இராசிபலன்கள்(15-12-2014 முதல் 21-12-2014 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வங்கி உதவிகளின் மூலம் புதிய வாகனங்களை வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம். பிள்ளைகளால் சிற்சில தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர், புகழ் அடைவீர்கள். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நிலபுலன் வாங்குவோர் விற்போர், கட்டட சம்பந்தமான தொழில் செய்பவர்கள், கார் லாரி போன்ற வாகனத் தொழில் செய்பவர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், சிற்றுண்டி, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை விற்பவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். வேற்று மதத்தவர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். வீடு தொழிற்சாலை ஆகியவற்றை இடமாற்றம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. கண், காது ஆகியவற்றில் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது! கணவன் – மனைவி உறவில் இது நாள் வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி தம்பதியர் ஒற்றுமையுடன் காணப்படுவர்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மன நிறைவடைவீர்கள். வங்கிகள் மூலமாக நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். குழந்தைகளின் உடல்நிலையில் மிகவும் கவனத்துடன் இருங்கள்! பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் மிகுந்த சிரமத்தின் பேரில் சரி செய்து விடுவீர்கள். பூ, பழம், பூஜைப் பொருட்கள், கணினி போன்றவற்றை உற்பத்தி விற்பனை செய்பவர்கள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள், ஆலயப்பணி செய்பவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், நவரத்தின வியாபாரம் செய்பவர்கள், குழந்தைகள் காப்பகம் நடத்துபவர்கள், அரசு உயர் பதவிகளை வகிப்பவர்கள், மந்திரிகள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். கால்களில் கவனம் தேவை! நண்பர்களால் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் மிகவும் கவனத்துடன் இருங்கள்! உற்றார் உறவினர்களின் வரவுகளால் நன்மை அடைவீர்கள். பயணத்தின்போது புதிய நபர்களின் சந்திப்பால் சிற்சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள். தாயின் உடல்நிலை பாதிக்கப்படலாம். தீராத நோய்கள் தீர நீண்ட பயணங்களை மேற்கொள்ளுவீர்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் எச்சரிக்கையாய்ப் பேசிப் பழக வேண்டும்! தோல் சம்பந்தமான தொழில் செய்பவர்கள், வேதிப்பொருள் வியாபாரிகள், பழைய இரும்பு, கழிவுப் பொருள் வியாபாரிகள், நாடகத்துறை சார்ந்தவர்கள், மருத்துவப் பரிசோதனைக்கூடம் நடத்துபவர்கள், அசைவ வியாபாரிகள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்த பணியாளர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். வெகு காலமாக விட்டுப் போன பழைய உறவினர்களுடன் தொடர்புகள் ஏற்படும். காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். முதுகு வலி, மூலம் போன்ற தொல்லைகள் வந்து போகும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் எந்த விஷயத்திலும் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! வீடு வாகனங்களைப் புதுப்பித்தலுக்காகப் புதிய கடன் வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டுக்களிலும் கவனத்துடன் இருக்க வேண்டும்! மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். அரசு வழக்குகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- கணபதி வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒரு சிலருக்கு ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தந்தை – மகன் உறவில் இது வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையாய் இருப்பார்கள். நரம்பு, எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். தீயணைப்பு, கேஸ், வெல்டிங், உணவகம் போன்ற நெருப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள், காவல்துறை சார்ந்தவர்கள், விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள், நிலக்கரி போன்ற எரிபொருள் வியாபாரிகள், காரமான உணவுப் பொருட்கள், மசாலாப் பொடி போன்றவற்றை வியாபாரம் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். நீண்ட காலமாக வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த பண உதவிகள் வந்து சேரும். நாட்பட்ட விசா பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். அரசியல்வாதிகளால் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும். புனிதப் பயணம் சென்று வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பயணத்தின்போது மிகக் கவனத்துடன் இருப்பது நல்லது! சகோதர சகோதரிகளின் சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- துர்க்கை வழிபாடு செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல்நிலை பாதிக்கப்படலாம். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நிலம் சம்பந்தமான தொழில் செய்பவர்கள், நகை வியாபாரிகள், தீயணைப்பு போன்ற நெருப்புத் தொழில் செய்பவர்கள், காவல்துறை, ராணுவம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழில் செய்பவர்கள், காரமான உணவுப் பொருட்கள், மசாலாப் பொடிகள் போன்றவற்றை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். பணப் புழக்கத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். தந்தை வழிச் சொந்த பந்தங்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். புதிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது. பயணத்தின்போது மிகுந்த கவனத்துடன் இருப்பதால் விபத்துக்களைத் தடுக்கலாம். நீண்ட காலமாகத் திரும்பி வராத கடன், கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் ஆகியவை திரும்பக் கை வந்து சேரும். நீண்ட பயணங்களால் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பூர்விகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும். புதிய வீடு வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் வந்து சேரும். வாயுத்தொல்லை, வயிற்று உபாதை போன்றவை வந்து போகலாம். மாணவர்களுக்குக் கல்வியில் எதிர்பாராத சில தடைகள் வந்து போக வாய்ப்பு உள்ளதால் மிக எச்சரிக்கையுடன் பயின்று வருதல் நல்லது! உற்றார் உறவினர்களின் எதிர்பாராத வரவுகளால் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்களையும் அடைவீர்கள். