இராசிபலன்கள் (3-2-2014 முதல் 9-2-2014 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். காதல் சம்பந்தமான விஷயங்களால் வீண் பொருட்செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகளும், பொருட்செலவுகளும் உண்டாகலாம். வேண்டாத விஷயங்களில் தலையிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் புதிய தொழில் முயற்சிகள், புதிய கடன் வாங்கும் முயற்சிகள் போன்றவற்றில் வெற்றி பெறுவீர்கள். பங்குத் தொழிலில் ஈடுபடுபவர்கள், நகை வியாபாரிகள் மிகுந்த கவனத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும். பூஜைப் பொருள் வியாபாரிகள், கணினித்துறை சார்ந்தவர்கள், நறுமணப் பொருள் வியாபாரிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள், கொடுக்கல் – வாங்கல் போன்ற தொழில் செய்பவர்கள், பூ, பழம் ஆகியவற்றை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், இனிப்புப் பொருள் வியாபாரிகள், நகை வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். மகான்களின் சந்திப்பால் நிம்மதி அடைவீர்கள். வேலை இல்லாத படித்த இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகள் சம்பந்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். மற்றவர்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்த்தல் நல்லது. தந்தை – மகன் உறவில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வருக!

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர வாய்ப்பு உள்ளது. வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட்செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்கள் சந்திப்பால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவீர்கள். விருந்தினர் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாக வாய்ப்புகள் உள்ளன. செல்வாக்கு, புகழ் கூடும். பொதுப்பணித் துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், வழக்குரைஞர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலன் அடைவர். இது நாள் வரையில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் மாறித் தேவையான பொருள் வரவு உண்டாகும். புதிய வீடு, நிலம், வாகனங்களை வாங்கக் கூடிய காலமாகும். மற்றவர்களுக்காகச் சொத்து சம்பந்தமான விஷயங்களுக்கு ஜாமீன் போட்டு வீண் பிரச்சினைகளை விலைக்கு வாங்காதீர்கள்! மகான்களின் தரிசனத்திற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ளத் திட்டம் போடுவீர்கள். ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. பூர்விகச் சொத்துக்களில் இது நாள் வரையில் இருந்து வந்த பிரச்சினைகள் மாறி நிம்மதி அடைய வாய்ப்பு உள்ள காலமாகும்.

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். சூதாட்டங்களில் ஈடுபட்டு ஏமாற வேண்டாம். உற்றார் உறவினர்களால் மன சஞ்சலம் வந்து சேரும். பூர்விகச் சொத்துக்கள் போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்ப்பு வந்து சேரும். வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். கணவன் – மனைவி உறவுகளில் கவனத்துடன் இருப்பதோடு, முன் கோபம் தவிர்த்தல் நல்லது! கலைத்துறை சார்ந்தவர்கள், திரவப்பொருள் வியாபாரிகள், கடல்துறை சார்ந்தவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், மடாதிபதிகள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். வீடு, தொழிற்சாலை ஆகியவற்றைத் திருத்திக் கட்டுவதன் மூலம் பொருட்செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத புதிய நபர்களால் சிற்சில ஆதாயங்கள் அடையக்கூடும். தேவாலயத் திருப்பணிகளில் கலந்து கொண்டு தொண்டாற்றுவதன் மூலம் மன நிறைவு ஏற்படும். பிள்ளைகளால் பொருள் வரவு உண்டாவதுடன் காணாமல் போன பொருட்களும் வந்து சேரும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது! மேகம், உடற்சூடு ஆகிய உபாதைகள் வந்து போகும்.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வருக!

கடகம்:-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். எலும்பு, நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து போகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலம் திடீர் தனவரவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும் பரிசையும் பாராட்டுகளையும் பெறக் கூடிய காலமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டாகும். வாகனங்களில் மிக எச்சரிக்கையுடன் சென்று வருவது நல்லது. செய்யும் தொழிலில் எதிர்பார்த்த பணம் பங்காளிகளால் கைக்கு வந்து சேரும் காலமாகும். புதிய நண்பர்கள் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்கள் சம்பந்தமாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தை – மகன் உறவுகள் நன்றாக இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் எதிர்பாராத தன லாபம் அடைய வாய்ப்பு உள்ளது. வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் சற்றுத் தாமதம் ஏற்படலாம். அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், கழிவுப் பொருள் வியாபாரிகள், சாயப் பொடித் தொழிற்சாலை போன்ற ஆலைகளை நடத்துபவர்கள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள் ஆகியோருக்கு நல்ல லாபம் உண்டாகும். எதிர்பாராமல் மகான்களின் நல்லாசிகள் கிடைத்து அதனால் திருப்தி அடையலாம்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து வருக!

