இராசிபலன்கள் (8-9-2008 முதல் 14-9-2008 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளால் பணச் செலவுகள் ஏற்படும். தந்தைக்கு உடல் நிலை பாதிப்படையும். விவசாயத்தில் லாபம் கிடைக்கும். வீடு, நிலம், கார் போன்ற வாகனங்களால் பொருட்செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கணக்குத் தொழில் செய்வோர், வங்கிப் பணியாளர்கள், தபால் தந்தித் துறையினர் ஆகியோர் நற்பலன் அடைவர். பங்காளிகளால் ஆதாயம் கிடையாது. புதிய கடன்கள் வாங்குவீர்கள். சகோதரர்களுடன் பிரச்சினை வந்து நீங்கும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமை விரதமிருந்து மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணக்கூடிய காலமாகும். சகோதரர்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாதிகள் குறைய வாய்ப்புகள் உள்ளன. செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர் வர இருப்பதால். எச்சரிக்கை தேவை. உடம்பில் சீதள சம்பந்தமான நோய்கள், வலி சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். கட்டிட சம்பந்தமான பொருட்கள், கலைப் பொருள் வியாபாரிகள், கலைக் கூடம் நடத்துவோர் ஆகியோர் நற்பலன் அடைவர். குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வந்து விலகும். தாய் வழிச் சொந்தங்களால் பொருட்செலவு ஏற்படும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன் கிழமை விரதமிருந்து மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். கிழக்கு திசையில் இருந்து நற்செய்திகளைக் கேட்பீர்கள். நெருப்பு சம்பந்தமான தொழில்கள், அரசுப் பணியாளர்கள் மந்திரிப் பதவி வகிப்பவர்கள், மருத்துவர்கள், மருத்துவத் தொழிற்சாலைகள் நடத்துவோர்கள் லாபம் அடைவர். பொருளாதாரம் சீராகக் காணப்படும். உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய நிலம், வீடு மாற்றம் ஏற்படும. ஆடைகள், அணிகலன்கள் வாங்குவதால் பணச் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உடம்பில் நெருப்புக் காயங்கள், விபத்துக்களால் சிறிய தொல்லைகள் வந்து விலகும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து சூரிய வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் மேகசம்பந்தமான பீடைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. கலைத்துறையினருக்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். காதல் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. நோட்டு, பேனா, பென்சில் போன்ற வியாபாரிகள், தொலைபேசி, வங்கி, மருத்துவமனைகளில் பணியாற்றுவோர், காய்கறி வியாபாரிகள் லாபம் அடைவார்கள். யாத்திரைகளில் நற்பலன் அடையலாம். புதிய வீடு வாங்குவீர்கள். காரணமற்ற மனசஞ்சலம் உண்டாகும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து புதன்கிழமை விரதமிருந்து வரவும்.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். உடல் நிலையில் இதயம் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய் வழிச் சொந்தங்கள் மூலம் உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதார நெருக்கடி வந்து நீங்கும். காதல் விஷயங்கள் தோல்வியடையும்.வடகிழக்குத் திசையில் இருந்து பொருள் வரவு உண்டு. கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். பூ, பழம், போன்ற வியாபாரிகள், பூசைப் பொருட்கள் விற்பனை செய்வோர்கள், கல்லூரி முதல்வர்கள், ஆலயப்பணி செய்வோர், கம்ப்யூட்டர் தொழில் நடத்துவோர் லாபம் அடைவர். வீட்டைத் திருத்திக் கட்டுவீர்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமை விரதமிருந்து சிவ வழிபாடு செய்து வரவும்.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். மன பயம் தவிர்க்கவும். எதிரி தொல்லைகள் விலகும். யாத்திரையின் போது கண்டங்கள் வந்து நீங்கும். வடகிழக்கு திசையிலிருந்து பொருள் வரவு உண்டு. உத்தியோகம் பார்ப்பவர்களுககு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். உடம்பில் எலும்பு, ரத்தம் சம்பந்தமான பிணிகள் வந்து விலகும். கோவில் பணி செய்வோர்கள், தர்ம ஸ்தாபனங்கள் நடத்துவோர், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகியோர் லாபம் அடைவர். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். தந்தை மகன் உறவுகளில் பிரச்சினைகள் வந்து நீங்கும். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படும்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமை விரதமிருந்து பிதுர் வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

