இராசிபலன்கள் (14-7-2014 முதல் 20-7-2014 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களால் எதிர்பாராத செலவுகளும் நிம்மதிக் குறைவும் ஏற்படலாம். உற்றார் உறவினர்கள் உதவக்கூடிய சூழல் இல்லை. தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்கள், கழிவுப் பொருட்களை வாங்குவோர் விற்போர், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள், வட்டித்தொழில், தரகு, ஏஜன்சி, கமிஷன் போன்ற தொழில்கள் செய்பவர்கள், பழைய பொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். பயணத்தின்போது மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லதாகும்! பயணங்களில் புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில நன்மைகளை அடைவீர்கள். வாயு, வாதம் சம்பந்தமான பிணிகள் வந்து போகலாம். பணியில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். வெகு காலமாகக் காணாமல் போயிருந்த பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். பெண்களால் தென்கிழக்குத் திசையில் இருந்து எதிர்பாராத தனவரத்து உண்டாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லதாகும்!

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். வெகு நாட்களாகத் தடைப்பட்டு வந்த திருமணக் காரியங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ள காலமாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத ஆதாயங்கள் உண்டாகும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். செய்யாத குற்றங்களுக்குப் பழிச்சொல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். நெருப்பு, மின்சாரம், இராணுவம், காவல்துறை சார்ந்தவர்கள், பங்குச்சந்தை போன்ற தொழில்களைச் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். நண்பர்களின் சுபகாரிய விஷயங்களுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். நாட்பட்ட வாராக் கடன், கொடுத்து வைத்திருந்த பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். புனிதப் பயணம் சென்று வர, குலதெய்வ வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள். பழுதுபட்ட வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகச் செலவுகள் உண்டாகும். எழுத்துத்துறை, அஞ்சல்துறை, அச்சுத் தொழில் ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், வழக்குரைஞர்கள், எழுதுபொருள் வியாபாரிகள், நாடகக் கலைஞர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். நாட்பட்ட தீராத வியாதிகள் தீர வேண்டிப் புதிய மருத்துவர்களின் உதவியை நாடுவதால் செலவு உண்டாகலாம். சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயரும், நிம்மதியும் அடைவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். கணவன் – மனைவி உறவுகளில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். உற்றார் உறவினர்களின் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். எழுத்துத்துறை, அஞ்சல்துறை, அச்சுத் தொழில் ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், வழக்குரைஞர்கள், இசையமைப்பாளர்கள், எழுதுபொருள் வியாபாரிகள், நாடகக் கலைஞர்கள் ஆகியோர் நல்ல பலன் அடைவீர்கள். வெகு காலமாக விட்டுப் போன குலதெய்வ வழிபாடு செய்வதற்கும், தாய்நாடு சென்று திரும்புவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அரசு வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். வர வேண்டிய கடன், கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் ஆகியவை நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். கணவன் – மனைவி உறவுகளில் சற்று எச்சரிக்கையுடன் முன் கோபத்தைத் தவிர்த்து இருப்பது நல்லதாகும். சூதாட்டங்களை நம்பி ஏமாறாதீர்கள்! புதிய நண்பர்களின் சேர்க்கையால் ஆதாயம் உண்டு! நாட்பட்ட தீராத நோய்க்குப் புதிய மருத்துவர்களின் உதவி நாடிச் செல்லுவீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வண்டிகளில் செல்லும்பொழுது கவனம் தேவை. வீண் பிரச்சினைகள் உருவாக இருப்பதால் கவனத்துடன் சென்று வாருங்கள்! அண்டை அயலார்களிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வரப் போட்ட திட்டங்கள் நிறைவேறும் காலமாகும். வெகு காலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கக்கூடிய காலமாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகலாம். அலுவலகப் பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் மிகுந்த கவனத்துடன் பணியாற்றுதல் நல்லது! ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், திரைப்பட, நாடகத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், வாகன சம்பந்தமான தொழில் செய்பவர்கள், ஒப்பனைக்கூடம் நடத்துபவர்கள், நவரத்தின வியாபாரிகள், திருமணத் தகவல் மையம், திருமணக்கூடம் போன்றவற்றை நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படவும், நிம்மதி குறையவும் வாய்ப்பு இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது! தந்தைக்கு ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில், தடைப்பட்ட திருமண காரியங்கள் நண்பர்களின் உதவியால் நடைபெறலாம். உணவகத் தொழில் செய்பவர்கள், அரசியல்வாதிகள், மருந்து உற்பத்தி / விற்பனை செய்பவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். சூதாட்டம் போன்ற விஷயங்களில் ஈடுபட்டு ஏமாற வேண்டாம்! அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. தேவையற்ற மன சஞ்சலம் தவிர்த்து ஆலயங்களுக்குச் சென்று வருவது நல்லது. வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் சில தடைகள் வந்து விலகும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றால் திடீர் பண வரவு உண்டாகலாம். தடைப்பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமணக் காரியங்கள் நிறைவேறும். பூர்விகச் சொத்து விஷயமான பிரச்சினைகள் தீர இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்குப் பணியிட மாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கலாம். ஆதரவற்ற சிறுவர்கள் நலனுக்கான, சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டு நற்பெயரும் நிம்மதியும் பெறுவீர்கள். இரும்பு, இயந்திரம், வேதியியல் ஆகியவை சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள், எண்ணெய், பலசரக்கு வியாபாரிகள், பணியாட்கள், கழிவுப் பொருட்களை வாங்குபவர்கள், உர வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்புள்ள காலமாகும். புதிய தொழில் செய்வதற்காக வங்கிகளில் இருந்து வெகுகாலமாக எதிர்பார்த்து வந்த பண உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ள காலமாகும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். பூ, பழம், பூஜை சம்பந்தமான பொருட்கள் போன்றவற்றை விற்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், நறுமணப் பொருட்கள், கணினித்துறை ஆகியவற்றைச் சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். வீட்டில் கவனத்துடன் இருந்தால் திருடு போவதைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் உதவக்கூடிய சூழல் இல்லை. காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது. தூரப் பயணங்கள் மூலம் எதிர்பார்த்திருந்தவர்களைச் சந்தித்து அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வெகுநாட்களாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். நரம்பு, எலும்பு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகும். படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் காரணமற்ற மனக் குழப்பங்களும் கடன் தொல்லைகளும் ஏற்படலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. தாயின் உடல்நிலையில் இருந்து வந்த தொல்லைகள் குறைந்து காணப்படும். பழுதுபட்ட வீடு வாகனங்களைப் புதுப்பிப்பதன் மூலம் செலவுகள் வந்து சேரும். நாட்பட்ட பழுதுபட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களை நம்பிக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகச் சுற்றுலா மேற்கொள்ளுவீர்கள். பூஜைப் பொருள் வியாபாரிகள், மனநலக் காப்பகம் நடத்துபவர்கள், தாய்-சேய் நல விடுதிகளைச் சார்ந்தவர்கள், உப்பு, உர வியாபாரிகள், மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், திரவப்பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். இரும்பு, இயந்திரம், வேதியியல் சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள், எண்ணெய், பலசரக்கு போன்றவற்றை விற்பவர்கள், பணியாட்கள், கழிவுப் பொருட்களை வாங்குபவர்கள், உர வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். தேவையற்ற மன சஞ்சலம் தவிர்த்தல் நல்லதாகும்! வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள். புனிதப் பயணம் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். கண்களில் கவனத்துடன் இருங்கள்! பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ள காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். காய்ச்சல், உடற்சூடு போன்ற பிணிகள் வந்து போகலாம். வங்கிகளிலிருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பணம், பொருட்கள் கை வந்து சேரும். மற்றவர்களின் காரியங்களில் வீணாகத் தலையிட்டு நிம்மதியை இழக்காதீர்கள்!

