இராசிபலன்கள் (15-7-2013 முதல் 21-7-2013 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்! வேற்று மதத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். பொருளாதார நெருக்கடியில் மனைவி அல்லது மனைவி வழிச் சொந்த பந்தங்களால் மாற்றம் உண்டாகி மன நிறைவை அடைவீர்கள். காணாமல் போன பொருட்கள் சம்பந்தமில்லாத நபர்களால் வீடு வந்து சேரும். அரசு உயர் பதவி வகிப்பவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், தானிய வியாபாரிகள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், ஆடை, நூல் வியாபாரிகள்,
விறகு, நிலக்கரி போன்ற பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்கள் அடைவர். வீடுகளில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது. அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்! புதிய வீடு, நிலம் வாங்க எதிர்பார்த்திருந்த பணம் கை வந்து சேரும். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும். எடுத்த காரியத்தைச் சிரத்தையுடனும் துணிச்சலுடனும் செய்து முடிப்பீர்கள். ஒவ்வாமை, தொற்று நோய் போன்ற உபாதைகள் வரக்கூடும் என்பதால் உணவில் கவனம் தேவை!

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- சூரிய நமஸ்காரம்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். காவல்துறையினர், திரவப் பொருள் வியாபாரிகள், கடல்துறை சார்ந்தவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், மடாதிபதிகள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். கலைத்துறையினரிடமும் அரசியல்வாதிகளிடமும் ஏமாற்றம் அடையாமல் இருங்கள்! அலுவலகப் பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்! விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். மற்றவர்களின் விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் கிடைக்கும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது! திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் கூட்டுத்தொழில் முயற்சிகளில் எதிர்பாராத லாபம் அடையலாம். அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கணவன் – மனைவி உறவுகளில் பிரச்சினைகள் வந்து நீங்கும். தலை, முகம் ஆகியவற்றில் உபாதைகள் வந்து தீரும். உற்றார் உறவினர்களின் வரவால் மகிழ்ச்சியும் நிம்மதியும் வந்து சேரும்.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- அம்மன் வழிபாடு.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படும். வடக்கு திசையில் இருந்து சில நற்செய்திகள் வந்து சேரும். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர்ந்து அவற்றில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். நீண்ட தூரம் பயணித்துச் சில நபர்களைச் சந்திக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். பொதுப் பணித்துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், வழக்குரைஞர்கள், அச்சுத்தொழில் செய்பவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலன் அடைவர். அரசியல்வாதிகளால் சில எதிர்பார்க்காத ஆதாயங்கள் அடைவீர்கள். தீராத பழைய வழக்குகளில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். வராத கடன், கொடுத்து இருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். அரசியல்வாதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் பணியாற்றுதல் நல்லது! குழந்தைகளால் பெயர், புகழ் ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் நிம்மதி இன்மையும், காரணமற்ற பொருட்செலவுகளும் உண்டாகும்.

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பயணங்களின்போது புதிய பெரிய மனிதர்கள் தொடர்பால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். பூஜைப்பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், நகை வியாபாரிகள், பழச்சாறு போன்ற பானங்கள் விற்பவர்கள் லாபம் பெறுவர். தென் திசையில் இருந்து எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து நல்ல முடிவுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். பங்குச்சந்தை, கமிஷன் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். மிகவும் முயற்சி செய்து பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். கண்களில் கவனம் தேவை! வீடுகளைப் புதுப்பித்துக் கட்டப் போட்ட திட்டங்களில் தாமதம் ஏற்படும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்கும். பிள்ளைகளால் பண வரவும், நிம்மதியும் உண்டாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற விஷயங்களில் ஈடுபட்டு ஏமாற வேண்டாம். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- சிவ வழிபாடு.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். காணாமல் போன பொருட்கள் சம்பந்தமில்லாத நபர்களால் திரும்ப வீடு வந்து சேரும். புதிய தொழில்கள் தொடங்க எண்ணுவீர்கள். உறவினர்களின் வருகையால் பொருள் வரவு உண்டாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு வீடு, தொழிற்சாலை ஆகியவற்றில் இடமாற்றம் ஏற்படலாம். செய்யும் தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைத் தவிர்த்தல் நல்லது! வெளிநாடு சென்று வருதல் சம்பந்தமான முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் கவனம் தேவை! பணியாட்களால் பொருட் செலவும் நிம்மதிக் குறைவும் ஏற்படலாம். தேவையில்லாமல் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்க வாய்ப்புள்ளது. பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்! பூஜைப்பொருள் வியாபாரிகள், கணினித்துறை சார்ந்தவர்கள், நறுமணப் பொருள் வியாபாரிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள், கொடுக்கல் – வாங்கல் போன்ற தொழில்கள் செய்பவர்கள், பூ, பழம் ஆகியவற்றை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், இனிப்புப் பொருள் வியாபாரிகள், நகை வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- சிவ வழிபாடு.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். காணாமல் போன பொருட்கள் காவல்துறையினரால் திரும்பக் கிடைக்க வாய்ப்புள்ளது. பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்ட விஷயங்களில் ஏமாற்றம் அடைய நேரிடும்! நீண்ட காலமாக இருந்து வந்த பிணிகளுக்குப் புதிய மருத்துவர்களின் உதவியால் தீர்வு காண்பீர்கள்! தொலைதூரப் பயணங்களில் மிகுந்த கவனத்துடன் சென்று வருதல் நல்லது! செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை! உணவு உண்ணுதல், தூங்குதல் போன்றவற்றில் தாமதம் ஏற்படலாம். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் உண்டாகும். தாய் வழிச் சொந்த பந்தங்களால் ஆதரவுகள் வந்து சேரும். நாட்பட்ட, சொத்து விஷயமான அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். நகை வியாபாரிகள், அலங்காரப் பொருள் வியாபாரிகள், திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள், திரைப்படம், நாடகம் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள், கார், லாரி, ஆடு, மாடு போன்ற வாகன சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவர். சளி, ஒவ்வாமை, சீதளம் ஆகிய தொல்லைகள் வந்து போகும். புதிதாகக் கடன் வாங்க மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறச் சற்றுத் தாமதம் ஆகலாம்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு.

