இராசி பலன்கள்(25-8-2014 முதல் 31-8-2014 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். வங்கிகளிலிருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் கவனம் தேவை! தேவையற்ற காரியங்களில் தலையிட்டு நிம்மதியை இழக்க வேண்டாம்! வெகு காலமாகக் காணாமல் போயிருந்த பொருட்கள், நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகளிலிருந்து சில மாற்றங்கள் ஏற்படும். பயணங்களில் நற்பலன் உண்டாகும். உறவினர்களால் செலவு உண்டாகும். பூமி சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்! நண்பர்கள் உதவக்கூடிய நிலையில் இல்லை. அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! ஜவுளி, நூல் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், மருந்து வியாபாரிகள், அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள், நெருப்பு சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், உணவகங்களில் பணி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவீர்கள்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்த்தல் நல்லது! இரத்தம், நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து போகும். சகோதரர்களால் எதிர்பாராத ஆதாயம் உண்டு! அரசு சம்பந்தமான அலுவலகப் பணிகளில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். மகான்களின் தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் ஏற்படும். பயணங்களில் புதிய பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். தாயின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். வெகு காலமாக வேலை கிடைக்காதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகளால் புதிய மனக் குழப்பங்கள் வர வாய்ப்புள்ளது. திரவப் பொருள் விற்பனை செய்பவர்கள், உப்பு வியாபாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஆதாயம் அடைவர். வங்கிகள் மூலமாக எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் உண்டாகலாம். காதல் விஷயங்களில் நண்பர்களின் உதவிகள் கிடைப்பதன் மூலம் நிறைவடைவீர்கள்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வெகு காலமாகச் சரி செய்யப்படாத ஆலயங்களுக்கான திருப்பணிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. இணையத்தளம் நடத்துபவர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தினர், கணினி சாதன வியாபாரிகள், தீயணைப்புத்துறை போன்ற நெருப்பு சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், காவல்துறையினர், இராணுவம் சார்ந்தவர்கள், மசால் சம்பந்தமான உணவுப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். உணவருந்துதல் தாமதமாகும்; தூக்கமும் குறையும். மூத்த சகோதரருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வயிற்று நோய்கள், வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்! புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. அறிவியல்துறை சார்ந்தவர்கள் புதிய ஆராய்ச்சிகளில் நல்ல வெற்றி அடைவீர்கள். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுகமான சூழல் உருவாகும். பிள்ளைகளின் உடல்நிலையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்! சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான நல்ல தகவல்கள் வந்து சேரும். திருமண சம்பந்தமான விஷயங்களில் நிதானத்துடன் செயல்படுங்கள்! பயணங்களைத் தவிருங்கள்! நண்பர்களால் எதிர்பாராத ஆதாயமும் மன நிறைவும் உண்டாகும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். தென் திசையில் இருந்து பெண்களால் சில ஆதாயங்கள் உண்டு. சுரம், உடற்சூடு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். நீண்ட தூரப் பயணங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது! குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். செல்வந்தர்கள் தொடர்பால் நிம்மதி அடைவீர்கள். மர வியாபாரம் செய்பவர்கள், அச்சுத் தொழில் சார்ந்தவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், காய்கறி வியாபாரம் செய்பவர்கள், மருத்துவம் சார்ந்த பணி செய்பவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். தாய் வழிச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கிச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. மற்றவர்களை நம்பி எதையும் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! வெகு தூரத்துக்குப் புனிதப் பயணம் சென்று வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கணவன் – மனைவி உறவில் இதுவரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்! விசா சம்பந்தமான நாட்பட்ட பிரச்சினைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். அலுவலகப் பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் மிக எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது! மகான்களின் ஆசிகள் கிடைப்பதன் மூலம் மன நிறைவு அடைவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்டு வந்த தொல்லைகள் தீர்ந்து நிம்மதி உண்டாகும். வாயு, வாதம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். வர வேண்டிய பணம் சிறிது தாமதமாகவே கிடைக்கும். ஒரு சிலருக்குப் பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் தன வரவு உண்டாகும். