சினி சிப்ஸ்

தேசிய விருது பெற்ற பிரியாமணி

புது தில்லியில் நடந்த தேசியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது சரோஜா தேவி, திலிப் குமார் மற்றும் லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ‘வெள்ளித் தாமரை’ விருது பிரியாமணிக்கும், ‘தங்கத் தாமரை’ விருது சவுமித்ரா சட்டர்ஜிக்கும் வழங்கப்பட்டது. வங்காள இயக்குனர் தபன் சின்ஹா ‘தாதா சாகப் பால்கே’ விருதினைப் பெற்றார். விருதுகள் அனைத்தையும் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் வழங்கினார்.

*****

‘பேராண்மை’யில் ஹாலிவுட் நடிகர்கள்

ஜெயம் ரவி நடிக்கும் ‘பேராண்மை’யில் ஹாலிவுட் டெக்னீஷியன்ன்கள் பணியாற்றுவது அறிந்ததே. தற்போது, ஐந்து ஹாலிவுட் நடிகர்களும் படத்தில் நடிக்கின்றனராம். நடிகர்களின் தேர்விற்காக இயக்குனர் ஜனநாதன் அமெரிக்கா சென்றுள்ளார்.

*****

காதலர்களின் ‘பொக்கிஷம்’

‘பொக்கிஷம்’ படத்தில் காதலர்கள் தங்களுடைய காதல் கடிதங்களையும், பரிசுப் பொருட்களையும் பொக்கிஷமாக பாதுகாக்கின்றனராம். ரசிகர்களின் மனதைத் தொடும் காட்சிகள் படத்திலிருக்கும் எனக் கூறி இருக்கிறார் படத்தின்ன் நடிகரும் இயக்குனருமான சேரன்.

*****

மாதவனின் முதல் தெலுங்கு படம்

மாதவன், சதா, ஷமீதா ஷெட்டி நடித்திருக்கும் ‘லீலை’ தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்படுகிறது. தெலுங்கு நாவலைத் தழுவி படமாக்கப்பட்டுள்ள இப்படம் மாதவனின் முதல் தெலுங்குப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

*****

‘ரோபோ’வின் பெயர் மாற்றம்

ரஜினி நடிக்கும் ‘ரோபோ’, தமிழ் பெயர் கொண்ட படங்களுக்கு அரசு அளிக்கும் வரிச் சலுகையின் காரணமாக, ‘எந்திரன்ன்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

*****

டொரொண்டோ விழாவில் நந்திதாவின் படம்

நந்திதா தாஸ் இயக்கிய ‘ஃபிராக் (Firaque)’ படம், செப்டம்பர் 5ஆம் தேதி டொரொண்டோ பட விழாவில் திரையிடப்பட்டது. குஜராத் கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயத்தில் நடக்கும் வன்முறைகளைப் பற்றி கூறும் படம் ‘பிராக்’.

*****

படக் குழுவினர்கள் நடிக்கும் ‘சரோஜா’

‘சரோஜா’வின் தயாரிப்பு நிர்வாகி மகேந்திரன், படத்தில் பிரகாஷ்ராஜின் கார் ஓட்டுனராகவும், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சண்டை பயிற்சியாளர் வழி சொல்பவர்களாகவும், கேமராமேன் சக்தி சரவணன் சாலைப் போக்குவரத்து நெரிசல் பற்றி தெரிவிப்பவராகவும் இப்படத்தில்நடித்திருக்கின்ன்றனர். இது போல் படக்குழுவினர் 28 பேர் இப்படத்தில் நடித்திருக்கின்ன்றனராம்.

*****

முதல்வர் கலந்து கொள்ளும் திரைப்பட இசை வெளியீடு

மோசர் பியருடன் டூயட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் ‘அபியும் நானும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். முதலமைச்சரும் விழாவில் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்திருக்கிறாராம்.

*****

About The Author

1 Comment

  1. maleek

    ரோபோவின் பெயர் எந்திரன் என்பதுபோல
    ஷங்கரின் பெயரையும் தந்திரன்னு மாத்தலாம்

Comments are closed.