இராசிபலன்கள் (3-11-2008 முதல் 9-11-2008 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். தந்தை வழியிலான சொத்துக்கள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகள் பலப்படும் காலமாகும். புதிய வீடு நிலம் வாங்க எடுத்துக் கொண்ட முயற்சிகளில் மிகுந்த வெற்றி அடைவீர்கள். காணாமற் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கக் கூடிய காலமாகும். செய்தொழிலில் மாற்றங்கள் செய்யப் போட்ட திட்டங்களில் சற்றுக் கால தாமதம் ஆகலாம். விருந்தினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகலாம். தாய் வழிச் சொந்த பந்தங்களுடன் புதிய பிரச்சனைகளைச் சந்திதித்து அவற்றால் மனக் குழப்பங்களை அடைவீர்கள். தீராத பழமையான நோய்களுக்குப் புதிய மருத்துவர்களின் உதவியால் தீ்வு காண்பீர்கள். உடம்பில் வாயு போன்ற உபாதைகள் வந்து போகும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். கோர்ட் வழக்கு போன்ற விசஷயங்களில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். வேண்டாத விஷயங்களில் தலையிட்டுக் காரணமில்லாத மனக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது. அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுவதால் பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் போன்ற சுப காரிய நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உண்டு. தாயின் உடல் நிலையில் இருந்து வந்த நோய்கள் சற்றுக் குறைந்து முன்னேற்றம் காணுவீர்கள். தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், பங்கு வர்த்தகம் செய்வோர்கள் மிகுந்த கவனமுடன் செயல் படவும். காதல் விஷயத்தில் நல்ல முன்னேற்றம் அடையலாம். எதிர்பாராமல் மகான்களின் தரிசனங்கள் கிடைக்கும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் செய்வோர்கள், காய்கறி வியாபாரிகள், உணவுப் பொருள் வியாபாரிகள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். கமிஷன் தொழில்கள், ஷேர் மார்க்கெட் நடத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். நண்பர்களிடம் காரணமற்ற மனக்கசப்பு ஏற்பட்டுப் பிரச்சனைகள் உருவாகலாம். உத்தியோகம் செய்பவர்களுக்கு இடையூறுகள் வந்து போகும். விருந்தினர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும். உடம்பில் கண், காதுகளில் கவனமுடன் இருக்கவும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து வந்த தொல்லைகள் மேலும் தொடரும் என்பதால் கவனமுடன் செயல்படுவது நல்லது. புதிய வீடு, நிலம் வாங்குவது போன்ற விஷயங்களைச் சற்றுக் காலதாமதமாக செய்வது உகந்ததாகும்.

இராசியான எண்:- 4
இராசியதன நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர் வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். விபரீதமான எண்ணங்களை விட்டுக் காரியத்தில் கண்ணாய் இருங்கள். தொலை தூரத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வரவேண்டிய பணம் கை வந்து சேரும். குலதெய்வ வழிபாடு செய்து வர எடுத்துக்
கொண்ட முயற்சிகளில் வெற்றி அடையலாம். தாயின் உடலில் இருந்து வந்த தொல்லைகளால் மேலும் மருத்துவச் செலவுகள் தொடரும். குடும்பத்தல் தடைபட்டுப் போன சுப காரிய நிகழ்ச்சிகளில் புதிய முயற்சிகள் மூலம் தடையின்றி நடக்கும். காதல் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். ஆடம்பர அலங்காரப் பொருட்கள், தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், சிற்றுண்டி உணவு வியாபாரிகள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் தொட்பு உண்டாகி அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பூமி, நிலம் வாங்குதல் போன்ற நீண்டகால முயற்சிகளில் தற்போது வெற்றி அடைவீர்கள். பெண்களால் தூரத்து நற்செய்திகளைக் கேட்பீர்கள். திருட்டுப் போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும். உடல் நலத்தில் மூலம், வயிறு சம்பந்தமாகிய தொல்லைகள் வந்து போகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருள் இழப்பும், வீண் பிரச்சனைகளும் ஏற்படும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடவும். கோர்ட், வழக்கு சம்பந்தமான விஷயத்தில் அனுகூலமான நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். வங்கிகளில் இருந்து எதிர்பார்த்த கடன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேற்று மதத்தவரால் வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்கள் பலன் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகளைச் சந்தித்து மன நிம்மதி குறையலாம்.

இராசியான எண்;- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்;- துர்க்கை வழிபாடு செய்து வரவும்.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கட்டிட சம்பந்தமாகிய செங்கல், கல், மணல், சிமிண்ட் போன்ற வியாபாரிகள், பெட்ரோல், டீசல் ஆகிய எண்ணை வியாபாரிகள் லாபமடைவார்கள். உறலினர்களின் எதிர்பாராத வரவால் குடும்பத்தில் குழப்பங்களும் பொருட் செலவுகளும் உண்டாகும். மற்றவர்களை நம்பிப் பணம் பொருள் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். உயரங்களில் ஏறும் போதும், நெருப்பு, மின்சாரம் இவைகளிலும் கவனமாக இருத்தல் நல்லது. தாய் வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து நல்ல முடிவுகள் கிடைக்கும். பிள்ளைகளால் தொல்லைகள் வந்து சேரும். வீடுகளைத் திருத்திக் கட்டவும், தொழிற்சாலைகளை மாற்றி அமைக்கவும் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி அடையலாம். புதிய நண்பர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

