இராசிபலன்கள் (26-8-2013 முதல் 1-9-2013 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகளால் எதிர்பாராத சில ஆதாயங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் பொருட்செலவுகள் வந்தாலும் அவர்களால் சில ஆதாயங்களையும் அடைவீர்கள். குடும்பத்தின் சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்க முயற்சிப்பீர்கள். அலுவலக, வீடு இடமாற்றத் திட்டங்களில் சற்றுப் பின்னடைவு உண்டாகலாம். நரம்பு, இரத்தம் தொடர்பான சில உபாதைகள் வந்து போகலாம். மற்றவர்களை நம்பிப் பணமோ பொருளோ கடன் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லது! பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வேற்று மதத்தவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! வங்கிகளில் பணியாற்றுபவர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு இதுவரையில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்ப்புகள் வந்து சேரும். நிலம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபட்டு நற்பலன்களை அடைவீர்கள். அலுவலகப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரமும் சம்பள உயர்வும் உண்டாகும்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடு.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். நீண்டகாலமாக வராதிருந்த கடன், கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் போன்றவை நண்பர்கள், காவல்துறையினர் உதவியால் திரும்பக் கைக்கு வந்து சேரும். திருமண விஷயங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லதாகும். மற்றவர்களின் விஷயங்களில் வீணாகத் தலையிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்! பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றை நம்பி ஏமாறாதீர்கள்! இரும்பு, இயந்திரம், வேதியியல் சார்ந்த துறையினர், பழைய பொருள் வியாபாரிகள், பலசரக்கு, எண்ணெய் விற்பனையாளர்கள், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை விற்பனை செய்பவர்கள், நெருப்பு, மின்சாரம் சார்ந்த துறையினர், இராணுவத்தினர் ஆகியோர் நற்பலன் அடைவர். பயணங்களின்போது குழந்தைகளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது! காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவீர்கள். விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான விளைச்சல் உண்டாகும்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். குழந்தைகள் உயரமான இடங்களில் கவனமாக ஏறி இறங்குவது நல்லது! பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுவதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுடன் எதிர்பாராத தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயங்கள் அடைவீர்கள். மேலதிகாரிகளுடன் மனக் கசப்பு உண்டாகிப் பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அலுவலகப் பணியாளர்கள் முன் கோபத்தைத் தவிர்த்துப் பணியாற்றுதல் நல்லது! வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் எதிர்பார்த்திருந்த நபர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்களின்போது சம்பந்தமில்லாத நபர்களின் மூலம் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லதாகும்! வடக்கு திசையில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர முயற்சிப்பீர்கள். பூஜைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றின் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல்நிலையில் இதுநாள் வரையில் இருந்து வந்த பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் முயற்சிகளைச் செய்வதில் நல்ல பலன் அடைவீர்கள். பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்லதொரு முடிவுக்கு வரும். ஒரு சிலருக்குத் தாய் வழியிலான சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். மற்றவர்களை நம்பிப் பணத்தையோ பொருளையோ கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! மகான்களின் எதிர்பாராத தரிசனத்தால் நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது. கலைக்கல்லூரிப் பேராசிரியர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், அச்சுத் தொழிலாளர்கள், எழுதுபொருள் வியாபாரிகள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணி செய்பவர்கள், மருந்துப் பொருள் வியாபாரிகள் முதலான மருத்துவத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது!

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு வழிபாடு.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கல்வி பயில்வது நல்லது! வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்பி வர வாய்ப்பு உள்ளது. புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க முயற்சிப்பீர்கள். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்! குலதெய்வ ஆலயத்தைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அழுகுபொருள் வியாபாரிகள், பழைய பேப்பர், பிளாஸ்டிக் போன்ற கழிவுப் பொருள் வியாபாரிகள், அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், புகைப்படக் கலைஞர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயத்தின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வீடு மாற்றம் செய்வதற்கான புதிய முயற்சிகளில் வங்கிகளின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும். பிள்ளைகளால் தொல்லை ஏற்பட்டாலும் அவர்களால் பெயரும் புகழும் ஏற்படும். தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இராசியான எண்:- 7.
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் கணபதி வழிபாடு.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பூஜைப் பொருள் வியாபாரிகள், ஆலயப்பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், கணினிச் சாதன வியாபாரிகள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். குலதெய்வ ஆலய வழிபாடுகளுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் வந்து சேரலாம். சூடு, காய்ச்சல், சளி போன்ற தொல்லைகள் வந்து போகும். பொதுத் தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மனநிறைவை அடைவீர்கள். நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களின் ஆதரவால் திருமணம் நடைபெறும். சமுதாய வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியும் பரிசும் பாராட்டுகளும் பெறுவீர்கள். விபரீதமான எண்ணங்களால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்! விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்குப் பரிசும் பாராட்டுகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நாட்பட்ட பழைய கடன்கள் அடைபடும். பழைய வீடு, வாகனங்களை விற்றுப் புதிய வீடும் வாகனமும் வாங்க முயற்சிப்பீர்கள். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது!

