இராசிபலன்கள் (24-9-2012 முதல் 30-9-2012 வரை)

மேஷம் :-

மேஷராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். தந்தை – மகன் உறவில் பிரச்சினைகள் வர இருப்பதால் கவனத்துடன் இருத்தல் நல்லதாகும். இரசாயனத் தொழிற்சாலைகளில் பணி செய்வோர், மத போதகர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். நாட்பட்ட நோய்கள் தீரப் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுவீர்கள். உறவினர்களின் திடீர் வரவால் தைரியமும் பொருள் வரவும் உண்டாகலாம். சகோதர, சகோதரிகளுடன் வீண் மனச் சஞ்சலங்களும் பிரச்சினைகளும் உருவாகும். புதிய வீடு, நிலம் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர்பார்த்து இருந்த உதவித் தொகைகள் கிடைக்கும். வீடு, தொழிற்சாலை ஆகியவற்றைப் புதிய இடங்களுக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கல்களில் மாட்டிக் கொண்டு நிம்மதியை இழக்காதீர்கள்! கண், காதுகளில் சிற்சில உபாதைகள் வந்து போகும். நாட்பட்ட கடன், கொடுத்து இருந்த பணம் போன்றவை மற்றவர்களின் தலையீட்டால் திரும்பக் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு, கல்வி பயிலும் இடங்களில் கெட்ட பெயர் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் கல்வி பயிலுதல் நல்லது.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிவப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- திங்கட்கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த பணம் கை வந்து சேரும். காதல் விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சற்றுச் சுமாராகவே இருப்பதால், புதிய கடன்களை வாங்க முயற்சி செய்வீர்கள். பயணங்களின்போது, சம்பந்தம் இல்லாத நபர்களால், எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படுவதுடன் பொருட் செலவுகளும் ஏற்படலாம். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பங்கு வர்த்தகம், அரசு உயர் பதவிகளை வகிப்பவர்கள், நெருப்புத் தொழில் செய்வோர், ஜவுளி நூல் வியாபாரிகள், மருந்துப் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோர், தானிய வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவோர் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக இருப்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும். பெண்களால், தென் திசையில் இருந்து நல்ல செய்திகளுடன் பொருள் வரவு உண்டாகலாம். பயணங்களின்போது மிகவும் கவனத்துடன் சென்று வருதல் நல்லது. சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில், பெரியவர்களின் உதவியால் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். பொதுவாக, இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். சமுதாய முன்னேற்றம், பொதுநலத் தொண்டு போன்றவற்றில் ஈடுபட்டு நற்பெயரும் புகழும் அடைவீர்கள்! நீண்ட காலமாக வராமல் இருந்த கடன், கொடுத்த பணம், பொருட்கள் போன்றவை திரும்பக் கைக்கு வந்து சேரும். பங்காளிகளுடன் சேர்ந்து நடத்தும் கூட்டுத் தொழிலில், காரணமற்ற பிரச்சினைகள் உருவாக இருப்பதால் கவனத்துடன் இருத்தல் நல்லதாகும்! கணவன் – மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். பயணங்களின்போது மிகுந்த கவனத்துடன் இருப்பது நன்று! வெளிநாட்டில் வசிப்பவர்கள், தாய்நாடு சென்று வர வாய்ப்பு உள்ள காலமாகும். தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். கணினி, மின்சாரம் போன்றவற்றில் பணிபுரிபவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், தானிய வியாபாரிகள், கார சம்பந்தமான உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். நீண்ட தூரப் பயணங்களின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும். நண்பர்கள், உறவினர்களின் வீட்டுச் சுப காரியங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்து பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் வந்து சேரும்.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி ஆலய வழிபாடு.