துலாம் ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது. வீடுகளில் கவனமுடன் இருந்தால் திருட்டுப் போவதைத் தடுக்கலாம். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக வெளியூர்ப் பிரயாணங்களை மேற்கொள்ள நேரிடும். ஆடம்பர அலங்காரப் பொருட்கள், கட்டில், மெத்தை போன்ற பொருட்கள், புதிய ஆடை அணிகலன் ஆபரணங்களை வாங்குவீர்கள். செய்தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகளில் மேலும் சற்றுப் பொறுமையைக் கடைபிடிக்கவும். இது வரை விடை காணமுடியாத நோய்களுக்கு விடை காணும் காலமாகும். இரசாயனம், கமிஷன், தரகுத் தொழிற் செய்வோர்கள், மரம், காய்கரி வியாபாரிகள் லாபம் அடைவார்கள். தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனமுடன் இருக்கவும். உடம்பில் முதுகு மற்றும் கால்களில் நோய்கள் வந்து விலகும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய தொழில்கள் ஆரம்பம் செய்யப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். பிறர் நடத்திக் கொண்டிருக்கும் தொழில் ஸ்தாபனங்களை வாங்குவதற்காகப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். பங்குத் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் காணுவீர்கள். காதல் விஷயத்தில் நல்ல தகவல்கள் வந்து சேரும். அரசு வழக்குகளில் அனுகூலமான தீர்ப்புகள் கிடைக்கும். விவசாயம் செய்வோர்கள், காய்கறிகள், பழ வியாபாரிகள், பூஜைப் பொருள மற்றும் நறுமணப் பொருள் வியாபாரிகள் ஆகியோர;கள் நற்பலன் அடைவார்கள். நீண்ட காலமாக வராத கடன் கொடுத்த பணம் திரும்பிக் கை வந்து சேரும். குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மன மகிழ்ச்சி உண்டாகும். கண், காதுகளில் கவனமுடன் இருக்கவும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வரவும்.

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். திருமணம் போன்ற சுபகாரிய விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்பச் சொத்துக்கள் பிரிவினை போன்ற விஷயத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவு உண்டு. நெருப்பு. கேஸ், சிற்றுண்டிச் சாலைகள், அரிசி மற்றும் பலசரக்கு சம்பந்தமாகிய தொழிற் செய்பவர்கள் லாபம் அடையலாம். தீர்த்த யாத்திரை சென்று வரப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். வண்டி வாகனங்களில் செல்லுவோர்கள் யாத்திரையின் போது பெரிய மனிதர்கள் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் நன்மைகள் அடைவீர்கள். பிள்ளைகளால் எதிர்பாராத தன வரவுகள் உண்டாகுவதோடு அவர்களால் பொருட் செலவும் உண்டாகும். அரசியல்வாதிகள், நீதிமன்றத்தில் பணிபுரிவோர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரகமாகும். செய்தொழிலில் புதிய பிரச்சனைகள் ஏற்பட்டு சமாளித்துக் கொள்வீர்கள். பிறருக்காக ஜாமீன் போடுவதால் வீண் பிரச்சனைக்கு ஆளாக நேரிடும். கணவன் மனைவி உறவுகள சுமாராகக் காணப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பணவரவு உண்டு. தொலை தூரப் பயணங்களால் லாபம் அடைவீர்கள்.
புதிய வீடு, நிலம் வாங்க எடுத்துக் கொண்ட நீண்டகால முயற்சிகளில் நல்ல பலன் உண்டாகும். உடல் நிலையில் வாய், பற்கள், முகம் சம்பந்தமாகிய உபாதைகள் வந்து போகும். பக்கத்து வீடுகளில் பக்குவமாகப் பேசிப் பழகுவதால் பிரச்சனைகள் குறையும். விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடரும். தந்தை மகன் உறவுகள் சுமாராகக் காணப்படும். ஆலய வழிபாடுகளால் மன நிம்மதி அடைவீர்கள்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- விநாயகர் வழிபாடு செய்து வரவும்.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். தீராத பிரச்சனைகளுக்குப் பெரிய மனிதர்கள் உதவியால் தீர்வு கிடைக்கும். நித்திரையில் பங்கம் ஏற்படும். உடம்பில் சளி, அலர்ஜி, போன்ற நோய்கள் வந்து போகும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் தன வரவு உண்டாகும். தாய் தந்தையர்கள் உறவுகளில் வந்துள்ள பிரச்சனைகள தீரும். வெளிநாடு செல்லுவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கை வந்து சேரும். சிலருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகள் இடமாற்றம் ஏற்படலாம். முன்கோபம் தவிர்த்தல் உகந்ததாகும். உத்தியோகத் துறையினர்களுக்குப் பதவி உயர்வுகள் ஏற்படக் கூடும். விருந்தினர்கள் வரவால் சில ஆதாயங்களை அடையலாம். குலதெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது. புதிய தொழில்களை ஆரம்பம் செய்ய முயற்சி செய்வீர்கள்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடு செய்த வரவும்.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். புதிய தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நல்ல லாபம் அடையலாம். காதல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் நடப்பது நல்வது. சகோதரர்களின் வரவால் குடும்பத்தில் பொருட் செலவுகள் வந்து சேரும். தீர்த்த யாத்திரை சென்று வருவதால் மன நிறைவு அடைவீர்கள். அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை. கம்ப்யூட்டர், மின் சாதனப் பொருட்கள், அழகுக் கலை நிலையங்கள் நடத்துபவர்கள் ஆதாயம் அடையலாம். வங்கிகள் மூலம் எதிர்பார்த்து வந்த கடன் தொகைகள் வந்து சேரும். உடம்பில் நரம்பு, எலும்பு போன்ற வியாதிகள் வந்து தீரும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். யாத்திரையின் போது வாகனங்களில் கவனமுடன் சென்று வருதல் நல்லது. பொதுத் தொண்டுகளைச் செய்வதன் மூலம் மன நிறைவடைவீர்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- துர்க்கை வழிபாடு செய்து வரவும்.”

About The Author