இராசிபலன் (13 – 8 – 2012 முதல் 19 – 8 – 2012 வரை)

மேஷம்:

மேஷராசி அன்பர்களே! இந்த வாரம், உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். மற்றவர்களுக்கு உதவுவதாக எண்ணி வீண் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு மன நிம்மதி இழக்க வேண்டாம். கடன் மற்றும் சொத்து போன்ற விஷயங்களில் பிறருக்காக ஜாமீன் போடுவதைத் தவிருங்கள். மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருள்களின் வியாபாரிகள், பழைய பொருட்கள் விற்பனை செய்வோர், இரசாயனத் தொழிற்சாலைகளில் பணிகள் செய்வோர், அணு ஆராய்ச்சிகளில் பங்கு கொள்வோர், பழைய இரும்பு சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலனை அடைவார்கள். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன மகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. பொது நலத் தொண்டுகளில் பிரியமுடன் ஈடுபட்டு நற்பெயர், புகழ் அடைவீர்கள். பழுதுபட்ட ஆலயங்களை மற்றும் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். நண்பர்களால் வீண் பிரச்சினைகளும், நிம்மதிக் குறைவும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் பழகி வருதல் சிறந்தது. வெளிநாட்டில் இருப்பவர்கள் நீண்ட கால நினைவுகளாக இருந்த தாய் நாட்டிற்குச் சென்று வர வாய்ப்பு உள்ளது. திருட்டுப் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்கள் சென்று வருவீரகள்.

இராசியான எண் – 4
இராசியான நிறம் – கருப்பு
இராசியான திசை – வடமேற்கு
பரிகாரம் – பிதுர் வழிபாடு, அம்மன் ஆலய வழிபாடு செய்தல்.

ரிஷபம்:

ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். அடிமை ஆட்களால் எதிர்பாராத ஆதாயங்களும் மன மகிழ்ச்சியும் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். யாத்திரையில் சில புதிய சந்திப்புகளால் நன்மை அடைவீரகள். ஒரு சிலர் வீடு மற்றும் தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்யத் திட்டம் போடுவீரகள். யாத்திரையில் மற்றவர்களை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். சூதாட்டமாகிய ரேஸ், லாட்டரி மூலம் பொருள் இழப்புக்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை தேவை. வங்கிகள் மூலமாக வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கை வந்து சேரும். கணவன் மனைவி உறவுகளில் வெகு நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சற்றுக் குறைந்து நிம்மதி அடைவீர்கள். கட்டட சம்பந்தமான ஆடம்பர அலங்காரப் பொருட்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், அறநிலையத்துறை சாரந்தவர்கள், பொதுத் தொண்டு நிறுவனங்கள், ஆதரவற்றோர் ஆசிரமங்கள் நடத்துபவர்கள், கம்ப்யூட்டர் பணி செய்பவர்கள், பேராசிரியர்கள், பழ வியாபாரிகள், ஆலயங்களில் பணி புரிபவர்கள், பொதுநலத்துறைகளைச் சாரந்துள்ள பணியாளர்கள் ஆகியோர் லாபம் அடைவார்கள்.

இராசியான எண் – 3
இராசியான நிறம் – மஞ்சள்
இராசியான திசை – வடகிழக்கு
பரிகாரம் – சிவ ஆலய வழிபாடு செய்தல்.

மிதுனம்:

மிதுனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த மனக் கசப்புகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். சினிமா, நாடகம் போன்ற துறை சார்ந்தவர்கள், இசைக் கலைஞர்கள், இசைக் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் இவற்றில் பணி புரிபவர்கள், இணையத்தளங்கள் நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல பலன் அடைவார்கள். மறைமுக எதிரிகளால் இருந்து வந்த தொல்லைகள் குறைய வாய்ப்பு உள்ள காலமாகும். குல தெய்வ ஆலய வழிபாடுகள் செய்து வருவது சிறந்ததாகும். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறலாம். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த பண உதவிகள் மற்றும் நல்ல செய்திகள் வந்து சேரும். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளுக்காகக் கடன் கேட்டு எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்க வாய்ப்பு உளளது. கோர்ட் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் முடிவுகள் கிடைக்க இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். காணாமற் போன பொருட்கள் காவல் துறையினரின் உதவியால் திரும்பக் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் மன நிம்மதியுடன் கூடிய பொருட் செலவுகள் உண்டாகும். வராத கடன், கொடுத்திருந்த பணம் மற்றும் பொருட்கள் சம்பந்தமாக வீண் பிரச்சினைகள் உருவாகலாம்.