கடகம் :-

கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகக் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில், நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். கணவன் – மனைவி உறவுக்குள், சிறிய பிரச்சினைகளுக்காக வீண் மனக் கசப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும். தீர்த்த யாத்திரைகள் சென்று வருவதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் ஏற்பட்டு விலகும். கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், இவற்றில் பணி புரியும் ஆசிரியர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், சிற்றுண்டித் தின்பண்ட வியாபாரிகள், அலங்காரப் பொருள் வியாபாரிகள், திருமணத் தகவல் நிலையத்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். பயணங்களின்போது, வாகனங்களில் மிகுந்த கவனத்துடன் பயணம் செய்வது நல்லது! மற்றவர்களை நம்பிப் பணமோ பொருளோ கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்குப் பரிசும் பாராட்டுகளும் கிடைக்கும். வீட்டைத் திருத்திக் கட்டி அலங்காரம் செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். வாயு, காய்ச்சல் போன்ற உபாதைகள் வந்து போகும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். வட்டித் தொழில் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்! விவசாயம் செய்பவர்களும் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது! வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று வருவார்கள். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள். காதல் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நன்றாகும்! தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். வாயுத் தொல்லை, வயிற்று உபாதைகள் போன்றவை வந்து போகலாம். புதிய கடன் கொடுப்பதைத் தவிருங்கள்! கணவன் – மனைவி உறவுகளில் வீண் பிரச்சினைகள் உருவாகி மனக் கசப்புகள் ஏற்படலாம். தந்தையின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறையும். இரும்பு, எண்ணெய், பலசரக்கு போன்ற பொருட்களை உற்பத்தி – விற்பனை செய்வோர், பெட்ரோல், டீசல் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். வெகு தூரப் பயணங்களால் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்ட தூர உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள். காணாமல் போன பொருட்கள், காவல்துறையினரின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஐயப்பன் ஆலய வழிபாடு.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பெண்களால், வட திசையில் இருந்து பொருள் வரவு உண்டாகும். அரசு சம்பந்தமான நாட்பட்ட வழக்கு விஷயங்களில், சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் வெற்றி பெறுவீர்கள். பழைய வீடு, வாகனங்களைப் புதுப்பித்தலுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கல்வியில், கல்வி பயிலும் இடங்களில் சிற்சில சச்சரவுகள் வர இருப்பதால் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் கல்வி பயிலுதல் சிறந்ததாகும்! ரேஸ், லாட்டரி போன்ற சூதாட்டங்களில் ஈடுபட்டு ஏமாற்றம் அடைய வேண்டாம்! எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது. காய்ச்சல், சூடு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். உலோகப் பொருள் வியாபாரிகள், நெருப்பு, இராணுவம், காவல்துறை சார்ந்தவர்கள், நில புலன்களை வாங்குவோர் – விற்போர், தீயணைப்புத்துறை சார்ந்தோர், உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு.

துலாம் :-

துலாம்ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை நன்மை தரும் கிரகமாகும். தொழிலில், பங்காளிகளுடன் இருந்த மனச் சஞ்சலங்கள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். தாய் வழி மாமன் மூலம் சில பிரச்சினைகள் வந்து சேரும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். ஆலயத் தொண்டுகளிலும், பொது நலச் சேவைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். வெளிநாட்டு விஷயங்களில், எதிர்பார்த்த நபர்களிடமிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். பயணங்களால் ஆதாயம் இல்லை. பெண்கள் விஷயத்தில் கெட்டபெயர் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனத்துடன் இருத்தல் நல்லது! உத்தியோகம் பாரப்பவர்களுக்கு, மேலதிகாரிகளுடன் மனக் கசப்பும் அவர்களால் பணி இடமாற்றமும் ஏற்படலாம். விட்டுப் போன பழைய பிரச்சினைகளால் மீண்டும் தொல்லைகள் வந்து நீங்கும். நகைத் தரகர்கள், ஆலயப்பணி செய்வோர், பொறியியல், கணினி போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும். நண்பர்களால் பொருள் இழப்பும் மனச் சஞ்சலமும் ஏற்படலாம்! சொத்து சம்பந்தமான நாட்பட்ட வழக்கு விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்!

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- சனிக்கிழமையில் ஆஞ்சனேயர் வழிபாடு.

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடு, வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் இன்னும் சிறிது தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்துறையினருக்கு, நினைத்த இடங்களில் பணி இடமாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். சகோதரர்களின் வீட்டுச் சுப காரியங்களில் பங்கு கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடி வெற்றி பெறுவீர்கள். பழைய இரும்பு வியாபாரிகள், இயந்திரத் தொழிற்சாலை, இரசாயனத் தொழிற்சாலை ஆகியவற்றில் பணிபுரிவோர், இப்படிப்பட்ட பொருட்களை வாங்குவோர் – விற்போர், அழுகுப் பொருள் வியாபாரிகள், அணுஆராய்ச்சிச்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். தொழிலுக்காக வங்கிக் கடன் வாங்குவதற்கான முயற்சிகளில் சிறிது தாமதம் ஆகலாம். கால், கைகளில் மிகவும் கவனம் தேவை! நாட்பட்ட வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்கள் வாங்கக்கூடிய காலமாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத ஆதாயங்கள் வந்து சேரும்.

