இராசிபலன்கள் (22-4-2013 முதல் 28-4-2013 வரை)

மேஷம் :-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்டங்களை நம்பி ஏமாற வேண்டாம்! நெடும் பயணங்கள் மூலம் காரியங்கள் நிறைவேறும் காலமாகும். பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றுவது நல்லது. கணவன் – மனைவி உறவுகளில் வெகு நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சற்றுக் குறைந்து நிம்மதி அடைவீர்கள். கட்டுமானம் சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், கலைக்கல்லூரி நடத்துபவர்கள், இவற்றில் பணிபுரிபவர்கள், பூஜைப் பொருள் விற்பவர்கள், ஆலயப்பணியாளர்கள், உப்பு வியாபாரிகள், கப்பலில் பணியாற்றுபவர்கள், திரவப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். கடன் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லது. நண்பர்களின் வீட்டுச் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெடும் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். குடும்பத்தில், தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நிறைவேற இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். ஒரு சிலர் வீடு, தொழிற்சாலை ஆகியவற்றை இடமாற்றம் செய்யத் திட்டம் போடுவீர்கள்.

இராசியான எண் :- 2.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- மேற்கு.
பரிகாரம் :- அம்மன் ஆலய வழிபாடு.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகள் கல்வியில் பரிசும் பாராட்டும் பெறுவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மூலமாகப் புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். பிரிந்து போன கணவன் – மனைவி திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தங்க, வெள்ளி நகை வியாபாரிகள், பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள், அலங்காரப் பொருள் வியாபாரிகள், தூதரகங்களில் பணியாற்றுபவர்கள், அமைச்சர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். காதல் விஷயங்களில் நற்செய்திகள் வந்து சேரும். மூலம் போன்ற வயிற்று நோய்கள் வந்து போகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது. பூர்விகச் சொத்துக்களில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளுக்குப் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்லதொரு சாதகமான முடிவு கிடைக்கும்.

இராசியான எண் :- 1.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- கிழக்கு.
பரிகாரம் :- சூரிய வழிபாடு.

மிதுனம் :-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவதால் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம். புதிய தொழில்கள் தொடங்குவதைச் சிறிது தள்ளிப் போடுதல் உகந்ததாகும். கருத்து வேறுபாடுகளுடன் இருந்து வந்த கணவன் – மனைவி, பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமையுடன் காணப்படுவர். பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கலாம். வேலை இல்லாத, படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய காலமாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். புனிதப் பயணம் சென்று வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுப் புதிய கடன்களை வாங்குவீர்கள். கவனத்துடன் இருந்தால் வீடு, தொழிற்சாலை ஆகியவற்றில் திருட்டுப் போவதைத் தவிர்க்கலாம். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடி நிலை மாறி முன்னேற்றம் காணப்படும். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனத்துடன் பயின்று வருதல் நல்லது. தந்தை – மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து நிம்மதி அடைவர்.

இராசியான எண் :- 1.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- கிழக்கு.
பரிகாரம் :- சூரிய வழிபாடு.

கடகம் :-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவுகளில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்! வேற்று மதத்தவர்களால், வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். அஞ்சல்துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், புத்தகம், பேப்பர் வியாபாரிகள், நாடகத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். பெண்களால் எதிர்பாராத ஆதாயங்களைத் தென் திசையிலிருந்து அடைவீர்கள். மற்றவர்களை நம்பிப் பணம், பொருள் கடன் கொடுத்து ஏமாற்றம் அடையாதீர்கள்! பிள்ளைகளால் எதிர்பாராத சில தொல்லைகள் வந்து சேர வாய்ப்பு உள்ளதால் மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த திருமண விஷயமாக நல்ல முடிவுகள் கிடைக்கலாம். கணவன் – மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். பிரிந்து போன உறவுகள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பு உள்ளது. செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரும் என்பதால் நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.

