இராசிபலன்கள் (8-9-2014 முதல் 14-9-2014 வரை)

மேஷம் :-

மேஷராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். புதிதாக வீடு, வாகனம் மற்றும் நிலபுலன்கள் வாங்க வாய்ப்புகள் உள்ளன. பிள்ளைகளுக்கு எதிர்பார்த்து வந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தாயின் உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகுவதோடு மருத்துவச் செலவுகள் ஏற்படும் கணவன் மனைவி உறவில் விரிசல்களும் வீண் மனக் குழப்பங்களும் வந்து போகும். கம்ப்யூட்டர் சம்பந்தமாகிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், பழ வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துவோர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், உணவு தானிய வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவார்கள். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். உறவினர்களால் வீண் பொருட்செலவுகள் உண்டாகும். மற்றவர்களை நம்பி பணம், பொருள், கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். நாட்பட்ட விசா சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் காலமாகும். நீண்ட நாட்களாக வராத பணம் கை வந்து சேரக் கூடிய காலமாகும்.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- சிவ ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். தீராத நாட்பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், இரும்பு இயந்திரம் எண்ணை சம்பந்தமான வியாபாரிகள், பலசரக்குத் தொழிற்செய்வோர், பழைய இரும்பு பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்களின் வியாபாரிகள், அலுவலகப் பணி உதவியாளர்கள், மிசினரி சம்பந்தமான உதிரி பாகங்களை ஏற்றுமதி இறக்குதி செய்வோர், இரசாயனம் மற்றும் கழிவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் ஆதாயம் அடைவார்கள். நீண்ட காலமாக புதிய கட்டிடம் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தனவரவு உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய நிகழச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. காதல் விஷயத்தில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். குலதெய்வ வழிபாட்டிற்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். உத்தியோகத் துறையினருக்கு பணியிட மாற்றமும் பதவி உயர்வுகளும் வரக் கூடும். உற்றார் மற்றும் உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் பொருட்செலவுகளும் மன நிம்மதி குறைவும் ஏற்படலாம். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும். மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதை சற்று ஆலோசித்து செய்வது நல்லது. மூத்த சகோதரர்களால் பொருட்செலவுகள் வந்து சேரும்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் மருத்துவத்திற்காக வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடம்பில் தோல் மற்றும் ரத்த சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமூகமான உறவுகள் ஏற்புடும். கட்டிட சம்பந்தமான செங்கல் மணல், கல் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர், அழகுக்கலைக் கூடங்களை நடத்துவோர், சினிமா நாடகம் போன்ற துறை சார்ந்தவர்கள், கார் லாரி போன்ற வாகனத் தொழிற்செய்வோர், கலைக் கல்லூரி மாணவர்கள, ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், நறுமணப் பொருட்களின் வியாபாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். வராத கடன் கொடுத்துள்ள பணம் எதிர்பாராமல் திரும்பக் கிடைக்கும். நண்பர்களால் வீண் விவாதங்களும் தொல்லைகளும் வந்து போகும். கண்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலமாகத் திடீர் தன வரவுகள் உண்டாகக் கூடிய காலமாகும். புதிய கூட்டுத் தெழில் முயற்சிகளை சற்றுக் கால தாமதமாக தொடங்குவது நல்லது.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

கடகம் :-

கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் செய்வோர்களுக்கு நல்ல விளைச்சலும், லாபமும் கிடைக்கும். புதிய வீடுகளை வாங்கப் போட்ட திட்டங்களுக்காக வங்கிகளில் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கக் கூடிய காலமாகும். திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்களில் வெற்றி அடைவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். உறவினர்களின் வரவால் பொருள் வரவும் மனச் சந்தோசமும் உண்டாகும். பொருளாதாரம் சுமாராக காணப்படும். எதிர்பாராத நீண்ட தூரப் பயணங்களின் மூலம் மன நிறைவடைய வாய்ப்பு உள்ளது. உத்தியோகத் துறையினருக்கு பதவி உயர்வுகள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவுகள் நிரம்ப உண்டாகும். கழிவுப் பொருள் வியாபாரிகள், கோர்ட்டுகளில் பணி செய்வோர், தரகு மற்றும் வட்டித் தொழிற்செய்வோர், தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர், பழைய இரும்பு வியாபாரிகள், சாயப்பவுடர் தொழிற்சாலைகளை நடத்துபவர்கள், விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள், ஆசிரம வாசிகள், மீன் முட்டை மற்றும் மாமிச உணவுகளை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் லாபம் அடைவார்கள். உத்தியோகம் பார்பவர்கள் தங்களது மேலதிகாரிகளுடன் கவனமாகப் பணி ஆற்றுதல் நல்லதாகும்.

