இராசிபலன்கள் (8-12-2008 முதல் 14-12-2008 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். இது வரையில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் மாறிப் பணப் புழக்கம் நன்றாக இருக்கும். குருப்பெயர்ச்சி ஆகித் தங்களது ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் புதிய வீடு, நிலம் வாங்கக் கூடிய காலமாகும். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் தீர்ந்து மன நிம்மதி உண்டாகும். குல தெய்வ வழிபாடு செய்து வர எண்ணுவீர்கள். பிள்ளைகளின் மன மகிழ்ச்சிக்காக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. மூலம் மற்றும் வயிறு, குடல் போன்ற தொல்லைகள் வந்து போகும். அரசு வழக்கு விஷயங்களில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது. தந்தை மகன் உறவில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து சுமூகமான சூழல் உருவாகும். செய்தொழிலை இடமாற்றம் செய்யப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். இரும்பு, இயந்திரம், ரசாயனம் ஆகிய தொழிற் செய்வோர்கள் லாபம் அடைவார்கள்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகிறார். வங்கிகளின் மூலம் எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருட்டுப் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சியும் எதிர்பாராத ஆதாயமும் உண்டாகும். மாணவர்களுக்குக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை மூலம் பரிசுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், பங்குத் தொழில் நட்துவோர்கள் சற்று கவனமுடன் இருத்தல் நல்லதாகும். புதிய தொழில் தொடங்கப் போட்ட திட்டங்களில் சற்றுக் கால தாமதம் ஏற்படலாம். நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த சகோதரர்களின் திருமணக் காரியங்கள் நிறைவேறும். தொலைதூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. வெகு காலமாக விற்க நினைத்த சொத்துக்கள் விற்பனைக்கு வரும். பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன் வாங்க முயற்சிப்பீர்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் செய்வோர்கள் புதிய முறை விவசாயத்தின் மூலம் நல்ல லாபம் அடைவார்கள். ஆலயத் திருப்பணிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தமாகிய பழைய வழக்குகள் முடிவுக்கு வந்து சொத்துக்கள் கை வந்து சேரும். யாத்திரையின் போது வாகனங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்வது உகந்ததாகும். கணவன் மனைவிக்குள் காரணமற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகி அதனால் மன சஞ்சலம் ஏற்பட இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்க்கவும். தேவையற்று அடுத்தவர் விசயங்களில் தலையிட்டு வீண் சிக்கலை ஏற்படுத்த வேண்டாம். தந்தை வழிச் சொத்துக்களில் புதிய பிரச்சனைகள் ஏற்படாமல் கவனிக்கவும். திருமணம் ஆகாதவர்களுக்கு மணம் ஆகின்ற காலமாகும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- துர்க்கை அம்மன் வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே, உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக வேண்டிய முயற்சிகளில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவீர்கள். வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளால் நீண்ட நாட்களாக எதிர் பார்த்து இருந்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். பெண்களால் வெகு தொலைவில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். காதல் விஷயத்தில் சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கலாம். கூட்டுத் தொழில் முயற்சிகளில் சில தடைகள் வரக்கூடும். தீராத நாட்பட்ட நோய்களுக்குப் புதிய மருத்துவர்களை மாற்றுவதால் நோய்கள் குறையலாம். ஆடம்பர, அலங்காரப் பொருட்கள், சினிமா, நாடகத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் ஆதாயம் அடைவார்கள். வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எச்சரிக்கையுடன் இருந்தால் திருட்டுப் போவதைத் தவிர்க்கலாம். தாயின் உடல் நிலையில் கவனமுடன் இருத்தல் நல்லது.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். செய்தொழில் விஷயமாக அந்நிய நாடு சென்று வரச் செய்துள்ள முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வீடு வாகனங்களைப் புதுப்பிப்பதின் மூலம் பணச் செலவுகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைக்கக் கூடிய காலமாகும். குலதெய்வ வழிபாட்டின் மூலம் பிரச்சனைகள் குறையும். வட்டித் தொழிற் செய்வோர்கள் புதிய கடன் கொடுப்பதைத் தவிர்த்தல் நன்று. ஏற்றுமதி, இறக்குமதித் தொழிற் செய்வோர்கள், ஜவுளி மற்றும் நூல் வியாபாரிகள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். கணவன் மனைவி உறவுகள் பலப்படும் காலமாகும். வங்கிகள் மூலம் வர வேண்டிய பணம் வந்து சேரும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். ஆபரேஷன் போன்ற காரியங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. தாய் வழி மாமன் மூலமாகச் சில ஆதாயங்கள் வரக்கூடும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்::- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். தேவாலயப் பணிகளில் ஈடுபட்டு நற்பெயர், புகழ் அடையக் கூடிய காலமாகும். நில வளத்துறை, நீர் வளத்துறை சார்ந்தவர்கள், வக்கீல்கள், எழுத்தாளர்கள், அச்சுத் தொழில் நடத்துவோர்கள் லாபம் அடைவார்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற நீண்ட கால முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகளிடையே கருத்து வேறுபாடுகள் வர இருப்பதால் முன்கோபத்தைத் தவிர்த்தல் நல்லது. புதிய வீடு, நிலம் வாங்க வாய்ப்புகள் உள்ளன. தொலை தூரத்தில் இருந்து எதிர் பார்த்திருந்த பண உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் தீர்ந்து அவர்களால் பொருள் உதவியும், பெயர் புகழும் ஏற்படும். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தலை தூக்கும். உடம்பில் வாயு மற்றும் வாத சம்பந்தமாகிய உபாதைகள் வந்து போகும். செய்தொழிற் கூடங்களை இட மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை: வடமேற்கு
பரிகாரம்:- கணபதி வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

