இராசிபலன்கள் (5-11-2012 முதல் 11-11-2012 வரை)

மேஷம் :-

மேஷராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, கேது நன்மை தரும் கிரகமாகும். வெகு காலமாக விட்டுப் போன பழைய உறவினர்களுடன் தொடர்புகள் ஏற்படும். காதல் விஷயங்களில், எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். மூலம், முதுகுப் பகுதியில் பிரச்சினைகள் போன்ற தொல்லைகள் வந்து போகும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் எந்த விஷயத்திலும் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது. அண்டை வீட்டுக்காரர்களுடன் மிகவும் எச்சரிக்கையாய்ப் பேசிப் பழகுங்கள்! தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்த விஞ்ஞானிகள், இரசாயனப் பொருட்களின் வியாபாரிகள், பழைய இரும்புக் கழிவுப் பொருள் வியாபாரிகள், நாடகத்துறை சார்ந்தவர்கள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்களை நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். கேட்ட இடத்தில் பணம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். அரசு வழக்குகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீடு வாகனங்களை புதுப்பித்தலுக்காகப் புதிய கடன் வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். மாணவர்கள், கல்வி மற்றும் விளையாட்டுக்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்! மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள்.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிவப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- கணபதி வழிபாடு.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சுப காரிய சம்பந்தமாக வட திசையில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். ரேஸ், லாட்டரி, போன்ற விஷயங்களின் மூலமாகத் திடீர்த் தன வரவு உண்டாகலாம். குல தெய்வ ஆலயங்களை திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். நறுமணப் பொருட்களின் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துபவர்கள், இனிப்புப் பொருட்களின் வியாபாரிகள், கணினித் தயாரிப்பாளர்கள், பேராசிரியர்கள், பொதுப்பணி செய்பவர்கள், பூஜைப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், ஆலயங்களில் பணி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். கணவன் – மனைவி உறவுகளில் காரணமற்ற சச்சரவுகள் வந்து நீங்கும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய செலவுகள் வந்து சேரும். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்று குறையும். நீண்ட காலமாகப் பிரச்சினைகளில் இருந்து வந்த பூர்வீகச் சொத்துக்கள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் கைக்கு வந்து சேரும். நீண்ட தூரப் பயணங்களின் மூலம் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். நில புலன்கள் வாங்குவோர் – விற்போர், கட்டட சம்பந்தமான தொழில் செய்பவர்கள், கார் லாரி போன்ற வாகனத் தொழில் செய்பவர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், உணவுப் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருள் வியாபாரிகள், ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். வங்கி உதவிகளின் மூலம் புதிய வாகனங்களை வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம்! பிள்ளைகளால் சிற்சில தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர், புகழ் அடைவீர்கள். குடும்பத்தில், தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
வீடு மற்றும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. கண், காதுகளில் மிகக் கவனத்துடன் இருப்பது நல்லது! கணவன் – மனைவி உறவுகளில், இதுநாள் வரையில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை காணப்படும். வேற்று மதத்தவர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு.

கடகம் :-

கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, ராகு நன்மை தரும் கிரகமாகும். பழைய இரும்பு, பழைமையான இயந்திரங்கள், இரசாயனம், தரகு, ஏஜன்சி, குத்தகை போன்ற தொழில் செய்பவர்கள், சாயப் பவுடர் வியாபாரிகள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் சற்றுக் கவனத்துடன் இருப்பது நல்லது. நாட்பட்ட பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்குவதன் மூலம் நிம்மதிக் குறைவு ஏற்படலாம். நண்பர்கள் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. உடம்பில் வயிற்றுக் கோளாறு, மூலம் போன்ற உபாதைகள் வந்து போகும். குடும்பத்தில் இதுவரையில் ஏற்பட்டு வந்துள்ள மருத்துவச் செலவுகள் குறையும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்கள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்லதொரு முடிவுக்கு வரும்.

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- பிதுர் வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். தாய் உடல் நிலைப் பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் நிலையில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் மிகுந்த சிரமத்தின் பேரில் சரி செய்து விடுவீர்கள். குல தெய்வ ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மன நிறைவடைவீர்கள். வங்கிகளின் மூலமாக நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பயணங்களின்போது புதிய நபர்களின் சந்திப்பால் சிற்சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நண்பர்களால் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். உற்றார் உறவினர்களின் வரவுகளால் நன்மை அடைவீர்கள். தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். கால்களில் கவனம் தேவை! பூஜைப் பொருட்கள், கணினி போன்ற பொருட்களை உற்பத்தி, விற்பனை செய்பவர்கள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துபவர்கள், நறுமணப் பொருட்களின் வியாபாரிகள், இனிப்பு சம்பந்தமான சிற்றுண்டி உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண் :- 3.
இராசியான நிறம் :- மஞ்சள்.
இராசியான திசை :- வடகிழக்கு.
பரிகாரம் :- சிவ வழிபாடு.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பணப் புழக்கத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி, நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். தந்தை வழிச் சொந்த பந்தங்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். தாயின் உடல் நிலைப் பாதிப்புக்களால் சிற்சில மருத்துவச் செலவுகள் வந்து சேரும். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பூமி சம்பந்தமான தொழில்கள், நகை வியாபாரிகள், நெருப்புத் தொழில் செய்பவர்கள், காவல்துறை, ராணுவம், தீயணைப்பு ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள், கேஸ் வெல்டிங் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். தொலை தூரப் பயணங்களால் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது!
பயணங்களின்போது மிகுந்த கவனத்துடன் பயணம் செய்வதால் விபத்துக்களைத் தடுக்கலாம்! நீண்ட காலமாக வராத கடன், கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் திரும்பக் கை வந்து சேரும்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- முருகன் வழிபாடு.