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பிறர் விஷயங்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிருங்கள்! வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ள காலமாகும். காய்ச்சல், உடற்சூடு ஆகிய உபாதைகள் வந்து போகும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசு உயர் பதவி வகிப்பவர்கள், நெருப்புத் தொழில் செய்பவர்கள், தானிய வியாபாரிகள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், ஜவுளி, நூல் வியாபாரிகள், விறகு, நிலக்கரி போன்ற பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்கள் அடைவர். இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் மாறி மகிழ்ச்சி அடையலாம். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணக் காரியம் கை கூடும். தூரத்து உறவினர்களின் வரவால் எதிர்பாராத பொருட்செலவுகள் உண்டாகும். பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன் வாங்குவீர்கள். காதல் விஷயங்களில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். புனிதப் பயணங்கள் சென்று வர எண்ணுவீர்கள். நீண்ட தூரப் பயணங்களின்போது பெரிய மனிதர்கள் சந்திப்பு ஏற்பட்டு அவர்களால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விவசாயம் நன்கு பலிதமாகும். புதிய வீடு, நிலம் வாங்குவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- சூரிய நமஸ்காரம் செய்து வருக!

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து போகும். வங்கிகளின் உதவியால் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் தாமதமின்றிக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வராத பணம், பொருட்கள் திரும்பக் கை வந்து சேரும். குழந்தைகளுக்காக திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கல்வித்துறையைச் சார்ந்தவர்கள் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது! வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். பரிசுச்சீட்டு போன்ற விஷயங்களில் ஈடுபட்டு ஏமாற்றம் அடையாதீர்கள்! பொதுப்பணிகளில் ஈடுபடுவோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நண்பர்களின் உதவியால் புதிய தொழில் தொடங்கப் போட்ட திட்டங்கள் தடையின்றி நிறைவேறும். இராணுவத்தினர், தீயணைப்புத் துறையினர், உணவகத் தொழில் செய்பவர்கள், கேஸ், வெல்டிங், பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், அரசுத்துறை சார்ந்த உயர் பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். விவசாயத்தில் புதிய முறைத் திட்டங்களின் மூலம் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். விபரீதமான எண்ணங்களை விட்டுச் செயல்பாட்டில் கவனம் செலுத்துங்கள்! பயணங்களில் மிகவும் கவனத்துடன் இருத்தல் நல்லது.

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- சூரிய வழிபாடு செய்து வருக!

துலாம்:-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர்ந்து அவற்றில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். வராத கடன், கொடுத்து இருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். நீண்ட தூரம் பயணித்துச் சந்திக்க வேண்டிய நபர்களைச் சந்திப்பதில் தாமதம் ஏற்படலாம். தாயின் உடல்நிலையில் ஏற்படும் பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் வந்து சேரும். வடக்குத் திசையில் இருந்து சில நற்செய்திகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் பணியாற்றுதல் நல்லது! குழந்தைகளால் பெயர் புகழ் ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் நிம்மதி இன்மையும், காரணமற்ற பொருட்செலவுகளும் உண்டாகும். அரசியல்வாதிகளால் சில எதிர்பார்க்காத ஆதாயங்கள் அடைவீர்கள். தீராத பழைய வழக்குகளில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்! பூஜைப்பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், நகை வியாபாரிகள், பழரச பானங்கள் போன்ற தொழில் செய்யக் கூடியவர்கள், கணினித் தொழில் செய்பவர்கள், ஆலயங்களில் பணிபுரிபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவர்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். காணாமல் போன பொருட்கள் காவல் துறையினரால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றால் ஏமாற்றம் அடைய நேரிடும்! நீண்ட காலமாக இருந்து வந்த பிணிகள் புதிய மருத்துவர்களின் உதவியால் நீங்கும். செய்யாத குற்றத்துக்காக அவப்பெயர் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை! சாப்பிடுவது, தூங்குவது போன்றவற்றில் தாமதம் ஏற்படலாம். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் உண்டாகும். காய்கறி, இலை, கீரை போன்ற பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், அச்சுத் தொழிற்கூடங்களை நடத்துபவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு மிகவும் நற்பலன் தரும் காலமாகும். தாய் வழிச் சொந்த பந்தங்களால் ஆதரவுகள் வந்து சேரும். சொத்து சம்பந்தமான நாட்பட்ட அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். தொலைவுப் பயணங்களில் மிகுந்த கவனத்துடன் சென்று வருதல் நல்லது. சளி, ஒவ்வாமை, சீதளம் ஆகிய தொல்லைகள் வந்து போகும். கடன் வாங்கும் முயற்சிகளில் வெற்றி பெறச் சற்றுத் தாமதம் ஆகலாம்.

