சினி சிப்ஸ் – கொறிக்க, சுவைக்க (15)

ஜூன் மாதத்தில் ‘சக்கரக்கட்டி’ பாடல் வெளியீடு

ஏ.ஆர். ரஹஹ்மான் இசையில் ‘சக்கரக்கட்டி’ பாடல்கள் ஜூன் மாதம் வெளிவருகிரவிருக்கிறதுன்றன. இப்படத்தில் உள்ள 6 பாடல்களும் புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளன. பாடல் ஒன்றிற்காக லண்டனிலிருந்து பின்னணிப் பாடகி வீணா பரத்வாஜை வரவழைத்துள்ளனர். "ஐ மிஸ் யூ டா" என்ற பாடலுக்கு இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாக இசையமைத்துள்ளாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.

*****

குழந்தைகளுக்கான ‘இரட்டை சுழி’

ஷங்கர் தயாரிப்பில், தாமிரா இயக்கத்தில் வெளிவருகிறது குழந்தைகளுக்கான ‘இரட்டை சுழி’ திரைப்படம். இப்படத்தில் இயக்குனர்கள் கே.பாலசந்தர் மற்றும் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் தாமிரா, சஷங்கரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிவர்.

*****

தீபாவளிக்கு வருமா ‘கந்தசாமி’?

விக்ரம் ரசிகர்களுக்கு ‘கந்தசாமி’ படத்தின் மூலம் விருந்து காத்திருக்கிறது. "மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் கந்தசாமி அனைத்து தரப்பினருக்கும் திருப்தி அளிக்கும்" என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் தாணு. குட்டிச் செய்தி :- 17 நாட்கள் நடைபெற்ற சண்டைக் காட்சிக்காக பிரசாத் ஸ்டூடியோவில் 1 கோடி ரூபாய் செலவில் மிகப் பெரிய செட் அமைக்கப்பட்டது.

*****

ரீமிக்ஸ் செய்யப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜாவின் பாடல்களுக்குப் பிறகு ரீமிக்ஸிற்கு அடுத்து வந்திருப்பது ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல். ‘தீயவன்’ படத்திற்காக காதலன் படத்திலிருந்து ‘காதலிக்கும் பெண்ணின் கைகள்’ பாடலை ரீமிக்ஸ் செய்கிறார் படத்தின் இசையமைப்பாளர் எல். வைத்தியநாதன்.

*****

தசாவதாரத்தில் கமலின் அவதாரப் பெயர்கள்

ரங்கராஜ நம்பி, பலராம் நாயுடு, கோவிந்த ராமசாமி, அவதார் சிங், கிருஷ்ணவேணி பாட்டி, ப்லெசர், ஷின்கென் நரஹாசி, ஜார்ஜ் புஷ், வின்சென்ட் பூவராகவன் மற்றும் கலிப்புல்லா கான்.

*****

குறும்பட பயிற்சி வகுப்புகள்

நிஷால் மற்றும் தமிழ்நாடு டாக்குமென்ட்ரி மற்றும் குறும்பட இயக்குனர் சங்கங்கள் இணைந்து இயக்கம், நடிப்பு, எடிட்டிங் மற்றும் பல துறைகளைப் பற்றிய பயிற்சி வகுப்புகள் மே 25 முதல் 31 வரை நடத்துகின்றனர். இயக்குனர் பாலுமகேந்திரா இதனைத் துவக்கி வைக்கிறார். பயிற்சி வகுப்பின் கடைசி நாளன்று குறும் படமெடுக்க தேவையான வழிகாட்டுதலும், அறிவுரைகளும் வழங்கவுள்ளனர்.

*****

ஜூலையில் வருகிறதாம் ‘குசேலன்’

ரஜினியின் ‘குசேலன்’ ஜூலையில் வெளிவருகிறது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி உடுமலைப்பேட்டையில் படமாக்கப்பட்டது. படத்தின் டைட்டில் பாடலை வாலியின் வரிகளில் ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார். படத்தின் பாடல்கள் ஜூன் 20ம் தேதி வெளிவருகின்றன.

*****

‘பொம்மலாட்டம்’ பார்க்கலாமா?

அர்ஜூன், நானா படேகர் இணைந்து நடித்த ‘பொம்மலாட்டம்’ திரைப்படம் ஜூன் 27 அன்று வெளிவருகிறது. ஹிந்தியில் ‘சினிமா’ என்ற பெயரில் டப் செய்யப்படவுள்ளது. ‘பொம்மாலட்ட’த்தில் நானா பட்டேக்கர் திரைப்பட இயக்குனராகவும்,  அர்ஜூன் போலிஸ் அதிகாரியாகவும் (வழக்கம் போல்!) நடித்துள்ளனர். இப்படம், திரைப்படத் துறையினரைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை மக்களுக்கு அளிக்கும் என்று கூறியுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

*****

மீண்டும் ரிலீஸான ‘பாட்ஷா’

12 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக வெளியிடப்பட்டுள்ளது ‘பாட்ஷா’ திரைப்படம். ரஜினியின் மற்ற படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது ‘பாட்ஷா’வின் ரீ-ரிலீஸ். 6 திரையரங்குகளில் வெளியிடப்பட்டும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

*****

About The Author