இராசிபலன்கள் (8-4-2013 முதல் 14-4-2013 வரை)

மேஷம்:-

மேஷராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பூஜைப்பொருள் வியாபாரிகள், மன நலக் காப்பகம் நடத்துபவர்கள், தாய் சேய் நல விடுதிகளைச் சார்ந்தவர்கள், உப்பு, உர வியாபாரிகள், மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், நீர் வளத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில்கள் தொடங்கலாம். வேற்று மதத்தவரால் எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. எழுத்துத்துறை, அச்சுத் தொழில் போன்றவற்றைச் சார்ந்தவர்கள், புத்தகம், நோட்டு வியாபாரிகள், வழக்குரைஞர்கள், இசையமைப்பாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், நாடகக் கலைஞர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். உடல்நிலையில் இருந்து வந்த தொல்லைகள் மாறிப் பொருட் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. நாட்பட்ட வாராக் கடன் திரும்பக் கிடைக்கும். சகோதரர்களால் நிம்மதி குறைந்தாலும் அவர்களால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண் :- 2.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- மேற்கு.
பரிகாரம் :- அம்மன் வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் தானம் செய்து வாருங்கள்!

ரிஷபம்:-

ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பூஜைப் பொருள் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துபவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், நறுமணப் பொருள் விற்பவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் மிகவும் நல்ல பலன்களை அடைவர். மூளை, நரம்பு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகும். காதல் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்வது நல்லதாகும். கண்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். நீண்ட காலமாக புதிய வீடு, நிலம் வாங்கப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். தீராத நோய்களுக்குப் புதிய முறை மருத்துவத்தின் மூலமாக நல்ல குணம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களின் உதவியால் திருமணம் நடக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன் போட்டு வீண் பிரச்சினைகளை விலைக்கு வாங்க வேண்டாம். தொழிலில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. உற்றார், உறவினர் வருகையால் பணச் செலவுகள் உண்டாகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம்.

இராசியான எண் :- 3.
இராசியான நிறம் :- மஞ்சள்.
இராசியான திசை :- வடகிழக்கு.
பரிகாரம் :- சிவ வழிபாடு செய்து மஞ்சள் வஸ்திரம் தானம் செய்து வாருங்கள்!

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பொருள் வரத்தும் உண்டாகும். பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துபவர்கள், ஆலயப் பணி புரிபவர்கள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், கழிவுப் பொருள் வியாபாரிகள், அசைவப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், ஏஜன்சி நடத்துபவர்கள், அணுஆராய்ச்சி நிலையப் பணியாளர்கள், விமானப்பணியாளர்கள் ஆகியோருக்கு நற்பலன் தரும் காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பூர்விகச் சொத்து விஷயங்களில் இருந்து வந்த நாட்பட்ட பிரச்சினைகள் நீங்கிச் சொத்துக்கள் கிடைக்கும். தீர்த்த யாத்திரைகளை மேற்கொள்ள எடுத்து கொண்ட முயற்சிகளில் வெற்றி அடையலாம். பொதுப் பணிகளைச் செய்பவர்கள் கவனத்துடன் பணியாற்றினால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்கலாம். பொருளாதாரத்தில், இது நாள் வரையில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நல்ல சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உற்றார் உறவினர்களின் வரவால் பொருட்செலவுகள் உண்டாகும்.

இராசியான எண் :- 7.
இராசியான நிறம் :- கருஞ் சிவப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- கணபதி வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வாருங்கள்!

கடகம் :-

கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணத்தையோ பொருட்களையோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத புதிய, பெரிய மனிதர்களின் தொடர்புகளால் சில ஆதாயங்களை அடைவீர்கள். குடும்பச் சொத்துக்கள் சம்பந்தமான விஷயத்தில் சச்சரவுகள் வந்து போகும். விருந்தினர்களின் வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது. குழந்தைகளுக்காக உல்லாசப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் பொருட்செலவுகள் உண்டாகும். நீண்ட காலமாக வராத கடன் காவல் துறையின் உதவியால் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். பழைய பொருட்கள், கமிஷன் ஏஜன்சி போன்ற தொழில் செய்பவர்கள், பழைய இரும்பு, தகரம் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள், அசைவ உணவு வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். அரசியல்வாதிகளிடம் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த உதவிகள் கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் சென்று வர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். அரசு வழக்கு போன்ற விஷயங்களில் எதிர்பார்த்திருந்த, சாதகமான முடிவுகள் வந்து சேரும்.

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- ஐயப்பன் வழிபாடு செய்து கருப்பு வஸ்திரம் தானம் செய்து வாருங்கள்!

