இராசிபலன்கள் (20-1-2014 முதல் 26-1-2014 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பூ, பழம், பூஜைப் பொருட்கள், கணினி போன்றவற்றை உற்பத்தி அல்லது விற்பனை செய்பவர்கள், பொதுப்பணித் துறையைச் சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், நறுமணப் பொருள் வியாபாரிகள், இனிப்புச் சிற்றுண்டி வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். சுப காரிய சம்பந்தமாக வட திசையில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறையும். வேலை இல்லாத, படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும் காலமாகும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் பிரச்சினைகளை விலைக்கு வாங்காதீர்கள்! குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெற இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பூர்விகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும். புதிய வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். தீராத, நாட்பட்ட நோய்கள் தீரும் வகையில் புதிய மருத்துவர்களின் உதவிகள் கிடைக்கும். வாயுத்தொல்லை வயிறு சம்பந்தமான உபாதைகள் போன்றவை வந்து போகலாம்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- சிவ வழிபாடு.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். இனிப்புப் பொருள் வியாபாரிகள், கணினித் தயாரிப்பாளர்கள், பேராசிரியர்கள், பொதுப்பணி செய்பவர்கள், பூஜைப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், ஆலயங்களில் பணி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் வந்து சேரும். குலதெய்வ ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மனநிறைவு அடைவீர்கள். நண்பர்களால் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்! உற்றார் உறவினர்களின் வரவுகளால் நன்மை அடைவீர்கள்.
தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். பயணத்தின்போது புதிய நபர்களின் சந்திப்பால் சிற்சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள். தாயின் உடல்நிலை பாதிக்கப்படலாம். வீடு, தொழிற்சாலை ஆகியவற்றை இடமாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. கால்களில் கவனம் தேவை! புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். வங்கிகளின் மூலமாக நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். நடிகர்கள், கலைக் கல்லூரி சார்ந்த பேராசிரியர்கள், அதில் கல்வி பயிலும் மாணவர்கள், கட்டுமானப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். குடும்பத்தில், தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் மிகுந்த சிரமத்தின் பேரில் சரி செய்வீர்கள். காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம்! வேற்று மதத்தவர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். குழந்தைகளின் உடல்நிலையில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்! கணவன் – மனைவி உறவுகளில் இது நாள் வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் காணப்படுவர். நண்பர்கள் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். கண்கள், காதுகள் ஆகியவற்றில் மிகக் கவனத்துடன் இருப்பது நல்லது!

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடு.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகள் நல்ல ஆதாயம் பெறக் கூடிய காலமாகும். பயணத்தின்போது மிகக் கவனத்துடன் சென்று வருவது நல்லது! சகோதர சகோதரிகளின் சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். காணாமல் போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். முதுகுப் பிரச்சினைகளும், மூலம் போன்ற தொல்லைகளும் வந்து போகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். அரசு வழக்குகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிக எச்சரிக்கையாய்ப் பேசி பழக வேண்டும்! வெகு காலமாக விட்டுப் போன பழைய உறவினர்களுடன் தொடர்புகள் ஏற்படும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவிகள் கிடைக்கும். நில புலன்கள் வாங்குவோர் / விற்போர், கட்டட சம்பந்தமான தொழில் செய்வோர், வாகனத் தொழில் செய்பவர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், சிற்றுண்டி விற்பவர்கள், நறுமணப் பொருள் வியாபாரிகள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடு.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் இதுவரையில் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்கள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்லதொரு முடிவுக்கு வரும். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் – மனைவி ஒன்று சேரும் காலமாகும். நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய பெண் மருத்துவர்களின் உதவியை நாடுவதன் மூலம் நற்பலன் அடைவீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகக் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! வெகு காலமாகக் காணாமல் போன பொருட்கள், நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயத்தின் மூலமாக நல்ல விளைச்சல் காணப்படும். அலுவலகப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணி மாற்றம் ஏற்படலாம். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மின்சாரம், நெருப்பு சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், காவல்துறை சார்ந்தவர்கள், தீயணைப்பு நிலையத்தவர்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், உணவகத் தொழில் செய்பவர்கள், கேஸ் மற்றும் வெல்டிங் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- துர்க்கை வழிபாடு.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவுகளில் காரணமற்ற சச்சரவுகள் வந்து நீங்கும். மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய செலவுகள் வந்து சேரும். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம், பொருட்கள் ஆகியவை மிகுந்த சிரமத்தின் பேரில் வந்து சேரும் காலமாகும். குலதெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். நீண்ட காலமாகப் பிரச்சினைகளில் இருந்து வந்து பூர்விகச் சொத்துக்கள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் கைக்கு வந்து சேரும். மாணவர்களுக்குக் கல்வியில் எதிர்பாராத சில தடைகள் வந்து போக வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பயின்று வருதல் நல்லது! உற்றார் உறவினர்களின் எதிர்பாராத வரவுகளால் பொருட்செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். பழைய இரும்பு, பழமையான இயந்திரங்கள், வேதியியல் ஆகியவை சம்பந்தமான தொழில்களில் ஈடுபடுவோர், தரகு, ஏஜன்சி, குத்தகை போன்ற தொழில் செய்பவர்கள், சாயப் பொடி வியாபாரிகள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். நீண்ட தூரப் பயணங்களின் மூலம் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறுதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு.

