எழுதப்படாத விதிகள் (1)

(Based on Facts under lined)

•  நான் வெற்றிக்கான சாவியைக் கண்டுபிடிக்கும்போது யாரோ பூட்டை மாற்றிவிடுகிறார்கள்

•  தவறு செய்வது மனித இயல்புதான். ஆனால் மன்னிப்பது நிர்வாகத்தின் கொள்கை அல்ல

•  வெற்றிக்கான பாதையா? அது இன்னும் கட்டிமுடிக்கப்படவில்லை

•  மது எந்தப்பிரச்சினையையும் தீர்ப்பதில்லை, யோசித்துப்பார்த்தால் பால் கூடத்தான்!

•  கடன் கிடைக்கவேண்டுமா? அப்படியென்றால் உங்களுக்குக் கடன் தேவையில்லை என்பதை முதலில் நிரூபிக்க வேண்டியதிருக்கும்

•  நமக்குப் பிடிக்கும் எல்லா விஷயங்களுமே பொதுவாக, மிகவும் விலை அதிகமாயிருக்கும் அல்லது சட்டத்திற்கு விரோதமாக இருக்கும், அப்படியும் இல்லையென்றால் நம் கொழுப்புச் சத்தை அதிகரிப்பதாகத்தான் இருக்கும்

•  ஒளி ஒலியைவிட வேகமாகச் செல்கிறது என்பதால்தான் பல பேர் பேசும்போதைவிட பார்க்கும்போது பிரகாசமாக (அழகாக)தெரிகிறார்கள்.

About The Author

1 Comment

Comments are closed.