இராசிபலன்கள் (3-9-2012 முதல் 9-9-2012 வரை)

மேஷம் :-

மேஷராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப், புதன் நன்மை தரும் கிரகமாகும். எழுத்துத் துறை, அச்சுத் தொழில், புத்தகம், நோட்டு வியாபாரிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், அஞ்சல்துறையைத் சார்ந்தவர்கள், ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், நாடகக் கலைஞர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். குழந்தைகளுக்காகத் திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. ஆசிரியர்கள், கல்வித்துறையில் பணிபுரிவோர், மாணவர்கள் ஆகியோருக்குக் கல்வியில் சில தடைகள் வந்து விலகும். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். தொலைவான பயணங்கள் மூலம், எதிர்பார்த்திருந்தவர்களைச் சந்தித்து, அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். பணப்புழக்கம் சுமாராகக் காணப்படும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையற்ற, புதிய நண்பர்களின் சேர்க்கையால் நிம்மதி குறையலாம். பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

இராசியான எண் :- 5.
இராசியான நிறம் :- பச்சை.
இராசியான திசை :- வடக்கு.
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச், செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். காய்ச்சல், உஷ்ண சம்பந்தமான பிணிகள் போன்றவை வந்து போகலாம். கண்களில் கவனத்துடன் இருங்கள்! பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் வெகு காலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கக் கூடிய காலமாகும். மின்சாரம், இராணுவத்துறை சார்ந்தவர்கள், அக்கினி சம்பந்தமான தொழில் செய்வோர், ஹோட்டல் தொழில் செய்வோர், மின்சாரப் பொருட்களின் விற்பனையாளர்கள், காவல்துறையைச் சார்ந்த பணிகளை ஆற்றுவோர், பங்கு வர்த்தகம் போன்ற தொழில் செய்வோர் ஆகியோர் நற் பலன் அடைவர். உத்தியோகத் துறையினர் மேலதிகாரிகளிடம் மிகுந்த கவனத்துடன் பணி ஆற்றுதல் நல்லது! புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதன் மூலம் பொருட்செலவுகள் உண்டாகலாம். தேவையற்ற மனச்சஞ்சலத்தைத் தவிர்த்தல் நல்லது. வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள். தீர்த்த யாத்திரைகள் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிவப்பு.
இராசியான திசை :- தெற்கு.
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடு.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, ராகு நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து ஒற்றுமையுடன் இருக்கக்கூடிய காலம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் ஆதாயம் உண்டு. குல தெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். கணவன் – மனைவி உறவுகளில், சற்று எச்சரிக்கையுடன் இருந்து முன் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. சூதாட்டங்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை இழக்காதீர்கள்! நண்பர்களின் சுப காரிய விஷயங்களுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வட்டித் தொழில், தரகு ஏஜன்சி, கமிசன் போன்ற தொழில் செய்வோர், பழைய இரும்பு, பழைய பேப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களின் வியாபாரிகள், தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர், கழிவுப் பொருட்களை வாங்குவோர், விற்போர், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். நாட்பட்ட வாராக் கடன், கொடுத்து இருந்த பணம் ஆகியவை திரும்பக் கைக்கு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத ஆதாயங்கள் உண்டாகும். வெகு நாட்களாகத் தடைப்பட்டு வந்த திருமணக் காரியங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ள காலம்.

இராசியான எண் :- 4.
இராசியான நிறம் :- கருப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடு.

கடகம் :-

கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப், புதன் நன்மை தரும் கிரகமாகும். பயணங்களின்போது, வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வருதல் நல்லது. குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர எண்ணுவீர்கள். உடம்பில் வாயு, வாதம் போன்ற தொல்லைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். வீடுகளைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன பொருட்கள் காவல்துறையினரால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வீடு, வாகனங்கள் வாங்குவதற்காக வங்கிகளிலிருந்து எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கும். பயணத்தின்போது, புதிய, பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில நன்மைகளை அடைவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. எழுத்துத்துறை, அச்சுத் தொழில்,
புத்தகம், நோட்டு வியாபாரிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், அஞ்சல்துறையைச் சார்ந்தவர்கள், ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், நாடகக் கலைஞர்கள் ஆகியோர் நல்ல பலன் அடைவர்.