துலாம்:-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். கணிதம், அச்சுத் தொழில் செய்பவர்கள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், பொதுவாக, எழுத்துத்துறை சார்ந்தவர்கள், புகைப்படக் கலைஞர்கள், வங்கிப் பணியாளர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர வாய்ப்பு உள்ள காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய பொருட்செலவுகள் வந்து சேரலாம். கடன் கொடுத்திருந்த பணம், பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். கண் காது ஆகியவற்றில் சிற்சில உபாதைகள் வந்து போகலாம். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டாகும். தந்தை வழிச் சொந்த பந்தங்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். புதிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது. விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் பரிசும் பாராட்டுக்களும் பெறுவார்கள். பணப் புழக்கத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நல்ல முன்னேற்றம் காணப்படும்.

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடு.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பூமி நிலம் சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், நகை வியாபாரிகள், நெருப்புத் தொழில் செய்பவர்கள், காவல்துறை, ராணுவம், தீயணைப்பு போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள். ஒரு சிலருக்கு நாட்பட்ட பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்குவதன் மூலம் நிம்மதிக் குறைவு ஏற்படலாம். பிள்ளைகளால் சிற் சில தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர், புகழ் அடைவீர்கள். நீண்ட காலமாகப் பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் சற்றுக் கவனத்துடன் இருப்பது நல்லது! பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்டம் சம்பந்தமான விஷயங்களில் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது! புதிய வீடு நிலங்களை வாங்குவதற்காக வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். வயிற்றுக் கோளாறு, மூலம் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். புதிய தொழில் தொடங்குவதில் இது வரையில் இருந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- முருகன் வழிபாடு.

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயங்களில் நண்பர்களின் உதவியால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வீடு வாகனங்களைப் புதுப்பித்தலுக்காகப் புதிய கடன் வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள். அண்டை அயலார்களுடன் கவனமாகப் பேசிப் பழக வேண்டும்! பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தந்தை – மகன் உறவுகளில் இது வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையாய் இருப்பார்கள். மாணவர்கள் கல்வி, விளையாட்டுக்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்! மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். புனிதப் பயணம் சென்று வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒரு சிலருக்கு ஆதாயம் உண்டாகும். நரம்பு, எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் எந்த விஷயத்திலும் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! திரவப் பொருள் வியாபாரிகள், கடல்வளத்துறை சார்ந்தவர்கள், கப்பல் பணி செய்பவர்கள், உப்பு, உர வியாபாரிகள், பூஜைப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள்.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- அம்மன் வழிபாடு.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். வங்கி உதவிகளின் மூலம் புதிய வாகனங்களை வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள். பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மிகுந்த கவனத்துடன் சென்று வருவதால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்! நீண்ட காலமாக வராத கடன், கொடுத்து இருந்த பணம், பொருட்கள் ஆகியன திரும்பக் கை வந்து சேரும். மாணவர்கள், கல்வியில் சில தடைகள் வர இருப்பதால் கவனத்துடன் சென்று வர வேண்டும்! நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த புதிய தொழில்களை தொடங்கப் போட்ட திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். தாயின் உடல்நிலை பாதிக்கப்படலாம். தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்த விஞ்ஞானிகள், வேதிப்பொருள் வியாபாரிகள், பழைய இரும்பு, கழிவுப் பொருள் வியாபாரிகள், நாடகத்துறை சார்ந்தவர்கள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்களை நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். தொலை தூரப் பயணங்களால், எதிர்பார்த்த காரியம் நிறைவேறும்.

இராசியான எண்:- 7.
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- கணபதி வழிபாடு.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். வெகு நாட்களாக வராத கடன், கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். நெருப்பு, உணவகம், மின்சாரம் போன்ற துறைகள் சார்ந்தவர்கள், அரசுத்துறை சார்ந்த உயர்பதவி வகிப்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள்! பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படும். சமுதாய வளர்ச்சிக்கான விஷயங்களில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது! வாகனங்கள், மின்சாரப் பணிகள் ஆகியவற்றில் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்! தந்தை வழிச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். உற்றார் உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் பொருட்செலவுகள் வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றில் ஈடுபடுவோர் மிகக் கவனத்துடன் இருப்பது நல்லது! கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடிய காலமாகும். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது! மற்றவர்களை நம்பிப் புதிய கடன்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் துலங்கும்.

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- சிவ வழிபாடு.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். பங்காளியுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் வம்புகளை விலைக்கு வாங்காதீர்கள்! வெளிநாடு செல்லுதல் போன்ற விஷயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயம் அடைவீர்கள்! தந்தை – மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகலாம். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக இன்பச் சுற்றுலாக்களை மேற்கொள்ளுவீர்கள். அதே நேரம், சுற்றுலாவின்பொழுது குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்வது நல்லது! திருமணம் போன்ற சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும். அரசு வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கலாம். நண்பர்களால் வீண் பொருட்செலவுகளும் நிம்மதியின்மையும் ஏற்படலாம். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் சற்றுக் கவனத்துடன் இருக்க வேண்டும்! இரும்பு, இயந்திரம், வேதியியல் சார்ந்த தொழில்களைச் செய்பவர்கள், ஆலை அதிபர்கள், எண்ணெய் வியாபாரிகள், பலசரக்குக் கடை நடத்துபவர்கள், பழைய பொருட்களை விற்பனை செய்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு.

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18(25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author