இராசிபலன்கள் (3-6-2013 முதல் 9-6-2013 வரை)

மேஷம் :-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வெகு காலமாகக் காணாமற் போயிருந்த பொருட்கள், நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. சகோதர, சகோதரிகளின் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். வேலை கிடைக்காத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய காலம். பழைய வீடு, வாகனங்களைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கலைத்துறை சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், கலைத்துறையினர், கலைக்கல்லூரி சார்ந்தவர்கள், உலோகப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். நாட்பட்ட வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இராசியான எண் :- 6.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- தென்கிழக்கு.
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி ஆலய வழிபாடு.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை நன்மை தரும் கிரகமாகும். உறவினர்களின் திடீர் வரவுகளால் துணிவும் பொருள் வரவும் உண்டாகலாம். சகோதர, சகோதரிகளுடன் வீண் மனச் சஞ்சலங்களும் பிரச்சினைகளும் உருவாகும். புதிய வீடு, நிலம் வாங்குவதற்காக வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்திருந்த உதவித் தொகைகள் கிடைக்கும். தாய் வழி மாமன் மூலம் சில பிரச்சினைகள் வந்து சேரும். பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். தந்தை – மகன் உறவில் பிரச்சினைகள் வர இருப்பதால் கவனமாக இருத்தல் நல்லது. வேதித் தொழிற்சாலைகளில் பணி செய்பவர்கள், மத போதகர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். வெளிநாட்டு விஷயங்களில் எதிர்பார்த்த நபர்களிடமிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். அலுவலர்களுக்கு மேலதிகாரிகளுடன் மனக் கசப்பும் அவர்களால் பணியிட மாற்றமும் ஏற்படலாம். தொழிலில் பங்காளிகளுடன் இருந்த மனச் சஞ்சலங்கள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். ஆலயத் தொண்டுகளிலும், பொதுநலச் சேவைகளிலும் ஆவலுடன் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் இல்லை. பெண்கள் விஷயத்தில் அவப்பெயர் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனமாக இருத்தல் நல்லது!

இராசியான எண் :- 4.
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு.

மிதுனம் :-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பூஜைப்பொருள் வியாபாரிகள், ஆலயங்களில் பணிபுரிபவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் போன்ற தொண்டு நிறுவனங்களை நடத்துபவர்கள், கணினியில் பணிபுரிபவர்கள், பேராசிரியர்கள், பழ வியாபாரிகள் ஆகியோர் லாபம் அடைவர். அரசியல்வாதிகளிடம் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறும். வீட்டைத் திருத்திக் கட்டி அலங்காரம் செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். வாயுத் தொல்லை, காய்ச்சல் போன்ற உபாதைகள் வந்து போகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகளும் மனக் குழப்பங்களும் வர இருப்பதால் கவனமாக இருங்கள்! கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்குப் பரிசும் பாராட்டுக்களும் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் திடீர் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த பண உதவிகள் கிடைக்கும். பயணங்களின்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்!

இராசியான எண் :- 3.
இராசியான நிறம் :- மஞ்சள்.
இராசியான திசை :- வடகிழக்கு.
பரிகாரம் :- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

கடகம் :-
 

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். தந்தை – மகன் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். புதிய வீடு, நில புலன்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறலாம். பங்காளிகளுடன் தொழில் விஷயங்களில் சற்றுப் பொறுமையாக நடந்து கொள்வது நல்லது. தீராத நோய்கள் தீருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். நெருப்புத் தொழில் செய்பவர்கள், ஆடை, நூல் வியாபாரிகள், மருந்துப் பொருள் உற்பத்தியாளர்கள், அவற்றை விற்பனை செய்பவர்கள், தானிய வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். பொருளாதாரம் சற்றுச் சுமாராகவே இருப்பதால் புதிய கடன்களை வாங்க முயற்சி செய்வீர்கள். பயணங்களின்போது சம்பந்தம் இல்லாத நபர்களால் சில காரியங்களில் வெற்றி அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த குலதெய்வ ஆலய வழிபாடு நிறைவேறும். வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த பணம் கைவந்து சேரும். காதல் விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும்.

இராசியான எண் :- 2.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- மேற்கு.
பரிகாரம் :- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு.

