இராசிபலன்கள் (17-6-2013 முதல் 23-6-2013 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வேலை விஷயமாக யாரிடமும் பணத்தையோ பொருளையோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! நீண்ட காலமாகப் பிரச்சினையில் இருந்து வந்த அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். விவசாயம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த அரசு உதவிகள் கிடைக்கும். மிக நீண்ட காலமாக திட்டமிட்டுக் கொண்டிருந்த புனிதப் பயணங்களுக்குச் சென்று வர வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில், சகோதர சகோதரிகளால் பொருள் வரவும் மகிழ்ச்சியும் ஏற்படும். தேவையில்லாத புதிய நண்பர்களின் தொடர்புகளால் வீண் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம்! திரைப்படம், நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், அழகுக்கூடங்களை நடத்துபவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். அண்டை, அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்! பழுதுபட்ட ஆலயங்கள், வீடு, வாகனங்கள் போன்றவற்றைப் புதுப்பிப்பதற்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். வேற்று மதத்தவரால் சில ஆதாயங்கள் கிடைக்கும். பணத் தேவைகளுக்காகப் பூர்விகச் சொத்துக்கள் சிலவற்றை விற்பதன் மூலம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மஹான்களின் தரிசனங்கள் மூலம் நிம்மதி அடைவீர்கள்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். கொடுக்கல் வாங்கல் தொழில் செய்பவர்கள் புதிய கடன் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லது. அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மற்றவர்களை நம்பிக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! புதிய வீடு, வாகனங்களை வாங்க வாய்ப்பு உள்ளது. கண், காது ஆகியவற்றைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! சம்பந்தமில்லாத நபர்களின் மூலம் பொருள்வரவு உண்டாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றை நம்பி ஏமாறாதீர்கள்! கொடுக்க வேண்டிய பழைய கடன்களால் மீண்டும் தொல்லைகள் வந்து சேரும். சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது. இதுநாள் வரையில் தடைப்பட்டு வந்த காரியங்களைச் சற்று முயற்சி செய்து துணிச்சலாக முடிப்பீர்கள். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். அழுகல் பொருள் வியாபாரிகள், மத போதகர்கள், பழைய பொருள் வியாபாரிகள் ஆகியோர் மிகவும் நல்ல பலன் அடைவீர்கள்.

இராசியான எண்:- 7.
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவுகளுக்குள் மிகவும் கவனமாக இருத்தல் நல்லதாகும். பூஜைப் பொருள் வியாபாரிகள், சிற்றுண்டி வியாபாரிகள், வாசனைப் பொருள் வியாபாரிகள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், மடாதிபதிகள், ஆதரவற்றோர் இல்லம் நடத்துபவர்கள், தாய்சேய் நல விடுதிப் பணியாளர்கள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். எதிர்பார்த்திருந்த வங்கிக்கடன் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். வெளிநாடுகள் சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். நாட்பட்ட நோய்களுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். கடன் கொடுத்திருந்து நீண்ட காலமாகத் திரும்ப வராத பணம் கை வந்து சேரும் காலமாகும். பயணங்களில் கவனமாக இருத்தல் நல்லது. பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் பெரியவர்களின் தலையீட்டால் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும்.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். காதல் விஷயத்தில் எதிர்பார்த்திருந்த நல்ல முடிவுகள் வந்து சேரும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல், சம்பந்தம் ஆகிய பிரச்சினைகளில் உறவினர்களின் தலையீட்டால் ஓரளவு நிம்மதி அடைவீர்கள். எடுத்த காரியங்களைத் துணிச்சலுடன் முயற்சி செய்து முடிப்பீர்கள். பொதுக் காரியங்களில் தலையிட்டு நற்பெயர், புகழ் அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். தாயின் உடல் பாதிப்புக்களால் மன உளைச்சலும் பொருட் செலவுகளும் உண்டாகலாம். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டு தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தீராத நோய்கள் தீர வேண்டி நீண்ட பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். காதல் விஷயத்தில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது. எரிபொருள் விற்பனையாளர்கள், காவல்துறையினர், இராணுவத்தினர், கார உணவுப் பொருள் வியாபாரிகள், மின்சாரம் சார்ந்த பணிகளில் ஈடுபடுபவர்கள், மின்சாரப் பொருட்களை உற்பத்தி, விற்பனை செய்யும் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடு.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் காரணமற்ற குழப்பங்களும் சஞ்சலங்களும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனமாக இருத்தல் நல்லது! வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கலை விலைக்கு வாங்காதீர்கள்! அஞ்சல்துறை சார்ந்தவர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், போக்குவரத்து நிறுவனம் நடத்துபவர்கள், பத்திரிக்கைத்துறை சார்ந்தவர்கள், புத்தக வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவீர்கள். தந்தை – மகன் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுச் சரியாகும். வங்கிகளால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்ய எண்ணுவீர்கள். நரம்பு, எலும்பு போன்றவற்றில் சிற்சில பாதிப்புகள் வந்து போகும். புதிய வீடு, நிலம் வாங்குவதற்காகப் போட்டிருந்த திட்டங்களில் சற்றுப் பின்னடைவு ஏற்படலாம். வெகு காலமாகப் பிரச்சினைகளில் இருந்து வந்த பூர்விகச் சொத்துக்கள் சட்டப்பூர்வமாகக் கைக்கு வந்து சேரும். விவசாயம் செய்பவர்கள் சற்றுக் கவனமாக நடந்து கொள்வது நல்லது! புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பேசிப் பழக வேண்டும்! பழுதுபட்ட ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு நற்பெயர், புகழ் அடைய வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். குழந்தைகளால் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். செய்யாத குற்றங்களுக்காக அவப்பெயர் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை! பொதுநலப் பணிகளில் பங்கு கொண்டு நிம்மதி அடைவீர்கள். பயணங்களின்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! வங்கிகளில் இருந்து எதிர்பார்த்த உதவித் தொகைகள் கிடைக்க இன்னும் சற்று தாமதம் ஆகலாம். நண்பர்கள், உறவினர்கள் போன்றோரால் தேவையில்லாத சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது! நண்பர்களுடன் பணப் பிரச்சினை சம்பந்தமாக மனக் கசப்பு ஏற்படலாம். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல தகவல்கள் கிடைக்கும். தின்பண்ட வியாபாரிகள், சமையல் கல்லூரி நடத்துபவர்கள், இவற்றில் பணிபுரிபவர்கள், அரசு உயர் பதவிகளை வகிப்பவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், முதியோர் இல்லம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். குடும்பத்தில் மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். வடமேற்குத் திசையில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும்.