இராசியான எண் – 6
இராசியான நிறம் – வௌளை
இசராசியான திசை – தென்கிழக்கு
பரிகாரம் – மஹாலட்சுமி வழிபாடு செய்தல்.

கடகம்:

கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். கமிசன், தரகு, ஏஜன்சி போன்ற தொழில் செய்பவர்கள், பழைய பொருட்களாகிய பேப்பர், பிளாஸ்டிக், இரும்பு போன்ற வியாபாரிகள், மருத்துவமனைகளில் பரிசோதனைப் பணி செய்பவர்கள், காட்டு இலாகா சாரந்தவர்கள், இயந்திரம், கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள், எண்ணெய், பலசரக்கு வியாபாரிகள், காண்டிராக்ட் தொழில் செய்பவர்கள், இஞ்சினியரிங் துறை சாரந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். மாணவர்கள் கல்வி பயிலும் இடங்களில் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லதாகும். மனைவியின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். பங்காளிகளுடன் சேர்ந்து நடத்தும் கூட்டுத் தொழில்களில் காரணமற்ற மனக் கசப்புகள் வர இருப்பதால் முன் கோபத்தை விலக்குதல் சிறந்தது. பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளின் மூலமாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் விஷயங்களில் நற்செய்திகள் வந்து சேரும். மூலம் போன்ற வயிற்று உபாதைகள் வந்து போகும்.

இராசியான எண் – 8
இராசியான நிறம் – நீலம்
இராசியான திசை – தென்மேற்கு
பரிகாரம் – சனீஸ்வர வழிபாடு செய்தல்.

சிம்மம்:

சிம்மராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். இராசாயனம், எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற வியாபாரிகள், மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருள்களின் வியாபாரிகள், விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் இவ்வலுவலகங்களில் பணி புரிபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள். தொழிலாளர்களுடன் முன் கோபத்தைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. குல தெய்வ ஆலய வழிபாடுகள் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு மன நிம்மதியை அடைவீர்கள். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். தந்தை வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் சற்றுக் குறையும். வங்கிகள் மூலமாக எதிர்பார்த்திருந்த கடன், கேட்டு இருந்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. மன உற்சாகத்துடன் பெரிய மனிதர்களின் சந்திப்பின் மூலம் காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவீர்கள். தீராத நோய்கள் தீர வேண்டி நீண்ட தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள்.

இராசியான எண் – 8
இராசியான நிறம் – நீலம்
இராசியான திசை – தென்மேற்கு
பரிகாரம் – சனீஸ்வர வழிபாடு செய்தல்.

கன்னி:

கன்னிராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரமாகும். வீடு மற்றும் தொழிற்சாலைகளில் கவனத்துடன் இருந்தால் திருட்டுப் போவதைத் தவிர்க்கலாம். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடி நிலைகள் மாறி முன்னேற்றம் காணப்படும். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறைந்து காணப்படும். மற்றவர்களின் விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு மன நிம்மதி இழக்காதிருங்கள். வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வெற்றி பெற வேற்று மதத்தவரால் இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து மன நிம்மதி அடைவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கலாம். வேலை இல்லாத, படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய காலமாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். வட்டித் தொழில், கமிசன், தரகு, ஏஜன்சி, குத்தகைத் தொழில்கள் செய்வோர், நெருப்பு, ராணுவம், காவல்துறை சார்ரந்தவர்கள், ஹோட்டல் நடத்துபவர்கள், மின்சாரத்துறை சார்ந்த பணியாளர்கள் இவற்றை உற்பத்தியோ, விற்பனையோ செய்வோர் ஆகியோர் நல்ல பலனை அடைவார்கள்.

