சினி சிப்ஸ் – கொறிக்க, சுவைக்க (17)

பறக்கத் தயாராகிவிட்டது ‘வண்ணத்துப்பூச்சி’

அழகப்பன் இயக்கிய ‘வண்ணத்துப்பூச்சி’ வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. தாத்தா-பேத்தி இடையில் உள்ள அன்பை தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் சொல்ல வருகிறது இப்படம். பேத்தியாக ஸ்ரீலக்ஷ்மியும் தாத்தாவாக பாலாசிங்கும் நடித்துள்ளனர். மூவாயிரம் வருடம் பழமை வாய்ந்த ‘துடுக்’ என்ற வாத்தியம் இப்படத்தின் இசைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

வில்லனாகும் பார்த்திபன்

செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஓருவன்’ படத்தில் முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார் பார்த்திபன். வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்ததால் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறியுள்ளார் அவர். இப்படத்திற்குப் பி‎ன் பார்த்திபன் நடித்து இயக்குவிருக்கும் படம் ‘வித்தகன்’.

‘மர்மயோகி’யில் கஜோல்

தசாவதாரத்துக்கு அடுத்து கமல் நடிக்கவிருக்கும் படம் ‘மர்மயோகி’. அவரே படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார். ‏இப்படத்திற்கு மேலும் மெருகு சேர்க்கும் வகையில் பாலிவுட் நடிகைகள் ஹேமமாலினி மற்றும் கஜோல் நடிக்கவுள்ளனர்.

நடிகராகும் ‏இயக்குனர் வரிசையில் மிஷ்கின்

‘சித்திரம் பேசுதடி’ மற்றும் ‘அஞ்சாதே’ வெற்றிப் படங்களின் இயக்குநர் மிஷ்கின் தனது நடிப்புத் திறமையும் நிருபிக்க வருகிறார் ‘நந்தலாலா’ படத்தின் மூலம்.

தெலுங்கில் பிரகாஷ்ராஜிற்கு தடா

பிரகாஷ்ராஜ் தெலுங்கு படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ளவில்லை. அதனால் தெலுங்கு பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இணைந்து இவருக்கு தடை விதித்துள்ளனர். இதற்கு முன்பும் ஒருமுறை இவருக்கு தெலுங்கு படவுலகம் தடை விதித்து பின்னர் அதை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

வணக்கம் சொல்ல வருகிறது ‘வணக்கம்மா’

சிறு வயதிலேயே ஜெயிலுக்குச் செல்கிறார்கள் இரு இளைஞர்கள். விடுதலையாகி வெளி வந்த பிறகு பிழைப்புக்காக அவர்கள் திருட ஆரம்பிக்கிறார்கள். இதனால் ஏற்படும் நிகழ்வுககளின் அடிப்படையில் அமைந்திருக்கிறது ‘வணக்கம்மா’. இதில் சரவணன் பூம்பூம் மாட்டுக்காரனாக தோன்றுகிறார்.

கருணாஸ் ஹீரோவாக அறிமுகம்

விவேக், வடிவேலு, சந்தானம் வரிசையில் ஹீரோவாக வந்திருக்கும் அடுத்த காமெடி நடிகர் கருணாஸ். ‘வடக்கு நோக்கி எந்த்ரம்’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கிறார் கருணாஸ். படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெறுகிறது.

மலேஷியாவில் படமாகிறது ‘1977’

ஆர்.எஸ்.கே பிக்சர்ஸ் தயாரிப்பில், தினேஷ்குமார் ‏இயக்கும் படம் ‘1977’. பல விளம்பரப்படங்கள் இயக்கியுள்ளபோதும் ‘1977’ தா‎ன் தினேஷ்குமார் இயக்கும் முதல் திரைப்படம். 1977ல் நடைபெற்ற ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள ‏இப்படத்தின் பாதிக்கு மேற்பட்ட காட்சிகள் மலேஷியாவில் படமாக்கப்பட்டுள்ளன. நமீதா, பர்ஸானா, விவேக், விஜயகுமார், ராதாரவி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

About The Author