சிம்மம் :-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பூஜைப்பொருள் விற்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், திரவப் பொருள் வியாபாரிகள், ஆலயப் பணி செய்பவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், கடல்வளத்துறை சார்ந்தவர்கள், உப்பு, உர வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் பெரியவர்களின் உதவியால் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவோர் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது! குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் காலமாகும். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படுவதுடன் பொருட்செலவுகளும் ஏற்படலாம். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்களால் தென் திசையில் இருந்து நல்ல செய்திகளுடன் பொருள் வரவுகள் உண்டாகலாம். பயணங்களின்போது மிகக் கவனமாகச் சென்று வருதல் நல்லது. பயணங்களில் பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் போன்றோரின் சந்திப்புக்களால் நன்மை அடைவீர்கள்! கண், காது ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும்! பங்குச் சந்தையில் ஈடுபடுவோரும், அரசு உயர் பதவி வகிப்போரும் நெடும் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது!

இராசியான எண் :- 2.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- மேற்கு.
பரிகாரம் :- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு.

கன்னி :-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். கணவன் – மனைவி உறவுகளுக்குள் சிறிய பிரச்சினைகளுக்காக வீண் மனக் கசப்புகள் வந்து சேரும். மாமன் வழியின் மூலமாக எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் பரிசும் பாராட்டுக்களும் நல்ல மதிப்பெண்களும் பெறுவார்கள். சமுதாய நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் பெயர், புகழ் ஏற்பட்டு அதனால் மகிழ்ச்சி அடையும் காலமாகும். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் வெகுவாகக் குறைவதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. அண்டை, அயல் வீட்டுக்காரர்களுடன் மிகக் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. கலைக்கல்லூரி மாணவர்கள்,
ஆசிரியர்கள், திரைப்படம், நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், சிற்றுண்டி, தின்பண்ட வியாபாரிகள், அலங்காரப் பொருள் வியாபாரிகள், திருமணத் தகவல் நிலையத்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். புனிதப் பயணம் சென்று வருவதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் ஏற்பட்டு விலகும்.

இராசியான எண் :- 6.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- தென்கிழக்கு.
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி ஆலய வழிபாடு.

துலாம் :-

துலாம் ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். பெண்களால் வட திசையிலிருந்து பொருள் வரவுகள் உண்டாகும். அரசு சம்பந்தமான நாட்பட்ட வழக்கு விஷயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரத்தில் இதுநாள் வரை இருந்து வந்த நெருக்கடிகள் மாறிப் பணப் புழக்கம் நன்றாக இருக்கும். வெகு காலமாக விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும் காலமாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றால் ஏமாற வாய்ப்புள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது! காய்கறி, பழம், கீரை வியாபாரிகள், கவிஞர்கள், அச்சுத்தொழில் செய்பவர்கள், அரசு வழக்குரைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணியாளர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு வேற்று மதத்தவரால் சற்றுத் தாமதம் ஆகலாம். உறவினர்களின் வரவுகளால் எதிர்பாராத பணச் செலவுகள் ஏற்படலாம். கல்வியிலும் கல்வி பயிலும் இடங்களிலும் சிற்சில சச்சரவுகள் வர இருப்பதால் மாணவர்கள் கவனமாகக் கல்வி பயிலுதல் நல்லது!

இராசியான எண் :- 5.
இராசியான நிறம் :- பச்சை.
இராசியான திசை :- வடக்கு.
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு.

விருச்சிகம் :-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். நீண்ட காலமாக வராமல் இருந்த கடன், கொடுத்திருந்த பணம், பொருள் போன்றவை திரும்பக் கைக்கு வந்து சேரும். பங்காளிகளுடன் சேர்ந்து நடத்தும் கூட்டுத் தொழிலில் காரணமற்ற பிரச்சினைகள் உருவாக இருப்பதால் கவனமாக இருத்தல் நல்லது! வீட்டைத் திருத்தி கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள். இரும்பு, எண்ணெய், பலசரக்கு போன்ற பொருட்களை உற்பத்தி, விற்பனை செய்பவர்கள் நற்பலன்களை அடைவார்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்ட தூரச் சுற்றுலாக்களை மேற்கோண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். காணாமல்போன பொருட்கள் காவல் துறையினரின் உதவியால் திரும்பக் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறையும். கணவன் – மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். தாயின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவு ஏற்படலாம். பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர், புகழ் அடைவீர்கள். வெகு தூரப் பயணங்களால் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். பயணங்களின்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று வர வாய்ப்பு உள்ள காலமாகும்.

