இராசிபலன்கள் (16-6-2014முதல்22-6-2014வரை)

மேஷம்:

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பயணங்களை விலக்குதல் நல்லது! உறவினர்களிடமிருந்து தூரத்து நற்செய்திகளைக் கேட்பீர்கள். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வகைகளில் தனவரவு உண்டாகும். குடும்பத்தில் வெகு காலமாகத் தடைப்பட்டிருந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். பிறருக்காக ஜாமீன் போடுவது சம்பந்தமான விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்! பயணங்களில் மிகவும் கவனத்துடன் இருங்கள்! நீண்ட பயணங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். பழைய தீராத வழக்குகள் தீர, நல்ல முடிவுகள் கிடைக்கும். வங்கிகளிலிருந்து வரவேண்டிய பணம், வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். தந்தை – மகன் உறவில் சிற்சில பிரச்சினைகள் வரலாம். பழைய கடன்கள் அடைபடும். உணவகத் தொழில் செய்பவர்கள், தீயணைப்புத்துறை சார்ந்தவர்கள் போன்ற நெருப்பு, கேஸ், வெல்டிங் சம்பந்தமான தொழில்களைச் செய்பவர்கள், விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள், யோகாசனப் பயிற்சிக்கூடம் நடத்துபவர்கள், தங்க நகை வியாபாரிகள், அரசியல்வாதிகள், காவல்துறையினர், இராணுவம் சார்ந்தவர்கள் ஆகியோருக்கு நல்ல லாபம் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டிற்காக வெளியூர் செல்லுவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் வழிபாடு செய்து துவரை தானம் செய்து வருக!

ரிஷபம்:

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். அடுத்தவர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. மற்றவர்களின் வேண்டாத விஷயங்களில் தலையிட்டு பிரச்சினைகளை விலைக்கு வாங்க வேண்டாம்! மனைவியின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படும். வீட்டில் திருட்டுப் போக இருப்பதால் எச்சரிக்கை தேவை! பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். வட திசையில் இருந்து எதிர்பாராத தனவரத்துகள் உண்டு. விருந்தினர் வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். திரவப் பொருள் வியாபாரிகள், உப்பு – உர வியாபாரிகள், தாய் சேய் நல விடுதி நடத்துபவர்கள், கப்பல் பணி செய்பவர்கள், துறைமுகத்தில் பணியாற்றுபவர்கள், ஊதுபத்தி – கற்பூரம் – சந்தனம் – குங்குமம் போன்ற பூஜைப்பொருள் வியாபாரிகள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். வாகனங்கள் மற்றும் வீடுகளைப் பழுது பார்ப்பதால் செலவு ஏற்படலாம். ஆலயங்களைத் திருத்தி அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள்.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் வழிபாடு செய்து பச்சரிசி தானம் செய்து வருக!

மிதுனம்:

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். மின்னணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள், பழைய இரும்பு – பழைய இயந்திரம் – வேதியியல் சம்பந்தமான தொழில் செய்பவர்கள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், மதபோதகர்கள், மடாதிபதிகள், கழிவுப்பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், வட்டித்தொழில் செய்பவர்கள், தரகு – குத்தகை போன்ற தொழில்கள் செய்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். நீண்ட பயணங்களில் புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பால் நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது. பிறருக்காக உழைப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். தென் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். பொதுநலத் தொண்டுகளில் பிரியத்துடன் ஈடுபடுவீர்கள். புனிதப் பயணம் சென்று வர வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். கண்களில் கவனம் தேவை! நண்பர்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வேண்டாத விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! மாமன் வழியின் மூலம் சில நன்மைகளை அடைவீர்கள். தந்தையின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படும். பணியில் இடமாற்றம் ஏற்படும்.

இராசியான எண்:- 7.
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் கணபதி வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வருக!

கடகம்:

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். அரசு வழக்குகளில் சாதகமான சூழ்நிலை உருவாகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வகைகளில் தனவரவுகள் உண்டு. புதிய தொழில் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம். பெரியவர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பெண்களால் வடதிசையில் இருந்து சில நற்செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளின் தடைப்பட்ட சுப காரியங்கள் நடைபெறும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்காக வெகு முயற்சி செய்து வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது! சூதாட்டத்தால் வீண் பொருள் விரயம் ஏற்படக்கூடும். தானிய வியாபாரிகள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், அழகுப்பொருள் வியாபாரிகள், திரைப்படம் – நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், பயறு – பருப்பு போன்ற பொருட்களை விற்பவர்கள், வீடு – நிலம் வாங்குவோர் / விற்போர், கட்டுமானப்பொருள் விற்பனை செய்பவர்கள் ஆகியோர் ஆதாயம் பெறுவர்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து மொச்சைப் பயறு தானம் செய்து வருக!