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம், பொருட்கள் மிகுந்த சிரமத்தின் பேரில் வந்து சேரும் காலமாகும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெற இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். நாட்பட்ட விசா சம்பந்தமான பிரச்சினைகள் தீருவதற்கான வாய்ப்பு உள்ளது. வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் பிரச்சினைகளை விலைக்கு வாங்காதீர்கள்! நடிகர்கள், கலைக் கல்லூரி மாணவர்கள், கட்டுமானப் பொருள் வியாபாரிகள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், கலைத்துறை சார்ந்த பேராசிரியர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது! நாட்பட்ட பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்குவதால் நிம்மதிக் குறைவு ஏற்படலாம். நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். காணாமல் போன பொருட்கள், நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். பழைய இரும்பு, பழைய இயந்திரங்கள் தொடர்பான பணி செய்பவர்கள், வேதியியல்துறையினர், தரகு, ஏஜன்சி, குத்தகை போன்ற தொழில்கள் செய்பவர்கள், சாயப் பொடி வியாபாரிகள், அசைவப் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இதுவரையில் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்லதொரு முடிவு வரும். மூலம் போன்ற வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர், அம்மன் வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றங்கள் ஏற்படலாம். வெகு காலமாகப் பிரிந்திருக்கும் கணவன் – மனைவி ஒன்று சேரும் காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். தீராத நாட்பட்ட நோய்கள் தீரப் புதிய பெண் மருத்துவர்களின் உதவியை நாடுவதன் மூலம் நற்பலன் அடைவீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! பொருளாதாரத்தில் இது வரையில் இருந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு நிலம் வாங்குவதற்காக வங்கிகளிலிருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்ட சம்பந்தமான விஷயங்களில் ஈடுபட்டு ஏமாற வேண்டாம்! கணிதம், எழுத்துத்துறை ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், வழக்கறிஞர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், புகைப்படக் கலைஞர்கள், வங்கிப் பணியாளர்கள், நாடகத்துறை சார்ந்தவர்கள், காய்கறி, இலை, மூலிகை சம்பந்தமான மருந்துப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். நறுமணப் பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், இனிப்புப் பொருள் வியாபாரிகள், கணினித் தயாரிப்பாளர்கள், பேராசிரியர்கள், பொதுப்பணி செய்பவர்கள், பூஜைப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். புதிதாக வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சுப காரிய சம்பந்தமாக வட திசையில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற விஷயங்களின் மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகலாம். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறையும். நீண்ட காலமாகப் பிரச்சினையில் இருந்து வந்து பூர்விகச் சொத்துக்கள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் கைக்கு வந்து சேரும். நீண்ட பயணங்களின் மூலம் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேற வாய்ப்புகள் உள்ளன. கணவன் – மனைவி உறவில் காரணமற்ற சச்சரவுகள் வந்து நீங்கும். விசா சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது. அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டாகும். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய செலவுகள் வந்து சேரலாம். திரவப் பொருள் வியாபாரிகள்,
கடல்துறை சார்ந்தவர்கள், கப்பல் பணி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள். காதல் விஷயங்களில் நண்பர்களின் உதவியால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். மாணவர்கள், கல்வியில் சில தடைகள் வர இருப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்! புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்காக நீண்ட காலமாகப் போட்டிருந்த திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். கண்களில் மிகவும் கவனத்துடன் இருங்கள்! பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் பரிசும் பாராட்டுக்களும் பெறுவார்கள். திரும்பி வராத கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் போன்றவை காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். கண், காது ஆகியவற்றில் சிற்சில உபாதைகள் வந்து போகலாம். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். தந்தை – மகன் உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக இன்பச் சுற்றுலாக்களை மேற்கொள்ளுவீர்கள். வெகு நாட்களாகத் திரும்பி வராத கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம் திரும்பக் கிடைக்கும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் வம்புகளை விலைக்கு வாங்காதீர்கள்! வெளிநாடு செல்லுதல் போன்ற விஷயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயம் அடைவீர்கள். இரும்பு, இயந்திரம், வேதியியல் போன்ற தொழில்கள் செய்பவர்கள், ஆலை அதிபர்கள், எண்ணெய் வியாபாரிகள், பலசரக்குக் கடை நடத்துபவர்கள், பழைய பொருட்களை விற்பனை செய்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். வங்கிகளால் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படும். சமுதாய வளர்ச்சிக்கான விஷயங்களில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது! பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! வாகனங்களிலும் மின்சாரம் சார்ந்த பணிகளிலும் ஈடுபடுவோர் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்!

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நெருப்பு, உணவகம், மின்சாரம் போன்றவை தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். தீராத நாட்பட்ட நோய்கள் தீரப் புதிய மருத்துவர்களின் உதவிகள் கிடைக்கும். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் துலங்கும். உற்றார் உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் செலவுகள் வந்து சேரும். திருமணம் போன்ற சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும். அரசு வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கலாம். நண்பர்களால் வீண் செலவுகளும் நிம்மதி இன்மையும் ஏற்படலாம். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடிய காலமாகும். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது! மற்றவர்களை நம்பிப் புதிய கடன்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு விசா பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி உண்டாகும். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்!

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author