சில்லுனு ஒரு அரட்டை

ஹல்ல்ல்ல்ல்லோ…. எப்படி இருக்கீங்க எல்லாரும்?

ரொம்ப நாளைக்கப்பறம் மீண்டும் ஸ்வர்ணா. அனாமிகா, கவிதான்னு புதுப்புது வெஜாக்கள்லாம் வந்து கலக்கும்போது பெரியமனுஷத்தனமா ஒதுங்கி இருக்கலாம்னு பார்த்தா காயத்ரி என்னைத் திரும்பி வர வைச்சிட்டாங்க. ஆமாங்க, காயத்ரிக்கு ஆஃபீஸ்ல பொறுப்புகள் அதிகமாயிட்டதுன்னால நமெக்கெல்லாம் டாட்டா காட்டிட்டாங்க. அவங்களோட ரசிகர்களெல்லாம் மனம் உடைஞ்சிடாதீங்க… வாழ்க்கையில பிரிவு சகஜம்தானே! காயத்ரியை எங்கிருந்தாலும் வாழ்கன்னு கோரஸா வாழ்த்துவோம்… வேற யாருக்காவது வெஜாவாகிற ஆசையிருந்தால் அடிச்சு வெளையாட தாராளமா களமிறங்கலாம்…

நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடே பரபரப்பா இருக்கற இந்த சமயம், ‘Thermal and a Quarter’ என்கிற ஒரு இசைக்குழு ஒரு நல்ல காரியத்தில இறங்கியிருக்காங்க. ‘Shut up and Vote Tour’ என்கிற பேர்ல, படித்த இளைஞர்களை இந்தத் தேர்தல்ல வாக்களிக்கும்படி இசையின் மூலம் பிரச்சாரம் செய்யறாங்க. இதுக்கு நல்ல பலன் கிடைக்கும்னு நம்பறாங்க. ஏன்னா அவங்க இணைய தளத்தில இப்பவே 4.5 இலட்சம் இளைஞர்கள் பதிவு செய்திருக்காங்களாம். முகவரி:

http://www.jaagore.com 
  
இந்த நல்ல காரியத்துக்கு ஏதோ அணில் போல என்னாலான உதவி!

வாக்கு சம்பந்தமா ஒரு கேள்வி: பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு எது? (விடை கடைசியில்)

நிலா புதியபார்வை இதழ்ல பத்தி எழுத ஆரம்பிச்சிருக்காங்க. நிலா பேசுகிறேன்னு பேரு. நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கிறதா தகவல். வாய்ப்பு கிடைச்சா படிச்சுப்பாருங்க. என்னது, அதைப்பற்றி என்னோட கருத்து என்னவா? ஏனுங்க, பெரிய இடத்துல மாட்டிவிடுறீங்களே… சேச்சே… சும்மா தமாஷ் பண்ணினேன். பாஸம்மா குறை சொன்னா திட்டறதெல்லாம் இல்லை. அவங்க வேற, நான் வேறயா… அதான். (எப்படி நம்ம எஸ்கேப்!)

ஆனா நமக்கெல்லாம் அவ்வளவு மெச்சூரிட்டி கிடையாதுங்க. நான் ஸ்கூல் படிக்கும்போது எனக்கு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவங்க என்னோட FPG (Friend – Philosopher – Guide); அவங்க மேல நான் உயிரையே வச்சிருந்தேன்; அவங்க என்ன சொன்னாலும் செய்வேன். ஏன்னா நான் அவங்க மேல வச்சிருந்த நம்பிக்கைக்கு அளவே கிடையாது – இப்படியெல்லாம்தான் நான் நினைச்சிட்டிருந்தேன். படிப்பு முடியற சமயம், எனக்கும் என் ஃப்ரண்ட்டுக்கும் ஏதோ மனத்தாங்கல் வந்தது. நான் அவங்ககிட்டே அதைச் சொல்லிக் குமுற, பொறுமையாக் கேட்ட பிறகு, நான் செஞ்சது சரியில்லைன்னு சொன்னாங்க. எனக்குத் தாங்கமுடியாத அதிர்ச்சி. அவங்க என்னைப் புரிஞ்சிக்கவே இல்லைன்னு தோணிச்சு. அதோட அவங்களைவிட்டு விலகிட்டேன். அவங்க மேல ஒரு கோபம் இருந்துட்டே இருந்தது. காலேஜ் படிக்கும்போது அதே போல ஒரு பிரச்சினை வந்தது; அவங்க சொன்னதும் நினைவில் வந்தது. நிதானமா யோசிச்சு சரியானதைச் செஞ்சேன். பிரச்சினையே இல்லாமப் போயிடுச்சி. ஆனா எனக்கு மனசுக்குள்ள அவமானமா இருந்தது – எங்க டீச்சர் மேல நான் வச்சிருந்த நம்பிக்கை அளவிட முடியாததா இருந்திருந்தா அவங்க நான் செஞ்சது தப்புன்னு சொன்னப்போ நான் ஏன் அவங்களை நம்பலேன்னு. சும்மான்னாச்சுக்கும் ‘எனக்கு உங்க மேல பக்தி’னு நாம விடற டயலாக் எல்லாம் எவ்வளவு மேலோட்டமா இருக்குன்னு புரிஞ்சது.