துலாம் :-

துலாம் ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். மின்சாரம், நெருப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள், காவல் துறை சார்ந்தவர்கள், தீயணைப்பு நிலையத்தவர்கள், விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள், ஹோட்டல் தொழில் செய்பவர்கள், கேஸ் வெல்டிங் தொழில் செய்பவர்கள் ஆகியவர்கள் நற்பலன் அடைவீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒரு சிலருக்கு ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தந்தை – மகன் உறவுகளில் இதுவரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையாய் இருப்பார்கள். சகோதர – சகோதரிகளின் சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். உடம்பில் நரம்பு, எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். தீர்த்த யாத்திரை செய்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. காணாமற்போன பொருட்கள் காவல்துறையினரின் உதவியால் திரும்பக் கிடைக்கும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில், சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல ஆதாயம் பெறக் கூடிய காலமாகும். பயணங்களின்போது மிகவும் கவனத்துடன் பயணம் செய்து வருவது நல்லது.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- துர்க்கை வழிபாடு.

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சனி நன்மை தரும் கிரகமாகும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு, வீண் வம்புகளை விலைக்கு வாங்காதீர்கள்! வெளிநாடு செல்லுதல் போன்ற விஷயங்களில், வேற்று மதத்தவரால் ஆதாயம் அடைவீர்கள். இரும்பு, இயந்திரம், இரசாயனம் போன்ற தொழில் செய்பவர்கள், ஆலை அதிபர்கள், எண்ணெய் வியாபாரிகள், பலசரக்குக் கடை நடத்துபவர்கள், பழைய பொருட்களை விற்பனை செய்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள் ஆகியவர்கள் நற்பலன் அடைவீர்கள். தந்தை – மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெகு நாட்களாக வராத கடன், கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும். பங்காளியுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! வாகனங்கள் மற்றும் மின்சாரப் பணிகளில் ஈடுபடுவோர் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். உல்லாசப் பயணங்கள் செல்வோர் குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்வது நல்லது. பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படும். சமுதாய வளர்ச்சிக்கான விஷயங்களில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது!

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனீஸ்வர வழிபாடு.

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கலைத்துறையைச் சார்ந்தவர்கள், கலைக் கல்லூரியைச் சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள், கட்டட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். மாணவர்களுக்கு, கல்வியில் எதிர்பாராத சில தடைகள் வந்து போக வாய்ப்பு உள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் பயின்று வருதல் நல்லது! பூர்வீகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரச்சினைகள் தீர்ந்து, சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும். புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் வந்து சேரும். உடம்பில் வாயுத் தொல்லை, வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். குடும்பத்தில், தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெற இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும் காலமாகும். உற்றார் உறவினர்களின் எதிர்பாராத வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் மற்றும் பொருட்கள் மிகுந்த சிரமத்தின் பேரில் வந்து சேரும் காலமாகும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் பிரச்சினைகளை விலைக்கு வாங்காதீர்கள்!

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு.

மகரம் :-

மகரராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். திருமணம் போன்ற சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும். அரசு வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கலாம். நண்பர்களால் வீண் பொருட் செலவுகளும் நிம்மதி இன்மையும் ஏற்படலாம். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். நெருப்பு, ஹோட்டல், மின்சாரம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவியை நாடுவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் துலங்கும். உற்றார் உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களில் ஈடுபடுவோர் மிகக் கவனத்துடன் இருப்பது நல்லது! பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்கள் சற்றுக் கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக் கூடிய காலமாகும். பெண் சம்பந்தமான விஷயங்களில், குறிப்பாகக் காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது! மற்றவர்களை நம்பிப் புதிய கடன்களைக் கொடுத்து ஏமாற வேண்டாம்!

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- சிவ வழிபாடு.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, புதன் நன்மை தரும் கிரகமாகும். அண்டை வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! பொருளாதாரத்தில் இது வரையில் இருந்த நெருக்கடிகள் மாறி, முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். ரேஸ், லாட்டரி போன்ற சூதாட்டம் சம்பந்தமான விஷயங்களில் பணத்தையும் பொருட்களையும் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருங்கள்! உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வுடன் கூடிய பணி மாற்றங்கள் ஏற்படலாம். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் – மனைவி ஒன்று சேரும் காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். கணிதம், எழுத்துத்துறை ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், புகைப்படக் கலைஞர்கள், வங்கிப் பணியாளர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயங்களின் மூலமாக நல்ல விளைச்சல் காணப்படும். நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய பெண் மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நற்பலன் அடைவீர்கள். புதிய வீடு நிலங்களை வாங்குவதற்காக வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு.

மீனம் :-

மீனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயங்களில், நண்பர்களின் உதவியால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். கல்வியில் சில தடைகள் வர இருப்பதால் மாணவர்கள் கவனத்துடன் சென்று வர வேண்டும். புதிய தொழில்களைத் தொடங்க நீண்ட காலமாகப் போட்டிருந்த திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டாகும். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய பொருட் செலவுகள் வந்து சேரலாம். திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், கடல்வளத்துறை சார்ந்தவர்கள், கப்பல் பணி செய்பவர்கள், உப்பு, உர வியாபாரிகள், பூஜைப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். வராத கடன், கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துறையினரின் உதவியால் திரும்பக் கிடைக்கும். கண், காதுகளில் சிற்சில உபாதைகள் வந்து போகலாம். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்துள்ள குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர வாய்ப்பு உள்ள காலமாகும். பயணங்களின்போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- அம்மன் வழிபாடு.

*****************

Gnanayohi Dr. P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M.,
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627 759.
Tirunelveli District, TamilNadu, India.
Phone : 04633-243029.
Mobile : 98425-10578, 98425-29691.
Fax : 04633-240390.
Website : www.gnanayohi.com

About The Author