கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

2009ஐ வரவேற்கும் சில சுவையான எஸ்.எம்.எஸ். செய்திகள்

வளமான ஜனவரி, அன்பான பிப்ரவரி, அற்புதமான மார்ச், முட்டாள்தனமான ஏப்ரல், இனிமையான மே, வளர்ச்சி தரும் ஜூன், பிரமாதமான ஜூலை, சுதந்திரமான ஆகஸ்ட், சுவையான செப்டம்பர், குளிர்ச்சி தரும் அக்டோபர், அழகான நவம்பர், மகிழ்ச்சியான டிசம்பராக இந்த புத்தாண்டு விளங்க நல்வாழ்த்துக்கள்!

***

நான் இப்போது கால்கள் தள்ளாடாமல், நிதானமான நிலையில் உங்களுக்கு பாதுகாப்பான பயமில்லாத புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். ஆமாம், இது என்ன வருஷம்? 

***

  
நான் உங்களுக்காக நல் அதிர்ஷ்ட வங்கியில் கணக்கு எண் 2009ல் 365 நாட்களுக்கு இன்பமும், நல்ல உடல்நிலையும், பணமும், மகிழ்ச்சியும் டெபாசிட் செய்திருக்கிறேன். மகிழ்ச்சியான, மனநிறைவான புத்தாண்டிற்கு வாழ்த்துக்கள்.

***

உங்களுடைய காலணியை உதறிவிட்டு வெறும் காலில் சென்ற ஆண்டின் நினைவுகளான சூரிய ஒளியில் பளபளக்கும் அந்த பச்சைப் புல்வெளியில் விரைந்து ஓடுங்கள். இந்த ஆண்டு உங்களுக்காகக் காத்திருக்கும் புதுக் காற்றை சுவாசிக்கத் தயாராகுங்கள் – புது வருஷத்திலும் – வாழ்நாள் முழுவதும்!

***

உங்கள் வீட்டில் சமாதானம் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வரட்டும் – உள்ளே வந்து உங்கள் கடன்களைத் திருடிக்கொண்டு போகட்டும். எரியும் தீயின் புகைபோல உங்கள் உடைகள் வெற்றி எனும் மணத்தால் நிறையட்டும்! சந்தோஷம் உங்கள் கன்னத்தில் அறையட்டும். உங்கள் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக இருக்கட்டும்! உங்களுடைய துன்பங்கள் விலாசம் தெரியாமல் போகட்டும். சுருக்கமாக, 2009 உங்களுடைய சிறந்த ஆண்டாகத் திகழட்டும்!

***

ஒரு புதிய புத்தகத்தைத் திறப்போம். அதில் நாம்தான் எழுதப்போகிறோம். இந்தப் புத்தகத்திற்கு சந்தர்ப்பம் என்று பெயர். அதனுடைய முதல் அத்தியாயம் புத்தாண்டு தினம்.

***

நாம் எப்போதுமே கிறிஸ்துமசிற்கும் புத்தாண்டு தினத்திற்குமிடையே என்ன சாப்பிட்டோம் என்று கவலைப்படுகிறோம். ஆனால் நாம் உண்மையாக கவலைப் படவேண்டியது, புத்தாண்டிற்கும் கிறிஸ்துமசுக்கும் இடையே என்ன சாப்பிட்டோம் என்பதைப் பற்றித்தான்.

***

புது வருஷம்தான் நாம் புதுப்புது தீர்மானங்கள் போடுவதற்கு உகந்த நாள் – அடுத்த வாரம் வழக்கம்போல அதை மறந்துவிடலாம்!

***

நேற்றுதான் நமது கடைசி சிகரெட்டைப் புகைத்தோம். கடைசியாக மது அருந்தினோம். கடைசியாக ஒரு சபதத்தை உடைத்தோம். இன்று நாம் புனிதமானவர்கள் – சிறந்த மனிதர்கள். இன்னும் முப்பது நாள் கழித்து மறுபடியும் நாம் செய்த தீர்மானங்களை மறந்து – மறுபடி இன்னும் ஒரு புது வருஷத்திற்காகக் காத்திருப்போம் – புது தீர்மானங்கள் போட!

About The Author

4 Comments

  1. vijay

    ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கிறது.

    நிலாச்சாரல் குழுவிற்கும் அதன் வாசகர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்

  2. vijay

    ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கிறது.

    நிலாச்சாரல் குழுவிற்கும் அதன் வாசகர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்

Comments are closed.