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களால் செலவு உண்டாகும். அறுவை சிகிச்சை போன்ற காரியங்களைத் தள்ளிப் போடுவது நல்லது! உற்றார் உறவினர்கள் உதவக்கூடிய நிலையில் இல்லை. கண், காது ஆகியவற்றில் மிகவும் கவனம் தேவை! பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்படுவதன் மூலமாகச் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவீர்கள். நண்பர்களால் வீண் பொருள் விரயம் ஏற்படலாம். கட்டுமானப் பொருள் வியாபாரிகள், கலைத்துறை சார்ந்தவர்கள், மருத்துவப் பணி செய்பவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், திரைப்படம், நாடகம் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள், மூலிகை சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பூர்விகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். தந்தை – மகன் உறவில் பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். சம்பந்தமில்லாத நபர்களால் புதிய பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளதால் புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பது நல்லது! பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவுவதோடு செல்வாக்கு, புகழ் ஆகியவை கூடும். கொடுக்கல் – வாங்கல் செய்பவர்களுக்குத் தொழில் நன்றாக இருக்கும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மிகவும் சிரமப்பட்டுச் சரி செய்து விடுவீர்கள். காய்கறி வியாபாரிகள், எழுதுபொருள் வியாபாரிகள், ஆடம்பர அலங்காரப் பொருட்களை விற்பவர்கள், திரைப்படக் கலைஞர்கள், கட்டுமானப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவீர்கள். கவனத்துடன் இருந்தால் வீட்டில் திருட்டுப் போவதைத் தவிர்க்கலாம். வெகு தூரப் பயணங்கள், புனிதப் பயணங்கள் செல்வதைச் சற்றுத் தள்ளிப் போடுங்கள்! சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏமாற்றம் அடைய வேண்டாம்! காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மகாலஷ்மி வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் ஏற்படுவதால் நிம்மதிக் குறைவு ஏற்படலாம். செய்யாத குற்றத்துக்காக வீண் அவப் பெயர் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது! கணவன் – மனைவி உறவில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி உறவு பலப்படும் காலமாகும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகி மகிழ்ச்சி அடைவீர்கள். கழிவுப் பொருள் வியாபாரிகள், பொதுத்துறை சார்ந்தவர்கள், மடாதிபதிகள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்த உதவியாளர்கள், அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள், பழைய பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! முன் கோபம் காரணமாக நண்பர்களிடம் சில பிரச்சினைகள் ஏற்படும். தொலைதூரப் பயணங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். திரும்பி வராமலிருந்த பணம், பொருட்கள் திரும்பக் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். காதல் விஷயங்களில் மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். தந்தையின் உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் வந்து சேருவதன் மூலமாகப் புதிய செலவுகள் ஏற்படலாம். புதிய ஆடைகள், அணிகலன்கள் வாங்குவீர்கள்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர் வழிபாடு, அம்மன் வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். விபரீதமான எண்ணங்களை நினைத்து மனக் குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். பூர்விகச் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் உருவாகும். பூ, பழம், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை விற்பவர்கள், ஆலயப்பணி செய்பவர்கள். அறநிலைத்துறை சார்ந்தவர்கள், கணினிப் பணியாளர்கள், கணினிகளை விற்பனை செய்யும் வியாபாரிகள், குழந்தைக் காப்பகம் நடத்துபவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். கலைத்துறையினர் ஆதாயம் அடைவர். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவர். அலுலவகப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும். எடுத்த காரியத்தைத் துணிச்சலுடன் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிம்மதி அடைவதுடன் நற்பெயர் எடுப்பீர்கள். வீட்டில் மிகவும் கவனத்துடன் இருத்தல் நல்லது! கால்கள், கைகளில் கவனத்துடன் இருங்கள்! தீராத, நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக வெகு தூரப் பயணம் மேற்கொள்ளுவீர்கள். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது! பயணத்தில் குழந்தைகள், உடமைகள் ஆகியவற்றைக் கவனத்துடன் கொண்டு சென்று வருவது நல்லதாகும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. மனைவியின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படலாம். கோவில், குளம் சம்பந்தப்பட்ட பணிகளிலும் சமுதாய முன்னேற்ற நற்பணிகளிலும் ஈடுபட்டு நற்பெயரெடுப்பீர்கள். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். மின்சாரம், அடுப்பு போன்றவற்றைச் சிறு குழந்தைகள் நெருங்காமல் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளுங்கள்! அரசு சம்பந்தமான நாட்பட்ட வழக்கு விஷயங்களில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்ட விஷயங்களில் ஏமாற்றம் அடையாதீர்கள். தீயணைப்புத்துறை, உணவகத்துறை, கேஸ் வெல்டிங் போன்ற நெருப்பு சம்பந்தமான பணிகளில் ஈடுபடுபவர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர், கார உணவுப்பொருள் வியாபாரிகள் ஆகியோர்க்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவதோடு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். புதிய கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது! வங்கிகளின் உதவியால் பழைய வீடுகளைத் திருத்திக் கட்ட முயற்சி செய்வீர்கள். எதிர்பாராத விருந்தினர் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்து வருக! பொதுத் தொண்டுகளில் ஈடுபடுபவர்கள் மீது அவப் பெயர் ஏற்பட இருப்பதால் கவனத்துடன் பணி ஆற்றுவது நல்லது!