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

துலாம்:-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். எதிர்பாராதவிதமாக நண்பர்களால் சில ஆதாயங்களும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். வர வேண்டிய மனைவி வழிச் சொத்துக்களும் பணமும் கை வந்து சேரும் காலமாகும். புதிய வேலைவாய்ப்புகளுக்காக மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள், ஒப்பந்தத்தொழில் செய்பவர்கள், தரகர்கள், முகவர்கள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், தோல் தொழிற்சாலை சார்ந்தவர்கள், பழைய பொருள் வியாபாரிகள், வட்டிக்கடை நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்! வீடு, வாகனங்களைப் புதிதாய் வாங்குவதற்கான திட்டங்களில் சற்றுப் பின்னடைவுகள் ஏற்படும். வெகு காலமாகக் காணாமல் போயிருந்த பொருட்கள், நபர்கள் திரும்பி வர வாய்ப்பு உள்ளது. பிள்ளை இல்லாதவர்களுக்கு இறையருளால் பிள்ளைச் செல்வம் கிடைக்கும் காலமாகும். கணவன் – மனைவி உறவுக்குள் இருந்து வந்த நீண்ட கால மனக் கசப்பு தீர்ந்து ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். தந்தை – மகன் உறவுக்குள் காரணமற்ற முன்கோபத்தால் பிரச்சினைகள் உருவாகலாம். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் உறவுகளைக் காணத் தாய்நாடு சென்று வருவீர்கள்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். உற்றார் உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவால் பொருட்செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஆதாயங்கள் அடைவீர்கள். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் ஆதாயங்களை அடைவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படுவதன் மூலம் நிம்மதி அடையலாம். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக வேலைவாய்ப்பு கிடைக்காத படித்த இளைஞர்களுக்குப் புதிதாக வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், வேதித்துறையினர், கழிவுப்பொருள் வியாபாரிகள், அரசுத்துறை சார்நத உயர் பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். குடும்பத்தில் வீணாக ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப நிகழ்ச்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது! உற்றார் உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம்.

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவுகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது! வேண்டாத விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்காதிருங்கள்! நண்பர்களால் வீண் பொருட்செலவுகள் வந்து சேரலாம். தந்தை வழியிலான சொத்துக்கள் கை வந்து சேர வாய்ப்பு உள்ளது. பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மிகுந்த முயற்சியின் பேரில் சரி செய்து விடுவீர்கள். நாட்பட்ட பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். மாணவர்கள் மிகக் கவனமாகக் கல்வி பயின்று வருதல் நல்லது! தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். வேலையாட்களால் நிம்மதியின்மையும் பொருட்செலவுகளும் வந்து சேரும். வாகனங்களில் பணி செய்பவர்கள், கட்டடப் பணியாளர்கள், கட்டுமானப்பொருள் வியாபாரிகள், கட்டடச் சம்பந்தமான ஒப்பந்தத் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்கள் அடைவர். நீண்ட காலமாக விடுபட்டுப் போன பழைய நண்பர்கள் உறவினர்களுடன் புதிய தொடர்புகள் ஏற்படலாம்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பூஜைப் பொருள் வியாபாரிகள், திரவப்பொருள் வியாபாரிகள், உப்பு, கடல் சார்ந்த பணியாளர்கள், தாய் – சேய் நல விடுதி நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன்கள் அடைவர். வீட்டில் காரணமில்லாத சில பிரச்சினைகள் ஏற்பட்டுப் புதிய வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாயின் உடல்நிலையில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது! அண்டை அயலார்களுடன் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும்! குழந்தைகளின் மகிழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அலுவலகப் பணியாளர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கண், காது ஆகியவற்றில் மிகக் கவனமாய் இருப்பது நல்லது! பிள்ளைகளின் உடல்நிலையிலும் கவனம் தேவை! செய்யாத குற்றங்களுக்காக அவப்பெயர் வந்து சேர வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருங்கள்! வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட்செலவுகள் வந்து சேரலாம். சொத்து விஷயமாகப் புதிய பிரச்சினைகளைச் சந்தித்து வெற்றி பெறுவீர்கள். எலும்பு, நரம்பு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகும். பிரிந்து போன கணவன் – மனைவி திரும்ப ஒன்று சேருவர். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். புதிய கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நல்ல சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். காதல் விஷயத்தில் நண்பர்களின் உதவியால் நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய கடன்கள் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லதாகும்! வர வேண்டிய பணம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். வாயு, வாதம் சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும்! அரசு வழக்குரைஞர்கள், அஞ்சல்துறையினர், வங்கிப் பணியாளர்கள், எழுதுபொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், கணிதத்துறையினர், எழுத்துத்துறை சார்ந்தவர்கள், அச்சுத்தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்ட தூர உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். தந்தை – மகன் உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்பு குறைந்து ஒற்றுமையுடன் காணப்படுவர். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பொருள் வந்து சேர வாய்ப்பு உள்ளது! புதிய வீடு, நிலம் போன்றவற்றை விலைக்கு வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும்! புதிய வேலைவாய்ப்புகளுக்காக யாரிடமும் பணமோ பொருளோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்!

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு வழிபாடு.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட்செலவுகள் வந்து சேரக் கூடிய காலமாகும். மனைவி வழியிலான சொந்த பந்தங்களுடன் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்து போகலாம். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். பிரிந்து போன கணவன் – மனைவி திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களுக்காகப் புதிய வழக்குரைஞர்களை நாடுவீர்கள். இராணுவத்தினர், காவல்துறையினர், உணவகம், தீயணைப்புத்துறை போன்ற நெருப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுவோர், தின்பண்ட வியாபாரிகள், மசால்பொடி வியாபாரிகள், விறகு, நிலக்கரி போன்ற எரிபொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் ஆதரவால் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். புதிய மருத்துவர்களின் உதவியை நாடுவதன் மூலம் தீராத நோய்கள் தீரும்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு.

*****************

Gnanayohi.Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759,
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author