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

துலாம்:-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். இரும்பு, இயந்திரம், கணினி, மின்சாரம் சார்ந்த பணியாளர்கள், வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், கமிசன் – தரகு – ஏஜன்சி போன்ற தொழில்கள் செய்பவர்கள், பங்குச்சந்தையில் ஈடுபடுவோர், வேதியியல், மூலிகை ஆகியவற்றை ஆராய்ச்சி செய்பவர்கள், தோல்பொருள் வியாபாரிகள், பலசரக்கு, பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய்ப் பொருட்கள் ஆகியவற்றை விற்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள், ஆலை அதிபர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுவதில் மன நிறைவு அடைவீர்கள். நண்பர்கள் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெகுதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வரவேண்டிய பணம், பொருட்கள் போன்றவை பெரிய மனிதர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். வழக்கு விஷயங்களில், நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் நினைத்த இடத்துக்குப் பணியிட மாற்றமும் ஏற்படலாம். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்ப வாய்ப்புள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணத் தகவல் மையங்கள், நண்பர்கள் போன்றோரின் உதவியால் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஆஞ்சனேயர், அம்மன் ஆலய வழிபாடு.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் வந்து போகும். வெகு நாட்களாகக் காணாமல் போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். பெண்களிடம் பேசும்போது கவனமாக இருப்பதால் வர இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி உண்டாகும். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! புதிய கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமல் போக வாய்ப்பு உள்ளதால் கடன் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள்! பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது! கலைக்கல்லூரி மாணவர்கள், அழகுசாதனப் பொருள் வியாபாரிகள், கலைஞர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், நில புலன்கள் விற்பவர்கள், கட்டுமானப் பொருள் வியாபாரிகள், திருமண மண்டபங்களை நடத்துபவர்கள், வாகன சம்பந்தமான தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். வேலை இல்லாத, படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகளும் மருத்துவச் செலவுகளும் உண்டாகலாம். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நன்மையைத் தரும்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு.

