சில்லுனு ஒரு அரட்டை

சங்கரம் சிவ சங்கரம்!

இனிய இதயங்களுக்கு அன்பு வணக்கங்கள்!

இடியாப்பம் மாதிரி அடி, முடி அறிய முடியாத வாழ்க்கைப் பயணம் எப்படி போய்ட்டிருக்கு என் இனிய இதயங்களே?

வாழ்க்கைப் பயணத்தின் வெற்றி அல்லது வாழ்க்கையின் நோக்கம் எதுன்னு கேட்டா, "சமூகத்தில் அடையாளம் காணக்கூடிய அளவில் வாழ்வதை நோக்கிய பயணம்"னு சொல்றார் எர்ல் நைட்டிங்கேள். (அனுபவசாலிகள் சொன்னா உண்மையாத்தான் இருக்கும்!!!)

"ஊர் ஊராகச் சுற்றி உபதேசம் செய்து விட்டு, தனக்கென்று தலை வைத்துப் படுக்க ஓர் இடமில்லாமல், கடைசியில் சிலுவையில் அறையுண்டு இறந்த ஏசு நாதரை வெற்றியாளர் என்று சொல்லவேண்டுமா, தோல்வியாளர் என்று சொல்லலாமா? அப்புடின்னு பல கேள்விகளையும், வென்றவர்கள் யாருன்னு" நம்ம ஜ.ப.ர அவர்கள் சொன்னதையும் இதில படிச்சு வெற்றி பற்றி மேலும் தெரிஞ்சுக்குவோம்….:

https://www.nilacharal.com/tamil/students/success_299.asp

சமூகத்தின் கட்டுப்பாடுகளோடு ஒத்து வாழ வேண்டிய சமூக அங்கத்தினரான நாம முதல்ல நம்ம வாழ்க்கையை அழகாக்கினால் உலகம் தன்னாலேயே இனிமை ஆயிடும்முன்னு எங்கேயோ படிச்சேங்க. நம்ம வாழ்க்கைக்கு பவுடர் பூசி, பொட்டு வைக்கிற சில எளிய வழிகளை கடவுள்கிட்ட நேர்காணல் கண்டு தோழி காயத்ரி சொன்னது:

"மனிதன்: மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி?

கடவுள்: மிகவும் எளிய வழிகள் எதையும் எதிர்பார்க்காதீர்கள்; உங்களிடம் உள்ள அன்பை, மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; குழந்தைகளாக வாழ்ந்திடுங்கள்; உண்மையே பேசிடுங்கள்" ………….

மீதி இங்கதாங்க இருக்கு:

https://www.nilacharal.com/ocms/log/06020806.asp

என்ன இந்த வாரம் தத்துவமா கொட்டுதுன்னுதான யோசிக்கிறீங்க. பொழுது போக்கறத்துக்காக படிக்க வந்த என்னை பழுது பார்க்க (அட! நம்ம பாஷையில சொல்லணும்.. கரெக்ட் பண்ண!) உதவியது நம்ம நிலாச்சாரல்தாங்க! இதைத் தோண்டி, தோண்டி படிச்சதுல கிடைச்சது எனக்கு நான்தான்.

சூழ்நிலைகளால அல்லது நம்ம செயல்களால குடும்பத்துக்குள்ள அல்லது வேலை பார்க்கிற இடத்தில் ஏற்படுகிற மனஸ்தாபம், வேலைப்பளுவினால் அசதி, இவையெல்லாம் சேர்ந்து உண்டாகிற மனச்சோர்வு – இதெல்லாம் தவிர்க்க முடியுதோ.. இல்லையோ, இதமான பாட்டு கேக்கிறது, இயற்கையை ரசிக்கிறது, நல்ல புத்தங்கள் படிக்கிறது, நடனம் அல்லது ஏதோ ஒரு இசைக் கருவி இசைக்கக் கத்துக்கிறது, ஒத்த கருத்துடைய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது மூலமா கண்டிப்பா ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த மாதிரி உணர்ச்சிகளுக்கு வடிகாலா படிக்க ஆரம்பிச்சதுதாங்க "மண்ணில் தெரிகிற வானம்," ( நம்ம நிலாச்சாரல் அடைமொழிதாங்கோ இது!)

