இராசிபலன்கள்(17-11-2014 முதல் 23-11-2014 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். தடைப்பட்டு வந்த திருமணக் காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. பழைய கடன்களைக் கொடுத்துப் பதிய கடன்களை வாங்கத் திட்டம் போடுவீர்கள். குடும்பச் சொத்துக்கள் போன்ற விஷயங்களில் நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். உடற்சூடு, காய்ச்சல் போன்ற உபாதைகள் வந்து போகும். குலதெய்வ ஆலயத்தைத் திருத்திக் கட்டும் திட்டங்களில் சிறிய தடைகள் வந்து பிறகு வெற்றி அடைவீர்கள். இனிப்புப் பொருள் வியாபாரிகள், கணினித்துறை சார்ந்தவர்கள், பழ வியாபாரிகள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், பூ, பழம், நறுமணப் பொருட்கள் போன்றவற்றை விற்பவர்கள் ஆகியோர் லாபம் அடைவர். பண விஷயங்களுக்கான நீண்ட தூரப் பயணங்களைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது. பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற விஷயங்களினால் பணம் கை விட்டுப் போகலாம். அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டுக் கவலை அடையாதீர்கள்! அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்! பணியில் இருப்பவர்களுக்கு இட மாற்றம் ஏற்படலாம். உறவினர்கள் உதவக்கூடிய நிலையில் இல்லை.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர்கள் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லதாகும்! பொதுநலக் காரியங்களுக்காக மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நற்பெயர் எடுப்பீர்கள். பங்குச்சந்தையில் ஈடுபடுவோர், நகை வியாபாரிகள் ஆகியோர் மிகுந்த எச்சரிக்கையுடன் வணிகத்தில் ஈடுபடுவது நல்லது! முன் கோபத்தைத் தவிர்த்து அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள், வாகனங்களில் பணியாற்றுபவர்கள், அரசுத்துறை வழக்கறிஞர்கள், திரைப்பட – நாடகத்துறை சார்ந்தவர்கள், கட்டுமானப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். வெகு காலமாக எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் வங்கிகளின் மூலமாகக் கிடைக்கும். தந்தை – மகன் உறவில் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாயுத் தொல்லை, வயிற்றுத்தொல்லை ஆகிய உபாதைகள் வந்து போகும். ஒரு சிலருக்குப் புதிய இடமாற்றம் ஏற்படக்கூடிய காலமாகும். குலதெய்வ வழிபாடு செய்து வருதலால் கிரக தோஷங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புதிய வீடு மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. விவசாயம் செய்பவர்கள் புதிய விவசாய முறைகளால் நல்ல லாபம் அடைவர்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். நீண்ட நாட்களாகத் தடைப்பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமணக் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். சமுதாய முன்னேற்றம், ஆலயத் திருப்பணி போன்ற விஷயங்களில் தலையிட்டு நற்பெயர் எடுப்பீர்கள். திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். பணியாற்றுபவர்களுக்குப் பதவி உயர்வும் மேலதிகாரிகளின் ஆதரவும் நிரம்ப உண்டாகும். விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல விளைச்சலும், லாபமும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய வீடு வாங்குவதற்காக எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் கிடைக்கக்கூடிய காலமாகும். உறவினர்களின் வரவால் பொருள் வரவும் சந்தோஷமும் உண்டாகும். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். எதிர்பாராத நீண்ட பயணங்களின் மூலம் மன நிறைவடைய வாய்ப்பு உள்ளது. அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், பழைய பொருள் வியாபாரிகள், அணு ஆராய்ச்சித்துறையினர், அலுவலக உதவிப் பணிகளைச் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- அம்மன் மற்றும் பிதுர் வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்கள் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிம்மதி அடைவீர்கள். மகான்களின் தரிசனங்களாலும் நிம்மதி அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். பெண்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்று. புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். எழுது பொருட்கள், அச்சுத்துறை சார்ந்த பொருட்கள் போன்றவற்றை விற்பவர்கள், நாடகத்துறை சார்ந்தவர்கள், கலை – இலக்கியத் துறைகளில் பணியாற்றுபவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். வெகு தூரப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருவது நல்லது. நாட்பட்ட நோய்கள் நீங்கி நிம்மதி உண்டாகும். புதிய பெரிய மனிதர்களையும் அரசியல்வாதிகளையும் சந்திக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கும். நண்பர்கள் உதவக்கூடிய நிலையில் இல்லை. வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் பிரச்சினைகளை விலைக்கு வாங்க வேண்டாம்! கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது! பூர்விகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து நல்ல சூழ்நிலை காணப்படும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பல காலமாகத் தீராத நோய்கள் புதிய மருத்துவர்களின் உதவியால் நீங்கும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்டங்களில் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லதாகும்! வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளில் அரசு சம்பந்தமாக எதிர்பார்த்து வந்த உதவித் தொகைகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் செலவுகள் உண்டாகலாம். தந்தை – மகன் உறவில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி சுமுகமான சூழல் உருவாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகலாம். சாயப் பொடி வியாபாரிகள், கூலித் தொழில் செய்பவர்கள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், கழிவுப் பொருள் வியாபாரிகள், மடாதிபதிகள், மடங்களில் பணியாற்றுபவர்கள், அலுவலக உதவிப் பணி செய்பவர்கள் ஆகியோர்க்கு மிகுந்த லாபம் உண்டாக வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களின் சேர்க்கையால் காரணமற்ற பிரச்சினைகள் வந்து சேரும் என்பதால் எச்சரிக்கையுடன் இருங்கள்! காதல் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது!