இராசியான எண் :- 5.
இராசியான நிறம் :- பச்சை.
இராசியான திசை :- வடக்கு.
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச், சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில், மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். காதல் விஷயங்களில், எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். நாட்பட்ட, தீராத நோய்க்குப் புதிய மருத்துவர்களின் உதவி நாடிச் செல்வீர்கள். வர வேண்டிய கடன், கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். செய்யாத குற்றங்களுக்காகப் பழிச் சொல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது! அரசு, வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைப்பதற்கு, இன்னும் சற்றுத் தாமதம் ஏற்படலாம். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், சினிமா மற்றும் நாடகத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், கார், லாரி போன்ற வாகன சம்பந்தமான தொழில் செய்பவர்கள், வாகன ஓட்டுநர்கள், அழகுக்கலைக் கூடங்களை நடத்துபவர்கள், நவரத்தின வியாபாரிகள், திருமணத் தகவல் மையங்கள், திருமணக் கூடங்கள் போன்றவற்றை நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். வெளிநாட்டில் வசிப்பவர்கள் வெகு காலமாக விட்டுப் போன குல தெய்வ வழிபாடு செய்வதற்கும், தாய்நாடு சென்று திரும்புவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 6.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச், சனி நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில், காரணமற்ற மனக் குழப்பங்களும் கடன் தொல்லைகளும் ஏற்படலாம். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ள காலமாகும். குடும்பத்தில், தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடிய காலம். உற்றார், உறவினர்களின் வரவுகளால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். இரும்பு, இயந்திரம், இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், எண்ணெய், பல சரக்கு போன்ற வியாபாரிகள், பணியாட்கள், கழிவுப் பொருட்களை வாங்குபவர்கள், உர வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். தீர்த்த யாத்திரைகள் சென்று வர முயற்சிப்பீர்கள். பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன் வாங்குவீர்கள். படித்த, வேலை இல்லாத இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கும். உடம்பில், எலும்பு, நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து போகும். கணவன் -மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். வேற்று மதத்தவரால் எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!.

துலாம் :-

துலாம் ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச், சனி நன்மை தரும் கிரகமாகும். தந்தைக்கு ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில், தடைப்பட்ட திருமணக் காரியங்கள் நண்பர்களின் உதவியால் நடைபெறலாம். தேவையற்ற மனச் சஞ்சலத்தைத் தவிர்த்து, ஆலயங்களுக்குச் சென்று வருவது நல்லது. பிள்ளைகளால், பொருட் செலவுகளும் நிம்மதிக் குறைவும் ஏற்பட இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது! நாட்பட்ட, வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது! புதிய நண்பர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏமாறாதீர்கள்! வீட்டில் கவனத்துடன் இருந்தால், திருடு போவதைத் தவிர்க்கலாம். உற்றார், உறவினர்களிடம் மிகுதியான எதிர்பார்ப்பு கூடாது! இரும்பு, இயந்திரம், இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், எண்ணெய்,
பலசரக்கு போன்ற வியாபாரிகள், பணியாட்கள், கழிவுப் பொருட்களை வாங்குவோர், உர வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு.

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். நாட்பட்ட, தீராத நோய்கள் தீர வேண்டிப், புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதால் பொருட் செலவுகள் உண்டாகலாம். பூர்விகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். உற்றார், உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. காதல் விஷயங்களில், எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயரும், நிம்மதியும் அடைவீர்கள். ஆதரவற்ற சிறுவர்களுக்கான நற்பணிகளிலும் சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளிலும் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். பழுதுபட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பூ, பழம் போன்ற பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துபவர்்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், நறுமணப் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள், கம்ப்யூட்டர்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண் :- 3.
இராசியான நிறம் :- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம் :- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச், சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து, ஒற்றுமை உண்டாகும். அண்டை, அயலாரிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வரப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். மற்றவர்களின் காரியங்களில் அநாவசியமாகத் தலையிட்டு நிம்மதியை இழக்காதீர்கள்! விட்டுப் போன பழைய உறவுகள், மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ள காலம். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். பயணங்களில், வண்டி வாகனங்களில் தேவை இல்லாத பிரச்சினைகள் உருவாக இருப்பதால் கவனத்துடன் சென்று வாருங்கள்! வங்கிகளிலிருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பணம் மற்றும் பொருட்கள் கை வந்து சேரும். பூஜைப் பொருள் வியாபாரிகள், மன நலக் காப்பகங்களை நடத்துபவர்கள், தாய் சேய் நல விடுதிகளைச் சார்ந்தவர்கள், உப்பு, உர வியாபாரிகள், மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், தண்ணீர், கூல்டிரிங்ஸ் போன்ற திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண் :- 2.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- மேற்கு.
பரிகாரம் :- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு.

