இராசிபலன்கள் (22-12-2008 முதல் 28-12-2008 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரகமாகும். மற்றவர்களின் விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள். பொதுத்தொண்டு நிறுவனத்தவர்கள், ஆலயப்பணி புரிவோர்கள், பூ, பழம், நறுமணப் பொருட்கள், பூசை சாதன வியாபாரிகள் நற்பலன் அடைவார்கள். உடம்பில் மேகம் மற்றும் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். குடும்பத்தில் சிற்சில சச்சரவுகள் வந்து நீங்கும். வீட்டை அலங்காரம் செய்வீர்கள். அரசு சம்பந்தமாக வரவேண்டிய பணங்கள் மற்றும் வழக்கு விஷயங்கள் போன்ற காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். சிறு குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகம் இல்லாதவர்களுக்குப் புதிய முயற்சிகள் மூலம் உத்தியோகம் கிடைக்கும். பிரிந்துபோன கணவன் மனைவி திரும்பவும் சேருவார்கள்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ் சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- கணபதி வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், கார், லாரி போன்ற வாகனத் தொழிற்சாலைகளை நடத்துபவர்கள், கேஸ், ஏஜன்சி போன்ற தொழில்களை நடத்துபவர்கள் நல்ல பலனை அடைவார்கள். பழைய வாகனங்களை விற்பதற்கு வாய்ப்புள்ளது. மனைவியால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கோவில் குளம், மற்றும் சமுதாய முன்னேற்ற நற்பணிகளில் ஈடுபட்டு நற்பெயரெடுப்பீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்க்கவும். வாகனங்களில் எச்சரிக்கையாகப் பயணம் செய்வது நல்லது. முன் கோபம் தவிர்க்கவும். பங்காளிகளால் பொருட் செலவுகள் உண்டாகும். செய்தொழிலில் புதிய மாற்றங்கள் செய்யத் திட்டம் போடுவீர்கள். விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சி உண்டு. நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைவந்து சேரக் கூடிய காலமாகும். குல தெய்வ வழிபாடு செய்து வருவது நல்லதாகும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். அச்சுத் தொழில் செய்வோர்கள், தபால் தந்தித் துறையினர்கள், வங்கி எழுத்துப் பணி புரிபவர்கள், சினிமாக் கலைஞர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். உற்றார் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உடம்பில் வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். இரசாயனத் தொழில் மற்றும் கமிஷன், கன்ஸ்டிரக்ஷன் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவர். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வங்கிகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். விட்டுப்போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரும். தொலை தூரப் பயணங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மன தைரியமுடன் எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். காணாமற் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் வீடு வந்து சேரும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். விட்டுப்போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளதால் முன் கோபத்தைத் தவிர்த்தல் நல்லதாகும். பிள்ளைகளால் மன நிம்மதி உண்டாகும். உடம்பில் வாயு மற்றும் வாத சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். வீண் பொருள் விரையம் ஏற்படலாம். வர வேண்டிய பணம் சிறிது கால தாமதமாகவே கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். செல்வ செல்வாக்கு புகழ் கூடும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். வீடுகளில் கவனமுடன் இருத்தல் நல்லது. சம்பந்தம் இல்லாத நபர்களால் புதிய பிரச்சனைகள் உருவாகக் கூடும். தீர்த்த யாத்திரைகளைத் தள்ளிப் போடவும். உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. மகான்களின் ஆசிகள் கிடைக்கும். காதல் விஷயங்களில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவதுடன் நற்பெயரெடுப்பீர்கள். வீடு மற்றும் வாகனங்களில் கவனமுடன் இருத்தல் நல்லது. விபரீதமான எண்ணங்களை நினைத்து மனக் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் ஏற்படும். வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கப் பெற்று அதனால் புதிய வீடு வாங்குவீர்கள். தாய் மாமன் வழியில் சில சுப காரியங்கள் நடக்கும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் மேலிடும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். கொடுக்கல் வாங்கலினால் நண்பர்களிடம் பிரச்சனைகள் ஏற்படும். ஹோட்டல் தொழில், சிற்றுண்டி உணவுத் தொழில்கள், பேப்பர், பேனா, பிளாஸ்டிக் பொருள் வியாபாரிகள், அரசுத்துறை சார்ந்த வக்கீல்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவார்கள்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வரவும்

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். நாட்பட்ட தீராத நோய்கள் தீர வேண்டிப் புதிய மருத்துவரின் உதவிகளை நாடுவீர்கள். தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்படும். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். திடீர் அதிஷ்டம் மூலம் தன வரவு உண்டாகும். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களுக்குப் பொருட் செலவு உண்டாகும். ஆபரேஷன் போன்ற காரியங்களைத் தள்ளிப் போடுவது நல்லது. தங்கம் வெள்ளி போன்ற நகைகளையும், ஆடம்பர அலங்காரப் பொருட்களையும் வாங்குவீர்கள். உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை. பங்காளிகளுடன் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணப் பிரச்சனைகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் தலையிடுதலால் பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- அம்மன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