துலா ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களால் பொருள் வரவு உண்டு. புதிய பங்காளிகளுடன் கூட்டுத் தொழில் செய்ய லாபம் அடைவர். கொடுத்த கடன்கள் திரும்பக் கிடைக்கும். காதல் விஷயங்கள் வெற்றி தரும். குடும்பச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடம்பில் உஷ்ண சம்பந்தமான நோய்கள் வந்து விலகும். நெருப்புத் தொழில், போலீஸ் துறையைச் சார்ந்தவர்கள், கமிஷன், தரகு வியாபாரிகள் லாபம் அடைவர். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர சகோதரிகளால் லாபம் இல்லை. திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் வந்து சேரும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க் கிழமை விரதமிருந்து துர்க்கை வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கைகளால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு நற்பெயர், புகழ் உண்டாகும். அரசு வழக்குகள் சாதகமான தீர்ப்பைத் தேடித் தரும். பிள்ளைகளால் பொருள் வரவு உண்டாகும். உடம்பில் மூட்டு, முழங்கால்களில் தொல்லைகள், வாத சம்பந்தமான பிணிகள் ஏற்பட்டு விலகும். இரும்பு, இயந்திர சம்பந்தமான வியாபாரிகள், எண்ணை, பலசரக்குப் பொருள்கள் விற்பனை செய்போர்கள் லாபம் அடைவர். சகோதர சகோதரிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான சூழ்நிலை உருவாகும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமை விரதமிருந்து சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். நித்திரையில் பங்கம் ஏற்படலாம். வீடு மாற்றம் மூலம் மன நிம்மதி உண்டாகும். புதிய ஆடைகள், அணிகலன் வாங்குவீர்கள். செய்தொழிலில் லாபம் பெறுவீர்கள். உடம்பில் மூலம் சம்பந்தமான வியாதிகள் வயிற்று உபாதைகள் வந்து நீங்கும். இரும்புக் கடை வைத்து வியாபாரம் செய்வோர்கள், அடிமைத் தொழில் செய்வோர்கள், புலால் உணவு வியாபாரிகள் லாபம் அடைவர். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். தூரத்து நற்செய்திகள் தேடி வரும். நீண்ட தூரப் பயணங்களால் வெற்றியடைவீர்கள். தனப் புழக்கம் சீராக இருக்கும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமை விரதமிருந்து நவகிரக வழிபாடு செய்து வரவும்

மகரம்:-

மகர ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளால் பொருட்செலவு உண்டு. மனைவிக்கு நோய் வாய்ப்படும். செய்தொழிலில் புதிய பிரச்சினைகள் ஏற்படும். வங்கிகள் மூலம் கடன் பெற விரும்பியவருக்கு கடன்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதை சற்றுத் தள்ளிப் போடவும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உடம்பில் தோல் சம்பந்தமான வியாதிகள், உஷ்ண சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். ஆலயப் பொருட்கள் வியாபாரம் செய்வோர், திரவ சம்பந்தமான வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமை விரதமிருந்து அம்மன் வழிபாடு செய்து வரவும்.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். கடன்கள் தொல்லை தரும். தந்தைக்கு உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் மேலிடும். தூரத்து நற்செய்திகளைக் கேட்பீர்கள். ஆபரணங்கள், மற்றும் கட்டிடங்களின் மூலம் வங்கிகளிலிருந்து கடன் பெறுவீர்கள். உடம்பில் நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து தீரும். இராணுவத் துறையைச் சார்ந்தவர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் லாபம் அடைவர். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். நண்பர்களால் பொருட் செலவுகள் ஏற்படும். புதிய தொழில்கள் தொடங்குவதைத் தள்ளிப் போடவும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க் கிழமை விரதமிருந்து முருகன் வழிபாடு செய்து வரவும்.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். பூமி சம்பந்தமான காரியங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். தந்தை மகன் உறவில் சுமூகமான சூழல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நற்பயனடைவர். அரசு வழக்கு போன்ற காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடம்பில் உஷ்ண சம்பந்தமான பீடைகள், எலும்பு, இரத்த சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வியாபாரம் செய்வோர், கலைத்துறையினர் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் வியபாரிகள் லாபம் அடைவர். குல தெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லது.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமை விரதமிருந்து மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

About The Author