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடும் காளி போன்ற அம்மன் ஆலய வழிபாடும் செய்து வர வேண்டும்.

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் காலமாகும். பயணங்களின்போது பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் போன்றோருடனான சந்திப்புகளால் நன்மை அடைவீர்கள். கண், காதுகளில் கவனத்துடன் இருங்கள்! தந்தை – மகன் உறவுகளில், வெகு காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். பூஜைப் பொருள் வியாபாரிகள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், திரவ சம்பந்தமான வியாபாரிகள், ஆலயப் பணி செய்பவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், கடல்வளத்துறை சார்ந்தவர்கள், உப்பு, உர வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுவோர் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது! நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். புதிய வீடு, மற்றும் நில புலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறலாம். நாட்பட்ட நோய்கள் தீருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். பங்காளிகளுடன் தொழில் விஷயங்களில் சற்றுப் பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது!

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு.

மகரம் :-

மகரராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பயணங்களின்போது மிகுந்த கவனத்துடன் சென்று வருதல் நல்லது! விடுபட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரும் காலமாகும். வெகு காலமாக எதிர்பார்த்திருந்த வங்கி உதவித் தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெகு காலமாகக் காணாமற் போயிருந்த பொருட்களும் நபர்களும் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளில், மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! குடும்பச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் இன்னும் சிறிது காலம் நீடிக்கும். வீடு, வாகனங்களைப் பழுது பார்த்தல் மூலம் புதிய கடன்கள் ஏற்படலாம். மஹான்களின் தரிசனங்களால் பிரச்சினைகள் குறைந்து நிம்மதி அடையும் காலமாகும். கலைத்துறை சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர், கலைத்தொழில் செய்வோர், பாத்திர வியாபாரிகள், கலைக்கல்லூரி சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். படித்த, வேலை இல்லாத இளைஞர்களுக்குப் புதிய வேலை வந்து சேரும் காலமாகும். சகோதர, சகோதரிகளின் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி ஆலய வழிபாடு.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பூஜைப் பொருள் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பொதுத்தொண்டு நிறுவனங்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், கணினிப் பணி செய்பவர்கள், பேராசிரியர்கள், பழ வியாபாரிகள், ஆலயங்களில் பணிபுரிபவர்கள், பொதுநலத்துறைகளைச் சார்ந்துள்ள பணியாளர்கள் ஆகியோர் லாபம் அடைவர். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில், மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகளும் மனக் குழப்பங்களும் வர இருப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்! தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் வெகுவாகக் குறைவதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. மாமன் வழியில் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். மாணவர்கள், கல்வியில் பரிசும் பாராட்டுக்களும் நல்ல மதிப்பெண்களும் பெறுவார்கள். உற்றார், உறவினர்களின் திடீர் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த பண உதவிகள் கிடைக்கும். சமுதாய நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டுப் பெயரும் புகழும் அடைவீர்கள்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

மீனம் :-

மீனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். வெகு காலமாக விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும் காலமாகும். ஆலய வழிபாடுகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் நிம்மதி அடைவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரால் நல்ல பலன்கள் கிடைக்கும். உறவினர்களின் வரவுகளால் எதிர்பாராத பணச் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகம் இல்லாத, படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய காலமாகும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் போன்றவற்றின் வியாபாரிகள், எழுத்துத்துறை சார்ந்தவர்கள், கவிஞர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், அரசு வழக்குரைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணி செய்வோர் ஆகியோர் நற்பலன்களை அடைவர். பொருளாதாரத்தில், இதுநாள் வரை இருந்து வந்த நெருக்கடிகள் மாறிப் பணப் புழக்கம் நன்றாக இருக்கும். தலைவலி, முதுகுவலி போன்ற உபாதைகள் வந்து போகலாம். கணவன் – மனைவி உறவுகளில் இன்னும் சற்றுப் பிரச்சினைகள் வந்து போகலாம். ரேஸ், லாட்டரி போன்றவற்றில் ஏமாற வாய்ப்புள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது! விசா சம்பந்தமான பிரச்சினைகள் தீருவதற்கான வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு.

*****************

Gnanayohi Dr. P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18(25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627 759.
Tirunelveli District, Tamil Nadu, India
Phone : 04633-243029.
Mobile : 98425-10578, 98425-29691
Fax : 04633-240390.
Website : www.gnanayohi.com

About The Author