இராசிபலன்கள்(26-1-2015 முதல் 1-2-2015 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பூர்விகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு நல்லதொரு முடிவு கிடைக்கும். தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றம் காணப்படும். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த குலதெய்வ வழிபாடுகளைச் செய்து வருவீர்கள். பயணத்தின்போது மிகுந்த கவனத்துடன் சென்று வருவது நல்லதாகும்! விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஜவுளி, நூல் வியாபாரிகள், மருந்து நிறுவனம் நடத்துபவர்கள், மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், முதியோர் இல்லம் நடத்துபவர்கள், நெருப்பு சம்பந்தமான தொழிற்சாலை நடத்துபவர்கள், தூதரகங்களில் பணி செய்பவர்கள், உணவகத் தொழில் செய்பவர்கள், அரசுத்துறை சார்ந்த ஆலயப் பணியாளர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வாயு, வாதம் சம்பந்தமான சிற்சில தொல்லைகள் வந்து போவதன் மூலம் மருத்துவச் செலவுகள் உண்டாகும். திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். வெகு காலமாகத் திரும்பி வராத கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் போன்றவை மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். ஒப்பந்த முறைத் தொழில் செய்பவர்கள், காய்கறி வியாபாரிகள், அச்சுத் தொழிற்சாலை நடத்துபவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணிபுரிவோர், எழுதுபொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் ஆதாயம் பெறுவர். அரசியல்வாதிகளால் ஆதாயம் ஏற்படாது. பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றுக்கு ஆசைப்பட்டு ஏமாற்றம் அடைய வேண்டாம்! குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். பயணத்தின்போது மிகுந்த கவனத்துடன் சென்று வருதல் நல்லது! மகான்களின் எதிர்பாராத தரிசனத்தால் மனநிறைவு அடைவீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட்டு நிம்மதியை இழக்க வேண்டாம்! பொருளாதார சம்பந்தமாகத் தொலைவான பயணங்களை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக இன்பச் சுற்றுலா சென்று வர முயற்சிப்பீர்கள். பணியாட்களால் விரயமும் மன உளைச்சலும் உண்டாகும். வீடு, வாகனம், தொழிற்சாலை ஆகியவற்றை இடமாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்றுப் பின்னடைவு ஏற்படலாம். கலைப்பொருள் விற்பனையாளர்கள், கலைஞர்கள், நகை வியாபாரிகள், உணவுக்கூடம் நடத்துபவர்கள், அழகுக்கூடம் நடத்துபவர்கள், சிற்றுண்டி வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலன் அடைய வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிப்பவர்கள் தாய்நாடு சென்று உறவுகளைச் சந்தித்துத் திரும்புவதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும். ஒவ்வாமை, சளி சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். தந்தை – மகன் உறவில் பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் காணப்படும். கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த மனக் கசப்பு தீர்ந்து மீண்டும் ஒன்று சேரக்கூடிய காலமாகும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் உதவக்கூடிய நிலையில் இல்லை. சமுதாய முன்னேற்றத்துக்கான முயற்சிகள், ஆதரவற்றோர் ஆசிரமங்கள், பொதுத் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நிம்மதியும், பெயரும், புகழும் அடைவீர்கள். பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்களை வாங்குவீர்கள். வாயுத்தொல்லை போன்ற வயிற்று உபாதைகள் வந்து போகலாம். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளுடன் வீண் சஞ்சலமும், அதனால் பதவி இடமாற்றமும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் முன் கோபத்தைத் தவிர்த்துப் பொறுப்புடன் பணி ஆற்றுங்கள்! பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் மிக எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது! நிலக்கரி, பெட்ரோல், டீசல், பலசரக்கு, எண்ணெய் போன்றவை சார்ந்த தொழில்கள் செய்பவர்கள், காவல்துறை, ராணுவம் ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், தீயணைப்பு நிலையப் பணியாளர்கள், நெருப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள், நில புலன் சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். குடும்பச் சொத்துக்களில் ஏற்பட்டிருந்த வழக்குகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் வழிபாடு செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வெகு காலமாகக் கட்டி முடிக்கப்படாத ஆலயத் திருப்பணிகளுக்கான வேலைகளைச் செய்வீர்கள். தாயின் உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்படலாம். கட்டிட சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், கட்டில், மெத்தை, ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், திரைப்பட, நாடகத்துறைகளைச் சார்ந்தவர்கள், அழகுக்கூடம் நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் சம்பந்தமாகப் புதிய தொடர்புகள் ஏற்பட்டு அதன் மூலம் நன்மை அடைவீர்கள். பழைய கடன்களை அடைப்பதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுப் பயனடைவார்கள். பெண்களால் தென் திசையில் இருந்து நற்செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். பிள்ளைகளால் சில தொல்லைகள் வந்து சேர இருப்பதால் கவனத்துடன் இருத்தல் நல்லது! நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் வந்து சேரும். பழமையான கட்டடங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் செலவுகள் ஏற்படலாம். காதல் விஷயத்தில் அனுகூலம் ஏற்படாது.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த மனக் குழப்பங்கள் மாறி மிகுந்த ஒற்றுமை உண்டாகும். இரும்பு, இயந்திரம், இரசாயனம், பழைய கழிவுப் பொருட்கள் ஆகியவற்றை விற்பவர்கள், பலசரக்கு, எண்ணெய் வியாபாரிகள், கல், மணல் வியாபாரிகள், அலுவலக உதவிப் பணி செய்பவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். காதல் விஷயத்தில் எதிர்பார்த்த தகவல்கள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வகைகளில் பண வரவு உண்டாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். பயணத்தில் புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். வங்கிகளின் மூலமாக எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த, வர வேண்டிய பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருங்கள்! பிள்ளைகளின் சுப நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டு விஷயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயங்கள் உண்டு.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். வர வேண்டிய கடன், கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் ஆகியவை வந்து சேரும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும். திரவப் பொருள் வியாபாரிகள், பூஜைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள்,