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- அம்மன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் மிகுந்த அக்கறையுடன் திட்டம் போடுவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலம் எதிர்பாராத தனவரவு உண்டாகும். மகான்களின் நல்லாசிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்காக வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்ப உள்ளது. குடும்பத்தில் தடைபட்டிருந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். நெருப்புத் தொழிற்செய்வோர். கேஸ், வெல்டிங் போன்ற வியாபாரிகள், காவல்துறை, ராணுவம் சார்ந்தவர்கள், தீயணைப்பு துறையைச் சேர்ந்தவர்கள், காரமான உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். விட்டுப்போன கணவன் மனைவி உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. எதிர்பாராமல் வட திசையில் இருந்து பொருள் வரவும், நல்ல செய்திகளும் வந்து சேரும். நண்பர்களால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். பெண்களால் அவப்பெயர்கள் வரக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் பழகுதல் நல்லது. விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கண் காதுகளில் மிகவும் கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- முருகன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். யாத்திரையில் மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வருவது நல்லதாகும். தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். பல காலமாகத் தீராத நோய்களுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கும். காதல் விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது. உற்றார் உறவினர்களின் வருகையால் பொருட்செலவுகள் உண்டாகலாம். விவசாயம் செய்வோர், அரசியல்வாதிகள், கலைத் துறையினர்கள், அணு ஆராய்ச்சித் துறையைச் சார்ந்தவர்கள், கழிவுப் பொருள்களின் வியாபாரிகள், அடிமைத் தொழிற்செய்வோர், மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள், வட்டித் தொழிற்செய்வோர் ஆகியோர் நல்ல ஆதாயம் அடைவார்கள். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம். வீடு நிலம் வாங்குவது போன்ற முயற்சிகளில் அரசு சம்பந்தமாக எதிர்பார்த்து வந்த உதவித் தொகைகள் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் காரணமற்ற பிரச்சினைகள் வந்து சேரும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும். வண்டி வாகனங்களில் கவனமுடன் பயணம் செய்து வரவும்.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிவப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- விநாயகர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

துலாம் :-

துலாம்ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். ஆதரவற்றோர்களுக்கு உதவுவதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள். கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும். பயணங்களில் மிகுந்த கவனமுடன் சென்று வருதல் நல்லதாகும். திருமண விஷயங்களுக்காக முயற்சி செய்யலாம். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பூ பழம், பூஜைப் பொருள் வியாபாரிகள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், கம்ப்யூட்டர் துறையை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்வோர், அறநிலையத் துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துபவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், குழந்தைகள் காப்பகங்களை நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவீர்கள். போட்டி, லாட்டரி மூலமாகத் திடீர் தனவரவுகள் உண்டாகலாம். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விஷயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். பிள்ளைகளால் எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பண உதவிகள் உறவினர்களால் கிடைக்கும். காணாமற்போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். உடல்நிலையில் வாயு மற்றும் வாதம் ஆகிய தொல்லைகள் வந்து போகும். விசா சம்பந்தமான பிரச்சினைகள் தீருவதற்காக புதிய பணச் செலவுகளைச் செய்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- சிவ வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். உறவினர்கள் மற்றும் சொந்த பந்தங்களால் ஆதரவு இல்லை. பண விஷயங்களுக்கான நீண்ட தூரப் பயணங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. ரேஸ், லாட்டரி போன்ற சூதாட்ட சம்பந்தமான விஷயங்களினால் பணம் கை விட்டுப் போகலாம். அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு மனக்கவலை அடையாதீர்கள். குலதெய்வ ஆலயங்களைத் திருத்தி கட்டப் போட்ட திட்டங்களில் சிறிய தடைகளின் பேரில் வெற்றி அடைவீர்கள். கொடுக்க வேண்டிய பழைய கடன்களைக் கொடுத்துப் பதிய கடன்களை வாங்கத் திட்டம் போடுவீர்கள். குடும்பச் சொத்துக்கள் போன்ற விஷயத்தில் நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். உடம்பில் உஷ்ணம், சுரம் போன்ற உபாதைகள் வந்து போகும். குடும்பத்தில் தடைபட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத் துறையினருக்குப் பணியிட மாற்றங்கள் ஏற்படலாம். தண்ணீர், கூல்டிரிங்ஸ், திரவ சம்பந்தமான பொருள் வியாபாரிகள், பூஜைப் பொருள் வியாபாரிகள், மருந்து கம்பெனி நடத்துபவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஜவுளி மற்றும் நூல் வியாபாரிகள், கடல்வளத் துறையைச் சார்ந்தவர்கள், உப்பு உர வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- அம்மன் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன், சந்திரன் இருவரும் நன்மை தரும் கிரகமாகும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். தேவையற்ற நண்பர்களின் தொடர்புகளால் பிரச்சினைகள் வர வாய்ப்பிருப்பதால் கவனமுடன் பழகுதல் நல்லதாகும். விபரீதமான எண்ணங்களை விட்டொழித்து காரியத்தில் கவனமாய் இருங்கள். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விஷயத்தில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். யாத்திரையின்போது புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகி அவர்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் மாறித் தேவையான பொருளாதாரம் வந்து சேரும். உடம்பில் முதுகு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்து போகும். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை தர வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண தகவல் மையங்கள், வாகனங்களில் பணியாற்றுவோர், அரசுத் துறையைச் சார்ந்த வழக்கறிஞர்கள், நெருப்பு சம்பந்தமான ஹோட்டல் தொழிற்செய்வோர், அரசுத் துறை சார்ந்த மந்திரி பதவி வகிப்போர், அழகு சாதனப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். வங்கிகளில் இருந்து வெகு காலமாக எதிர்பார்த்து இருந்து வந்த பண உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