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். சம்பந்தம் இல்லாத நபர்களால் காணாமல் போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும். புதிய தொழில் செய்ய எண்ணுவீர்கள். உறவினர்களின் வருகையால் பொருள் வரவு உண்டாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வீடு, தொழிற்சாலை ஆகியவற்றில் இடமாற்றம் ஏற்படலாம். வெளிநாடு சென்று வருதல் சம்பந்தமான முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் கவனம் தேவை! பணியாட்களால் பொருட்செலவும் நிம்மதிக் குறைவும் ஏற்படலாம். பழைய பிரச்சினைகள் தேவை இல்லாமல் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு உள்ளது. செய்யும் தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைத் தவிருங்கள்! அலங்காரப் பொருள் வியாபாரிகள், திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், வாகன சம்பந்தமான தொழில் செய்பவர்கள், நகை வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவார்கள். குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பங்குச்சந்தையில் ஈடுபாடு உடையவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

மகரம்:-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்கள் தொடர்பால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். வங்கிகளில் இருந்து எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்கும். எதிர்பாராத நல்ல செய்திகள் தென் திசையில் இருந்து வந்து சேரும். பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து நல்ல முடிவுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். பங்குச் சந்தை, கமிஷன் சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்! காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும். மிகவும் முயற்சி செய்து பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்துக் கொள்வீர்கள். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றால் ஏமாறாதீர்கள்! பிள்ளைகளின் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். கண்களில் கவனம் தேவை! வீடுகளைப் புதுப்பித்துக் கட்டப் போட்ட திட்டங்களில் தாமதம் ஏற்படும். நெருப்புத் தொழில், காவல்துறை, இராணுவம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், நில புலன்களை வாங்குவோர் – விற்போர், நிலவளத்துறை, பொதுப்பணித் துறை ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், நிலக்கரி, விறகு போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் லாபம் அடைவீர்கள். பிள்ளைகளால் பண வரவும், நிம்மதியும் உண்டாகும்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- துர்க்கை ஆலய வழிபாடு செய்து வருக!

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். காணாமல் போன பொருட்கள் சம்பந்தமில்லாத நபர்களால் வீடு வந்து சேரும். வீடுகளில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது! பந்தயம், பரிசுச்சீட்டு ஆகியவற்றால் ஏமாற வேண்டாம்! காதல் சம்பந்தமான விஷயங்களில் மிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்! வேற்று மதத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். ஒவ்வாமை, தொற்று நோய் போன்ற உபாதைகள் வரக்கூடும் என்பதால் உணவில் கவனம் தேவை! பொருளாதார நெருக்கடியில் மனைவி அல்லது மனைவி வழிச் சொந்த பந்தங்களால் மாற்றம் உண்டாகி மன நிறைவை அடைவீர்கள். எடுத்த காரியத்தைத் துணிவுடனும் சிரத்தையுடனும் செய்து முடிப்பீர்கள். புதிய வீடு, நிலம் வாங்க எதிர்பார்த்திருந்த கடன் கை வந்து சேரும். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும் . இரும்பு, இயந்திரம், வேதியியல் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், பலசரக்கு, எண்ணெய் வகைகள், பழைய இரும்புப் பொருட்கள் ஆகியவற்றை வியாபாரம் செய்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- சுவாமி ஐயப்பன் வழிபாடு செய்து வருக!

மீனம்:-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவுகளில் பிரச்சினைகள் வந்து நீங்கும். வேதிப் பொருட்கள், பழைய பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்பவர்கள், அழுகுபொருள் வியாபாரிகள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், அறிவியலாளர்கள், மடாதிபதிகள், துப்புரவுப் பணி செய்பவர்கள், வட்டித் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். மற்றவர்களின் விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப்படாதீர்கள்! கலைத்துறையினர், அரசியல்வாதிகள் ஆகியோரிடம் ஏமாற்றம் அடையாமல் இருங்கள்! அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்! வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது! புதிய நண்பர்கள் சேர்க்கையால் கூட்டுத்தொழில் முயற்சிகளில் எதிர்பாராத லாபம் அடையலாம். தலை, முகம் ஆகியவற்றில் உபாதைகள் வந்து தீரும். உற்றார் உறவினர்களின் வரவால் மகிழ்ச்சியும் நிம்மதியும் வந்து சேரும். வங்கிகளின் மூலமாக எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கும்.

இராசியான எண்:- 7.
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- விநாயகர் வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 98425-10578, 98425-29691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com

About The Author