இராசிபலன்கள் (15-4-2013 முதல் 21-4-2013 வரை)

மேஷம் :-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நெடும் பயணங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். மாணவர்கள், அரசியல்வாதிகள், பொதுநலத் தொண்டு புரிபவர்கள், ஆலயப் பணியாளர்கள், அமைச்சர்கள், மருந்துப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை செய்பவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கண்ணாடி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், ஆடை, நூல் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். நாட்பட்ட வழக்குகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். பயணங்களைத் தவிர்த்தல் நல்லது. தூரத்து உறவினர்களிடமிருந்து நற்செய்திகளைக் கேட்பீர்கள். பந்தயம், லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளில் தன வரவு உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். பிறருக்காகப் பிணையளிப்பது போன்றவற்றில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்! வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். வங்கிகளிலிருந்து வரவேண்டிய பணம், வங்கிக் கடன் உதவி முதலானவை கிடைக்கும்.

இராசியான எண் :- 1.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- கிழக்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் சிவ வழிபாடும் கோதுமை தானமும் செய்து வாருங்கள்!

ரிஷபம் :-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். நிலபுலன் சம்பந்தமாக வெகு காலமாகத் தடைப்பட்டு வந்த காரியங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். விவசாயிகள் நல்ல லாபம் பெறுவர். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி அடைவர். பூ, பழம், நறுமணப் பொருட்கள் போன்றவற்றை விற்பவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறையைச் சார்ந்தவர்கள், கணினித்துறையைச் சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், குழந்தைகள் காப்பகம் நடத்துபவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி நிலையங்களை நடத்துபவர்கள், பொறியியல், கணினித்துறை சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவர். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட்டு நிம்மதியை இழக்க வேண்டாம்! காதல் விவகாரங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் கிடைக்கக்கூடிய காலமாகும். அதே நேரம், அதில் எச்சரிக்கை தேவை! காணாமல்போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். ஒரு சிலருக்குப் புதிய வீடு, வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பொருள் வந்து சேரலாம்.

இராசியான எண் :- 3.
இராசியான நிறம் :- மஞ்சள்.
இராசியான திசை :- வடகிழக்கு.
பரிகாரம் :- வியாழக்கிழமையில் சிவ வழிபாடும் கடலை தானமும் செய்து வாருங்கள்!

மிதுனம் :- 

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். அரசு வழக்குகளில் சாதகமான சூழ்நிலை உருவாகும். இரும்பு, இயந்திரம், வேதியியல் தொடர்பான தொழில்களைச் செய்பவர்கள், பலசரக்கு, எண்ணெய் வியாபாரிகள், பழைய பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்கள், மாமிச உணவு வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். பந்தயம், லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளில் தன வரவுகள் உண்டு. மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. சூதாட்டத்தால் பொருள் விரயம் ஏற்படக் கூடும். காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பெண்களால் வடதிசையில் இருந்து சில நற்செய்திகள் வந்து சேரும். சிலர் இருப்பிடம் விட்டு வெளியூர் செல்ல வாய்ப்பு உள்ளது. புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்காக மிகவும் முயற்சி செய்து அதில் வெற்றி அடைவீர்கள். புதிய தொழில்களைத் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம். சகோதர, சகோதரிகளின் தடைப்பட்ட சுப காரியங்கள் நடைபெறும். சுப காரியங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பெரியவர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடும் எள் சாத தானமும் செய்து வாருங்கள்!

கடகம் :-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். சகோதர, சகோதரிகளின் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி அவை நடந்தேற வாய்ப்பு உள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்படுமென்றாலும் சமாளித்துக் கொள்வீர்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம். நீண்ட காலமாக வங்கிகளிலிருந்து எதிர்பார்த்து வந்த கடன் உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். நெருப்பு, கேஸ், வெல்டிங் சம்பந்தமான தொழில்களைச் செய்பவர்கள், விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர்கள், ஆசனயோகப் பயிற்சிக்கூடங்களை நடத்துபவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், நாடகக் கலைஞர்கள், இலை, கீரை விற்பனையாளர்கள், மருந்துப் பொருள் விற்பனையாளர்கள், அஞ்சல்துறையைச் சார்ந்தவர்கள், அச்சுக்கூடம் நடத்துபவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். விபரீதமான எண்ணங்களை விட்டுக் காரியத்தில் கவனமாய் இருங்கள்! சகோதரர்களால் பொருள் வரவு உண்டாகும். வேலை தேடும் முயற்சிகள் வெற்றி தரும்.

இராசியான எண் :- 5.
இராசியான நிறம் :- பச்சை.
இராசியான திசை :- வடக்கு.
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடும் பாசிப் பயறு தானமும் செய்து வாருங்கள்!

