இராசிபலன்கள்(30-6-2014 முதல் 6-7-2014 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவது, புதிய கடன் கொடுப்பது ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லதாகும். அரசியல்வாதிகளால் சில எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்து வரும் எண்ணங்கள் நிறைவேறும். நண்பர்கள் உறவினர்களின் வருகையால் பண உதவி கிடைக்கும்; நிம்மதியும் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மருத்துவத்துறை சார்ந்த பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், காய்கறி வியாபாரிகள், மர வியாபாரம் செய்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், மருந்து விற்பனையாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணி செய்பவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவீர்கள். நீண்டதூரப் பயணங்களால் எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதில் சற்றுத் தாமதம் ஏற்படும். வீடு, தொழிற்சாலை போன்றவற்றுக்காக வங்கிகளிலிருந்து எதிர்பார்த்திருந்த பண உதவி கிடைக்கும். விபரீதமான எண்ணங்களை நினைத்து வீண் குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம்! அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்! செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் கவனத்துடன் இருங்கள்! பிரிந்து போன தம்பதியர் கருத்து வேறுபாடு நீங்கி ஒன்று சேரக்கூடிய காலமாகும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். எடுத்த காரியங்களைத் துணிச்சலுடன் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்ப்பது நல்லதாகும்! திரவப் பொருள் வியாபாரிகள், மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள், மருத்துவமனை நடத்துபவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போன்றோரும், எழுத்தாளர்கள், திரைப்படம், நாடகம், இசைத்துறை சார்ந்தவர்களும், வங்கிப் பணி செய்பவர்களும் நல்ல லாபம் அடைவர். புதிய வாகனங்கள் வாங்குவது போன்ற முயற்சிகளில் சற்றுத் தாமதம் ஏற்படலாம். குழந்தைகளால் மருத்துவச் செலவு ஏற்படக்கூடும். நீண்ட தூரப் பயணங்கள் மூலமாக எதிர்பார்த்த காரியங்களில் சில பின்னடைவுகள் ஏற்படும். நீண்ட காலமாக வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சற்றுக் குறைந்து காணப்படும். குடும்ப சுப நிகழ்ச்சிகளில் வெகு காலமாக ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கி அவை நடந்தேறக்கூடிய காலமாகும்!

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். இரும்பு, இயந்திரம், மின்சாரம், வேதிப்பொருள், அறிவியல், எண்ணெய்கள் போன்றவற்றை வியாபாரம் செய்பவர்கள், பலசரக்குக் கடை நடத்துகின்ற வியாபாரிகள், அரசுத்துறை சார்ந்த அலுவலக உதவிப் பணி ஆற்றுபவர்கள், பழைய பொருள் வியாபாரிகள், அழுகுபொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவீர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து ஓரளவு மகிழ்ச்சி அடையலாம். அலுவலகப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற விஷயங்களில் ஈடுபட்டு ஏமாற்றம் அடைய வேண்டாம்! தாயின் உடல்நிலையில் இருந்து வந்த தொல்லைகள் சற்றுக் குறைந்து காணப்படும். நாட்பட்ட பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்கள் வாங்க முயற்சிப்பீர்கள். எடுத்துக் கொண்ட காரியங்களை மிகுந்த முயற்சியின் பேரில் செய்து முடிப்பீர்கள்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். நெருப்பு, மின்சாரம் போன்றவற்றில் கவனத்துடன் இருப்பது நல்லது. வீட்டைத் திருத்திக் கட்டுவதற்காக நீண்ட நாட்களாக எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை தீராத நோய்களுக்கு வெளியூர்ப் பயணங்கள் மூலம் விடை காணுவீர்கள். நீதிமன்றம், வழக்கு போன்ற விஷயங்களில் முடிவுகள் கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகும். அரசு, வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். எழுதுபொருள் வியாபாரிகள், வங்கிப் பணி புரியும் எழுத்தர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், பத்திரிக்கைத்துறை சார்ந்தவர்கள், காய்கறி வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். பொதுத்தொண்டுகளில் எச்சரிக்கையுடன் பணியாற்றுவது நல்லது. வேற்று மதத்தவரால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். விவசாயம் செய்பவர்கள் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவர். கணவன் – மனைவி உறவுகளில் சில கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். காதல் விஷயங்களில் சற்றுக் கவனத்துடன் செயல்படுவது நல்லது. புனிதப் பயணம் சென்று வருவதற்காகப் புதிய கடன்களை வாங்கி அடைப்பீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். நிம்மதி இன்மை காரணமாகத் தூக்கமும் உணவருந்துதலும் பாதிக்கப்படும். அண்டை அயலாருடன் எச்சரிக்கையாகப் பேசிப் பழகுதல் நல்லது! புதிய வீடு தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. உயரமான இடங்களில் மிகுந்த கவனத்துடன் வேலை