இராசிபலன்கள் (20-5-2013 முதல் 26-5-2013 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். சளி, காய்ச்சல் போன்ற நோய்களும், எலும்பு, நரம்பு ஆகியவற்றில் உபாதைகளும் வந்து போகலாம். இதுநாள் வரையில் இருந்து வந்த பண நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காண்பதன் மூலம் நிம்மதி அடைவீர்கள். அண்டை, அயல் வீட்டுக்காரர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. வீடு, வாகனங்களை வாங்குவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவீர்கள். பயணங்களைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது. விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும். வீடுகளில் அல்லது பயணங்களில் புதிய நட்புகள் உண்டாகி அவர்களால் எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், பொதுத்தொண்டு நிறுவனத்தினர், ஆலயப்பணிபுரிவோர், வங்கி எழுத்தாளர்கள், அச்சுத்தொழில் செய்பவர்கள், பத்திரிக்கையாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு நற்பலன் தரக் கூடிய காலமாகும். நண்பர்கள், உறவினர்களால் எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண் :- 5.
இராசியான நிறம் :- பச்சை.
இராசியான திசை :- வடக்கு.
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு.

ரிஷபம் :-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பயணங்களின்போது மற்றவர்களிடம் முன்கோபத்தைத் தவிர்த்தல் நல்லது. செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். கணவன் – மனைவி உறவுகளில் இது நாள் வரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவதன் மூலம் மனநிறைவை அடைவீர்கள். சளி, ஒவ்வாமை போன்ற தொல்லைகள் வந்து போகும். பூஜைப் பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், நகை வியாபாரிகள், கணினித் தொழில் செய்பவர்கள், பழம், கூல்டிரிங்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. விவசாயம் சுமாராகப் பலனளிக்கும்.

இராசியான எண் :- 3.
இராசியான நிறம் :- மஞ்சள்.
இராசியான திசை :- வடகிழக்கு.
பரிகாரம் :- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். கடன் கொடுத்து ஏமாற வேண்டாம்! வாயு, வாதம் சம்பந்தமான தொல்லைகள் வந்து போகலாம். மஹான்களின் தரிசனங்களால் மகிழ்ச்சியும் வெற்றியும் அடைவீர்கள். இது நாள் வரை இருந்து வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். குலதெய்வ வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உற்றார், உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட்செலவுகள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. தேவையற்ற புதிய நட்புகளால் நிம்மதி இழக்க வாய்ப்பு உள்ளதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ராணுவம், காவல்துறை ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள், நெருப்பு சம்பந்தமான தொழில்களில் ஈடுபடுவோர், அதாவது உணவகம் சார்ந்தவர்கள், எரிபொருள் வியாபாரிகள், மசால் உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோருக்கு நல்ல லாபம் வரக் கூடிய காலமாகும். அண்டை, அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. கட்டி முடிக்கப்படாத, தடைப்பட்ட ஆலயப் பணிகளை மீண்டும் தொடர்ந்து செய்வீர்கள். பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிகப்பு.
இராசியான திசை :- தெற்கு.
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மன் ஆலய வழிபாடு.

கடகம் :-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். அண்டை, அயலார்களுடன் காரணமற்ற சிறிய விஷயங்களுக்காக வீண் பிரச்சினைகள் உருவாக இருப்பதால் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. தென்திசையிலிருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்கள் கல்வியில் பரிசும், பாராட்டும், உதவித்தொகைகளும் பெற வாய்ப்புள்ள காலமாகும். நீண்ட காலமாகக் காணாமல் போயிருந்த பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் வேற்று மதத்தவரால் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். பந்தயம், பரிசுச்சீட்டு ஆகியவற்றால் ஏமாற வேண்டாம். வீட்டை அலங்கரிப்பதாலும், வாகனங்களைப் பழுது பார்ப்பதாலும் பொருட்செலவுகள் ஏற்படலாம். அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள், பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் வியாபாரிகள், அணுசக்தித்துறை சார்ந்த அறிவியலாளர்கள், ஆலயங்களில் தொண்டுப் பணிகளைச் செய்பவர்கள், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.