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். வேலை கிடைக்காதவர்கள் புதிய வேலைக்காகச் செய்த முயற்சிகள் பலிக்க இன்னும் சற்றுத் தாமதம் ஏற்படலாம். நாட்பட்ட நோய்க்குப் புதிய மருத்துவர்களின் உதவியால் நல்ல தீர்வு கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லது! புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாகனங்களில் எச்சரிக்கையாகப் பயணம் செய்வது நல்லது! காரணமற்ற முன் கோபத்தைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம். பங்காளிகளால் செலவுகள் உண்டாகும். செய்யும் தொழிலில் புதிய மாற்றங்கள் செய்யத் திட்டம் போடுவீர்கள். கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த பிரச்சினைகள் மாறி நல்ல சூழ்நிலை காணப்படும். அலுவலகப் பணியாளர்களுக்குப் பணியிட மாற்றமும் பதவி உயர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ள காலமாகும். வெளிநாட்டு விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். பழைய பொருட்கள், இரும்பு போன்றவற்றை விற்பவர்கள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், வட்டித்தொழில் செய்பவர்கள், தகவல் மையம் நடத்துபவர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், தரகு, ஏஜன்சி சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- கணபதி வழிபாடு செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். மேகம், உடற்சூடு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். வெகு காலமாகத் திரும்பி வராமலிருந்த கடன், கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். வேதியியல், கமிஷன், கட்டுமானம் போன்ற தொழில்கள் செய்பவர்கள், வட்டித் தொழில் செய்பவர்கள், இரும்பு, இயந்திரம், எண்ணெய், பலசரக்கு சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், அழுகுபொருள் வியாபாரிகள் ஆகியோர் லாபம் அடைவர். வேலை கிடைக்காதவர்களுக்குப் புதிய முயற்சிகள் மூலம் வேலைவாய்ப்புக் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரும்.
பயணங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். புதிய வீடு வாங்குவதற்கான நீண்ட கால முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தாய்மாமன் வழியில் சில சுப காரியங்கள் நடக்கும். விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் மேலிடும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் செலவுகள் உண்டாவதோடு அவர்களால் சிற்சில ஆதாயங்களும் உண்டாகும். வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவதன் மூலம் சந்திக்க வேண்டிய நபர்களைச் சந்தித்துக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவீர்கள். பூ, பழம், நறுமணப் பொருட்கள், பூஜைப் பொருட்கள் ஆகியவற்றை விற்பவர்கள், உப்பு வியாபாரிகள், கடல்வளத்துறை சார்ந்தவர்கள், தாய்-சேய் நல விடுதி நடத்துபவர்கள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். குடும்பத்தில் சிற்சில சச்சரவுகள் வந்து நீங்கும். வீட்டை அலங்காரம் செய்வதற்கும், புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவதற்கும் முயற்சி செய்வீர்கள். தாய் வழிச் சொத்துக்கள் கிடைக்கும். தந்தை – மகன் உறவுகளில் கவனம் தேவை! அரசியல்வாதிகளால் ஒரு சிலருக்கு ஆதாயம் உண்டாகும். வேற்று மதத்தவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! தாயின் உடல்நிலையில் ஏற்பட்டு வந்த பாதிப்புகள் குறைந்து காணப்படும். விசா சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். அரசு சம்பந்தமான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author