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். உடற்சூடு, காய்ச்சல் போன்ற உபாதைகள் வந்து போகலாம். புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகளில் வங்கிகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். விவசாயம் செய்பவர்களுக்குப் புதியமுறை விவசாயங்களின் மூலம் எதிர்பாராத நல்ல லாபம் கிடைக்கும். திருடு பொன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். பழைய பொருள் வியாபாரிகள், அழுகல் பொருள் வியாபாரிகள், மத போதகர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். காதல் சம்பந்தமான விஷயங்களுக்காக வீண் செலவு செய்து ஏமாற்றம் அடையாதீர்கள்! குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக வெகு தூரச் சுற்றுலா மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். தந்தை – மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மனநிறைவு அடைவீர்கள். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்குவதன் மூலம் சில கவலைகள் வந்து நீங்கும்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர், அம்மன் வழிபாடு.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். திரவப்பொருள் வியாபாரிகள், உப்பு வியாபாரிகள், கடல்வளத்துறை சார்ந்தவர்கள், கப்பல் பணி செய்பவர்கள், பூஜைப்பொருள் வியாபாரிகள், மீன்பிடித்தொழில் செய்பவர்கள் ஆகியோர் மிகுந்த லாபம் அடையக்கூடிய காலமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவீர்கள். பொருளாதாரத்தில், இது வரையில் இருந்து வந்த நெருக்கடி மாறி நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். அயல்நாட்டுப் போக்குவரத்து முகவர்கள் கவனமாகச் செயல்பட வேண்டிய நேரம்! வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்ற மதத்தவர்களால் எதிர்பாராத ஆதாயம் அடைவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில், எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் கிடைக்கும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பாராமல், சம்பந்தமில்லாத நபர்களால் சிற்சில அநுகூலங்களை அடைவீர்கள். உற்றார், உறவினர்களின் திடீர் வரவால் பொருள் வரவும் மகிழ்ச்சியும் ஏற்படும். பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர இன்னும் சற்றுத் தாமதம் ஆகும். பங்காளிகளுடன் கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தவிர்த்தல் நல்லது.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். நீண்ட பயணங்களை மேற்கொள்வதன் மூலம் புதிய பிரச்சினைகள் வர இருப்பதால் பயணங்களைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது. பொருளாதார நெருக்கடிகளைக் குறைப்பதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். வங்கிகள் மூலம் புதிய வீடு, நிலம் வாங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறச் சற்றுத் தாமதம் ஆகும். நகை வியாபாரிகள், பூஜைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பேராசியர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். தீராத நோய்கள், கடன் தொல்லைகள் தீர ஆலய வழிபாடு செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மனைவியின் உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்படலாம். நாட்பட்ட நோய்கள் தீர வேண்டிப் புதிய மருத்துவர்களின் உதவியை நாடுவதன் மூலம் நல்ல பலன் அடைவீர்கள். அண்டை, அயலாரிடம் கவனமாகப் பேசிப் பழகி விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் மன நிறைவடைவீர்கள்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி ஆலய வழிபாடு.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நல்லது. குடும்பச் சொத்து விஷயங்களில் வழக்கு சம்பந்தமான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் உகந்ததாகும். சகோதர சகோதரிகளால் சிற்சில நன்மைகள் வந்து சேரும். மாணவர்கள் மிகவும் கவனமாகக் கல்வி பயின்று வருதல் நல்லதாகும். வாகனங்களில் கவனமாகப் பயணம் செய்ய வேண்டும்! கணவன் – மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். விட்டுப் போன கணவன் – மனைவி உறவுகளில் இருந்த மனக் கசப்புகள் நீங்கி மீண்டும் அவர்கள் ஒன்று சேருவார்கள். வழக்குகளிலிருந்து, குறிப்பாகப் பூமி, நிலம் சம்பந்தமான வழக்குகளிலிருந்து விடுதலை கிடைக்கும் காலமாகும். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்று நீடிக்கும். பொதுநலத் தொண்டுகளில் கவனமாகப் பணியாற்றுவது நல்லது. குழந்தைகளுக்குப் பரிசும், பாராட்டுகளும் கிடைக்கும் காலமாகும். குடும்பத்தில், காரணமில்லாத மனக் கசப்புகளும் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். இரும்பு, இயந்திரம், கணினி, மின்சாரம் ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், கமிஷன், தரகு, ஏஜன்சி போன்ற தொழில்கள் செய்பவர்கள், பங்குச்சந்தையில் ஈடுபடுவோர் ஆகியோர் நற்பலன் அடைவர். கண், காது, முகம் ஆகியவற்றில் சிற்சில உபாதைகள் வந்து போகும்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு.

-மீண்டும் அடுத்த வாரம்…
*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, Tamil Nadu, India.
Phone: 04633-243029,
Mobile: 98425-10578, 98425-29691,
Fax: 04633-240390,
Website: www.gnanayohi.com

About The Author