இராசிபலன்கள் (17-9-2012 முதல் 23-9-2012 வரை)

மேஷம் :-

மேஷராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகளுடன் எதிர்பாராத தொடர்புகள் ஏற்பட்டு, அவர்களால் சிற்சில ஆதாயங்கள் அடைவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள், பெரிய மனிதர்களின் தலையீட்டால் சரியாகும். பூஜைப் பொருட்கள், நறுமணப் பொருள் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துபவர்கள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில், எதிர்பார்த்திருந்த நபர்களின் ஆதரவு கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுவதிலும், பொது நலத் தொண்டுகளில் ஈடுபடுவதிலும் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். தாயின் உடல் நிலையில் இதுநாள் வரையில் இருந்து வந்த பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் முயற்சிகளைச் செய்வதில் நல்ல பலன் அடைவீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர முயற்சிப்பீர்கள். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது. பொதுவாக, இது சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்..

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். கார், லாரி போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், கட்டடப் பணி செய்பவர்கள், செங்கல், மணல், சிமெண்ட் வியாபாரிகள், கட்டட சம்பந்தமான கமிசன் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். நீண்ட காலமாக விடுபட்டுப் போன, பழைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் புதிய தொடர்புகள் ஏற்படலாம். கணவன் – மனைவி உறவுகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில், சற்றுப் பின்னடைவுகள் ஏற்பட்டாலும், மிகவும் முயன்று அவற்றைச் சரி செய்து விடுவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பழைய வீடு, வாகனங்களை விற்றுப் புதிய வீடு, வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் வந்து சேரலாம். உடல் நிலையில் உஷ்ணம், காய்ச்சல், சளி போன்ற தொல்லைகள் வந்து போகும். பொதுத் தொண்டுகளில் ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவை அடைவீர்கள். நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களின் ஆதரவால் திருமணம் நடைபெறும். பொதுவாக, இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்..

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். அலுவலகங்கள் மற்றும் வீடுகளை இடமாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்றுப் பின்னடைவு உண்டாகலாம். பூமி, நிலம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபட்டு நற்பலன்களை அடைவீர்கள். படித்த, வேலை இல்லாத இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளால், எதிர்பாராத சில ஆதாயங்கள் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு, இது வரையில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்துறையினருக்குப் பணியிட நிரந்தரமும் சம்பள உயர்வும் உண்டாகும். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில், காவல் துறையினரின் உதவியால் நன்மை கிடைக்கும். நீண்ட காலமாக வராத கடன், கொடுத்திருந்த பணம் மற்றும் பொருட்கள், நண்பர்களின் உதவியால் திரும்பக் கை வந்து சேரும். திருமண விஷயங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லதாகும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலமாக ஏமாற்றம் அடையாமல் இருங்கள். .

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடு.

கடகம் :-

கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில், வீணாக ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறைந்து காணப்படும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். உடம்பில் எலும்பு மற்றும் நரம்பு போன்றவற்றில் உபாதைகள் வந்து போகும். பிள்ளைகளின் உடல் நிலையில் கவனத்துடன் இருப்பது நல்வது. பிரிந்து போன கணவன் – மனைவி திரும்ப ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப நிகழ்ச்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுவது சிறந்ததாகும். நீண்ட காலமாக உத்தியோகம் இல்லாத, படித்த இளைஞர்களுக்குப் புதிய உத்தியோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் போன்றோரிடமிருந்து எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். செய்யாத குற்றங்களுக்கு அவப் பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனத்துடன் இருங்கள்!. சொத்து விஷயமாகப், புதிய பிரச்சினைகளைச் சந்தித்து வெற்றி பெறுவீர்கள். வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட்செலவுகள் வந்து சேரலாம். பூஜைப் பொருள் வியாபாரிகள், தண்ணீர், கூல்டிரிங்ஸ் போன்ற திரவப் பொருள் வியாபாரிகள், உப்பு மற்றும் கடல்துறை சார்ந்த பணியாளர்கள், தாய் – சேய் நல விடுதிகளை நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன்கள் அடைவர். பொதுவாக, இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்..