இராசியான எண் :- 5.
இராசியான நிறம் :- பச்சை.
இராசியான திசை :- வடக்கு.
பரிகாரம் :- மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். பெரிய மனிதர்கள் சந்திப்பின் மூலம் காரியங்களை உற்சாகத்துடன் சாதித்துக் கொள்ளுவீர்கள். கமிஷன், தரகு, போன்ற தொழில் செய்பவர்கள், பழைய பொருள் வியாபாரிகள், மருத்துவமனைகளில் பரிசோதனைப் பணி செய்பவர்கள், வனத்துறை சார்ந்தவர்கள், இயந்திரம், கணினி போன்றவற்றை விற்பனை செய்பவர்கள், எண்ணெய், பலசரக்கு வியாபாரிகள், ஒப்பந்தத் தொழில் செய்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நிம்மதி அடைவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளுக்காகக் எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வழக்கு விஷயங்களில் முடிவுகள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். காணாமல் போன பொருட்கள் காவல்துறையினரின் உதவியால் திரும்பக் கிடைக்கும். தொழிலாளர்களிடம் முன் கோபத்தைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது! தீராத நோய்கள் தீர வேண்டி நெடும் பயணங்கள் சென்று வருவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும். வராத கடன், கொடுத்து இருந்த பணம், பொருட்கள் சம்பந்தமாக வீண் பிரச்சினைகள் உருவாகலாம்.

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனீஸ்வர வழிபாடு.

கன்னி :-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். கடன், சொத்து போன்ற விஷயங்களில் பிறருக்காகப் பிணை தருவதைத் தவிருங்கள்! உற்றார், உறவினர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். உற்றார், உறவினர்களின் திடீர் வரவுகளால் நிம்மதியுடன் கூடிய பொருட்செலவுகள் உண்டாகும். வயிறு சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும். பெண்கள் விஷயத்தில் செய்யாத குற்றங்களுக்காக அவப்பெயர் ஏற்படலாம். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்கக் கடன் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களுக்கு உதவுவதாக எண்ணி வீண் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு நிம்மதி இழக்க வேண்டாம்! நண்பர்களால் வீண் பிரச்சினைகளும், நிம்மதிக் குறைவும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் பழகி வருதல் நல்லது. மாமிச உணவுப் பொருள் வியாபாரிகள் நல்ல லாபம் அடைவர். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. பொதுநலத் தொண்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு நற்பெயரும் புகழும் அடைவீர்கள். பழுதுபட்ட ஆலயம், வீடு ஆகியவற்றைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள்.

இராசியான எண் :- 4.
இராசியான நிறம் :- கருப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- பிதுர் வழிபாடும், அம்மன் ஆலய வழிபாடும்.

துலாம் :-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். மறைமுக எதிரிகளால் இருந்து வந்த தொல்லைகள் குறைய வாய்ப்பு உள்ள காலமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகள் செய்து வருவது சிறந்ததாகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த மனக் கசப்புகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். அண்டை வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. கட்டுமானம் சம்பந்தமான ஆடம்பர, அலங்காரப் பொருட்கள் விற்பவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பொதுத்தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், கணினியில் பணிபுரிபவர்கள், பேராசிரியர்கள், பழ வியாபாரிகள், ஆலயங்களில் பணிபுரிபவர்கள், பொதுநலத்துறை சார்ந்த பணியாளர்கள் ஆகியோர் லாபம் அடைவர். தந்தை வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் சற்றுக் குறையும். வங்கிகள் மூலமாக எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறலாம். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த பண உதவிகளும் நல்ல செய்திகளும் வந்து சேரும்.

இராசியான எண் :- 6.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- தென்கிழக்கு.
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு.

விருச்சிகம் :-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். கண்களில் கவனம் தேவை! மனைவியின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவு உண்டாகும். பங்காளிகளுடன் சேர்ந்து நடத்தும் கூட்டுத் தொழில்களில் காரணமற்ற மனக் கசப்புகள் வர இருப்பதால் முன் கோபத்தை விலக்குதல் சிறந்தது. கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். மாணவர்கள், கல்வி பயிலும் இடங்களில் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது. அரசியல்வாதிகள் மூலமாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணி செய்பவர்களுக்குப் பதவி உயர்வும், பணியிட மாற்றமும் ஏற்படலாம். எண்ணெய், வேதிப்பொருள் வியாபாரிகள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், தூதரகங்களில் பணிபுரிவோர் ஆகியோர் நற்பலன் அடைவர். தீராத நோய்கள் புதிய முறை மருத்துவம் மூலமாகத் தீர வாய்ப்புள்ளது. பிரிந்துபோன பழைய உறவுகள் மீண்டும் தொடரலாம்.

