உன்னைவிட

இரவைத் தேடாத நிலா
ஒரு வேளை
நிரந்தரமாய்ப் போனால்…
நிசப்தங்களின் மத்தியில்
சப்தமாக மனதில்
இன்னமும் ஒலிக்கும்
உன் கொலுசொலி ஒரு வேளை
ஒலிக்காது போனால்…
உன் நினைவு ஏற்படுத்திய
காயங்கள்,
காயங்கள் உண்டாக்கிய
வலிகள்,
வலிகளுக்கு வலி தரவல்ல
என் கவிதைகள்
எனக்கு எழுத வராது போனால்…
ஒரு வேளை பெண்ணே
உன்னை நான் மறந்து போகக்கூடும்…
உன்னைவிடப் பேரழகியை
தினமும் பார்க்கிறேன்..
உன்னைவிட இனியவளை
என்றும் சந்திக்கிறேன்..
உன்னைவிடக் குணத்தவர்கள்
பலரைப் பார்த்திருக்கிறேன்…
உன்னைவிட எல்லாம்…
உன்னைவிட பலரும்..- ஆனால்
உன்னைப்போல ஒருத்தியும்
இங்கில்லையே…!

About The Author

12 Comments

  1. s.vivekanantha rajan

    மிகவும் அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.மேல்மேலும் வளர்க.

  2. vimal

    அருமையன கவிதை வரிகல் வாழ்த்துக்கல்

  3. pradheep

    என் சுவசம் மின்டும் எனக்குல் ஒர் ஒவியம் வரைன்தது

  4. Raajareega

    வெர்ய் இம்ப்ரெச்சிவெ அன்ட் அல்ல் தெ பெச்ட் fஒர் யொஉர் ஒன்cஒமிங் cரெஅடிஒன்ச்
    றாசி Pகர்மcஎஉடிcஅல்ச்

Comments are closed.