சில்லுனு ஒரு அரட்டை

மக்களே! எல்லாரும் நல்லாருக்கீங்களா?

சுத்தி வளைக்காம நேரே அரட்டைக்குப் போவோம்…
ஒரு கணவர் ஆபிஸ், வேலைன்னு ரொம்ப பிஸியா இருப்பாரு. காலைலே எழுந்திரிச்சார்னா போனும் கையுமாத்தான் இருப்பாரு. அதனால அவரு மனைவிக்கு இவரப் பார்த்தா பயங்கரமா கோபம் வரும். இந்த அம்மாதான் பிள்ளைகளை பார்த்துக்கிட்டு, வீட்டையும் அழகாக நிர்வகிச்சுக்கிட்டு இருந்தாங்க.

ஒரு நாள் ராத்திரி இவருக்கு திடீர்ன்னு நெஞ்சுவலி வந்துச்சு. மருந்து சாப்பிட்டு தூங்கிட்டாரு. மறுநாள் காலைல மணி 10 ஆயிடுச்சு. என்ன இன்னிக்கு பொண்டாட்டி நம்மள எழுப்பல, காபி வேற கொடுக்கலயேன்னு யோசிச்சாரு. இவரச் சுத்தி ஒரே அழுகைச் சத்தம் கேக்குது. இவரு எழுந்திருக்கணும்னு பார்க்கறாரு. ஆனா இவரால முடியல. அப்பத்தான் இவருக்குப் புரியுது, தான் உயிரோட இல்லைனு.

உடனே நினைக்கிறாரு, "என் மனைவி எத்தனை பொறுமைசாலி. எப்படி வீட்டில் உள்ள அத்தனை பேரையும் கவனிச்சுக்கிட்டா. அவள எத்தன வாட்டி நா திட்டிருக்கேன்! ஐயோ பிள்ளைகளைக் கொஞ்சணும் போல இருக்கே. கடவுளே இது என்ன சோதனை! அப்புறம் நானும் என் ஃப்ரண்டும் ஒரு சின்ன விஷயத்துக்காக சண்டை போட்டுக்கிட்டோம். அதனால ரொம்ப நாளா பேசாம இருந்தேன். ஆனால் அவன் கூட இங்க வந்திருக்கான். என்னப் பார்த்து அழறான். இப்படி தப்புப் பண்ணிட்டேனே! ரொம்ப சுயநலமா இருந்துட்டேனே! கடவுளே எனக்கு ஒரு சான்ஸ் கொடு, எல்லார்கிட்டேயும் அன்பாப் பேசணும். என் மனைவிகிட்ட ஐ லவ் யூ சொல்லணும். என் பிள்ளைகள வெளில கூட்டிட்டுப் போய் வேணுங்கிறத வாங்கிக் கொடுக்கணும். என் ஃப்ரண்டு கிட்ட மன்னிப்புக் கேட்கணும்."

ஆனா அவரால ஒண்ணும் பண்ண முடியவில்லை. திடீர்ன்னு பார்த்தா மனைவி அறைக்கு வந்து எழுப்பறாங்க. "என்னங்க! மணி பத்தாவுது. ஆபிஸுக்கு டைம் ஆச்சு, சீக்கிரம் எழுந்திருங்க. ராத்திரி தூக்கத்தில அழுதீங்களே, ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா?"

எனவே, எல்லாருக்கும் இன்னும் டைம் இருக்கு. நம்மகிட்ட உள்ள ஈகோவை தூக்கி எறிஞ்சிட்டு, எல்லார்கிட்டேயும் அன்பா, பிரியமா, சந்தோஷமா இருப்போம்.

போன ஜனவரில லீவுக்கு இந்தியா வந்தேன். அப்ப பொங்கலை ஒட்டி தெருவுக்குத் தெரு திருவிழா நடந்துச்சு. எல்லா பக்கமும் விளையாட்டுப் போட்டி வேற. இந்தக் காலத்தில் விசேஷ நாட்கள்ல கூட நம் பாரம்பரிய ஆடைகளை அணியறதில்லங்கறது கவலைக்குரிய விஷயம். நம்ம பாரம்பரிய உடைகளான புடவையோ, அல்லது வேஷ்டியோ கட்டும்போது, நம் உடம்பில் இருக்கும் ஆற்றல் மையங்கள் தூண்டப்படுவதாகவும் உடலுக்குத் தேவையான இயற்கையான காற்றோட்டம் கிடைப்பதாகவும் சொல்றாங்க. அதே போல எந்தவித (strain) கஷ்டமும் இல்லாமல் தரையில் உட்காரவும் முடியும். நல்ல நாட்களுக்காவது இந்த மாதிரி உடைகளை முயற்சி செய்யுங்க… அழகாவும் இருக்கும்; வசதியாவும் இருக்கும்…