இராசியான எண் – 9
இராசியான நிறம் – சிகப்பு
இராசியான திசை – தெற்கு
பரிகாரம் – துரக்கை ஆலய வழிபாடு செய்தல்.

துலாம்:

துலாம்ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நிறைவேறுவதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருள்களின் வியாபாரிகள், பழைய பொருட்கள் விற்பனை செய்வோர், இரசாயனத் தொழிற்சாலைகளில் பணி செய்வோர், அணு ஆராய்ச்சிகளில் பங்கு கொள்வோர், பழைய இரும்பு சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலனை அடைவார்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். வெளிநாட்டில் வசிப்பவரகள் தாய்நாடு சென்று உறவினர்களைச் சந்தித்துத் திரும்ப வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக வராத கடன் கொடுத்திருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளுக்காக எதிர்பார்த்திருந்த பணம் கைவந்து சேரும் காலமாகும். பெண்களின் விஷயங்களில் செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர் ஏற்படலாம். புதிய ஆடை, அணிகலன்களை வாங்க, புதிய கடன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உற்றார், உறவினர்களால் எதிர்பார்த்த ஆதாயம் இல்லை.
வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.

இராசியான எண் – 7
இராசியான நிறம் – கருஞ்சிகப்பு
இராசியான திசை – வடமேற்கு
பரிகாரம் – கணபதி வழிபாடு செய்தல்.

விருச்சிகம்:

விருச்சிகராசி அன்பர்களே! சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். சினிமா, நாடகம் மற்றும் கலைத்துறை சம்பந்தமான பொருட்கள் விற்பனை செய்வோர், நடிகர்கள் நடிகைகள், கலைத்தொழில் செய்பவர்கள், பாத்திர வியாபாரிகள், கலைக் கல்லூரி சாரந்தவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவார்கள். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த, சகோதர சகோதரிகளின் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. யாத்திரையில் மிகுந்த கவனத்துடன் பிரயாணம் செய்து வருதல் நல்லது. காதல், பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்றாகும். குடும்பத்தில் இருந்து வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைந்து காணப்படும். பிள்ளைகளால் எதிர்பாராத சில தொல்லைகள் வந்து சேர வாய்ப்பு உள்ளதால் மிகுந்த கவனத்துடன் பாரத்துக் கொள்ளுதல் நல்லது. கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். எதிர்பாராத ஆதாயங்களைத் தென் திசையில் இருந்து பெண்களால் அடைவீர்கள். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள். பூமி, நிலம் சம்பந்தமான பிரச்சினைகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களை நம்பிப் பணம், பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடையாதீர்கள்.

இராசியான எண் – 6
இராசியான நிறம் – வெள்ளை
இராசியான திசை – தென்கிழக்கு
பரிகாரம் – மஹாலட்சுமி வழிபாடு.

தனுசு:

தனுசுராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் பணி செய்வது நல்லதாகும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நிறைவேற இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். சூதாட்டங்களில் பணம், பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. நண்பர்களின் வீட்டுச் சுபகாரியங்களில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். நீண்ட தூரப் பயணங்கள் மூலம் காரியங்கள் நிறைவேறும் காலமாகும். அரசியல்வாதிகளால் எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. புதிய கடன் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லது. ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்டங்களின் மூலமாகப் பணம் கிடைக்கும் எனக் கருதி ஏமாற்றம் அடைய வேண்டாம். தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், ஷேர் மார்க்கெட் நடத்துபவர்கள், கட்டில் மெத்தை போன்ற அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், அரசுத்துறை சார்ந்த வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றுபவரகள், மந்திரிப் பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.

இராசியான எண் – 1
இராசியான நிறம் – வெள்ளை
இராசியான திசை – கிழக்கு
பரிகாரம் – சூரிய வழிபாடு.

