இராசிபலன்கள் (6-5-2013 முதல் 12-5-2013 வரை)

மேஷம் :-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். தலை, முதுகு ஆகியவற்றில் சில உபாதைகள் வந்து போகலாம். நண்பர்கள் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும். திருட்டுப் போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். அரசு வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். தொலைவான பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. புதிய நண்பர்களிடம் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும். குலதெய்வ ஆலயத் தொண்டுகளைப் பிரியத்துடன் செய்து நற்பெயர் எடுப்பீர்கள். அழகுக்கலைக்கூடம் நடத்துபவர்கள், கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், கட்டில், மெத்தை போன்ற ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், திரைப்படம், நாடகம் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். உறவினர்களின் உதவியால் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. பயணத்தில் மிகவும் கவனம் தேவை! காதல் விஷயத்தில் அனுகூலம் ஏற்படாது.

இராசியான எண் :- 6.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- தென்கிழக்கு.
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு.

ரிஷபம் :-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். ஒவ்வாமை, சளி, வயிற்றுத் தொல்லை, வாயுத் தொல்லை போன்ற உபாதைகள் வந்து போகலாம். இரும்பு, இயந்திரம், வேதிப் பொருட்கள், கழிவுப் பொருட்கள் ஆகியவற்றின் வியாபாரிகள், பலசரக்கு, எண்ணெய் வியாபாரிகள், கல், மணல் வியாபாரிகள், அலுவலக உதவிப் பணிகளைச் செய்பவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். குடும்பச் சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! தந்தை – மகன் உறவுகளில் பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் காணப்படும். வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிப்பவர்கள் தாய்நாடு சென்று உறவுகளைச் சந்தித்துத் திரும்புவதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும். வீடு, வாகனம், தொழிற்சாலை ஆகியவற்றை இடமாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்றுப் பின்னடைவு ஏற்படலாம். ஒரு சிலருக்குக் கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் பொருட்செலவுகள் வந்து சேரலாம். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து மீண்டும் ஒன்று சேரக் கூடிய காலமாகும்.

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடு.

மிதுனம் :-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். வீடு, நிலம், வாகனங்கள் வாங்குவதற்காக எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் பணத்தையோ பொருளையோ ஏமாந்து விடாதீர்கள்! மனைவிக்குச் சிற்சில மருத்துவச் செலவுகள் செய்வதற்காகப் புதிய கடன்கள் வாங்க முயல்வீர்கள். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றில் ஏமாற வேண்டாம்! மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட்டு வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்! தாயின் உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படும். ஒப்பந்தத் தொழில் செய்பவர்கள், காய்கறி வியாபாரிகள், அச்சகம் நடத்துபவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணிபுரிவோர், எழுதுபொருள் விற்பனையாளர்கள் ஆகியோர் ஆதாயம் பெறுவர். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும்.

இராசியான எண் :- 5.
இராசியான நிறம் :- பச்சை.
இராசியான திசை :- வடக்கு.
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு.

கடகம் :-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் குழப்பங்கள் மாறி மிகுந்த ஒற்றுமை உண்டாகும். பயணத்தில் புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருங்கள். பிள்ளைகளின் சுப நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டு விஷயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயங்கள் உண்டு. பழைய கடன்களை அடைப்பதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் சில தொல்லைகள் வந்து சேர இருப்பதால் கவனமாக இருத்தல் நல்லது. தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் சம்பந்தமாகப் புதிய தொடர்புகள் ஏற்பட்டு அதன் மூலம் நன்மை அடைவீர்கள். நிலக்கரி, பெட்ரோல், டீசல் பலசரக்கு, எண்ணெய் போன்றவை சார்ந்த தொழில்களில் இருப்பவர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர், தீயணைப்பு நிலையப் பணியாளர்கள், நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்களைச் செய்பவர்கள், நில புலன்கள் சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். பெண்களால் தென்திசையில் இருந்து நற்செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிகப்பு.
இராசியான திசை :- தெற்கு.
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் முருகன் வழிபாடு.