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- விநாயகர் வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் மாறித் தேவையான பணம் வந்து சேரும். முதுகு, வயிறு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகும். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை தர வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். விபரீதமான எண்ணங்களை விட்டொழித்துக் காரியத்தில் கவனமாய் இருங்கள்! சொத்து சம்பந்தமான வழக்கு விஷயத்தில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டாகி அவர்களால் காரியங்களைச் சாதித்து கொள்வீர்கள். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள், அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள், உணவகத் தொழில் செய்பவர்கள், காவல் – இராணுவம் – தீயணைப்பு ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள், தங்க நகை வியாபாரிகள், கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழில் செய்பவர்கள், நிலபுலன் சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர் ஆதாயம் அடைவர். விசா சம்பந்தமான நாட்பட்ட பிரச்சினைகளுக்கு நல்ல முடிவுகள் கிடைப்பதற்கான காலமாகும். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! மற்றவர்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிருங்கள்!

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவதற்கான செலவுகள் வந்து சேரும். பூர்விக இடங்களை விட்டு மாறிச் செல்லத் திட்டம் போடுவீர்கள். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். வேற்று மதத்தவர்கள் உதவக்கூடிய சூழல் இல்லை. காணாமல் போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். ஆதரவற்ற ஏழைகளுக்காக உதவி செய்து அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். மூளை, நரம்பு, எலும்பு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகலாம். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. நெடு நாட்களாகப் பிரச்சினையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக்கூடிய காலமாகும். நாடகத்துறை சார்ந்தவர்கள், கலை – இலக்கியத்துறைகளில் பணியாற்றுபவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், எழுதுபொருட்கள், அச்சுத்துறை சார்ந்த பொருட்கள் விற்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். விபரீத எண்ணங்களை விட்டுக் காரியத்தில் கவனமாய் இருங்கள்! சூதாட்டம் போன்ற காரியங்களில் தலையிடுவதால் பொருள் இழப்பு ஏற்படலாம். மேலதிகாரிகளிடம் முன் கோபத்தைத் தவிர்த்துப் பணியாற்றுதல் நல்லது.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் எதிர்பாராத தன வரவு உண்டாகும். பெண்களால் அவப் பெயர் வரக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் பழகுதல் நல்லது! விவசாயம் செய்பவர்கள், அரசியல்வாதிகள், கலைத்துறையினர் ஆகியோர் ஆதாயம் அடைவர். மனைவியின் உடல் நிலையில் சிற்சில பாதிப்புகள் ஏற்படலாம். மகான்களின் நல்லாசிக்காக நீண்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர்பாராத தன வரவு உண்டாகலாம். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் மிகுந்த அக்கறையுடன் திட்டம் போடுவீர்கள். தடைப்பட்டிருந்த குடும்ப சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கண்களில் கவனத்துடன் இருத்தல் நல்லது! புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்காக எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும் பரிசு, பாராட்டு ஆகியவற்றையும் பெறுவார்கள். கழிவுப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள், பலசரக்குக் கடை நடத்துபவர்கள், எண்ணெய் வியாபாரிகள், வட்டித் தொழில், கமிசன், ஏஜன்சி போன்ற தொழில்கள் செய்பவர்கள், இரும்பு, இயந்திரம், வேதியியல் சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள் ஆகியோர் நல்ல பலன் அடைவர்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். மற்றவர்களை நம்பிக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது! கணவன் – மனைவி உறவில் விரிசல்களும் வீண் மனக் குழப்பங்களும் வந்து போகும். நீண்ட நாட்களாக வராத பணம் திரும்பக் கை வந்து சேரக்கூடிய காலமாகும். உறவினர்களால் வீண் செலவுகள் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன் கோபத்தைத் தவிர்ப்பது