இப்படி ஆழமில்லாம இருக்கற உறவுகள் நிலைக்காது போலிருக்கு. சமீப காலமா எங்கே திரும்புனாலும் ஒரேயடியா உறவுச் சிக்கல்கள். தோழிக்கு கணவரோட ஒத்துப்போக மாட்டேங்குது, ஆஃபீஸ்ல கூட வேலைபார்க்கறவங்க அடிச்சுக்கறாங்க, உயிருக்குயிரான லவர்ஸ் திடீர்னு பிரியறாங்க… ஒண்ணும் புரியலே. ஒரு இன்ஸ்பிரேஷன்ல ஒரு இணையதளத்தில ஏன் உறவுகள்ல இவ்வளவு பிரச்சினைகள் வருதுன்னு ஒரு கேள்வியைப் போட்டேன். ஒருத்தரோட பதில் எனக்குப் பிடிச்சது – ‘பெரும்பாலும் எதிர்பார்ப்புகள்தான் இந்த மாதிரி பிரச்சினைகளுக்குக் காரணம். ஒருத்தர் நாம எதிர்பார்க்கற மாதிரி நடந்துக்கலைன்னதும் நமக்கு ஏமாற்றம் ஏற்படுது. ஆனா அதுக்கு அவர் மேல குற்றம் சுமத்தறோம். எதிர்பார்ப்பும் சரி, ஏமாற்றமும் சரி, நமக்குள்ளேர்ந்து வர்ற உணர்வுகள். நம்ம உணர்ச்சிகள் மேல நமக்கு கட்டுப்பாடு இல்லைன்னா அதுக்கு அடுத்தவரைக் குறை சொல்றது சரியாகாது. அந்தக் குறையில இருக்கற அபத்தத்தைப் புரிஞ்சுக்கிட்டு அதை விட்டுத்தள்ற பக்குவம் அடுத்தவங்களுக்கும் பெரும்பாலும் இருக்கறதில்லை. அதனால விரிசல்.’ கேட்கும்போது ரொம்ப நியாயமாத்தான் தெரியுது. ஆனா புரிஞ்சு நடந்துக்கிட்டா எல்லாருமே ஞானியா இருப்போமே உலகத்தில!

இந்த வீடியோவைப் பார்த்தா ஞானியாகிறோமோ இல்லையோ, இயற்கையோட அழகில அப்படியே புத்தி உறைஞ்சு போயிடுது… ஜப்பானின் அழகிய மலர்களோட தொகுப்பு, பாருங்க:

http://www.youtube.com/watch?v=qFrRSUjAObQ&feature=channel_page

அப்படியே மலர்கள் விரியற அழகையும் பாருங்க:

http://www.youtube.com/watch?v=rQYjZRuAay0&feature=related

ரசிச்சீங்களா?

மருந்து, மாத்திரையின்றி இயற்கையாகவே உடல், மன ஆரோக்யத்துடன் வாழ எளிமையான முத்திரைகள் பற்றி சித்ரா எழுதற குறுந்தொடர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. படிக்கலைன்னா, கண்டிப்பா படிங்க:

https://www.nilacharal.com/ocms/log/03160918.asp

நீங்க எல்லாரும் எனக்கு எந்த முத்திரை ரெகமண்ட் செய்வீங்கன்னு நல்லாவே தெரியும்… ஞான சூனியங்களுக்கான ஞான முத்திரைதானே? சரி, சரி… ரொம்பத்தான் ஓட்டாதீங்க. ப்ராக்டிஸ் பண்றேன்…. ஓவரா ஞானம் வந்து ‘அட இந்த சில்லியா ஒரு அரட்டை எல்லாம் வேண்டாம்’னு நான் ஒதுங்கிட்டா அதுக்கு நீங்கதான் பொறுப்பு, மகாஜனங்களே… தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு சிறந்த எழுத்தாளரை இழக்க வைத்த பாவத்துக்குள்ளாவீர்கள்!

