குறுங்கவிதைகள் (11)

ஆயிரம் மனைவி

ஐயாவை மதிக்கிறான்

மனைவிக்கு வைத்தனன்

கற்புக்கு சோதனை

*****

தாடி வளர்த்தால்

காதல் தோல்வியாம்

பாவம் திருவள்ளுவர்

*****

உப்பு சேர்ந்ததில்

தீர்ந்து போனது

பாற்கடல்

*****

‘ யாமிருக்க பயமேன் ‘

முருகன் படம்

திருடன் பையில்

*****

கோழிகள் அற்ற

பல்லாங்குழி

பல்லில்லாங்குழி அல்லவா?

*****

About The Author

1 Comment

  1. ganesan pachappan

    தாடி வளர்த்தால்

    காதல் தோல்வியாம்

    பாவம் திருவள்ளுவர்.

Comments are closed.