இராசியான எண் :- 4.
இராசியான நிறம் :- கருப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் இட்டு பிதுர்களையும் காளி போன்ற அம்மன்களையும் வழிபடுதல்.

சிம்மம் :-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் செய்வதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் வந்து சேரும். கடன் கொடுத்து ஏமாற வேண்டாம்! புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருட்செலவுகளும், நிம்மதியின்மையும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை! பயணங்களின்போது மிகவும் கவனமாகச் சென்று வருதல் நல்லது. புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைக்க முயற்சிப்பீர்கள். பிரிந்து போன உறவுகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ள காலமாகும். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், கலைக்கல்லூரிப் பேராசிரியர்கள் – மாணவர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். வர வேண்டிய பூர்விகச் சொத்துக்களில் உள்ள பிரச்சினைகளில் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்ல முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களுக்காகப் பிணையளித்து வீண் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது! விசா விஷயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 6.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- தென்கிழக்கு.
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி ஆலய வழிபாடு.

கன்னி :-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். வெளிநாட்டில் வாழும் நண்பர்கள், உறவினர்களிடமிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது. ஒரு சிலருக்குப் பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றில் பண வரவு உண்டாகும். சகோதர, சகோதரிகளின் தடைப்பட்டு வந்த திருமணக் காரியங்கள் சம்பந்தமாகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். வடக்கு திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். மற்றவர்களின் விஷயங்களில் வீணாகத் தலையிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப்படாதீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இரும்பு, இயந்திரம், வேதிப் பொருட்கள், பழைய பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள், கமிஷன் தொழில் செய்பவர்கள், பலசரக்கு விற்பவர்கள், பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலன் அடைவர். நாட்பட்ட நோய்கள் தீர வேறு மருத்துவர்களின் உதவியை நாடுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காண்பீர்கள். பயணங்களின்போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் இட்டு சனீஸ்வர வழிபாடு.

துலாம் :-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். வெகு காலமாக வழிபடாமல் விட்டுப் போன குலதெய்வ ஆலயங்களைத் தரிசனம் செய்வதற்கான காலமாகும். பங்கு வணிகத்தில் ஈடுபடுவோர் நல்ல லாபம் பெறப் போகும் காலமாகும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் வர இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது. பங்குச்சந்தை, கமிஷன், தரகு, ஏஜன்சி சம்பந்தமான தொழில் செய்பவர்கள், மாமிச வியாபாரிகள், அடகுக்கடை நடத்துபவர்கள், பழைய பொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவர். பயணங்களின்போது பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருங்கள். காதல் விஷயங்களில் மற்றவர்களில் ஆதரவுகள் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றமும் மேலதிகாரிகளின் ஆதரவும் உண்டாகும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றால் எதிர்பாராத பண வரவு உண்டாகும். ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு நற்பெயர் எடுப்பீர்கள். நெடும் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் எதிர்பார்த்த காரியங்களில் மன நிறைவடைவீர்கள்.

இராசியான எண் :- 7.
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- திங்கட்கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு.

விருச்சிகம் :-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். அலுவலகப் பணி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களுக்கு இடமாற்றம் கிடைக்கலாம். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். மஹான்களின் தரிசனங்களால் மகிழ்ச்சியும் வெற்றியும் அடைவீர்கள். மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். உற்றார், உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட்செலவுகள் ஏற்படும். அரசு சம்பந்தமான விசா போன்ற பிரச்சினைகளில் நல்ல சாதகமான தகவல்கள் வந்து சேரும். தேவையற்ற புதிய நட்புகளால் நிம்மதி இழக்க வாய்ப்பு உள்ளதால் மிகவும் கவனமாக இருங்கள். ஒரு சிலர் வீடு, தொழிற்சாலைகளைத் திருத்திக் கட்ட வாய்ப்பு உள்ளது. நில புலன்கள் சம்பந்தமான பழைய வழக்குகள் மீண்டும் தொடரும். காதல் விஷயங்களில் பெண்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. வாகனத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், அரசியல்வாதிகள், கமிஷன் – தரகுத் தொழில் செய்பவர்கள், அரசு உயர் பதவிகளை வகிப்பவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் ஆகியோர் லாபம் அடைவர்.