செய்வது நல்லது! குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைந்து நிம்மதி ஏற்படும். நண்பர்கள் உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் செலவுகளும் நிம்மதிக் குறைவும் உண்டாகலாம். நாட்பட்ட நோய்க்கு விடை காணும் காலமாகும். பொதுநலக் காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைத்தாலும் சில பிரச்சினைகள் வந்து, மிகவும் முயன்று சரி செய்து விடுவீர்கள். பூர்விக இடங்களுக்குச் சென்று வர வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணத்தையோ பொருட்களையோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! அசைவ உணவுப் பொருட்கள் விற்பவர்கள், கழிவுப் பொருள் வியாபாரிகள், தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்த பணியாளர்கள், சாயப் பொடி வியாபாரிகள், துப்புரவுத் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படலாம். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் சற்றுக் குறைந்து நிம்மதி அடைவீர்கள். காவல்துறையினர், ராணுவத்தினர், மின்சாரத்துறை சார்ந்தவர்கள், நெருப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள் ஆகியோர் நண்பர்கள் உறவினர்களின் ஆதரவால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வெகு காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணக் காரியங்கள் நிறைவேறும். பழைய பொருட்களை விற்றுப் புதிய பொருட்களை வாங்க வாய்ப்பு உள்ளது. நெருப்பு, மின்சாரம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், கணினி சாதன வியாபாரிகள், இணையத்தளம் நடத்துபவர்கள், மந்திரிகள், வெளிநாட்டுத் தூதரகங்களில் பணி செய்பவர்கள் ஆகியோர் நற்பலனை அடைய வாய்ப்பு உள்ளது. வாயு, வாதம் போன்ற உபாதைகள் வந்து போகலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளில் திருப்தி அடைவீர்கள். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறையும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பங்குத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுப் புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய நபர்களின் தொடர்புகளால் நிம்மதி குறைய இருப்பதால் எச்சரிக்கையுடன் இருங்கள்! கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! புதிய மருத்துவர்களின் உதவியால் நோய்கள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். தொலை தூரப் பயணங்களைத் தவிர்த்தல் நல்லதாகும்! நீண்ட நாட்களாகத் திரும்பி வராமலிருந்த கடன், கொடுத்து வைத்திருந்த பணம் பிரச்சினைகளின் பேரில் திரும்பக் கிடைக்கும். விசா பிரச்சினைகளில் திருப்தியான தகவல்கள் கிடைக்கும் காலமாகும். மனைவியின் உடல்நலம் பாதிக்கப்படலாம். பொதுத்தொண்டுகளில் ஈடுபடுவதன் மூலம் நற்பெயர் எடுப்பீர்கள். தூரத்து உறவினர்களின் வருகையால் சில சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள், திருமணத் தகவல் மையம், திருமண மண்டபம் ஆகியவற்றை நடத்துபவர்கள், கட்டுமானப்பொருள் வியாபாரிகள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள் விற்பவர்கள், திரைப்படம், நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், கலை சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் லாபம் அடைவர். தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகள் வந்து சேரலாம். மேகம், உடற்சூடு போன்ற உபாதைகளும், ஒவ்வாமை போன்ற தொற்று நோய்களும் வந்து நீங்கும். வண்டிகளில் எச்சரிக்கையுடன் பயணம் செய்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். காவல்துறையினர், ராணுவத்தினர், தீயணைப்புத்துறையைச் சார்ந்தவர்கள், உணவகத்தில் பணியாற்றுபவர்கள், மின்சாதனங்களை உற்பத்தி செய்பவர்கள், அரசுத்துறை சார்ந்த மின் அலுவலகங்களில் பணி செய்பவர்கள், கேஸ், வெல்டிங் சம்பந்தமான தொழிற்கூடங்களை நடத்துபவர்கள், மின்துறை சார்ந்த பொருட்களை விற்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் காரணம் இல்லாத விஷயங்களுக்காக வீண் பிரச்சினைகள் வந்து போகும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் தாமதம் ஏற்படும். புதிய செய்தொழில் சம்பந்தமான முயற்சிகளில் சிறிது தடைகள் வந்து விலகும். பொதுப்பணிகளில் ஈடுபடுபவர்கள் மிகக் கவனத்துடன் இருப்பது நல்லது! பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். உடற்சூடு, மேகம் போன்ற உபாதைகள் வந்து போகலாம். பூர்விகமான இடங்களுக்குச் சென்று வரப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறக்கூடிய காலமாகும். தந்தையின் உடல்நிலை பாதிக்கப்படலாம். புதிய கடன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். கணவன் – மனைவி உறவுகளில் சற்றுக் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லதாகும்! தந்தை வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். புனிதப் பயணம் சென்று வரப் போட்டிருந்த திட்டங்களில் சில தடைகள் வந்து விலகும். ஆடை அணிகலன்கள் வாங்குவதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வருக!

