இராசிபலன்கள்(9-2-2015 முதல் 15-2-2015 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். இது நாள் வரையில் இருந்து வந்த பண நெருக்கடி மாறிச் சற்று முன்னேற்றம் காண்பதன் மூலம் நிம்மதி அடைவீர்கள். வீடு, வாகனம் வாங்குவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவீர்கள். வீட்டிலோ, பயணத்தின்போதோ பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! காய்கறி, இலை, கீரை போன்ற உணவுப்பொருள் வியாபாரிகள், திரைப்பட, நாடக துறைகளைச் சார்ந்தவர்கள், அழகுக்கூடம் நடத்துபவர்கள், சிற்றுண்டி விடுதி நடத்துபவர்கள், நகைக் கடை நடத்துபவர்கள் ஆகியோர் மிகுந்த நற்பலன்களை அடைவர். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. கட்டி முடிக்காமல் தடைப்பட்ட ஆலயப் பணிகளைத் தொடரச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு வீடு, தொழிற்சாலை ஆகியவற்றைப் பழுது பார்ப்பதன் மூலம் செலவு ஏற்படலாம். பயணத்தில் புதிய நட்பு உண்டாகி அவர்களால் எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். எலும்பு, நரம்பு போன்றவற்றில் உபாதைகள் வந்து போகலாம்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த புனிதப் பயணத்துக்குச் சென்று வர வாய்ப்பு உள்ளது. தண்ணீர், ஐஸ், குளிர்பானம் போன்ற திரவப்பொருள் வியாபாரிகள், உப்பு உரம் ஆகிய பொருட்களை விற்பனை செய்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், கப்பல் பணிபுரிவோர் ஆகியோர் நல்ல பலனை அடைவர். வாயு, வாதம் சம்பந்தமான தொல்லைகள் வந்து போகலாம். மற்றவர்களை நம்பிப் பணமோ பொருளோ கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! தந்தையின் மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது. பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். பயணத்தின்போது வண்டிகளில் மிகுந்த கவனத்துடன் சென்று வருதல் நல்லது! புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைக்க முயற்சிப்பீர்கள். பிரிந்து போன உறவுகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ள காலமாகும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கப் போகும் காலமாகும். மற்றவர்களுக்காக ஜாமீன் போடாமல் இருப்பது நல்லது! கூட்டுத் தொழில் செய்வதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் வந்து சேரும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் செலவுகளும், நிம்மதியின்மையும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை! வெகு காலமாக வழிபடாமல் விட்டுப் போன குலதெய்வ ஆலயங்களை தரிசனம் செய்வதற்கான காலமாகும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் செலவுகளும், புதிய பொறுப்புக்களும் உண்டாகலாம். வர வேண்டிய பூர்விகச் சொத்துப் பிரச்சினைகளில் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்ல முடிவுகள் கிடைக்கும். செய்யும் தொழிலில் புதிய கூட்டாளிகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். மின்சாரம், எரிபொருள் ஆகியவற்றைச் சார்ந்து பணிபுரிபவர்கள், உணவகத் தொழில் செய்பவர்கள், கணினி சாதன வியாபாரிகள், வேதியியல், அணு அறிவியல் ஆகிய துறைகள் சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றமும் மேலதிகாரிகளின் ஆதரவும் உண்டாகும். வங்கித் தொழில் புரிவோர், வழக்கறிஞர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். சளி, காய்ச்சல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். பொதுச் சேவைகளான ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் வர இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருத்தல் உகந்ததாகும்! பயணங்களைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது! விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! நீண்ட பயணங்களை மேற்கொள்வதன் மூலம் எதிர்பார்த்த காரியங்களில் மன நிறைவடைவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள். காதல் விஷயங்களில் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். புதிய ஆடை, ஆபரணங்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். மகான்களின் எதிர்பாராத ஆசிகளால் நிம்மதி அடைவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் மனக் குழப்பங்கள் உண்டாகலாம். அசைவ உணவுப் பொருட்கள், எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்றவற்றை விற்பவர்கள், அணுசக்தித்துறை சார்ந்த அறிவியலாளர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். சளி, ஒவ்வாமை (Allergy) போன்ற தொல்லைகள் வந்து போகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். வங்கிகளிலிருந்து வெகுகாலமாக எதிர்பார்த்திருந்த உதவித்தொகை கிடைக்கும். உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். சொத்து விஷயமான வழக்கு போன்றவற்றில் சாதகமான முடிவுகள் கிடைக்கத் தாமதம் ஆகலாம். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். விவசாயம் சுமாராகப் பலிதமாகும்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் இட்டு பிதுர்களையும் காளி போன்ற அம்மன்களையும் ஆலய வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்! பங்குச்சந்தை, கமிசன், தரகு, ஏஜன்சி சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், மாமிச சம்பந்தமான உணவுப் பொருள் வியாபாரிகள், அடகுக் கடை நடத்துபவர்கள், பழைய பொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவர். வெளிநாட்டில் இருந்து செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். நீண்ட காலமாக வர வேண்டிய பணம், பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். கணவன் – மனைவி உறவில் இது நாள் வரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். பொதுத் தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மன நிறைவை அடைவீர்கள். நீண்ட காலமாகக் காணாமல் போயிருந்த பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். சமுதாய முன்னேற்றப் பணிக்கான பொதுத் தொண்டுகளில் தலையிட்டுப் பெயர், புகழ் அடைய வாய்ப்பு உள்ளது. பயணத்தின்போது மற்றவர்களிடம் முன்கோபம் தவிர்த்தல் நல்லது! செய்யாத குற்றத்துக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மாணவர்களுக்கு அரசு சம்பந்தமான உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பூஜைப் பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், நகை வியாபாரிகள், கணினித் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பாராட்டுகளும் பொருள் வரவும் கூட உண்டாகும். நண்பர்கள், உறவினர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தந்தையின் உடல்நிலை பாதிக்கப்படலாம். மற்றவர்களின் விஷயங்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்த்தல் நல்லது! வாயு, வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். வீட்டை அலங்கரிப்பதிலும், வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமும் செலவுகள் ஏற்படலாம். மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை, பரிசு, பாராட்டு போன்றவை கிடைக்கும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். தென் திசையில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேர இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். தாயின் உடல்நிலையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கும். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், கலைக்கல்லூரிப் பேராசிரியர்கள் – மாணவர்கள், இசைத்துறை, திரைப்படம், நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். மாணவர்கள் கல்வியில் பரிசும் பாராட்டும் பெற வாய்ப்பு உள்ள காலமாகும். வேற்று மதத்தவரால் வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றில் ஈடுபட்டு ஏமாற வேண்டாம். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். அரசியல்வாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது! அண்டை அயலாருடன் காரணமற்ற சிறிய விஷயங்களுக்காக வீண் பிரச்சினைகள் உருவாக இருப்பதால் கவனத்துடன் பேசிப் பழகுதல் நல்லது!