சாதாரணமா கிராமங்கள்ல நடக்கும் திருவிழாக்கள்ல சைக்கிள் போட்டி கண்டிப்பா இருக்கும். முறைப் பொண்ணுங்களுக்கு முன்னால ஃபிலிம் காட்ட இது சரியான சமயம். இப்படித்தான் ஒரு பையன் ஒரு பொண்ணை சைட் அடிச்சிக்கிட்டே போட்டில கலந்துக்கிட்டு சைக்கிள் ஸ்டேண்ட் எடுத்து விடாம நின்ன எடத்திலேர்ந்து சைக்கிள ஓட்டிக்கிட்டு இருந்தானாம்!

Tree in bahrain

பஹ்ரைன் நாட்டில் இருக்கும் இந்த மரம் தனிக்காட்டு ராஜா போல் 100 வருஷத்திற்கு மேலாக இருக்கு. நம்ம ஊர்ல பார்க்காத மரமான்னு நீங்க சொல்றது காதில விழுது. இந்த மரத்தோட ஸ்பெஷல் என்னன்னா, பாலைவனத்தில எந்த ஒரு நீர் ஆதாரமும் இல்லாம கடந்த பல வருஷங்களா தனித்தன்மையோட இருக்கு. புரியாத புதிரான இந்த மரத்தை Tree of lifeன்னு சொல்லுவாங்க. எந்த வித ஆதாரமும் இல்லாம இன்னும் பச்சைப் பசேல்ன்னு அழகாக இருக்கற இந்த மரத்துக்கு நான் வைத்த பெயர் நம்பிக்கை விருட்ஷம். அந்த மரத்தினைப் பற்றிய விக்கிப்பீடியா லிங்க் இதோ…

http://en.wikipedia.org/wiki/Tree_of_Life,_Bahrain

மீண்டும் விளையாட வரேன்.

About The Author

6 Comments

  1. gomathi mylraj

    தமிழர்களாக பிறந்து விட்டு புடவை கட்டினால் வசதியாக இல்லை என்பவர்களை என்ன செய்வது.
    நானும் பஹ்ரைன் நாட்டில் வசிக்கிறேன் . நீங்கள்?

  2. RAJESWARI

    it is correct…because of the reason is many parents are told at seems en ponnu podavaye katta theriyathu…atha avanga perumaiya sollikolvaragal..parents ipppadi irudal pengal enna seyya mudium…

  3. suganthe

    புடவை ஒரு செக்ஸியான உடையாகவே மற்ற நாட்டவர்களால் பார்க்கப்படுகிறது.காரணம் புடவை கட்டும் போது கழுத்து முதுகு இடுப்பு இவை எல்லோர் கண்ணுக்கும் தெரியும்.ஆனால் சுடிதார் என்றால் டீஸன்ட் ஆக கழுத்து முதுகு இடுப்பு ஒன்றுமே தெரியாமல் இருக்கும்.

  4. SubhasriSriram,Bahrain

    கருத்துக்களை பதிவு செய்த கோமதிமயில்ராஜ் மற்றும் ராஜேஸ்வரிக்கு மிக்க நன்றி. நானும் பஹ்ரைன் தான். நிலாச்சாரல் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  5. Dr. S. Subramanian

    The reason (for not wearing a saree) that is given does not appeal to me. You can wear a saree and a blouse without showing any part of your skin/body.

    There is a journalist in Bloom(berg) TV in India who is starting a campaign to encourage business leaders and office folks to start wearing Indian dress for work. The mOham” about Western dress or North Indian dress (by South Indians) is hard to understand despite the statements such as “it is convenient”. In the olden days did women in South India wear chUDidhArs? They were not inconvenienced by their native dress!”

  6. suganthe

    எங்கள் முழு உடலையும் மறைத்து புடவை உடுத்தலாம் தான் ஆனால் ஒருவரும் அப்படி உடுப்பதாக தெரியவில்லை. டீ வி சினிமா எல்லாம் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் கவலை.வெளி நாட்டவர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தபின் தான் புடவை செக்ஸியானதென்று அறிந்தேன்.

Comments are closed.