துலாம்:-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்டங்களில் ஈடுபட்டு ஏமாற வேண்டாம்! உற்றார் உறவினர்களால் மன சஞ்சலம் வந்து சேரும். பூர்விகச் சொத்துப் பிரச்சினை போன்ற நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்ப்பு வந்து சேரும். தேவாலயத் திருப்பணிகளில் கலந்து கொண்டு தொண்டாற்றுவதன் மூலம் மன நிறைவு ஏற்படும். அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், பீடித் தொழில் செய்பவர்கள், கழிவுப் பொருள் வியாபாரிகள், சாயப் பொடித் தொழிற்சாலை போன்ற ஆலைகளை நடத்துபவர்கள், அணுஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள் ஆகியோருக்கு நல்ல லாபம் உண்டாகும். வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். வீடு, தொழிற்சாலை ஆகியவற்றைத் திருத்திக் கட்டுவதன் மூலம் பொருட்செலவுகள் வர வாய்ப்புகள் உள்ளன. பயணங்களின்போது சம்பந்தமில்லாத புதிய நபர்களால் சிற்சில ஆதாயங்கள் அடையக்கூடும். பிள்ளைகளால் பொருள் வரவு உண்டாவதுடன் அவர்களாலேயே காரணமற்ற பொருட் செலவுகளும் வந்து சேரும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுங்கள்! மேகம், உடற்சூடு ஆகிய உபாதைகள் வந்து போகும். கணவன் – மனைவி உறவுகளில் கவனத்துடன் இருப்பதோடு, முன் கோபம் தவிர்த்தல் நல்லது!

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- பிதுர், அம்மன் வழிபாடு.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். பொதுப்பணிகளில் ஈடுபடுவோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்! நண்பர்களின் உதவியால் புதிய தொழில் தொடங்கப் போட்ட திட்டங்கள் தடையின்றி நிறைவேறும். குடும்பத்தில் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து போகும். எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் தாமதமின்றி உடனே கிடைக்க வாய்ப்பு உள்ளது. கல்வித்துறையைச் சார்ந்தவர்கள் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது! வெளிநாடுகளிலிருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். அதிர்ஷ்டத்தை நம்பி ஏமாற வேண்டாம்! விவசாயத்தில் புதிய முறைத் திட்டங்களின் மூலம் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். வராத பணம், பொருட்கள் திரும்பக் கை வந்து சேரும். இரும்பு, இயந்திரம், வேதியியல் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள். பலசரக்கு, எண்ணெய் வகைகள், பழைய இரும்புப் பொருட்கள் ஆகியவற்றை வியாபாரம் செய்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். பயணங்களில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது! குழந்தைகளால் திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்படும். விபரீதமான எண்ணங்களை விட்டுச் செயல்பாட்டில் கவனம் செலுத்துங்கள்!

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடு.