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனிக்கிழமையில் ஐயப்பன் ஆலய வழிபாடு.

தனுசு :-

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். தலைவலி, முதுகுவலி, காய்ச்சல், உடற்சூடு போன்ற உபாதைகள் வந்து போகலாம். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆலய வழிபாடுகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு நிம்மதி அடைவீர்கள். கணவன் – மனைவி உறவுகளில் இன்னும் சற்றுப் பிரச்சினைகள் வந்து போகலாம். வேலை கிடைக்காத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய காலமாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! உலோகப் பொருள் வியாபாரிகள், காவல்துறையினர், இராணுவத்தினர், நில புலன்களை வாங்கி விற்போர், தீயணைப்புத் துறை போன்ற நெருப்பு சம்பந்தமான தொழில்களில் ஈடுபடுபவர்கள், உணவகம் நடத்துபவர்கள், அதில் பணியாற்றுபவர்கள், மசாலாப் பொடி வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். வெளிநாடு சென்று வருதல் போன்ற விஷயங்களில் கவனம் தேவை! பழைய வீடு, வாகனங்களைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிகப்பு.
இராசியான திசை :- தெற்கு.
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு.

மகரம் :-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவுகளில் காரணமற்ற வீண் பிரச்சினைகள் உருவாகி மனக் கசப்பு ஏற்படலாம். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். வட்டித் தொழில் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது! விவசாயம் செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது! நீண்ட தூரப் பயணங்களின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று வருவார்கள். நண்பர்கள், உறவினர்களின் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்! பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் வந்து சேரும். புதிய கடன் கொடுப்பதைத் தவிருங்கள். கணினி, மின்சாரம் போன்றவற்றில் பணி செய்பவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், தானிய வியாபாரிகள், கார உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். காதல் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது! வாயுத்தொல்லை வந்து போகலாம்.

இராசியான எண் :- 1.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- கிழக்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

கும்பம் :-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். வெகு காலமாக எதிர்பார்த்திருந்த வங்கி உதவித் தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழைய இரும்பு வியாபாரிகள், இயந்திர, வேதித் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், இவற்றை வாங்கி விற்பனை செய்பவர்கள், அழுகு பொருள் வியாபாரிகள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள்! புதிய வீடு, வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் இன்னும் சிறிது தாமதம் ஏற்படலாம். அலுவலர்களுக்கு நினைத்த இடத்துக்குப் பணியிட மாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் இன்னும் சிறிது காலம் நீடிக்கும். வீடு, வாகனங்களைப் பழுது பார்த்தல் மூலம் புதிய கடன்கள் ஏற்படலாம். மஹான்களின் தரிசனங்களால் பிரச்சினைகள் குறைந்து நிம்மதி அடையும் காலமாகும்.
பயணங்களின்போது மிகவும் கவனமாகச் சென்று வருதல் நல்லது! விடுபட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரும். புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்!

இராசியான எண் :- 4.
இராசியான நிறம் :- கருப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடும், காளி போன்ற அம்மன்களின் ஆலய வழிபாடும் செய்தல்.

மீனம் :-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். கண், காது ஆகியவற்றில் சிற்சில உபாதைகள் வந்து போகும். சொத்து சம்பந்தமான நாட்பட்ட வழக்கு விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! விட்டுப் போன பழைய பிரச்சினைகளால் மீண்டும் தொல்லைகள் வந்து நீங்கும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! நகைத் தரகர்கள், ஆலயப்பணி செய்பவர்கள், பொறியியல், கணினி போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். வராத கடன், கொடுத்து இருந்த பணம் போன்றவை மற்றவர்களின் தலையீட்டால் திரும்பக் கிடைக்கும். தீராத நோய்கள் தீரப் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுவீர்கள். மாணவர்களுக்குக் கல்வி பயிலும் இடங்களில் அவப்பெயர் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் கல்வி பயிலுதல் நல்லது! வீடு, தொழிற்சாலை ஆகியவற்றைப் புதிய இடத்துக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும். நண்பர்களால் பொருள் இழப்பும் மனச் சஞ்சலமும் ஏற்படலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள்!

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனிக்கிழமையில் ஆஞ்சனேயர் வழிபாடு.

-மீண்டும் அடுத்த வாரம்…
*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25 B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 98425-10578, 98425-29691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com

About The Author