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயங்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து உறவுகள் வலுப் பெறும். கூட்டுத் தொழில்களைச் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்பார்த்திருந்த ஆதரவுகள் கிடைக்கும். மற்றவர்களுக்காக உழைப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற விஷயங்களில் சற்றுக் கவனமாக நடந்து கொள்வது நல்லது. அரசு வழக்கு விஷயத்தில் சாதகமான தீர்ப்புகள் வந்து சேரும் காலமாகும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லதாகும். தீராத நோய்களுக்கு விடை காணுவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. பயணத்தின்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம். நகை வியாபாரிகள் எதிர்பாராத லாபம் அடைவார்கள். வெகு காலமாகப் பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள், பெரிய மனிதர்களின் தலையீட்டால் தீர்ந்து நிம்மதி ஏற்படும். வீடு, நிலம் போன்றவற்றின் மூலமாகப் புதிய கடன் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி அடையலாம். உழவுத்தொழில் சுமாராகக் காணப்படும். மாணவர்களுக்குக் கல்வித்துறையில் பரிசும் பாராட்டுக்களும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. தேவையான பொருளாதாரம் கை வந்து சேரக் கூடிய காலமாகும்.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிவப்பு.
இராசியான திசை :- தெற்கு.
பரிகாரம் :- துர்க்கை வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வாருங்கள்!

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை. புதிய வீடு, நில புலன்கள் வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்! அரசு வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த, சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு நிம்மதி அடைவீர்கள். மஹான்களின் தரிசனத்திற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். காதல் விஷயங்களில் அநுகூலமான சில செய்திகள் வந்து சேரும். இரும்பு, இயந்திரம், இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பழைய இரும்புப் பொருள் வியாபாரிகள், எண்ணெய், பல சரக்கு வியாபாரிகள், பணியாட்கள், கழிவுப் பொருட்களை வாங்குபவர்கள், உர வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். பெண்களால் தொலைவில் இருந்து நற்செய்திகளும் பொருள் வரத்தும் உண்டாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையை தவிர்த்தல் நல்லது. குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்துவர வாய்ப்பு உள்ளது. ரேஸ், லாட்டரி போன்ற சூதாட்ட சம்பந்தமான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வங்கிகளிலிருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த கடன் உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனீஸ்வர வழிபாடு செய்து நீல வஸ்திரம் தானம் செய்து வாருங்கள்!

துலாம் :-

துலாம்ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். உழவுத்தொழில் செய்பவர்களுக்கு நொழில் நன்றாகப் பலிதமாகும். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், கலைத்துறையினர், அரசியல்வாதிகள், வாகன சம்பந்தமான தொழில் செய்பவர்கள், வாகன ஓட்டுநர்கள், அழகுகலைக் கூடங்களை நடத்துபவர்கள், நவ ரத்தின வியாபாரிகள், திருமணத் தகவல் மையங்கள், திருமணக் கூடங்கள் போன்றவற்றை நடத்துபவர்கள் ஆகியோர் மிகுந்த லாபம் அடைவார்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம்! வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளுக்காகப் பணத்தையோ பொருளையோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். உத்தியோகத் துறையினருக்கு மேலதிகாரிகளால் கண்டிப்பும், இட மாற்றமும் ஏற்படலாம். திருட்டுப் போன பொருட்கள் திரும்பி வீடு வந்து சேரும். புதிய வீடு, தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்யப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லதாகும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் நல்ல மதிப்பெண்கள், பரிசு, பாராட்டு ஆகியவற்றைப் பெறுவார்கள். மனைவி, மனைவி வழிச் சொந்த பந்தங்கள் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண் :- 6.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- தென்கிழக்கு.
பரிகாரம் :- மகாலட்சுமி வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் தானம் செய்து வாருங்கள்!

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நெருப்பு, மின்சாரம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், உணவகம் நடத்துபவர்கள், பங்கு வர்த்தகம் போன்ற தொழில் செய்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். தாயின் உடல்நிலையில், நோய்கள் குறையக்கூடிய காலமாகும். விருந்தினர்களின் வரவால் சிறிய மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் பணம் பொருள் கிடைக்கலாம். சளி, ஒவ்வாமை போன்ற தொல்லைகள் வந்து போகும். புதிய தொழில்களைத் தொடங்கப் போட்ட திட்டங்களில் பிரச்சினைகள் தீர்ந்து தொழிலைத் தொடங்குவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படக்கூடிய காலமாகும். வாயு போன்ற வயிற்றுத் தொல்லைகள் வந்து போகும். புதிய சொத்துக்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். கலைத் துறையினர் பரிசும் பாராட்டுதல்களும் பெறுவர். தந்தை மகன் உறவுகளில் சிறிய பிரச்சினைகள் வந்து போகும். பிரிந்து போன உறவுகளுடன் திரும்பவும் ஒன்று சேருவதற்கான காலமாகும். வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவதற்காகப் போட்ட திட்டங்களில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. விபரீதமான எண்ணங்களையும், தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையையும் தவிர்த்தல் நல்லது.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிவப்பு.
இராசியான திசை :- தெற்கு.
பரிகாரம் :- முருகன் வழிபாடு செய்து சிகப்பு ஆடை தானம் செய்து வாருங்கள்!