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி ஆலய வழிபாடு செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் வர இருப்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது! பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடி மாறிச் சற்று முன்னேற்றம் காண்பீர்கள். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள் போன்றோரின் தொடர்பு ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். வாகனத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், அரசியல்வாதிகள், கமிசன், தரகு போன்ற தொழில்கள் செய்வோர் ஆகியோர் லாபம் அடைவர். தீராத, நாட்பட்ட நோய்கள் தீர வேறு மருத்துவர்களின் உதவியை நாடுவீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்ட தூரச் சுற்றுலாப் பயணங்கள் சென்று வருவீர்கள். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உறவுகளைத் தேடித் தாய்நாடு சென்று வருவதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும். தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்காதிருங்கள்! வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் பணத்தை ஏமாந்து விடாதீர்கள்! புதிய வீடு, வாகனம் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த கடன் தொகை கை வந்து சேரும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். கண், காது போன்றவற்றில் கவனம் தேவை! வடக்குத் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். குடும்பச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் பெரிய மனிதர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், பொதுத் தொண்டு நிறுவனத்தினர், ஆலயப் பணிபுரிவோர், வங்கி எழுத்தாளர்கள், அச்சுத்தொழில் செய்பவர்கள், பத்திரிக்கையாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர்க்கு நற்பலன் வரக்கூடிய காலமாகும். மற்றவர்களின் விஷயங்களில் வீணாகத் தலையிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டு நண்பர்கள் உறவினர்கள் போன்றோரிடமிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய கடன் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது! சிலருக்குப் பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளில் பண வரவு உண்டாகும். சகோதர சகோதரிகளின் தடைப்பட்டு வரும் திருமணக் காரியங்கள் சம்பந்தமாகப் புதிய கடன்களை வாங்குவீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்தபடி இடமாற்றம் ஏற்படலாம். ஒரு சிலருக்கு வீடு, தொழிற்சாலை ஆகியவற்றைத் திருத்திக் கட்ட வாய்ப்பு உள்ளது. கை விட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். தீராத நாட்பட்ட நோய்களுக்குப் புதிய மருத்துவரின் உதவியை நாடுவீர்கள். சூதாட்டங்களில் ஈடுபட்டு ஏமாற்றம் அடைய வேண்டாம்! பயணத்தில் கவனம் தேவை! வங்கிகள் மூலமாக எதிர்பார்த்திருந்த பண உதவி கிடைப்பதற்குச் சற்றுத் தாமதம் ஆகலாம். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். பழைய வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகச் செலவுகள் வந்து சேரும். நிலபுலன் சம்பந்தமான பழைய வழக்குகள் மீண்டும் தொடரும். காதல் விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது! இரும்பு, இயந்திரம், வேதியியல், பழைய பொருட்கள் முதலியன விற்பனை செய்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள், கமிசன் தொழில் செய்பவர்கள், பலசரக்கு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றை விற்பவர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் இட்டு சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். ராணுவம், காவல்துறை சார்ந்தவர்கள், உணவகத் தொழில், எரிபொருள் விற்பனை போன்ற நெருப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள், மசால் சம்பந்தமான உணவுப்பொருட்கள் விற்பவர்கள் ஆகியோர்க்கு நல்ல லாபம் வரக்கூடிய காலமாகும். பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் மிகவும் பொறுமையுடன் பணியாற்றுதல் நல்லது! உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் வீண் செலவுகள் உண்டாகும். தேவையற்ற புதிய நட்புகளால் நிம்மதி இழக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்! மகான்களின் தரிசனங்களால் மகிழ்ச்சியோடு வெற்றியும் அடைவீர்கள். உடல்நிலையால் இது நாள் வரை இருந்து வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். அரசியல்வாதிகளால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்றுப் பொறுமையுடன் இருத்தல் நல்லது! குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வரும் எண்ணம் நிறைவேறும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author