துலாம் ராசி அன்பர்களே, உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். புதிய கடன்களை வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமற் போகக் கூடிய காலமாகையால் புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லதாகும். உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும், அவர்களால் புதிய உதவிகளும் கிடைக்கும். தீராத பழைய நோய்கள் சற்றுக் குறைய வாய்ப்பு உள்ளது. கோர்ட் வழக்கு விஷயங்களில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். கமிஷன், கன்ஸ்டிரக்ஷன், வட்டித் தொழில்களைச் செய்வோர்கள் ஆதாயம் அடைவார்கள். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சமாளித்துக் கொள்வீர்கள். வெளிநாடு சென்று வர வாய்ப்பு உள்ளது. பழைய வீடுகளைப் புதுப்பித்து கட்ட முயற்சிப்பீர்கள். பிரயாணத்தின் போது கண், காதுகளில் கவனமுடன் இருப்பது நல்லது. தந்தை மகன் உறவில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே, உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். மாணவர்கள் படிப்பு சம்பந்தமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் நரம்பு மற்றும் எலும்பு போன்ற உபாதைகள் வந்து போகும். பொதுப் பணித்துறை சார்ந்தவர்கள் லாபம் பெறுவார்கள். தீர்த்தத் யாத்திரை சென்று வர வாய்ப்பு உள்ளது. வங்கிகள் மூலம் கேட்டிருந்த கடன் தொகைகள் கிடைக்கச் சற்றுக் கால தாமதம் ஆகலாம். தந்தை மகன் உறவில் சில காரணமற்ற மனக் கசப்புகள் வந்து நீங்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலமாக எதிர் பாராத தன வரவுகள் உண்டாகலாம். உத்தியோகத் துறையினருக்கு இட மாற்றம் ஏற்படும். சமுதாய நல்லிணக்கத்திற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வீடு, நிலம் போன்ற விஷயங்களில் கவனமுடன் செயல்படவும்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர் வழிபாடு செய்து வரவும்.

தநுசு:-

தநுசு ராசி அன்பர்களே, உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். தடைபட்டிருந்த திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறக் கூடிய காலமாகும். தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தல் உகந்ததாகும். குடும்பத்தில் திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்படுவதால் புதிய கடன்கள் வாங்க எண்ணுவீர்கள். வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் இருந்து பணம், பொருள்கள் மற்றும் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். காதல் சம்பந்தமாகிய விஷயத்தில் பெண்களால் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி உறவினர்களின் உதவியால் பணம் வந்து சேரும். உடல் நிலையில் மேகம் மற்றும் உஷ்ண சம்பந்தமாகிய உபாதைகள் வந்து போகும். பூர்வீக குலதெய்வ வழிபாடு செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே, உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் இது வரை இருந்து வந்த பிரச்சனைகள் மாறி நல்ல சூழ்நிலை உருவாகும். உறவினர்களின் வரவால் ஆதாயமும், மன நிம்மதியும் ஏற்படும். கோவில் திருப்பணி சம்பந்தமாகப் பணம் மற்றும் பொருட்களைத் தானம் செய்ய எண்ணுவீர்கள். நீண்ட நாட்களாகக் குடி ஏறாமல் இருந்த பழைய கட்டிடங்களைப் புதுப்பித்து கட்டுவீர்கள். பெண்களால் வடதிசையில் இருந்து நற்செய்திகளைக் கேட்பீர்கள். திருட்டுப் போன பொருட்கள் சம்பந்தம் இல்லாத நபர்களால் திரும்ப வீடு வந்து சேரும். நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். கட்டில், மெத்தை போன்ற பொருட்கள், கல் மணல், செங்கல், சிமிண்ட் வியாபாரிகள் ஆதாயம் அடைவார்கள். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. யாத்திரையில் மிகுந்த கவனம் தேவை.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வரவும்.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். கம்ப்யூட்டர், மின்சாரம், காவல்துறை, இராணுவம் சார்ந்தவர்களுக்கு நற்பலன் தரக் கூடிய காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். செய்தொழில் விஷயமாக அந்நியநாடு சென்றுவரத் திட்டம் போடுவீர்கள். குழந்தைகளின் நலனுக்காகப் பொருட் செலவுகள் உண்டாகும். புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்களை வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். காதல் விஷயத்தில் எதிர்பார்த்து இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். பழைய கடன்களால் மன நிம்மதி குறையும். பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர், புகழ் முதலியன உண்டாக்க முயற்சிப்பீர்கள். சூதாட்டத்தை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை இழக்க வேண்டாம். சில பெரிய மனிதர்களின் உதவியால் உத்தியோகம் இல்லாதவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கக் கூடிய காலமாகும். நீண்ட தூரப் பயணம் வெற்றி தேடித் தரும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வரவும்.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே, உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். கை விட்டுப் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் இருத்தல் நல்லது. பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். செய்தொழில் விஷயமாக நீண்ட தூரப் பயணங்கள் உண்டாகும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காகப் பொருட் செலவுகள் உண்டாகும். அரசியல்வாதிகள், சேர் மார்க்கெட் தொழிற் செய்வோர்கள் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண காரியங்கள் நிறைவேறும். பிறருக்காக ஜாமீன் போட்டுச் சிக்கலை ஏற்படுத்த வேண்டாம். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் பதவி மற்றும், இட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். இரசாயனம் மற்றும் எண்ணை வியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. உடம்பில் உஷ்ணம் மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகும். யாத்திரையில் கவனம் தேவை.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

About The Author