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும் காலம். மற்றவர்களின் விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு, நிம்மதியை இழக்க வேண்டாம்! பயணங்களின்போது, சம்பந்தம் இல்லாத புதிய, பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு, அவர்களால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான விளைச்சல் உண்டாகும். குடும்பத்தில், சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்க முயற்சிப்பீர்கள். பயணங்களின்போது குழந்தைகளை மிகக் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட காலமாக வராத பணம், காவல் துறையினரின் உதவியால் திரும்பி வரும். வங்கிகளில் பணியாற்றுபவர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இரும்பு, இயந்திரம், இரசாயனம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், பழைய பொருள் வியாபாரிகள், பல சரக்கு, எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். உற்றார், உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட்செலவுகள் வந்தாலும், அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். உடம்பில் நரம்பு, இரத்தம் சம்பந்தமான சில உபாதைகள் வந்து போகலாம். கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக, இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்..

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளை இல்லாதவர்களுக்கு, இறையருளால் புத்திர பாக்கியம் கிடைக்கும் காலமாகும். மனைவி வழியில், வர வேண்டிய சொத்துக்களும் பணமும் கை வந்து சேரும் காலமாகும். வேலைவாய்ப்புக்காக மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! புதிய கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களின்போது கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய வீடு, வாகனங்கள் வாங்குவதற்கான திட்டங்களில் சற்றுப் பின்னடைவுகள் ஏற்படும். நண்பர்களால், எதிர்பாராத சில ஆதாயங்களையும் மகிழ்ச்சியையும் அடைவீர்கள். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த நீண்ட கால மனக் கசப்புகள் தீர்ந்து, ஒற்றுமையுடன் வாழக் கூடிய காலம். குழந்தைகளின் மகிழச்சிக்காக, நீண்ட தூர உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தை – மகன் உறவுகளில் இருந்து வந்துள்ள மனக் கசப்புகள் குறைந்து, ஒற்றுமையுடன் வாழக் கூடிய காலம். அரசு வழக்குரைஞர்கள், அஞ்சல் துறையினர், வங்கிப் பணியாற்றுபவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், கணிதம், எழுத்துத்துறை ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். பொதுவாக, இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு.

துலாம் :-

துலாம்ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். கலைத்துறை சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள், சினிமா, நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், பேப்பர், பேனா, நோட்டு, புத்தகம் போன்றவற்றின் வியாபாரிகள், அஞ்சல் துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணி செய்பவர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், மருந்துப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள், பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்லதொரு முடிவுக்கு வரும். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. வடக்குத் திசையில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குழந்தைகள், உயரமான இடங்களில் கவனத்துடன் ஏறி இறங்குவது நல்லது. உத்தியோகத் துறையினருக்கு மேலதிகாரிகளுடன் மனக் கசப்பு ஏற்பட்டுப் பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், முன் கோபத்தைத் தவிர்த்துப் பணியாற்றுதல் நல்லது. ஒரு சிலருக்குத், தாய் வழியிலான சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். பயணங்களில், சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலம் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லது. பொதுவாக, இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு.

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்குவதைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது. விட்டுப்போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும், அவர்களால் பெயரும் புகழும் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயத்தின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தீயணைப்புத்துறை, ராணுவம், காவல்துறை போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், ஹோட்டல் தொழில், சிறு தின்பண்ட வியாபாரிகள், கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழில் செய்பவர்கள், மசால் பொடி வியாபாரிகள், விறகு, நிலக்கரி போன்ற எரிபொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். மனைவி வழியிலான சொந்த பந்தங்களுடன் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்து போகலாம். குடும்பத்தில், இதுநாள் வரை தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். பொதுவாக, இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்..

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு.

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வீடு மாற்றம் செய்வதற்கான புதிய முயற்சிகளில், வங்கிகளின் ஆதரவு கிடைக்கும். நாட்பட்ட கடன்கள் அடைபடும். பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், ஆலயப் பணிகளைச் செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், கம்ப்யூட்டர் சாதன வியாபாரிகள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். சமுதாய வளர்ச்சிக்கான விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். அவற்றால் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். விபரீதமான எண்ணங்களால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். குல தெய்வ ஆலய வழிபாடுகளுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர்களுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள், கல்வியில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது. வேலையாட்களால், நிம்மதி இன்மையும் சிற்சில பொருட்செலவுகளும் வந்து சேரும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்காதிருங்கள்! நண்பர்களால் வீண் பொருட்செலவுகள் வந்து சேரலாம். தந்தை வழியிலான சொத்துக்கள் கை வந்து சேர வாய்ப்பு உள்ளது. நாட்பட்ட பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும். பொதுவாக, இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