தனுசு

தநுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து நண்பர்களால் பொருளுதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் சற்றுத் தாமதம் ஏற்படும். விடுபட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தலைதூக்கும். கண், காது ஆகியவற்றில் கவனத்துடன் இருங்கள்! பிறருக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். புதிய வீடு வாகனங்கள் வாங்குவது போன்ற புதிய முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும். மாணவர்களுக்குக் கல்வியில் பரிசும் பாராட்டும் பண உதவியும் கிடைக்கும். மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட்டு நிம்மதியை இழக்காதீர்கள்! இரும்பு, இயந்திரம், டீசல், பெட்ரோல், எண்ணெய் ஆகியவற்றை விற்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள், கமிஷன் தொழில் செய்பவர்கள், கழிவுப்பொருள் வியாபாரிகள், பலசரக்குக் கடை நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். காதல் சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கேட்டிருந்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஐயப்பன் ஆலய வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பயணத்தில் அரசியல்வாதிகள் சிலரின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். பிள்ளைகளுக்கு வெகு காலமாகத் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடிய காலமாகும். திருட்டுப் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் நன்மதிப்பையும் பாராட்டுக்களையும் பெறுவார்கள். வட்டித் தொழில் செய்பவர்கள், வீடு நிலம் போன்றவற்றை விற்பவர்கள், உணவு விடுதி நடத்துதல் போன்ற நெருப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள், கலைத்துறை சார்ந்த பொருட்களை விற்பவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், நகை வியாபாரிகள், கழிவுப்பொருள் வியாபாரிகள், கமிஷன் தொழில் செய்பவர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர், தீயணைப்புத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் ஆதாயங்கள் அடைவர். காதல் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிற்சாலைகளைத் திருத்தி அமைக்கப் போட்ட திட்டங்களில் வெற்றி அடையலாம். நிலம் நகைகளை அடகு வைத்தல் போன்ற வழிகளில் பணம் வந்து சேரும். காணாமல் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். அலுவலகப் பணியாளர்கள் மேலதிகாரிகளுடன் கவனத்துடன் நடந்துகொள்வதால் வீண் பிரச்சினைகள் குறையும். ஒரு சிலருக்கு நினைத்த இடத்துக்குப் பணியிட மாற்றம் ஏற்படலாம்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் கணபதி வழிபாடு செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். புதிய கடன்களை வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமல் போகக்கூடும் என்பதால் தவிர்த்தல் நல்லது! வீடு வாகனங்களைப் பழுது பார்க்கும் வகைகளில் புதிய செலவுகள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. வங்கிகள் மூலமாக எதிர்பார்த்திருந்த பணம் கை வந்து சேரும். பணியாட்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் சற்றுக் குறைந்து காணப்படும். நண்பர்கள் உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் சற்றுக் கவனத்துடன் இருப்பது நல்லது. சகோதரர்களால் சம்பந்தமில்லாத பிரச்சினைகளும், மனக் குழப்பங்களும் வந்து சேரும். பொழுதுபோக்கு விஷயங்களால் வீண் பணச் செலவுகள் ஏற்படலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வகைகளில் பணம் கிடைக்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பயணங்களில் கவனத்துடன் சென்று வாருங்கள்! தரகு, ஏஜன்சி, கமிஷன் போன்ற தொழில்கள் செய்பவர்கள், அசைவ உணவு வியாபாரிகள், பழைய பொருள் வியாபாரிகள், தோல் பதனிடும் வியாபாரிகள், காலணி போன்ற பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், அறிவியல்துறை சார்ந்த அலுவலகப் பணிபுரிபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவீர்கள்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் விநாயகர் வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். சொந்த பந்தங்களுடன் நீண்ட காலமாக இருந்து வந்த மனக் கசப்புகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களின் பிரச்சினைகளில் வீணாகத் தலையிட்டு மனக் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்! குலதெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லதாகும். வங்கிகள், கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான அலுவலகங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. பூஜைப் பொருள் விற்பவர்கள், நறுமணப் பொருள் வியாபாரிகள், கணினி சாதன வியாபாரிகள், பேராசிரியர்கள், ஆலயப்பணி செய்பவர்கள், நகை வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருள் விற்பவர்கள், பழ வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்கும் எண்ணங்கள் நிறைவேறும். விசா சம்பந்தமான பிரச்சினைகளுக்கு எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். பயணங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் முன் கோபத்தைத் தவிருங்கள்! தந்தை – மகன் உறவுகளில் நல்ல சூழ்நிலை காணப்படும். புதிய வீடு மாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறும் காலமாகும். தென் திசையில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் வந்து சேரும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author