சிம்மம் :-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம். குலதெய்வ ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடுவதன் மூலம் நற்பெயர், புகழ் ஏற்படும். கலைஞர்கள், கலைப் பொருள் விற்பனையாளர்கள், தங்க, வெள்ளி நகை வியாபாரிகள், உணவுக்கூடம் நடத்துபவர்கள், அழகுக்கலைக்கூடம் நடத்துபவர்கள், ஆகியோர் நல்ல பலன் அடைய வாய்ப்பு உள்ளது. வழக்கு விஷயங்களுக்காகப் புதிய வழக்கறிஞர்களின் உதவியை நாடி அவர்களால் நன்மை அடைவீர்கள். பூர்விகச் சொத்துக்கள் கைவந்து சேரக் கூடிய காலமாகும். குலதெய்வ வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலமாக நிம்மதி அடைவீர்கள். மஹான்களின் சந்திப்புகளாலும் நிம்மதி ஏற்படலாம். நண்பர்கள் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெடும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம்! வங்கிகளின் மூலம் எதிர்பார்த்திருந்த உதவித் தொகைகள் கிடைக்கும்.

இராசியான எண் :- 6.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- தென்கிழக்கு.
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு.

கன்னி :-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் நிம்மதியும் பொருள் வரவும் உண்டாகலாம். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட்டு அவமானப்பட இருப்பதால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது! குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். உற்றார், உறவினர்களிடம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! வர வேண்டிய பணம் மற்றவர்களின் உதவியால் கிடைக்கும். பயணத்தில் புதிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயங்கள் அடைவீர்கள். சகோதர, சகோதரிகளின் தடைப்பட்ட திருமணக் காரியங்கள் நிறைவேறும் காலமாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளில் பணம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முதியோர் இல்லங்களை நடத்துபவர்கள், நெருப்பு சம்பந்தமான தொழிற்சாலைகளை நடத்துபவர்கள், வெளிநாட்டுத் தூதரகங்களில் பணிபுரிபவர்கள், நூல், ஆடை வியாபாரிகள், மருந்து நிறுவனம் நடத்துபவர்கள், மருந்துப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், உணவகத் தொழில் செய்பவர்கள், அரசுத் துறை சார்ந்த ஆலயப் பணியாளர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். தந்தை – மகன் உறவுகளில் சுமுகமான சூழ்நிலை உருவாகும்.

இராசியான எண் :- 1.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- கிழக்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

துலாம் :-

துலாம் ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். திரவப் பொருள் வியாபாரிகள், பூஜைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், தாய் – சேய் நல விடுதிகளை நடத்துபவர்கள் ஆகியோர் ஆதாயம் அடைவீர்கள். பெண்களால் தென்திசையில் இருந்து எதிர்பாராத பண வரவு உண்டாகும். அலுவலகப் பணி செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் பதவி உயர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சூதாட்டங்களால் ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருங்கள்! சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். காதல் விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பதால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். மாணவர்களுக்குக் கல்வியில் பரிசும் பாராட்டும் கிடைக்கக்கூடும். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுநலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். வேற்று மதத்தவர்கள், அரசியலாளர்கள் போன்றோரால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த பணம் கைவந்து சேரும். வெளிநாடு சென்று வர வெகு காலமாகப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். குடும்பச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும்.

இராசியான எண் :- 2.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- மேற்கு.
பரிகாரம் :- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு.

விருச்சிகம் :-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். தங்கம், செம்பு, வெள்ளி போன்ற உலோகப் பொருட்களின் வியாபாரிகள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், மருந்துப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், நில புலன்களை வாங்கி விற்பவர்கள், கேஸ் வெல்டிங் தொழில் செய்பவர்கள், உணவகத் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். பழமையான கட்டடங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட்செலவுகள் ஏற்படலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளில் பண வரவு உண்டாகும். நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் வந்து சேரும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். வெகு காலமாகக் கட்டப்படாத ஆலயங்களுக்கான திருப்பணிகளைச் செய்வீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுப் பயனடைவார்கள். வங்கிகளின் மூலமாக எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த, வர வேண்டிய பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும். காதல் விஷயத்தில் எதிர்பார்த்திருந்த தகவல்கள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம்.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிகப்பு.
இராசியான திசை :- தெற்கு.
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு.