இராசியான எண் :- 1, 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு, மேற்கு
பரிகாரம் :- சிவன் மற்றும் அம்மன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

மகரம் :-

மகரராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ வழிபாடு செய்து வருதலால் கிரக தோசங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. வங்கிகளால் எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். தந்தை மகன் உறவில் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களால் சில ஆதாயங்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. உடம்பில் வாயு மற்றும் வயிறு ஆகியவை தொடர்பான உபாதைகள் வந்து போகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். பொது நலக் காரியங்களுக்காக மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நற்பெயர் எடுப்பீர்கள். முன் கோபத்தை தவிர்த்து அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. ஷேர் மார்க்கெட், கணிதம், எழுத்துத் துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், அரசு உயர் பதவிகள் வகிப்பவர்கள், நெருப்பு சம்பந்தமான உணவு பொருட்களின் வியாபாரிகள், ஹோட்டல் பணி செய்பவர்கள் ஆகியோர் நல்ல ஆதாயம் அடைவார்கள். பெண்கள் சம்பந்தமான காதல் விஷயங்களில் நற்செய்திகள் கிடைக்கும்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- சிவ ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்த வரவும்.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். உடல்நிலையில் இருந்து வந்த நாட்பட்ட நோய்கள் நீங்கி மன நிம்மதி உண்டாகும். புதிய பெரிய மனிதர்களையும் அரசியல்வாதிகளையும் சந்திக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கும். நண்பர்களால் ஆதாயம் இல்லை. பெண்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்று. சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுப் பணிகளில் கலந்து கொண்டு நற்பெயர் மற்றும் புகழ் அடைய வாய்ப்பு உள்ளது. புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். நெருப்புத் தொழில், காவல்துறை, ராணுவம், தீயணைப்புத் துறையைச் சார்ந்தவர்கள், இணைய தளங்களை நடத்துபவர்கள், மின்சாரத் துறை சார்ந்தவர்கள, மின் சாதனப் பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோர் ஆகியோர் நற்பலன்களை அடைவார்கள். வெகு தூரப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருவது நல்லது. பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து நல்ல சூழ்நிலை காணப்படும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான காலமாகும். யாத்திரையில் கவனமுடன் பயணம் செய்யவும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- முருகன் வழிபாடு செய்து வரவும்.

மீனம் :-

மீனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். பேப்பர், பேனா பென்சில் போன்ற எழுது பொருட்கள் போன்ற ஸ்டேஷனரி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர், அச்சுத்துறை சார்ந்த பொருட்கள் விற்பனையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள், மூலிகை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், ஆகியோர் நல்ல லாபம் அடைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தை தவிர்த்துப் பணியாற்றுதல் நல்லது. வீடுகளைப் புதுப்பித்துக் கட்டுவதற்காக பணச் செலவுகள் வந்து சேரும். பூர்வீக இடங்களை விட்டு மாறிச் செல்லத் திட்டம் போடுவீர்கள். ஆதரவு அற்ற ஏழைகளுக்காக உதவி செய்து அதனால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வெகு நாட்களாக எதிர்பார்த்து இருந்த புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். விட்டுப்போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. நெடு நாட்களாகப் பிரச்சினையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக் கூடிய காலமாகும். அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். விபரீத எண்ணங்களை விட்டுக் காரியத்தைக் கவனிக்கவும். உடம்பில் மூளை, நரம்பு, எலும்பு போன்ற பகுதிகளில் உபாதைகள் வந்து போகலாம். சூதாட்டம் போன்ற காரியங்களில் தலையிட்டு பொருள் இழப்பு ஏற்படலாம். விசா சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து அன்ன தானம் செய்த வரவும்.

*****************

Gnanayohi Dr. P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18(25B/1), Pulavar Street
Krishnapuram
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India
Phone : 04633-243029
Mobile : 98425-10578, 98425-29691
Fax : 04633-240390
Website : www.gnanayohi.com

About The Author