குஜராத்தி லாடு மற்றும் ஜவ்வரிசி மிக்சர்

குஜராத்தி லாடு

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு- ஒரு கப்,
அவல் – 1/2 கப் ,
கடலைப்பருப்பு – 1/2 கப்,
சர்க்கரை – 2 கப், நெய் – 1/2 கப் ,
முந்திரிப்பருப்பு – 10 ,
ஏலப்பொடி – அரை தேக்கரண்டி .

செய்முறை:

கோதுமையை நன்றாக மணம் வரும் வரை வறுக்கவும். அவலையும், கடலைப்பருப்பையும் தனித்தனியாக நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்பு மிக்சியில் மூன்றையும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக பொடித்துக் கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி முந்திரித்துண்டுகளைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின் அந்த வாணலியிலேயே நெய் ஊற்றி சூடாக்கி பொடித்த மாவுக் கலவையைப் போட்டு மிதமான தழலில் சூடாக்கவும். அடுப்பை அணைத்து விட்டு பொடித்த சர்க்கரையையும், பொறித்த முந்திரித்துண்டுகளையும் சேர்த்து நன்றாகக் கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும்.

ஜவ்வரிசி மிக்சர்



தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி – 1கப்,
வறுத்த கடலைப்பருப்பு – இரண்டு மேசைக்கரண்டி ,
வறுத்த நிலக்கடலை – 2 மேசைக்கரண்டி ,
கறிவேப்பிலை – ஒரு கொத்து ,
கொத்துமல்லி –
சிறிது எண்ணெய் ,
உப்பு,மிளகாய்த்தூள் – தேவையான அளவு .

செய்முறை:

1.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்த கடலைப்பருப்பையும் , நிலக்கடலையையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுக்கவும்.
2.மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி ஜவ்வரிசியையும் , கொத்துமல்லி, கறிவேப்பிலையை தனித்தனியாக பொறித்துக் கொள்ளவும்.
3.சற்று சூடு குறைந்த பிறகு உப்பு, மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் போடவும்.

About The Author