சிறந்ததாகும்! தாயின் உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகலாம். பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள் ஆதாயம் அடைவர். புதிதாக வீடு, வாகனம், நில புலன்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக நீண்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்து வந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். திரவப் பொருள் வியாபாரிகள், பூஜைப் பொருள் வியாபாரிகள், மருந்து வியாபாரிகள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், ஜவுளி – நூல் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களால் வீண் விவாதங்களும் தொல்லைகளும் வந்து போகும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த முயற்சியெடுத்துச் சமாளித்துக் கொள்வீர்கள். பயணத்தில் கவனம் தேவை! திரும்ப வராத கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம் போன்றவை எதிர்பாராமல் திரும்பக் கிடைக்கும். காதல் சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரலாம். வெகு காலமாகக் கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுகமான உறவு ஏற்படும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிகளைச் சற்றுத் தாமதமாகத் தொடங்குவது நல்லது. தோல், ரத்தம் சம்பந்தமான பிணிகள் வந்து போகும். தாய் – தந்தையர் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவத்திற்காக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், தானிய வியாபாரிகள், வேதியியல்துறை சார்ந்தவர்கள் லாபம் அடைவர். எதிர்பாராமல் வட திசையில் இருந்து பொருள் வரவும், நல்ல செய்திகளும் வந்து சேரும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு நிம்மதியை இழக்க வேண்டாம்! பணியிட மாற்றமும் பதவி உயர்வும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். தீராத நாட்பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள். மூத்த சகோதரர்களால் செலவுகள் வந்து சேரும். இட மாற்றமும் பதவி உயர்வும் வரக்கூடும். புதிய கட்டடம் கட்ட நீண்ட காலமாகப் போட்ட திட்டம் நிறைவேறும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலம் திடீர் தனவரவு உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. விசா பிரச்சினைகள் தீருவதற்கான வாய்ப்புகள் உள்ள காலமாகும். திரவப் பொருள் வியாபாரிகள், நகை வியாபாரிகள், பூஜைப் பொருள் வியாபாரிகள், தானிய வியாபாரிகள், மருந்துப் பொருட்களை உற்பத்தி / விற்பனை செய்யும் வியாபாரிகள், ஜவுளி – நூல் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவர். உற்றார் உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். காதல் விஷயத்தில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். குலதெய்வ வழிபாட்டிற்காகத் தொலை தூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பொதுப் பணிகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுக்க வாய்ப்பு உள்ளது. அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். பிள்ளைகளால் எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பண உதவிகள் உறவினர்களால் கிடைக்கும். காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். புனிதப் பயணத்துக்காக நீண்ட பிரயாணங்களை மேற்கொள்ளுவீர்கள். பங்குச்சந்தை நடத்துபவர்கள், அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள், உணவகத் தொழில் செய்பவர்கள், உணவகங்களில் பணியாற்றுபவர்கள், காவல்துறையினர், இராணுவத்தினர், தீயணைப்புத்துறையைச் சார்ந்தவர்கள், தங்க நகை வியாபாரிகள், காரமான உணவுப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள் ஆகியோர் ஆதாயம் அடைவர். பந்தயம், பரிசுச்சீட்டு மூலமாகத் திடீர் தன வரவுகள் உண்டாகும். பயணங்களில் மிகுந்த கவனத்துடன் சென்று வருதல் நல்லதாகும்! திருமண விஷயங்களுக்காக முயற்சி செய்யலாம். ஆதரவற்றோர்க்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். வாயு, வாதம் ஆகிய தொல்லைகள் வந்து போகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் முன் கோபம் தவிர்த்துப் பேசிப் பழகுதல் நல்லதாகும்! ஒரு சிலருக்கு சம்பந்தமில்லாத நபர்களால் சில ஆதாயங்கள் வந்து சேரலாம். கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- துர்க்கை வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author