில் பங்கம் ஏற்படும். வர வேண்டிய பணம் கை வந்து சேரும். ஆலயத் திருப்பணிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவீர்கள். வெளிநாடு செல்லுதல் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்து கொண்டிருந்த பழைய கடன்கள் அடைபடும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் மேற்குத் திசையில் இருந்து பொருள் வரவு உண்டாகும். தீர்த்த யாத்திரை சென்று வரப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். இரும்பு, இயந்திரம், எண்ணை வியாபாரிகள் லாபம் அடைவார்கள். அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் நடந்த கொள்ளவும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வரவும்.

தநுசு:-

தநுசு ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத்தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரவால் மனம் மகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. அயல்நாடுகளில் இருந்து நல்ல செய்திகளுடன் பொருள் வரவும் உண்டாகும். உடல் நிலையில் உஷ்ணம், மேகம் போன்ற தொல்லைகள் வந்து போகும். வீடு மற்றும் தொழில் ஸ்தாபனங்களை மாற்ற போட்ட திட்டங்கள் நிறைவேற சற்று காலதாமதம் ஆகும். தண்ணீர், திரவ சம்பந்தமாகிய குளிர் சாதனப் பொருட்கள், உணவு மற்றும் தின்பண்டப் பொருள் வியாபாரிகள் லாபம் அடைவர். வாகனங்களில் செல்லுவோர்கள், வாகன ஓட்டிகள் கவனமுடன் சென்று வரவும். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். கண்களில் கவனம் தேவை.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர் வழிபாடு செய்து வரவும்.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் கால தாமதம் ஏற்படும். உத்தியோகத் துறையினருக்கு இட மாற்றம் உண்டாகும். புதிய வீடு நிலம் வாங்கக் கூடிய வாரமாகும். உற்றார் உறவினர்களால் சற்று மன நிம்மதி அடைவீர்கள். யாத்திரை வெற்றி தேடித் தரும். கம்ப்யூட்டர், மின்சாரம், காவல்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவர். அடுத்தவருக்காக உதவி செய்வதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். சூதாட்டம், ரேஸ் போன்றவற்றின் மூலம் பொருள் இழப்பு ஏற்படலாம். பிள்ளைகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் பொருள் வரவு உண்டு. நீண்ட தூரப் பயணங்களில் எதிர்பார்த்ததை விட மேலான வெற்றி கிடைக்கும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென் கிழக்கு
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். கமிஷன், ஏஜன்சி தொழிற்செய்வோர்கள், புத்தகம், பிரிண்டிங், விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். குலதெய்வ வழிபாடு செய்து வர எண்ணுவீர்கள். கட்டில், மெத்தை போன்ற ஆடம்பர அலங்காரப் பொருட்கள், அணிகலன்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களை நம்பிப் பணம், சொத்துக்களை ஏமாறாமல் இருக்கவும். விட்டுப்போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. தந்தை மகன் உறவில் சிற்சில பிரச்சினைகள் வந்து போகும். சகோதரர்களால் எதிர்பாராத தனவரத்து உண்டு. மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் இருக்கவும். வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வரவும். உடம்பில் வாயு மற்றும் வாத சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரகமாகும். நாட்பட்ட வழக்குகளுக்கு முடிவுகள் வரும். தீர்த்த யாத்திரை சென்று வர முயற்சிப்பீர்கள். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் உடல் நிலையில் பாதிப்புகள் எற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பூ, பழம், இலை, காய்கறி போன்ற வியாபாரிகள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். வெளி நாடுகளில் இருந்து வரவேண்டிய பணம் மற்றும் நல்ல தகவல்கள் வந்து சேரும். காதல் விஷயத்தில் கவனமுடன் இருக்கவும். அரசியல்வாதிகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். நீண்டதூரப் பயணங்களைச் சற்று தள்ளிப் போடுவதால் வீண் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- கணபதி வழிபாடு செய்து வரவும்.

About The Author

1 Comment

  1. K.Mohana

    This site is very useful & am learning many news………

    Continue your job……….

    All the best………

    Best regards,

    Mohana.K

Comments are closed.