மகரம் :-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச், சூரியன் நன்மை தரும் கிரகமாகும். ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவுவதின் மூலம் நிம்மதியும் பொதுமக்களின் பாராட்டும் பெறுவீர்கள். ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களின் மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகலாம்! நண்பர்களின் வீட்டுச் சுப காரியங்களில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தீர்த்த யாத்திரை மற்றும் குல தெய்வ வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள். கணவன் – மனைவி உறவுகளில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். குடும்பத்தில், சகோதர சகோதரிகளின் தடைப்பட்டு வந்த திருமணக் காரியங்கள் நிறைவேறும். பழுதுபட்ட வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் பொருட் செலவுகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள். ஹோட்டல் தொழில் செய்பவர்கள், சிற்றுண்டி உணவு விடுதிகளை நடத்துபவர்்கள், அரசியல்வாதிகள், மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண் :- 1.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- கிழக்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச், செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வெகு காலமாகக் காணாமல் போயிருந்த பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். நண்பர்களால், எதிர்பாராத பொருட் செலவுகளும் நிம்மதிக் குறைவும் ஏற்படலாம். பங்கு வர்த்தகம் போன்ற தொழில்கள் செய்வோர் நல்ல பலன்கள் அடைவர். நீண்ட காலமாக வர வேண்டிய பணம் கை வந்து சேரும் காலமாகும். உற்றார், உறவினர்களிடம் மிகுதியான எதிர்பார்ப்பு கூடாது! பயணங்களின்போது மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. மின்சாரம், இராணுவத்துறை சார்ந்தவர்கள், அக்கினி சம்பந்தமான தொழில் செய்பவர்கள், ஹோட்டல் தொழில் செய்பவர்கள், மின்சாரப் பொருட்களின் விற்பனையாளர்கள், காவல்துறைப் பணியாளர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். உடம்பில், வாயு மற்றும் வாத சம்பந்தமான பிணிகள் வந்து போகலாம். பெண்களால், தென்கிழக்குத் திசையிலிருந்து எதிர்பாராத தன வரத்து உண்டாகும். அண்டை, அயல் வீட்டுக்காரர்களுடன் மிகுந்த கவனத்துடன் பேசிப் பழகுதல் நல்லது! தாயின் உடல் நிலைப் பாதிப்புக்களால் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைய வாய்ப்பு உள்ளது. தந்தை – மகன் உறவில், சுமுகமான சூழல் உருவாகும்.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிவப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வழிபாடு.

மீனம் :-

மீனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக், கேது நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில், சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துபவர்கள், ஆலயப் பணி புரிபவர்கள், விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள், கழிவுப் பொருட்களின் வியாபாரிகள், மீன், முட்டை, மாமிசம் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், ஏஜன்சி போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள், அணு ஆராய்ச்சி நிலையப் பணியாளர்கள், விமானப் பணியாளர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். மாணவர்கள், கல்வியில் பரிசும் பாராட்டும் பெறுவார்கள். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் குறைந்து காணப்படும். பழுதுபட்ட வீடு மற்றும் வாகனங்களைப் புதுப்பிப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரும். உடம்பில், நரம்பு, எலும்பு உபாதைகள் வந்து போகும். மற்றவர்களை நம்பிப் பணம், பொருட்கள் கடன் கொடுத்து ஏமாற வேண்டாம்! விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் கவனத்துடன் இருங்கள்!
பொதுவாக, இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண் :- 7.
இராசியான நிறம் :- கருஞ்சிவப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- திங்கட்கிழமையில் கணபதி ஆலய வழிபாடு.

*****************

Gnanayohi Dr. P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18(25B/1), Pulavar Street
Krishnapuram
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India
Phone : 04633-243029
Mobile : 98425-10578, 98425-29691
Fax : 04633-240390
Website : www.gnanayohi.com

About The Author