மருத்துவத்துறை சார்ந்தவர்கள், தாய் – சேய் நல விடுதி நடத்துபவர்கள் ஆகியோர் ஆதாயம் அடைவீர்கள். சகோதர சகோதரிகளின் தடைப்பட்ட திருமணக் காரியங்கள் நிறைவேறும் காலமாகும். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணங்கள் நிறைவேறும். உற்றார் உறவினர்கள் உதவக்கூடிய சூழல் இல்லை. வர வேண்டிய பணம் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். பயணத்தில் புதிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயங்கள் அடைவீர்கள். பண வரவுக்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. பூர்விகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் தீர இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் நிம்மதியும் பொருள் வரவும் உண்டாகலாம். கண், காது ஆகியவற்றில் சில உபாதைகள் வந்து போகும். மகான்களின் தரிசனத்தால் நிம்மதி அடைவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். வீடு, நிலம் வாங்குவது சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தீராத நோய்களுக்குப் புதிய மருத்துவர்களின் உதவியால் தீர்வு கிடைக்கக்கூடிய காலமாகும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த பணம் கை வந்து சேரும். தந்தை – மகன் உறவில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். அசைவ உணவு வியாபாரிகள், பழைய இரும்பு, தகரம் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். நரம்பு, எலும்பு போன்றவற்றில் உபாதைகள் வந்து போகும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட்டு அவமானப்பட இருப்பதால் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லதாகும்! திடீர் அதிர்ஷ்டமாகிய பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலம் பணம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடு செய்து வருக!

தனுசு

தநுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். சூதாட்டங்களில் ஈடுபட்டு ஏமாற்றம் அடையாமல் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது! சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுநலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். வேற்று மதத்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் பரிசும் பாராட்டுக்களும் கிடைக்கக்கூடும். எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், வங்கிகளில் பணி செய்பவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றால் ஏமாற்றம் அடையாமல் இருங்கள்! மற்றவர்களின் விஷயங்களில் வீணாகத் தலையிட்டு வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்! பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் பணத்தையோ பொருட்களையோ ஏமாறாமல் இருங்கள்! மனைவிக்குச் சிற்சில மருத்துவச் செலவு செய்வதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணுவையும் ஆஞ்சனேயரையும் வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பெண்களால் தென்திசையில் இருந்து எதிர்பாராத பண வரவு உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பழைய பொருள் வியாபாரிகள், அணு ஆராய்ச்சி, அறிவியல் ஆகிய துறைகளைச் சார்ந்த பணியாளர்கள், மத போதகர்கள், மடாதிபதிகள், அழுகல் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். தாயின் உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்படலாம். வெளிநாடு சென்று வர வெகு காலமாகப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பதால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். குடும்பச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். புதிய வீடு, நிலம், வாகனம் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த கடன், கேட்டிருந்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் கணபதி வழிபாடு செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நீண்ட பயணங்களின் மூலமாக எதிர்பார்த்த பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். அரசு வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நீண்ட பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது! பயணத்தில் மிகக் கவனம் தேவை! உலோகப் பொருள் வியாபாரிகள், மருந்துப்பொருள் விற்பனை செய்பவர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், நில புலன்களை வாங்கி விற்பவர்கள், கேஸ் வெல்டிங் தொழில் செய்பவர்கள், உணவகத் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். குலதெய்வ ஆலயத் திருப்பணிகளுக்கான விஷயங்களில் பணியாற்றுவதன் மூலம் நற்பெயர், புகழ் ஏற்படும். வழக்கு விஷயங்களுக்காகப் புதிய வழக்கறிஞர்களின் உதவியை நாடி அவர்களால் நன்மை அடைவீர்கள். பூர்விகச் சொத்துக்கள் கை வந்து சேரக்கூடிய காலமாகும். புதிய நண்பர்களிடம் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்! மகான்களின் சந்திப்புகளால் நிம்மதி அடையலாம். நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். திருட்டுப் போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் உதவியால் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது! குலதெய்வ ஆலயத் தொண்டுகளைப் பிரியத்துடன் செய்து நற்பெயர் எடுப்பீர்கள். தலை, முதுகுவலி போன்ற சில உபாதைகள் வந்து போகலாம். பூ, பழம், போன்ற பூஜைப் பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம், முதியோர் இல்லம், தாய் – சேய் நல விடுதி போன்றவற்றை நடத்துபவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், பேராசிரியர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலமாக நிம்மதி அடைவீர்கள். அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம்! வங்கிகளின் மூலம் எதிர்பார்த்திருந்த உதவித் தொகைகள் கிடைக்கும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author