இராசியான எண் :- 1.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- கிழக்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

தனுசு :-

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாட்டிலிருந்து செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். நீண்ட காலமாக வராதிருந்த பணம், பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். வங்கித் தொழில் புரிவோர், வழக்கறிஞர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள், எழுத்தாளர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். வங்கிகளிலிருந்து வெகுகாலமாக எதிர்பார்த்திருந்த தொகை கிடைக்கும். உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் பொருட்செலவுகள் ஏற்படலாம். மஹான்களின் எதிர்பாராத ஆசிகளால் நிம்மதி அடைவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் மனக் குழப்பங்கள் உண்டாகலாம். சொத்து வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கத் தாமதம் ஆகலாம். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஒரு சிலர் புதிய வீடு, வாகனங்களை வாங்க வாய்ப்பு உள்ளது. பொதுத் தொண்டுகளில் தலையிட்டுப் புகழ் அடைய வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 5.
இராசியான நிறம் :- பச்சை.
இராசியான திசை :- வடக்கு.
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு.

மகரம் :-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த புனிதப் பயணங்கள் சென்று வர வாய்ப்பு உள்ளது. தந்தையின் மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். நீண்ட காலமாக இருந்து வந்துள்ள காதல் விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். மின்சாரப் பணியாளர்கள், எரிபொருள்துறை சார்ந்தவர்கள், உணவகம் நடத்துபவர்கள், கணினிப் பொருள் வியாபாரிகள், வேதியியல்துறை, அணு விஞ்ஞானத்துறை ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், காவல்துறையினர், இராணுவத்தினர் ஆகியோர் நற்பலன்களை அடைவர். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். அரசியல்வாதிகளிடம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்றுப் பொறுமை காத்தல் நல்லது. ஒரு சிலருக்கு வீடு, தொழிற்சாலைகளைப் பழுது பார்ப்பதன் மூலம் செலவு ஏற்படலாம். உற்றார், உறவினர்களின் திடீர் வரவால் பொருட்செலவுகளும் புதிய பொறுப்புகளும் ஏற்படலாம். அலுவலகப் பணியாளர்கள் மேலதிகாரிகளுடன் மிகவும் பொறுமையுடன் பணி ஆற்றுதல் நல்லது.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம்: :- சிகப்பு.
இராசியான திசை :- தெற்கு.
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடு.

கும்பம் :-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். காய்கறி வியாபாரிகள், கலைத்துறை சார்ந்தவர்கள், ஒப்பனைக்கூடம் நடத்துபவர்கள், சிற்றுண்டி விடுதி நடத்துபவர்கள், நகைக்கடை நடத்துபவர்கள் ஆகியோர் மிகுந்த நற்பலன்களை அடைவர். கண், காது போன்றவற்றில் கவனம் தேவை. குடும்பச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் பெரிய மனிதர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்காதிருங்கள்! வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உறவுகளைத் தேடித் தாய்நாடு சென்று வருவதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் ஏமாற்றம் அடைய வேண்டாம்! புதிய வீடு, வாகனங்களை வாங்குவதற்காக வங்கிகளிலிருந்து எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் வந்து சேரும். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் வர இருப்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்ட தூரச் சுற்றுலா சென்று வருவதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.

இராசியான எண் :- 6.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- தென்கிழக்கு.
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு.

மீனம் :-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்கள், உறவினர்களின் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெடும் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. திரவப் பொருள் வியாபாரிகள், குளிர்பான வியாபாரிகள், உப்பு, உரம் ஆகிய பொருட்களை விற்பனை செய்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், கப்பல் பணிபுரிவோர் ஆகியோர் நல்ல பலனை அடைவர். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். அரசியல்வாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றுதல் நல்லது. பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பாராட்டுக்களும் பொருள் வரவும் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் உடல்நிலைப் பாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுக்காகப் பிணை அளிப்பதைத் தவிர்த்தல் நல்லது. காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேர இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். தாயின் உடல்நிலையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும்.

இராசியான எண் :- 2.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- மேற்கு.
பரிகாரம் :- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு.

*****************
Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M.
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, Tamil Nadu, India.
Phone: 04633-243029.
Mobile: 98425-10578, 98425-29691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author