மகரம்:

மகரராசி அன்பர்களே! இந்த வாரம் புதன் நன்மை தரும் கிரகமாகும். பிரிந்து போன உறவுகள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரும்என்பதால் நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது சிறந்தது. நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த திருமண விஷயமாக நல்ல முடிவுகள் கிடைக்கலாம். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகும். உடம்பில் கண், காதுகளில் கவனத்துடன் இருங்கள். அஞ்சல்துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், புத்தகம் மற்றும் பேப்பர் வியாபாரிகள், நாடகத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவார்கள். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்திருந்த பண உதவிகள் கிடைக்கலாம். திடீர் அதிர்ஷ்டம்மூலமாகத் தன வரவுகள் உண்டாகலாம். கணவன் மனைவி உறவுகளில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரகளால் நல்ல தகவல்கள் வந்த சேரும். பொதுவாக இது ஒரு எச்சரிக்கை நிறைந்த வாரமாகும்.

இராசியான எண் – 5
இராசியான நிறம் – பச்சை
இராசியான திசை – வடக்கு
பரிகாரம் – மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு.

கும்பம்:

கும்பராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். தீராத நோய்களுக்குப் புதிய முறை மருத்துவங்களின் மூலமாக நோய் தீர வாய்ப்புள்ளது. உத்தியோகத்துறையினருக்குப் பதவி உயர்வுகளும் பணியிட மாற்றங்களும் ஏற்படலாம். கண்களில் கவனம் தேவை. புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதைத் தவிரத்தல் நல்லது. கட்டட சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர், கலைக் கல்லூரி நடத்துபவர்கள், இவற்றில் பணி செய்வோர், பூஜை சாதனப் பொருட்கள் விற்போர், ஆலயப் பணியாளர்கள், உப்பு வியாபாரிகள், கப்பல் பணிசெய்பவர்கள், தண்ணீர், கூல்டிரிங்ஸ் போன்ற திரவப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள். பூர்வீகச் சொத்துக்களில் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ள பிரச்சினைகளுக்குப் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் நல்லதொரு சாதகமான முடிவுகள் கிடைக்கும். பிரிந்து போன பழைய உறவுகள் மீண்டும் தொடரலாம். பிள்ளைகள் கல்வித்துறையில் பரிசுகள், பாராட்டுகளைப் பெறுவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் மூலமாகப் புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.

இராசியான எண் – 2
இராசியான நிறம் – வெள்ளை
இராசியான திசை – மேற்கு
பரிகாரம் – அம்மன் ஆலய வழிபாடு.

மீனம்:

மீனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில், களவு போன பொருட்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனத்துடன் பயின்று வருதல் நல்லதாகும். கண், காதுகளில் கவனம் தேவை. தீர்த்த யாத்திரைகள் சென்று வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுப் புதிய கடன்களை வாங்குவீர்கள். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த நாட்பட்ட மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை அடைவீர்கள். யாத்திரையின்போது புதிய பெரிய மனிதர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றோரின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். கருத்து வேறுபாடுகளுடன் இருந்து வந்த கணவன் மனைவி உறவுகளில் உள்ள பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளுக்கு உடல் நிலையில் வந்த பாதிப்புகளால் வெளியூர்ப் பயணங்களும் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். புதியதாக வீடு, நிலங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நண்பர்களிடம் நாம் விட்டுக் கொடுத்துப் போவதால் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம். புதிய தொழில்கள் ஆரம்பிப்பதைச் சிறிது காலம் தள்ளிப் போடுதல் உகந்ததாகும்.

இராசியான எண் – 1
இராசியான நிறம் – வௌளை
இராசியான திசை – கிழக்கு
பரிகாரம் – சூரிய நமஸ்கார வழிபாடு.

*****************

Gnanayohi Dr. P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18(25B/1), Pulavar Street
Krishnapuram
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India
Phone : 04633-243029
Mobile : 98425-10578, 98425-29691
Fax : 04633-240390
Website : www.gnanayohi.com

About The Author