சிம்மம்:

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடு, நிலம் வாங்குவது சம்பந்தமான முயற்சிகளைச் சற்றுத் தாமதமாகச் செய்வது நல்லது! பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்ட சம்பந்தமான விஷயங்களில் ஏமாற்றம் அடையாமல் இருங்கள்! மனைவி வழிச் சொந்த பந்தங்களால் செலவு ஏற்படும். பூர்விகச் சொத்துக்கள் வந்து சேரும். உணவகத் தொழில் போன்ற நெருப்பு, கேஸ், வெல்டிங் சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், காவல்துறையினர், இராணுவம் சார்ந்தவர்கள், விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள், யோகாசனப் பயிற்சிக்கூடம் நடத்துபவர்கள், தங்க நகை வியாபாரிகள் ஆகியோர்க்கு நல்ல பலன்கள் வந்து சேரும். கை விட்டுப் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். தாயின் உடல்நிலை பாதிக்கப்படலாம்! பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத பிரச்சினைகள் வர இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்ப்பது நல்லதாகும்! உறவினர்களின் வரவால் செலவுகள் உண்டாகும். புனிதப் பயணம் சென்று வர முயற்சிப்பீர்கள். உற்றார் உறவினர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! தந்தையால் பொருள் வரவு உண்டு. மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டுத்தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்!

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வழிபாடு செய்து துவரை தானம் செய்து வருக!

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். மனைவியின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படும். தாய்க்கு இருந்து வந்த நோய்கள் குறைந்து காணப்படும். வீடு மாற்றம் செய்யவும் எண்ணுவீர்கள். கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். இலை – கீரை வகைகள் – மருந்துப் பொருட்கள் விற்பவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், அச்சகம் நடத்துபவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள், எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். தெய்வத் தொண்டுகளைப் பிரியத்துடன் செய்வீர்கள். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகலாம். வீடுகள், தொழிற்சாலைகளைத் திருத்திக் கட்ட எண்ணுவீர்கள். நெடு நாட்களாகத் திரும்பி வராமல் இருந்த கடன், கொடுத்து வைத்திருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும். நெடும் பயணங்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரால் எதிர்பாராத ஆதாயங்களும் மகிழ்ச்சியும் உண்டாகும். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஒரு சிலர் இருப்பிடம் விட்டு வெளியூர் செல்ல வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து பாசிப்பயறு தானம் செய்து வருக!

துலாம்:

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்! புதிய வீடு, நிலம் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரரால் செலவுகள் ஏற்படும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். சுய தொழில் செய்வதற்கான முயற்சிகளில் சற்றுத் தாமதம் ஏற்படலாம். மூலம் போன்ற உடற்சூடு சம்பந்தமான நோய்கள், வாயுத்தொல்லை போன்ற வயிற்று உபாதைகள் வந்து போகலாம். புதிய நண்பர்களைச் சேர்ப்பதைத் தவிருங்கள்! வேற்று மதத்தவர்களால் எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கும். பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம். குடும்பத்தில் தேவையற்ற மன சஞ்சலமும் குழப்பங்களும் வரக்கூடும். விவசாயம் செய்பவர்கள் புதிய விவசாய முறைகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும்! பழைய பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், அலுவலக உதவிப் பணி செய்பவர்கள். எண்ணெய் வியாபாரம் செய்பவர்கள், இரும்பு – பழைய பேப்பர் – பிளாஸ்டிக் வியாபாரிகள், ஆதரவற்றோர் விடுதிகளில் இருப்பவர்கள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், மதபோதகர்கள், அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவர். விருந்தினர்களின் எதிர்பாராத வரவால் பொருள் விரயமாகும்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து கோதுமை தானம் செய்து வருக!