சிம்மம் :-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நெருப்பு, கேஸ், வெல்டிங் சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், காவல்துறையினர், இராணுவத்தினர், உணவகம் நடத்துபவர்கள், விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள், ஆசனயோகப் பயிற்சிக்கூடங்களை நடத்துபவர்கள், தங்க நகை வியாபாரிகள் ஆகியோருக்கு நல்ல பலன்கள் வந்து சேரும். வீடுகளில் திருட்டுப் போக இருப்பதால் எச்சரிக்கை தேவை! பங்காளிகளாலும், நண்பர்களாலும் சிற்சில தொல்லைகள் ஏற்படலாம். ஆலயங்களைத் திருத்தி அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். வீடு, வாகனம் பழுது பார்ப்பதால் பொருட்செலவு ஏற்படலாம். மனைவியின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் வந்து சேரும். விருந்தினர் வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். அடுத்தவர் வீட்டுச் சுப காரியங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். வட திசையில் இருந்து எதிர்பாராத தன வரத்துகள் உண்டு. மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு நிம்மதியை இழக்க வேண்டாம்!

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிகப்பு.
இராசியான திசை :- தெற்கு.
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வழிபாடும் துவரை தானமும் செய்து வாருங்கள்!

கன்னி :-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். நெடு நாட்களாக வராத கடன், கொடுத்திருந்த பணம் திரும்பக் கைவந்து சேரும். இரும்பு, இயந்திரம், வேதியியல் சம்பந்தமான தொழில்களைச் செய்பவர்கள், பலசரக்கு, எண்ணெய் வியாபாரிகள், பழைய பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், மாமிச உணவு வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். நெடும் பயணங்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். தெய்வத் தொண்டுகளைப் பிரியத்துடன் செய்வீர்கள். அரசு சம்பந்தமான வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகலாம். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். வீடுகளைத் திருத்திக் கட்ட எண்ணுவீர்கள். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். தாய்க்கு இருந்து வந்த நோய்கள் குறைந்து காணப்படும். உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரால் எதிர்பாராத ஆதாயங்களும் மகிழ்ச்சியும் உண்டாகும். வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றைத் திருத்திக் கட்டவும், வீடு மாற்றம் செய்யவும் எண்ணுவீர்கள். மனைவியின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் வரவால் பொருட்செலவு உண்டாகும்.

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடும் எள் சாத தானமும் செய்து வாருங்கள்!

துலாம் :-

துலாம் ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடு, நிலம் வாங்குவது சம்பந்தமான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது. பந்தயம், லாட்டரி போன்ற சூதாட்டங்களில் ஏமாற்றம் அடையாமல் இருங்கள். மனைவி வழிச் சொந்த பந்தங்களால் பொருட் செலவு ஏற்படும். கை விட்டுப் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். பயணங்களின்போது சம்பந்தம் இல்லாத பிரச்சினைகள் வர இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களின் வரவால் பொருட் செலவு உண்டாகும். புனிதப்பயணம் சென்று வர முயற்சிப்பீர்கள். தாயின் உடல்நிலைப் பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டு. பூர்விகச் சொத்துக்கள் வந்து சேரும். உற்றார், உறவினர்களிடம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம். தந்தையால் பொருள் வரவு உண்டு. குலதெய்வ வழிபாட்டிற்காக வெளியூர் செல்வீர்கள். தந்தை – மகன் உறவில் சிற்சில பிரச்சினைகள் வரலாம். பழைய பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் விடுதிகளில் இருப்பவர்கள், விஞ்ஞானத்துறையைச் சார்ந்தவர்கள், மத போதகர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவர்.

இராசியான எண் :- 4.
இராசியான நிறம் :- கருப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடும், அம்மன் வழிபாடும் கோதுமை தானமும் செய்து வாருங்கள்!

விருச்சிகம் :-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். பிறரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம்! விருந்தினர் வரவால் மகிழ்ச்சி உண்டாகும். பணியிட மாற்றம் ஏற்படும். பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நரம்பு, எலும்பு சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும். பூர்விக இடத்தை விட்டுப் பெயர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது. விவசாயம் செய்பவர்கள் தொழிலில்மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது. அரசியல்வாதிகளால் ஆதாயம் இருக்காது. புதிய நண்பர்கள் சேர்க்கையால் நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். அண்டை வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. இலை, கீரை வகைகள் விற்பவர்கள், மருந்துப் பொருள் விற்பனையாளர்கள், அஞ்சல்துறையைச் சார்ந்தவர்கள், அச்சுக்கூடம் நடத்துபவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், நாடகக் கலைஞர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர்.

இராசியான எண் :- 5.
இராசியான நிறம் :- பச்சை.
இராசியான திசை :- வடக்கு.
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹா விஷ்ணு வழிபாடும் பாசிப்பயறு தானமும் செய்து வாருங்கள்!