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனீஸ்வர வழிபாடு.

தனுசு :-

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், பழைய பொருட்களை விற்பனை செய்பவர்கள், வேதியியல் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், அணு ஆராய்ச்சிகளில் பங்கு கொள்பவர்கள், பழைய இரும்பு சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். திருட்டுப் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய் நாட்டிற்குச் சென்று வர வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக வராத கடன், கொடுத்து இருந்த பணம், பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளுக்காக எதிர்பார்த்திருந்த பணம் கை வந்து சேரும் காலமாகும். அண்டை வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினை உருவாகலாம். குடும்பத்தில் நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நிறைவேறுவதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். பயணங்களின்போது மிகுந்த கவனத்துடன் சென்று வருதல் நல்லது.

இராசியான எண் :- 7.
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- கணபதி வழிபாடு.

மகரம் :-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். திரைப்படம், நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், இசைக் கலைஞர்கள், இசைக் கல்லூரிப் பேராசிரியர்கள், அங்கு பணிபுரிவோர், இணையத்தளம் நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல பலன் அடைவர். பணியாளர்களால் எதிர்பாராத ஆதாயங்களும் மகிழ்ச்சியும் ஏற்படும். அரசியல்வாதிகளிடம் எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சூதாட்டங்களில் ஏமாற்றம் அடையாமல் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது! பயணங்களில் மற்றவர்களை நம்பி ஏமாற வேண்டாம்! பயணங்களின்போது சில புதிய சந்திப்புகளால் நன்மை அடைவீர்கள். வங்கிகள் மூலமாக வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம், பொருள் போன்றவை மற்றவர்களின் உதவியால் கை வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அண்டை வீட்டுக்காரர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண் :- 3.
இராசியான நிறம் :- மஞ்சள்.
இராசியான திசை :- வடகிழக்கு.
பரிகாரம் :- சிவ ஆலய வழிபாடு.

கும்பம் :-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள். நிலம் சம்பந்தமான பிரச்சினைகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டமான பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலமாகத் தன வரவு உண்டாகலாம். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்திருந்த பண உதவிகள் கிடைக்கலாம். வீடு, வாகனம் ஆகியவற்றைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட்செலவுகள் உண்டாகும். கண், காது ஆகியவற்றில் கவனத்துடன் இருக்க வேண்டும்! காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைந்து காணப்படும். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த சகோதர, சகோதரிகளின் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. வாராக் கடன் மீண்டும் கைக்கு வந்து சேரும் காலமாகும். கலைத்துறை சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், கலைத்துறையினர், பாத்திர வியாபாரிகள், கலைக் கல்லூரி சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர்.

இராசியான எண் :- 6.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- தென்கிழக்கு.
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு.

மீனம் :-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் சற்றுத் தாமதம் ஆகலாம். வட்டித் தொழில், கமிஷன், தரகு, குத்தகை போன்ற தொழில்களைச் செய்பவர்கள், இராணுவம், காவல்துறை சார்ந்தவர்கள், உணவகம் நடத்துபவர்கள், மின்சாரத்துறை சார்ந்த பணியாளர்கள், தீயணைப்புத்துறையினர் ஆகியோர் நல்ல பலனை அடைவர். களவு போன பொருட்கள் உறவினர்கள், நண்பர்கள் உதவியால் திரும்பக் கிடைக்கும். பிள்ளைகளுக்கு உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளால் வெளியூர்ப் பயணங்களும் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட்டு வீண் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு நிம்மதி இழக்காதீர்கள். பயணங்களின்போது புதிய, பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள் போன்றோரின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறைந்து காணப்படும். புதியதாக வீடு, நிலம் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சகோதர, சகோதரிகளுடன் இருந்து வந்த நாட்பட்ட மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை அடைவீர்கள்.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிகப்பு.
இராசியான திசை :- தெற்கு.
பரிகாரம் :- துர்க்கை ஆலய வழிபாடு.

–மீண்டும் அடுத்த வாரம்…

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627 759,
Tirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 98425-10578, 98425-29691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author