தனுசு:-

தநுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ள காலமாகும். காய்ச்சல், உடற்சூடு ஆகிய உபாதைகள் வந்து போகும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது! புனிதப் பயணம் சென்று வர எண்ணுவீர்கள். இராணுவத்தினர், தீயணைப்புத்துறை சார்ந்தவர்கள், உணவகம் நடத்துபவர்கள், வெல்டிங் செய்பவர்கள், கேஸ், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள் வியாபாரிகள் நல்ல லாபம் அடைவர். இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடி மாறி மகிழ்ச்சி அடையலாம். பிணை அளிப்பதைத் தவிர்த்தல் நல்லது! தூரத்து உறவினர்களின் வரவால் எதிர்பாராத பொருட் செலவுகள் உண்டாகும். பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன் வாங்குவீர்கள். காதல் விஷயங்களில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட தூரப் பயணங்களின்போது பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்பட்டு அவர்களால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விவசாயம் செய்வோருக்குத் தொழில் நன்கு பலிதமாகும். புதிய வீடு, நிலம் வாங்குவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- சூரிய வழிபாடு.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். எலும்பு, நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து போகும்.
பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற அதிர்ஷ்ட வழிகளில் திடீர்ப் பண வரவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும், பரிசு, பாராட்டுகளையும் பெறக் கூடிய காலமாகும். வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் சற்றுத் தாமதம் ஏற்படலாம். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டாகும். வேதியியல்துறை சார்ந்தவர்கள், பழைய பேப்பர் போன்ற பழைய பொருட்களை விற்பனை செய்பவர்கள், அழுகுபொருள் வியாபாரிகள், அணுஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், அறிவியலாளர்கள், மடாதிபதிகள், துப்புரவுப் பணி செய்பவர்கள், வட்டித் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். வண்டி வாகனங்களில் மிக எச்சரிக்கையுடன் பயணம் செய்து வருதல் நல்லது. செய்யும் தொழிலில் எதிர்பார்த்த பணம் பங்காளிகளால் கைக்கு வந்து சேரும். தந்தை – மகன் உறவுகள் நன்றாக இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் எதிர்பாராத லாபம் அடைய வாய்ப்பு உள்ளது. எதிர்பாராமல் மஹான்களின் நல்லாசிகள் கிடைத்து அதனால் திருப்தி அடையலாம். திருமணம் போன்ற சுப காரியங்கள் சம்பந்தமாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

இராசியான எண்:- 7.
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- விநாயகர் வழிபாடு.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வேலை இல்லாத படித்த இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகள் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களுக்காக வீண் பொருட் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகளும், பொருட் செலவுகளும் உண்டாகலாம். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. வேண்டாத விஷயங்களில் தலையிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்! காய்கறிகள், கீரை போன்ற உணவுப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், அச்சுத் தொழிற்கூடங்களை நடத்துபவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு மிகவும் நற்பலன் தரும் காலமாகும். பங்குத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், நகை வியாபாரிகள் ஆகியோர் வணிகத்தில் மிகுந்த கவனத்துடன் ஈடுபடுதல் நல்லது. மகான்களின் சந்திப்பால் நிம்மதி அடைவீர்கள். பிணை அளிப்பதைத் தவிர்த்தல் நல்லது! தந்தை – மகன் உறவில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். திருமணம் போன்ற சுப காரியங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்! நண்பர்களால் புதிய தொழில் முயற்சிகள், புதிய கடன் வாங்கும் முயற்சிகள் போன்றவற்றில் வெற்றி பெறுவீர்கள்.

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். இதுநாள் வரையில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடி மாறித் தேவையான பொருள் வரவு உண்டாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது. வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்கள் சந்திப்பால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விருந்தினர் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாக வாய்ப்பு உள்ளது. செல்வாக்கு, புகழ் கூடும்! புதிய வீடு, நிலம், வாகனங்களை வாங்கக் கூடிய காலமாகும். மற்றவர்களுக்காகச் சொத்து சம்பந்தமான விஷயங்களுக்குப் பிணை அளித்து வீண் பிரச்சினைகளை விலைக்கு வாங்காதீர்கள்! நெருப்பு சம்பந்தமான தொழில்களைச் செய்பவர்கள், காவல்துறையினர், இராணுவத்தினர், நில புலன்களை வாங்குவோர் – விற்போர், நிலவளத்துறை சார்ந்தவர்கள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள், நிலக்கரி, விறகு போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் லாபம் அடைவீர்கள். மகான்களின் தரிசனத்துக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளத் திட்டம் போடுவீர்கள். ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. பூர்விகச் சொத்துக்களில் இதுநாள் வரையில் இருந்து வந்த பிரச்சினைகள் மாறி நிம்மதி அடைய வாய்ப்பு உள்ள காலமாகும்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- துர்க்கை ஆலய வழிபாடு.

–மீண்டும் அடுத்த வாரம்…

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com

About The Author