தனுசு :-

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். திரவப்பொருள் வியாபாரிகள், உப்பு, உர வியாபாரிகள், தாய் – சேய் நல விடுதி நடத்துபவர்கள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். கண்களில் கவனம் தேவை! நண்பர்களால் எதிர்பாராத பொருட்செலவுகள் உண்டாகும். நெடும் பயணங்களில் புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பால் நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது. மாமன் வழியில் சில நன்மைகளை அடையலாம். பொதுநலத் தொண்டுகளில் பிரியத்துடன் ஈடுபடுவீர்கள். புனிதப் பயணம் சென்று வர வாய்ப்பு உள்ளது. பணியிட மாற்றம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது. தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். புதிய ஆடை அணிகலன்கள், ஆடம்பர அலங்கார பொருட்கள் வாங்குவீர்கள். பிறருக்காக உழைப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். தென் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். தந்தையின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

இராசியான எண் :- 2.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- மேற்கு.
பரிகாரம் :- திங்கள்கிழமையில் அம்மன் வழிபாடும் பச்சரிசி தானமும் செய்து வாருங்கள்!

மகரம் :-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வாதம், வாயு, எலும்பு சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும். சொத்து விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். சகோதர, சகோதரிகளுடன் காரணமில்லாத சச்சரவுகள் வந்து போகும். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி உறவு பலப்படும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் விபரீதங்களைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கட்டுமானப் பொருள் விற்பனை செய்பவர்கள், தானியபயறு வியாபாரிகள், வீடு, நிலம் வாங்குவோர் விற்போர், கட்டட சம்பந்தமான தரகு வேலைகளைச் செய்பவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், அழகு சாதனப் பொருள் வியாபாரிகள், கலைத்துறையினைச் சார்ந்தவர்கள் ஆதாயம் பெறுவார்கள். பந்தயம், லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பணம் வந்து சேரும். கண்களில் கவனத்துடன் இருத்தல் நல்லது. விவசாயம் செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நெடும் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

இராசியான எண் :- 6.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- தென்கிழக்கு.
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடும் மொச்சைப் பயறு தானமும் செய்து வாருங்கள்!

கும்பம் :-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வாயு, வயிறு சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய வீடு, நிலம் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரரால் பொருட்செலவுகள் ஏற்படும். தங்க நகை வியாபாரிகள், அரசியல்வாதிகள், காவல்துறையினர், இராணுவம் சார்ந்தவர்கள், உணவகம் நடத்துபவர்கள், தீயணைப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு நல்ல லாபம் கிடைக்கும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். மூலம் போன்ற சூடு சம்பந்தமான பீடைகள் வந்து தீரும். புதிய நண்பர்கள் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லது. வேற்று மதத்தவர்களால் எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கும். நெடும்பயணங்களால் நிம்மதி ஏற்படாது. சுய தொழில் செய்வதற்கான முயற்சிகளில் சற்றுத் தாமதம் ஏற்படலாம். பந்தயம், லாட்டரி போன்றவற்றின் மூலம் எதிர்பாராத தனவரவு உண்டாகும். விவசாயம் செய்பவர்கள் கவனத்துடன் செயல்படுதல் வேண்டும். பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் வரக்கூடும். விருந்தினர்களின் எதிர்பாராத வரவால் பொருள் விரயமாகும்.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிகப்பு.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் முருக வழிபாடும் துவரை தானமும் செய்து வாருங்கள்!

மீனம் :-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் பொருட்செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் பண வரவும் உண்டு. புனிதப்பயணம் சென்று வருவதற்கான ஏற்பாடுகளில் சற்றுத் தாமதம் ஏற்படும். நெடும் பயணங்களைத் தவிர்த்தல் நல்லது. வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகலாம். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய் நாட்டிற்குச் சென்று வர வாய்ப்புகள் உள்ளன. பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் சற்றுக் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணக் காரியம் கை கூடும். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்களைச் சந்திப்பதன் மூலம் சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள். கழிவுப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், மின்னணு ஆராய்ச்சித்துறையைச் சார்ந்தவர்கள், அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள், பழைய இரும்பு, பழைய இயந்திரம், வேதியியல் சம்பந்தமான தொழில்களைச் செய்பவர்கள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், மதபோதகர்கள், பங்குச்சந்தையில் இருப்போர் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். நீண்ட காலமாகப் பிரச்சினையில் இருந்து வந்த குடும்பச் சொத்துக்கள் கிடைக்கும். புதிய வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை மற்றவர்களின் உதவியோடு வாங்குவீர்கள்.

இராசியான எண் :- 7.
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- திங்கட்கிழமையில் கணபதி வழிபாடும் செவ்வாடை தானமும் செய்து வாருங்கள்!

மீண்டும் அடுத்த வாரம்!

*****************

Gnanayohi Dr. P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25 B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Tirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author