நேசக்கிறதும், நேசிக்கப்படுதலும் எவ்வளவு சுகமானது. அந்த சுகத்தை எல்லாருமே வாழ்க்கையில கண்டிப்பா அனுபவிச்சி இருப்போம். நட்சத்திரன் அவர்களின் அதீதாவுக்கு மடல் படிச்சுப் பாருங்க!

https://www.nilacharal.com/tamil/mugam/tamil_letter_221.html
அன்பின் ஆழத்தை மயிலிறகால் வருடுகிற இனிய கடிதங்கள் அத்தனையும் நீங்களே படிச்சு அந்த இதத்தை அனுபவிச்சு பாருங்க!

இப்பதான் நேசிக்க ஆரம்பிச்சு இருக்கிறீங்கன்னா சாந்தா பத்மநாபன் அவர்களின் "கண்களின் வார்த்தைகள் புரியாதோ!"
படிச்சுப் பாருங்க. ஆனா.. எத்தனை மார்க் வாங்குனீங்கன்னு யார்கிட்டேயும் சொல்லாதீங்க!

https://www.nilacharal.com/ocms/log/06230809.asp

தாயுக்கும், சேய்க்கும் இடையில வார்த்தைகள் வெளிப்படுத்தாத அன்பு, நிலாரசிகன் அவர்களின் "வலி கொண்ட முத்தம்" கவிதையில் வெளியானது.
"உச்சி முகர்ந்த உனது முத்தத்தில்தானம்மா உணர்ந்தேன் நம் பிரிவின் வலியை!"

https://www.nilacharal.com/stage/kavithai/tamil_poem_316b.asp

ஒரு தந்தையின் பாசத்தை இந்த வீடியோவில பாருங்க,
http://www.youtube.com/watch?v=mNK6h1dfy2o
(நாம் கொடுக்கிற வலிகளை சுகமா ஏத்துக்கிறது நம்ம பெத்தவங்க மட்டும்தாங்க!)

இயற்கையை நேசிக்கிறது, அது கூட பேசுறது ஒரு சுகம். நம்ம நிலாவோட ‘அமுதென்றும் நஞ்சென்றும் – மலர்கள்’, படிச்சுட்டு கீழே இருக்கிற படத்தை பாருங்க!
https://www.nilacharal.com/ocms/log/08100915.asp

Jagarantha flowers

(ஜகரந்தா மலர், இவங்க பேசுறது கேட்டுதுல்ல! ‘மலர்களுடன் உள்ளார்ந்த ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்போது அவை பேசுவது நமக்குப் புரியும்’ – ஸ்ரீஅன்னை)

"நிஜத்தை நேசி! தன்னம்பிக்கையோடு இரு, தளரும்போது தட்டிக் கொடுத்து முறுக்கேற்றும் நண்பர்களைப் பெறு, அதற்கும் வழியில்லையா? இறை நம்பிக்கையை பயன்படுத்து"ன்னு சொல்லி இருக்காங்க! உங்க இறை தேடலுக்கு விசாலம் அவர்களின் தல புராணங்கள் ஒரு வழிகாட்டியா இருக்குமுங்க! உதாரணத்திற்கு ஒண்ணு,
https://www.nilacharal.com/ocms/log/06230819.asp.

அரசியல், அறிவியல், நகைச்சுவை, உலக நடப்பு, சுயமுன்னேற்றம், கைமருந்து, கைமணம், பூஞ்சிட்டு திரைச்சாரல், இந்த மாதிரி பல சுவைகள் உள்ள இருக்குதுங்க. தேடித் தெரிவோம், தெரிந்தது கொண்டு நம்மை நாமே செதுக்கி சிற்பி ஆவோம். (கல்கி பட டைட்டில பாருங்க!)

இன்னைக்கு கொஞ்சம் அதிகமாவே பேசிட்டேன்னு நினைக்கறேங்க.. "அதிகமா பேசப் பேச பல தருணங்களில் நம்ம அறியாமைதான் வெளிவரும்"னு ஞானிகள் சொல்லுறாங்க! அன்புடையோர்கள் முன்னாடி ‘அறியாதவள்’ அடையாளம் கூட இதமாதான் இருக்குங்க!

மீண்டும் சந்திக்கிறவரை, உறவுகளை எதிர்பார்ப்பின்றி நேசித்து, அர்த்தமுள்ள வாழ்க்கைங்கிற ஓவியத்திற்கு உயிரோட்டம் கொடுத்து பயணிப்போம்!

நன்றி!

About The Author