தனுசு :-

தநுசுராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். நெருப்பு, மின்சாரம் போன்றவற்றில் கவனத்துடன் இருத்தல் நல்லதாகும். பிள்ளைகளால் சில பொருட் செலவுகளும், வீண் பிரச்சினைகளும் வந்து போகும். குல தெய்வ வழிபாடு செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். சகோதரர்களால் திடீர்த் தன வரவுகள் உண்டாகும். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுநலக் காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர், புகழ் அடைவதன் மூலம் மன நிறைவடைவீர்கள். வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் வந்து சேரச் சற்றுக் கால தாமதம் ஆகலாம். தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், கழிவுப் பொருட்களை வாங்குவோர் விற்போர், அணு ஆராய்ச்சித் துறை சார்ந்தவர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், வட்டித்தொழில, தரகு, போன்ற தொழில் செய்பவர்கள், பழைய பொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். சமுதாய நல்லிணக்கத்திற்காக உழைப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு சம்பந்தமான வழக்கு விஷயத்தில் மிகவும் கவனம் தேவை! செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வந்து போக வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 4.
இராசியான நிறம் :- கருப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- பிதுர், அம்மன் வழிபாடு செய்து கருப்பு வஸ்திரம் தானம் செய்து வாருங்கள்!

மகரம் :-

மகரராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். கண் காது ஆகியவற்றில் கவனம் தேவை. தீராத, நாட்பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவது நல்லதாகும். புதிய நண்பர்களின் சேர்க்கை மூலம் காரணமற்ற பிரச்சினைகள் வந்து சேரக் கூடிய காலம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லதாகும். தந்தையின் உடல் நிலையின் பாதிப்பால் வீண் மருத்துவச் செலவுகள் உண்டாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களின் உதவிகளால் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள முயற்சிப்பீர்கள். குல தெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் சில தடைகள் வரக்கூடும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பழகி வருதல் நல்லது. பொருளாதார நெருக்கடிகள் மாறிப் பணப் புழக்கம் மிக நன்றாக இருக்கும். திருட்டுப் போன பொருட்கள் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். உணவகம் நடத்துபவர்கள், அரசியல்வாதிகள், மருந்து உற்பத்தி – விற்பனைகளைச் செய்பவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். அரசியல்வாதிகளால், எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம்.

இராசியான எண் :- 5.
இராசியான நிறம் :- பச்சை.
இராசியான திசை :- வடக்கு.
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து பச்சை வஸ்திரம் தானம் செய்து வாருங்கள்!

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கடல் வளத்துறை சார்ந்தவர்கள், உப்பு முதலான கடல் வாழ் பொருட்களின் விற்பனையாளர்கள், திரவப் பொருள் வியாபாரிகள், பூஜைப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், தாய் சேய் நல விடுதிகளை நடத்துபவர்கள், ரத்தின வியாபாரிகள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள், மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள், இவற்றில் பணி புரியும் பேராசிரியர்கள் ஆகியோர் மிகவும் நற் பலன்களை அடைவர். கணவன் மனைவி உறவுகளில் சிற்சில பிரச்சினைகள் வந்து போகும். கூட்டுத் தொழிலில் பங்காளிகளுடன் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து தீரும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும், பாராட்டுக்களையும் பெறுவார்கள். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் சாதகமான நல்ல முடிவை அடையும். குழந்தைகளால் பொருட் செலவுகள் வந்த போதிலும் அவர்களால் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வயிறு, முதுகு போன்றவற்றில் உபாதைகள் வந்து போகும். அரசியல்வாதிகள் மூலம் எதிர்பாராத ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதால் பொருட் செலவுகள் ஏற்படும். விபரீத எண்ணங்களை நினைத்து நிம்மதி இழக்காதிருங்கள்.

இராசியான எண் :- 2.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- மேற்கு.
பரிகாரம் :- அம்மன் வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் தானம் செய்து வாருங்கள்!

மீனம் :-

மீனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். மூலம், நீர் தொடர்பான உபாதைகள் வந்து போகும். பயணத்தின்போது புதிய, பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில நன்மைகளை அடையலாம். உத்தியோகத்துறையினருக்கு நினைத்த இடங்களுக்குப் பணி இடமாற்றம் ஏற்படும். புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. வேற்று மதத்தவர்களால் எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்றுக் கால தாமதம் ஏற்படலாம். பிரிந்து போன கணவன் மனைவி உறவுகள் மீண்டும் தொடருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். சகோதர, சகோதரிகளின் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் வெற்றி பெற்று, அவர்களுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். பொதுத் தொண்டுகளைச் செய்பவர்களுக்கு நல்ல பெயர், புகழ் ஏற்படும் காலமாகும். பழுதுபட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணமும் வீண் பொருட் செலவுகளும் உண்டாகும். வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லதாகும். பூர்விகச் சொத்து போன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கச் சற்றுக் கால தாமதம் ஆகலாம். வடக்குத் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத ஆதாயங்கள் வந்து சேரும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரக் கூடிய காலமாகும்

இராசியான எண் :- 1.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- கிழக்கு.
பரிகாரம் :- சிவ ஆலய வழிபாடு செய்து காவி வஸ்திரம் தானம் செய்து வாருங்கள்!

*****************

Gnanayohi Dr.P.Esakki,I.B.A.M., R.M.P., D..I.S..M,
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627 759.
Tirunelveli District, Tamil Nadu, India
Phone : 04633-243029
Mobile : 98425-10578, 98425-29691
Fax : 04633-240390
Website : www.gnanayohi.com 

About The Author