மகரம் :-

மகரராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களுக்காகப் புதிய வழக்குரைஞர்களை நாடுவீர்கள். புதிய மருத்துவர்களை நாடினால் நாட்பட்ட தீராத நோய்கள் தீரும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில், சம்பந்தம் இல்லாத நபர்களின் ஆதரவால் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்கள், தாய்நாடு சென்று திரும்பி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கு முயற்சிப்பீர்கள். வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட்செலவுகள் வந்து சேரக்கூடிய காலமாகும். பிரிந்து போன கணவன் – மனைவி, திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உள்ளது. அழுகக்கூடிய பொருட்கள், கழிவுப் பொருட்கள், பழைய பேப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் முதலானவற்றை வியாபாரம் செய்பவர்கள், மீன், முட்டை, மாமிசம் போன்ற பொருட்களின் வியாபாரிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள், புகைப்படக் கலைஞர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். மாணவர்கள், கல்வியில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது! நண்பர்களின் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொதுவாக, இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்..

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிவப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- திங்கட்கிழமையில் கணபதி வழிபாடு.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். குடி இருக்கும் வீட்டில், காரணமில்லாத சில பிரச்சினைகள் ஏற்பட்டுப் புதிய வீடு மாற வாய்ப்பு உள்ளது. தாயின் உடல் நிலையில் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது. அண்டை, அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படுவதன் மூலம் நிம்மதி அடையலாம். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்துறையினருக்கு இட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் நிலையில் கண், காதுகளில் மிகக் கவனமாய் இருப்பது நல்லது. அணு ஆராய்ச்சித் துறை சார்ந்தவர்கள், இரசாயனத்துறை சார்ந்தவர்கள், கழிவுப் பொருட்களாகிய பழைய பேப்பர், பிளாஸ்டிக் சம்பந்தமான வியாபாரிகள், அரசுத்துறை சார்ந்த உயர் பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். வெளிநாடுகள் சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில், வேற்று மதத்தவர்களால் ஆதாயங்களை அடைவீர்கள். உற்றார் உறவினர்களின் எதிர்பாராத வரவுகளால் பொருட்செலவுகள் ஏற்பட்டாலும், அவர்களால் ஆதாயங்களை அடைவீர்கள். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். பொதுவாக, இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

மீனம் :-

மீனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களது உறவுகளைக் காணத் தாய்நாடு சென்று வருவீர்கள். வெகு காலமாகக் காணாமல் போன பொருட்களும் நபர்களும் திரும்பி வர வாய்ப்பு உள்ளது. கோர்ட், வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நல்ல, சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். காதல் விஷயத்தில், நண்பர்களின் உதவியால் நல்ல தகவல்கள் வந்து சேரும். தந்தை – மகன் உறவுகளில், காரணமற்ற முன்கோபத்தால் பிரச்சினைகள் உருவாகலாம். மீன், முட்டை, மாமிச உணவுப் பொருட்களின் வியாபாரிகள், காண்டிராக்ட், கமிசன், ஏஜன்சி போன்ற தொழில் செய்பவர்கள், விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள், தோல் தொழிற்சாலை சார்ந்தவர்கள், பழைய பொருள் வியாபாரிகள், வட்டிக் கடை நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். வேலை இல்லாதவர்கள், புதிய வேலைவாய்ப்புகளுக்காகப் பணம், பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! உடல் நிலையில் வாயு, வாதம் சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும். புதிய கடன்கள் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லது. வர வேண்டிய பணம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். . ரேஸ், லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பொருள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. புதிய வீடு, நிலம் போன்றவற்றை விலைக்கு வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும் காலமாகும். பொதுவாக, இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்..

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு.

****************

Gnanayohi Dr. P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18(25B/1), Pulavar Street
Krishnapuram
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India
Phone : 04633-243029
Mobile : 98425-10578, 98425-29691
Fax : 04633-240390
Website : www.gnanayohi.com

About The Author