கவிதைகள்

வனவாசம்

மகனென்னும் தேசத்தில்
மகிழ்ந்திருக்க உரிமையுள்ள
பாண்டவராய் பெற்றோர்கள்!
ஊசிமுனை நிலம் கூட
உங்களுக்கு இல்லையென
உரைத்திடும் துரியனாய்
உருமாறினாள் மருமகள்!

இதோ – இந்தப் பாண்டவர்கள்
புறப்பட்டு விட்டார்கள்:
குருக்ஷேத்திரம் நோக்கி அல்ல!
மீண்டும் அடுத்த வனவாசத்துக்கு!!

**********************

முரண்

சிக்னலுக்காக
காத்திருக்கும் கார்-
வெளியே
கையேந்தி நிற்கும் சிறுமி;
உள்ளே
கம்பீரமாய் வாலாட்டும் ‘டாமி’!

*******************

கருணை

காற்றே!
கருணை செய்க!
ஓலைக் குடிசையின்
ஒற்றை விளக்கில்
ஏழைச் சிறுவனின்
எதிர்காலம்!

About The Author

2 Comments

  1. Balkris

    சிரிய கவிடைகல் பெரிய கருதுக்கல் மிக அழ்கு

  2. RASIGAN. RAVIKUMAR

    கருணை கவிதை மிகவும் நன்றாக உள்ளது. நானும் காற்றிடம் வேண்டிக் கொள்கிறேன்.

Comments are closed.