விருச்சிகம்:

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம்! பங்காளிகளாலும், நண்பர்களாலும் சிற்சில தொல்லைகள் ஏற்படலாம். மருந்துப்பொருள் விற்பனையாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், அச்சகம் நடத்துபவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள், எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள், இலை – கீரை விற்பவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். சகோதரர்களால் பொருள் வரவு உண்டாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலம் எதிர்பாராத தனவரவு உண்டாகும். அரசு வேலை மற்றும் உத்தியோக முயற்சிகள் வெற்றி தேடித் தரும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட பயணங்களால் நிம்மதி ஏற்படாது. விபரீதமான எண்ணங்களை விட்டுக் காரியத்தில் கவனமாய் இருங்கள்! சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். பொருளாதாரம் நெருக்கடி ஏற்படுத்தினாலும் சமாளித்துக் கொள்வீர்கள். நீண்ட காலமாக வங்கிகளிலிருந்து எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும்.

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து பாசிப்பயறு தானம் செய்து வருக!

தனுசு:

தநுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண காரியம் கைகூடும். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்களைச் சந்திப்பதன் மூலம் சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை மற்றவர்களின் உதவிகளோடு வாங்குவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர முயற்சிப்பீர்கள். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாட்டிற்குச் சென்று வர வாய்ப்புகள் உள்ளன. பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் சற்றுக் குறையும். நீண்ட காலமாகப் பிரச்சினைகளில் இருந்து வந்த குடும்பச் சொத்துக்கள் கிடைக்கும். இரும்பு – இயந்திரம் – வேதியியல் சம்பந்தமான தொழில்களைச் செய்பவர்கள், பலசரக்கு – எண்ணெய் வியாபாரிகள், பழைய பொருள் வியாபாரிகள், அழுகுபொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களும் லாபம் அடைவர். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் பண வரவும் உண்டு. புனிதப் பயணம் சென்று வருவதற்கான ஏற்பாடுகளில் சற்றுத் தாமதம் ஏற்படும். நீண்ட பயணங்களைத் தவிர்த்திடுங்கள்! வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகலாம்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து எள் சாதம் தானம் செய்து வருக!

மகரம்:

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட்டு நிம்மதியை இழக்க வேண்டாம்! காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் கிடைக்கக்கூடிய காலமாகும். ஒரு சிலருக்குப் புதிய வீடு, வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி அடைவர். திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பொருள் வந்து சேரலாம். இரும்பு – இயந்திரம் – வேதியியல் சம்பந்தமான தொழில்களைச் செய்பவர்கள், பலசரக்கு – எண்ணெய் வியாபாரிகள், பழைய பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், மாமிச உணவு வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். காதல் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கை தேவை! காணாமல் போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது! புதிய ஆடை அணிகலன்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள் வாங்குவீர்கள். நிலம் சம்பந்தமாக வெகு காலமாகத் தடைப்பட்டு வந்த காரியங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். விவசாயிகள் புதிய விவசாய முறைகள் மூலம் எதிர்பாராத நல்ல லாபம் பெறுவர்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து எள் சாதம் தானம் செய்து வருக!

கும்பம்:

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பூர்விக இடத்தை விட்டுப் பெயர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது. பிறரிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்! விருந்தினர் வரவால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். விவசாயம் செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது! அரசியல்வாதிகளால் ஆதாயம் இருக்காது. உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வரவால் செலவுகள் உண்டாகும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் நிம்மதி அடைவீர்கள். மருந்துப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், கண்ணாடி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், ஜவுளி – நூல் வியாபாரிகள், மாணவர்கள், அரசியல்வாதிகள், பொதுநலத் தொண்டு செய்பவர்கள், ஆலயப்பணியாளர்கள், அமைச்சர்கள், மருந்து விற்பனை செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். பிள்ளைகளால் மருத்துவச் செலவு உண்டாகும். பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! நரம்பு, எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது!

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ வழிபாடு செய்து கோதுமை தானம் செய்து வருக!

மீனம்:

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்! நீண்ட பயணங்களைத் தவிர்ப்பது நல்லது! வாதம், வாயு, எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கையால் விபரீதங்களைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்! பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளில் பணம் வந்து சேரும். சகோதர சகோதரிகளுடன் காரணமில்லாத சச்சரவுகள் வந்து போகும். கண்களில் கவனத்துடன் இருத்தல் நல்லது! கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி உறவு பலப்படும். இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், குழந்தைக் காப்பகம் நடத்துபவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்விக்கூடங்களை நடத்துபவர்கள், பொறியியல் – கணினித்துறை சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள், பூ – பழம் – நறுமணப் பொருட்கள் விற்பவர்கள், ஆலயப்பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், நகை வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவர்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ வழிபாடு செய்து கடலை தானம் செய்து வருக!

**************************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author