சர்க்கரை பொங்கல் – முதல் வகை

தேவையான பொருட்கள்:

அரிசி – 4 கப்
பயத்தம்பருப்பு – 1 கப்
நெய் – 2 மேசைக்கரண்டி
வெல்லம் -அவரவர் விருப்பத்திற்கேற்ப (தலை தட்டி 2 போடலாம்)
ஏலப்பொடி – அரை தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – ஆறு
திராட்சை – பத்து.

செய்முறை:

அரிசியையும், பயத்தம்பருப்பையும் ஒரு கடாயில் சற்று சூடாக்கிப் பின் நன்றாகக் கழுவிக்கொண்டு ஒரு கப்பிற்கு மூன்றரை என்ற அளவில் தண்ணீரும், பாலும் சேர்ந்து அளந்து குழைய வேகவைத்துக் கொள்ளவும்.

மற்றொரு கடாயில் வெல்லத்தை சிறிது நீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரைத்துக் கொள்ளவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிப் பின் வெந்த அரிசி பருப்பை நன்றாகக் கிளறிவிட்டு வெல்லக்கரைசலில் போட்டு நன்றாகக் கலந்து அடுப்பின் மீது வைத்துக் கிளறிக் கொண்டிருக்கவும்.

பதமாக வெந்ததும் நெய் ஊற்றி, ஏலப்பொடி சேர்த்துக் கலந்து நெய்யில் வறுத்த முந்திரித் துண்டுகளையும், திராட்சையையும் போட்டு இறைவனுக்குப் படைத்து ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’வின் சீரடி பணிந்து "மூட நெய் பெய்து முழங்கை வழி வார" உண்ணலாம்.

About The Author