தனுசு :-

தநுசுராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், வங்கிகளில் பணி செய்பவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். கண், காது, நரம்பு, எலும்பு போன்றவற்றில் உபாதைகள் வந்து போகும். மஹான்களின் தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். அலுவலகப் பணி செய்பவர்களுக்கு எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பண வரவுகளுக்காக நெடும் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. பூர்விகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரச்சினைகள் தீர இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். வர வேண்டிய கடன், கொடுத்திருந்த பணம், பொருட்கள் ஆகியவை வந்து சேரும். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தீராத நோய்களுக்குப் புதிய மருத்துவர்களின் உதவியால் தீர்வு கிடைக்கக்கூடிய காலமாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும்.

இராசியான எண் :- 5.
இராசியான நிறம் :- பச்சை.
இராசியான திசை :- வடக்கு.
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு, ஆஞ்சனேயர் வழிபாடு.

மகரம் :-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பூர்விகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு நல்லதொரு முடிவு கிடைக்கும். பயணத்தின்போது மிகுந்த கவனத்துடன் சென்று வருவது நல்லது! விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். பழைய பேப்பர், பிளாஸ்டிக், இரும்புப் பொருட்களின் வியாபாரிகள், அணு ஆராய்ச்சி போன்ற அறிவியல்துறை சார்ந்த பணியாளர்கள், மத போதகர்கள், மடாதிபதிகள், அழுகுபொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றம் காணப்படும். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த குலதெய்வ வழிபாடுகளைச் செய்து வருவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் வந்து சேரும். உற்றார், உறவினர்களின் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மனநிறைவை அடைவீர்கள்.

இராசியான எண் :- 7.
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- திங்கட்கிழமையில் கணபதி வழிபாடு.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றை நம்பி ஏமாற வேண்டாம்! திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். வெகு காலமாக வராத கடன், கொடுத்து இருந்த பணம், பொருட்கள் போன்றவை மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். அசைவ உணவு வியாபாரிகள், பழைய இரும்பு, தகரம் போன்ற பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், மடாதிபதிகள், அலுவலக உதவிப் பணிகளைச் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். புதிய தொழில்கள் தொடங்கும் எண்ணங்கள் நிறைவேறும். வாயு, வாதம் சம்பந்தமான சிற்சில தொல்லைகள் வந்து போவதன் மூலம் மருத்துவச் செலவுகள் உண்டாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளால் ஆதாயம் ஏற்படாது. நண்பர்கள், உறவினர்கள் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெடும் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள்.

இராசியான எண் :- 4.
இராசியான நிறம் :- கருப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடு.

மீனம் :-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பூஜைப் பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம்,
முதியோர் இல்லம் போன்றவற்றை நடத்துபவர்கள், தாய் – சேய் நல விடுதிகளை நடத்துபவர்கள், தின்பண்ட வியாபாரிகள், பேராசிரியர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆலயப்பணி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு மேலதிகாரிகளுடன் வீண் மனச் சஞ்சலமும் பதவி இடமாற்றமும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் முன் கோபத்தைத் தவிர்த்துப் பொறுப்புடன் பணியாற்றுங்கள். பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்களை வாங்குவீர்கள். ஆதரவற்றோர் ஆசிரமங்கள், பொதுத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நிம்மதியும் புகழும் அடைவீர்கள். பொருளாதாரம் சம்பந்தமாக நீண்ட நெடும் பயணங்களை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக இன்பச் சுற்றுலா சென்று வர முயற்சிப்பீர்கள். பணியாட்களால் பொருள் விரயமும் மனஉளைச்சலும் உண்டாகும். பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது. அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம்!

இராசியான எண் :- 3.
இராசியான நிறம் :- மஞ்சள்.
இராசியான திசை :- வடகிழக்கு.
பரிகாரம் :- வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மீண்டும் அடுத்த வாரம்…

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759,
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 98425-10578, 98425-29691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author