டி.எஸ்.வியோட விவேகானந்தர் தொடர் இந்த வாரம் முடியுது. கடைசி சில அத்தியாங்கள் நல்ல விறுவிறுப்பா இருந்தது. குறிப்பா இந்த வாரம் சூப்பர். சுவாமிஜியோட ஆரூடம் பார்த்து அசந்து போயிட்டேன். படிச்சுப் பாருங்க. டி.எஸ்.வி கண்டிப்பா அடுத்து ஒரு தொடர் எழுதுவார்னு நினைக்கிறேன். எனக்கு அவர் ஓஷோவைப் பற்றி எழுதணும்னு ஆசை. ஓஷோவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனா அவரை நாம சரியா புரிஞ்சுக்கலைன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கறதனால ஒரு க்யூரியாசிடி. அரவிந்தர் பற்றியும் தெரிஞ்சுக்கணும்னு ஆசை இருக்கு. டி.எஸ்.வி இந்த ஏழைப்பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாராக!

நரேனோட காற்றாய் வருவான் தொடரை நிறுத்தினா சொர்க்கத்துக்குப் போவீங்கன்னு டாக்டர் சுப்பு அறிக்கைவிட்டிருக்காரு. இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு எழுதிப் போடுங்க, மக்களே. நம்ம குழுவில மொத்த கதையையும் வாசிச்சவங்க நல்ல விறுவிறுப்பா இருக்குன்னுதான் சொல்றாங்க. அதனால தொடர்ந்து படிங்க, சரியா?

‘மனிதரில் எத்தனை நிறங்கள்’ ரொம்ப மெதுவா போகுதுன்னு வாசகர்கள் புகார் எழுப்பியதைக் கருத்தில் கொண்டு என்.கணேசன் இப்போ கதையை வேகமா நகர்த்தறார். என்.கணேசனுக்கு நிறைய ரசிகர்கள்னு இந்தத் தொடர் மூலமா தெரிய வந்திருக்கு. அதுசரி, உங்களுக்கு நிலாச்சாரல்ல பிடிச்ச எழுத்தாளர் யார்னு சொல்லுங்க. அவங்ககிட்டே சொல்லி உங்களுக்கு இன்னும் இன்னும் தர வைக்கலாம்.

ஒரு ரகசியம் – இன்னொரு தொடர்கதை விரைவில் தொடங்கப் போகுது… பெயர், ஆசிரியர்… மூச்! இன்னொரு தகவல்: நிலாச்சாரல்லேயே மிக அதிகமா கமெண்ட்ஸ் வாங்கின கட்டுரை எது தெரியுமா? ‘கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை’:

https://www.nilacharal.com/ocms/log/11190714.asp

நிலாஷாப்ல புதுசா நிறைய ப்ராடக்ஸ் வந்திருக்கு. வாங்கி பயனடைய:
http://www.nilashop.com/products_new.php

அப்போ கேட்ட கேள்விக்கு இப்போ பதில்:
பெண்களுக்கு முதன்முதல் வாக்குரிமை வழங்கிய நாடு நியூசிலாந்து. வருடம் 1893. குவைத்தில இந்த உரிமை 2005லதான் வழங்கப்பட்டதுன்னா பார்த்துக்கங்களேன்…

ரைட்டோ… தேர்வுகள் நெருங்கியாச்சு… வெயிலும் ஆரம்பிச்சாச்சு… இன்னும் சூடு ஏத்த நாடாளுமன்றத் தேர்தல் வேற… அட்வென்சர் டைம்… ஆல் தி பெஸ்ட், மக்களே!

சியர்ஸ்!

About The Author

2 Comments

  1. Chitra

    மற்றவரைப் புகழ்வதில் இத்தனை ஆர்வம் கொள்ளும் அன்பு மனம் வாழ்க.!

    Very good flow, which makes the article very interesting.

Comments are closed.