துலா ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் சுரம் மற்றும் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். நீண்ட தூரப் பயணங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில் நடைபெறும். செல்வந்தர்கள் தொடர்பால் மன நிம்மதி அடைவீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சுமூகமான சூழல் உருவாகும். பிள்ளைகளின் உடல் நிலையில் கவனமுடன் இருக்கவும். நெருப்பு, போலீஸ், ராணுவம், மின்சாதனத்துறை சார்ந்தவர்கள், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள், விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லதாகும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகள் பலப்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். அச்சுத் தொழில் செய்வோர்கள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், நீர்வளம், நிலவளத்துறை சார்ந்தவர்கள், தபால் தந்தித் துறையினர்கள் லாபம் அடைவார்கள். கண்களில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும். கலைத்துறையினர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் தோச்சி பெறுவர். உத்தியோகத் துறையினருக்கு மேலதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும். செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர் ஏற்படலாம். பிரிந்து வாழ்ந்த கணவன் மனைவி பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள். மற்றவர்களுக்காக உதவி செய்து மன நிம்மதி அடைவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலம் தென் திசையில் இருந்து பணம் வந்து சேரும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வரவும்

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் நல்ல சூழ்நிலை காணப்படும். உத்தியோக முயற்சிகளில் கால தாமதம் ஏற்படலாம். உடல் நோய்க்கு நல்ல மருத்துவத் தீர்வுகள் கிடைக்கும். விவசாயம் செய்வோர்கள், காய்கறி வியாபாரிகள், தண்ணீர், கூல்டிரிங்ஸ் சம்பந்தமான தொழில்கள் செய்வோர்கள், பெயிண்ட் மற்றும் சாயப் பவுடர் வியாபாரிகள் ஆகியோர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களில் ஏமாற்றம் அடையாதீர்கள். வீடுகளைத் திருத்திக் கட்டுவீர்கள். தாய் வழிச் சொத்துக்கள் கிடைக்கும். தந்தை மகன் உறவுகளில் கவனம் தேவை. நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது. விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும். வாகனங்களில் கவனமுடன் சென்று வருவது நல்லது.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகள் ஆதாயம் அடைவார்கள். சொத்து சம்பந்தமாகிய விஷயங்களில் சகோதரர்களால் ஆதாயம்
அடைவீர்கள். அரசு சம்பந்தமான அலுவலகப் பணிகளில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவுகளில் எச்சரிக்கை தேவை. யாத்திரைகளில் புதிய பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் வீண் பொருட்செலவுகள் ஏற்படும். கடன் கேட்டிருந்த பணம் கிடைப்பதில் சற்றுக் கால தாமதம் ஏற்படக் கூடும். பூமி சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. ஆபரணங்கள் மூலம் வங்கிகளால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும். அரசியல்வாதிகளால் சிற்சில நன்மைகள் அடைவீர்கள்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- ஆஞ்சனேயர் வழிபாடு செய்து வரவும்.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். விஞ்ஞானத்துறை சார்ந்தவர்களின் புதிய ஆராய்ச்சிகளில் நல்ல வெற்றி அடைவீர்கள். ஆலயப் பணிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. நித்திரை பங்கம் ஏற்படும். மூத்த சகோதரருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். உடம்பில் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். திருமணத் தகவல் மையங்களை நடத்துபவர்கள், இணைய தளங்கள், தொலைக்காட்சி நிறுவனத்தினர்கள், கம்ப்யூட்டர் சாதன வியாபாரிகள், நற்பலனடைவார்கள். நண்பர்களின் உதவியால் தடைப்பட்ட திருமண காரியங்களில் நிறைவேறும். பெண்களால் ஆதாயம் உண்டு. தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கும். வீடு, நிலம் வாங்குவது சம்பந்தமான புதிய முயற்சிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் திரும்பக் கிடைக்கும். கால்களில் கவனம் தேவை.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மாணவர்கள் கல்வி விஷயமாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வார்கள். புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைப்பீர்கள். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் கவனம் தேவை. மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகளிலிருந்து சில மாற்றங்கள் ஏற்படும். யாத்திரைகளில் நற்பலன் உண்டாகும். தாயின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவு சுமாராகக் காணப்படும். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்கள் செல்லுதல் மூலம் பொருள் விரையம் ஏற்படும். சொந்த பந்தங்களால் புதிய மனக் குழப்பங்கள் வர வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்த்தல் நல்லது. உடம்பில் இரத்தம் மற்றும் நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து போகும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

About The Author