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். மாணவர்கள் கல்வியில் பரிசும் பாராட்டும் பெறுவார்கள். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்! தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய காலமாகும். உற்றார் உறவினர்களின் வரவுகளால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கும். ஏஜன்சி போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள், அணு ஆராய்ச்சி நிலையப் பணியாளர்கள், விமானப் பணியாளர்கள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், ஆலயப் பணி புரிபவர்கள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், கழிவுப் பொருள் வியாபாரிகள், அசைவப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். புனிதப் பயணம் சென்று வர முயற்சிப்பீர்கள். வேற்று மதத்தவரால் எதிர்பாராத ஆதாயங்கள் அடைவீர்கள். பழைய கடன்கள் அடைத்துப் புதிய கடன் வாங்குவீர்கள். எலும்பு, நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து போகும். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் கணபதி ஆலய வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். தந்தை – மகன் உறவில் சுமுகமான சூழல் உருவாகும். நெருப்பு, மின்சாரம், காவல்துறை, இராணுவம் ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், பங்குச்சந்தை போன்ற தொழில்களைச் செய்பவர்கள் ஆகியோர் நல்ல பலன்கள் அடைவர். தாயின் உடல்நிலை பாதிப்புக்களால் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைய வாய்ப்பு உள்ளது. குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர எண்ணுவீர்கள். வாயு, வாதம் போன்ற தொல்லைகள் வந்து நீங்கும். வீடுகளைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! நீண்ட காலமாக வர வேண்டிய பணம் கை வந்து சேரும் காலமாகும். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். காணாமல் போன பொருட்கள் காவல்துறையினரால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வீடு வாகனம் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கும். பயணத்தின்போது எச்சரிக்கையுடன் சென்று வருதல் நல்லது!

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author